வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, August 10, 2010

தாரகேஷ் – Pre KG



பெண் குழந்தை என்றால் வாயாடும். கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அதிகார தோரனை அதிகமாக இருக்கும். ஆனால், தாரகேஷ் ( என் மூன்று வயது மகன்) பேச்சிலும் சரி, வார்த்தையால் விளையாடுவதிலும் சரி பெண் குழந்தையை விட மிஞ்சிவிடுவான்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் தாரகேஷ் பள்ளியில் 'கலர் டே' என்று எல்லோரு ஒரு நிற ஆடை அணிந்து வருவார்கள். மஞ்சல், சிவப்பு, பச்சை என்று ஒவ்வொரு திங்களும் ஒவ்வொரு நிறம்.

இப்படி நேற்று திங்கள் (9.8.10), என் மனைவி தாருவை ஏழுப்பும் போது, " குட் மார்னிங் தாரு... அவன் ஸ்கூல்ல இன்னைக்கு என்ன டே தெரியுமா " கேட்டாள்.

“ரோஸ் டேவா!! " என்றேன் நான்.

" இல்ல மம்மி. இன்னைக்கு ஹாலிடே !" என்று சொல்லி மீண்டும் தூங்க சென்றான்.

(இப்ப ஸ்கூல் கட் அடிக்க அஸ்திவாரம் போடுறான்.)

***
ஒரு முறை தாருவுடன் நானும், என் மனைவியும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். ஸ்டாட்டராக சூப் சாப்பிட்டு பிரியாணி, நான் என்று மூவரும் ஒரு கட்டு கட்டினோம். அந்த இடம் கொஞ்சம் காஸ்டிலியான ஹோட்டல் என்பதால் கை கழுவ 'பிங்கர் பவுல்' கொண்டு வந்து எங்கள் முன் வைத்தனர்.

" என்ன டாடி ! இன்னொரு சூப்பா " என்றான்.

சர்வர் முதல்க் கொண்டு அனைவரும் சிரித்தனர்.

( 'பிங்கர் பவுல்' சைஸ் இருந்துக் கொண்டு நக்கல் ஜாஸ்தி )

***



தாரகேஷ்க்கு அவன் பள்ளியில் தோழர்களை விட தோழிகள் தான் அதிகமாம். லக்ஷனா, ரித்திக்கா என்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தான் எப்போதும் விளையாடுவனாம்.

பள்ளியில் இருந்து அவனை அழைத்து வர என் மனைவி சென்ற போது அவன் டிச்சர், " தாரு ! நல்லா படிக்கிறான். எது சொன்னாலும் உடனே புரிஞ்சிக்கிறான். ஆனா, எப்போ பார்த்தாலும் பொண்ணுங்களோட தான் விளையாடுறான்"

சின்ன பசங்க தான் அப்படி தான் இருக்கும் என்று என் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்து சொன்ன தகவல் தான் அதிர்ச்சியாக இருந்தது.

"இரண்டு பொண்ணுங்களோட விளையாடும் போது தீடிர் தீடிர்னு முத்தம் கொடுக்குறான்" என்று கூறினார்.

வீட்டுக்கு வந்ததும் என் மனைவி அவனை டி.வி. பார்க்க விடக் கூடாது என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

( எனக்கு கோபத்தை விட என் மகன் மீது பொறாமை தான் அதிகமாக இருந்தது.)

***

என் மகன் பள்ளியில் சி.டியில் ரைம்ஸ் போட்டு சொல்லிக் கொடுப்பார்கள். என் மகனுடன் ஆருஷ் என்ற பையன் படிக்கிறான். ஆருஷ்யின் பெற்றோர் வழக்கறிஞர் என்பதால் என்னவோ அவனுக்கு தமிழ் ஆர்வம் அதிகம். தமிழ் ரைம்ஸ் போட்டால் கேட்பானாம். இங்கிலீஷ் ரைம்ஸ் போட்டால் கேட்காமல் விளையாட போவானாம்.

என் மனைவி அந்த பையனைப் பற்றி சொல்லும் அவன் மீது மதிப்பே வந்துவிட்டது. அவனை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

அதே பள்ளியில் இன்னொரு மாணவன், தமிழ் ரைம்ஸ் போட்டால் காதை மூடிக் கொள்வானாம். இங்கிலீஷ் ரைம்ஸ் போட்டால் தான் கேட்பானாம். அந்த பையனின் பெற்றோர் சிறுவயதில் இருந்தே இங்கிலீஷ் பாடல் போட்டு தாய்மொழியை மறக்கடித்துத்திருப்பார்கள் என்று மனைவியிடம் சொன்னேன்.

"அந்த பையன் தாரகேஷ் " என்றாள்.

(நல்ல வேளை என் தாய்மொழி தெலுங்கு தான்.)

2 comments:

ஆதவா said...

ஹாஹா.... குழந்தைங்கன்னாலே அப்படித்தாங்க.... எழுதறதுக்கும் நிறைய மேட்டர் க்டைக்கும்.

அதிலும் முத்தம் மேட்டர் சூப்பர்... அவர்களுக்கு இனபேதம் தெரியாது. ஆனால் நமக்குத்தான் தெரிந்துவிடுவோ என்ற பேதபயம்! :)

Cable சங்கர் said...

உங்க புள்ள உங்களை மாதிரிதானே இருப்பான்.

LinkWithin

Related Posts with Thumbnails