வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 16, 2012

கவிதை (எ) பிதற்றல் !

போபால்
------------ஈசனை சிழுவையில் அறையுங்கள் !
ஏசுவை கழுவில் ஏற்றுங்கள் !
அல்லாவை பிரம்பால் அடியுங்கள் !
எங்களை காக்க வராத கடவுளை
எந்த மத முறைப்படி
தண்டித்தால் என்ன ?

**
ஹைக்கூ
-------------

கை விசிறி காற்றில்
வேர்வை நடுவில் உழைப்பு
மின்சார ஊழியர்கள் !

*
இரண்டு நாடுகள் ஆடும்
டென்னிஸ் பந்து
அகதி !

**
காதல்
---------

உன்னை
பின் தொடர
ஆசையாய் இருக்கிறது !
ஆனால்,
எனக்கு முன் 23455 பேர்
உன்னை
பின் தொடர்கிறார்களே
டிவிட்டரில் !!!

*

கனவில் வந்தாள்
பள்ளிக் காதலி
அவளுக்கு மட்டும்
வயதாகவில்லை !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails