வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 23, 2012

ஏ.வி.எம் ஸ்டியோ ஏழாவது தளம் : தமிழ்மகன்

வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால் புகழ் ஆசிரியர் தமிழ்மகன் எழுதிய நாவல். இவரின் இரண்டு நாவலை வாசித்து விரும்பியதாலும், சினிமாவை கதைக்களனாக கொண்டதாலும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இந்த நாவலை வாசித்தேன்.

சினிமாவை கதை களனாக கொண்ட படமாகட்டும், சிறுகதை அல்லது நாவலாகட்டும் ஒரு பெண் சீரழிவதை காட்டும் விதியில் இருந்து இந்த நாவலும் தப்பவில்லை.

தமிழ்மகனுக்கு பால் என்றால் மிக பிடிக்குமோ ? வள்ளுவன் வழியில் இந்த நாவலை இன்பத்துபால். பொருட்பால், அறத்துபால் என மூன்று பாகங்களாக பிரித்துள்ளார். ஒரு நடிகையின் அறிமுக நிலை, ஏறுமுக நிலை, இறங்கு முக நிலை என மூன்று நிலையில் கதையை நகர்த்தி இருக்கிறார். :
சினிமாவில் நாயகியாக வேண்டும் கனவோடு வருகிறாள் சுந்தரி. மல்லிகை பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளன் ஸ்ரீதர் உதவியோடு சுந்தரி தீபிகா என பெயர் மாற்றி நாயகியாகிறாள். சினிமாவில் தன்னை இழக்க தயார் நிலையில் ஷூட்டிங் வருகிறாள். முதலில் புரோடியஸர், டைரக்டர் என ஒவ்வொருவரின் மனநிலையை புரிந்து வளைந்துக் கொடுக்கிறாள்.

முதல் படம் முடியும் முன்பே பெரிய நடிகரான பவன் சுந்தரின் பட வாய்ப்பு கிடைக்கிறது. அவருடனுன் அட்ஜெஸ்மண்ட் செய்துக் கொள்கிறாள். ஒரு பெரிய நடிகனின் கண்ட்ரோலில் இருப்பது தனக்கு நல்லது என்று பவனின் ஆசை நாயகியாக இருக்கிறாள்.

சினிமாவில் பெரிய நிலை அடைந்த பிறகு பவனின் பிடியில் இருந்து விடுப்படுகிறாள். தனது பத்திரிக்கை நண்பன் ஸ்ரீதரை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறாள். நடிகை திருமணம் செய்துக் கொள்ள யோசிக்கிறான். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் அவளை காதலிப்பதை சொல்ல வர, தீபிகா ஒரு இயக்குனரை திருமணம் செய்துக் கொள்கிறாள்.

திருமணம் பிறகு அந்த இயக்குனர் சொந்தப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தீபிகா சொத்தையெல்லாம் அழிக்கிறான். இறுதியில் தீபிகா என்ன முடிவு எடுக்கிறாள் என்பது மீதி கதை.

தனது வழக்கமான எம்.ஜி.ஆர் துவேஷத்தை இந்த நாவலிலும் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது வழங்கியது, தனக்கு பிடிக்காத ஆளை எம்.ஜி.ஆர் என்ன செய்வார் போன்ற விஷயங்களில் கதாபாத்திரங்கள் வாயிலாக காட்டியுள்ளார்.ஆட்சி மாறினால் எம்.ஜி.ஆரை திட்டி ஒரு புத்தகம் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

கதாபாத்திரங்களின் குணாதிசயம் என்று பெரிதாக குறிப்பிடவில்லை. இயக்குனர் பரணிகுமார் நல்லவரா ? கெட்டவரா ? என்ற குழப்பதிலே அந்த பாத்திரப்படைப்பை முடித்திருக்கிறார். நாயகி தீபிகாக் கூட அட்ஜஸ்மெண்ட் செய்து கொள்வதற்கு தயாராக சினிமாவுக்குள் வரும் போது அவள் சோடை போகும் போது பெரிய பரிதாபமாக இல்லை.

ஒவ்வொரு நடிகை வாழ்க்கையிலும் இப்படி தான் நடக்கிறது கிசுகிசுவில் படித்து பழக்கப்பட்ட கதை என்பதாலோ தீபிகா நம்மை பாதிக்கவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த நாவலை ஒரு முறை ‘டைம் பாஸ்’ க்காக வாசிக்கலாம்.

**
நூல் விபரங்கள் :
ஏவி.எம் ஸ்டியோ ஏழாவது தளம்
தமிழ்மகன்
பக்.192, விலை.60
முற்றம் பதிப்பகம்
விற்பனை உரிமை : நிவேதிதா புத்தகப் பூங்கா
இராயப்பேட்டை, சென்னை – 14.
பேசி : 98847 14603

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails