வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, December 5, 2012

தமிழனும் இந்தியனே ! - எதிர்வினை



அன்பிற்குரிய குகனுக்கு,

என் உடல் நிலை சற்று சரியில்லாததால் நிகழ்ச்சிக்கு வர இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உணர்ச்சிகளின் வெளிபாடு கவிதையாகிறது. பீரிட்டு கிளம்பும் பிரவாகப் பெருக்கை ஒரு வடிவத்துக்குள் அமைப்பது கவிதை. இவ்வுல்கில் எத்தனையோ தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கலாம். அதன் பாதிப்பு கவிதையாகக் வெடிக்கலாம். பாரதி எப்படியெல்லாம் பாடியுள்ளான். பூனைக்குட்டியிலிருந்து பூகோலப்படத்தில் காணப்படும் நாடுகளை எல்லாம் தொட்டுவிட்டான். வசன கவிதைக்கு வழிகோலியவனும வந்தான். வாழையடி வாழையாக வரும் கவிஞர் கூட்டம் வரவேற்ப்பிற்க்குறியதே !

"தமிழனும் இந்தியனே! " என்னும் கனியன்செல்வராஜின் நூலை நாகரத்னா பதிப்பகம் வேளியிட்டுள்ளது. அட்டையைப் பார்த்தால் வலைஞர்களின் கவலையைக் கண்முன் நிறுத்தும் கருத்தைக் கொண்ட நூலோ அல்லது உழைப்பாளிகளின் அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூலோ என எண்ணத்தோன்றுகிறது.

64 பக்கங்களில் 29 கவிதைகள் இடம் பெற்றுள்ளன . பெயருக்கேற்றபடி முதல் கவிதை நன்றாக உள்ளது. "நீயும் கடவுளாகலாம்" நல்ல சிந்தனை. "தொடரும் பாவத்தின் நீட்சிகள்" என்ற கவிதையின் கடைசி வரிகள் நன்று.

கண்ணகி சிலைக்குப்பின்னாலேயே ஏதேதோ நடக்கும் போது "காந்திசிலைக்குப்பின் நடப்பதற்க்கென்ன? தமக்கையின் துயரம் தம்பிமூலம் பெற்றோர்க்குத் தெரிய வேண்டாம் எண்ணும் தவிப்பை விழி பேசியவார்த்தைகளில் உணரமுடிகிறது. அன்பான மனைவியின் மடிமீது தலைவைத்துப் படுத்தலே அனைத்துக் கவலைகளையும் மறந்து நிம்மதியாக தூங்களாம். புனர்ந்தாக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசிரியரின் இரண்டாவது ஆவது கவிதை நூல் என அறிகிறேன்.

எளிய தமிழ் சொற்கள் ஏராளமாய்க் கொட்டிக்கிடக்கையில் ஆங்கிலச் சொற்களை நாடுவது தேவையில்லை. "மொழியே நம்முடைய அடையாளம்" என்று பாடலாசிரியர் யுகபாரதி அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சொல்லப்படும் பொருள் தெளிவாகவும் எளிதில் விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆசிரியரின் முயற்சியையும் ஆர்வத்தையும் பாரட்டுகிறேன்.

 நாகரத்னா பதிப்பகம் மக்களுக்குப் பயன்படும் தரமான நூல்களை எப்போதும் போல் தொடர்ந்து வெளியிட வாழ்த்துகிறேன். 

அரிமா இளங்கண்ணன் 
 வழக்கறிஞர் 
16/11/12

2 comments:

Thozhirkalam Channel said...

உங்கள் தகவலுக்கு நன்றி....

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
நானும் இந்த புத்தகத்தை படித்துப் பார்க்கிறேன்.
நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails