வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 18, 2012

சாதத் ஹசன் மாண்டோவின் நூற்றாண்டு !!!

கடந்த ஞாயிறு (16.12.12) மாலை 4 மணிக்கு, பிரசாத் லேப் கல்லூரி அரங்கில் சாதத் ஹசன் மாண்டோவின் நூற்றாண்டு நினைவையூட்டி அவரது சிறுகதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது.

இந்திய – பாகிஸ்தான் பிரிவினை முன் பிறந்த படைப்பாளியான மாண்டோ, அரசியல் சூழ்நிலையால் பாகிஸ்தான் நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. பிரிவினை முன்பு 3 முறையும், பிரிவினை பிறகு பாகிஸ்தானில் 3 முறையும் தனது படைப்புக்காக சிறை சென்றுள்ளார்.

பிரிவினைப் போது ஏற்ப்பட்ட வலியும், வேதனைகள் மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுப்பட்டவர்களின் குற்றவுணர்வையும் தனது படைப்பின் பிரதிபலித்திருக்கிறார்.

தன்ஷ் ( A String)

குற்றவுணர்வோடு ஒரு மனிதன் குளிப்பதுப் போல் காட்சி தொடங்குகிறது. ஒரு பெண்ணின் அலறல் சத்தமும், அவளை மானபங்கம் படுத்தும் உருவம் வந்து வந்துப் போகிறது. தலைக்கு குளிக்கும் போது அந்த பெண்ணின் வீட்டில் நகைகளை திருடுகிறான். வேறொருவன் அந்த பெண்ணை கற்பழித்து, அவளது சகோதரனை கொலை செய்கிறான். நகையை திருடி செல்லும் போது, நிர்வாணமான பெண்ணின் உடலை பார்த்தும், அவனும் அந்த பெண்ணை புணர்கிறான்.

மீண்டும் அவன் தலைக்கு குளிப்பது போல் காட்சி வருகிறது. திருடிய நகையை தன் மனைவியிடம் கொடுத்து குளிக்க செல்கிறான். இங்கிருந்து முதல் காட்சியோடு படம் தொடர்கிறது. அவன் குளிக்க குளிக்க தண்ணீர் இரத்தமாக மாறுகிறது. தன் முகத்தை எவ்வளவு தெய்த்தும், அவன் மனதில் இருக்கும் குற்றவுணர்வை நீக்கமுடியவில்லை.

அவன் மனைவி திருடிய நகையில் தன்னை அழங்கரித்துக் கொள்கிறாள். அவள் அவனிடம் நெருங்கும் போது, குற்றவுணர்வில் அவளை உதாசினப்படுத்துகிறான். அவள் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு, வேறொரு பெண்ணுடன் இருந்தாய்யா என்று கேட்க அவன் “ஆமாம்” என்கிறான். கோபத்தில் கத்தியால் அவள் தனது கணவனின் கழுத்தை வெட்ட, இறக்கும் தருவாயில் “அவள் இறந்திருந்தாள்” என்று சொல்லி இறக்கிறான்.

 இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போது ஆண்கள் அயுதங்களால் இறந்தார்கள் என்றால், பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டே இறந்தார்கள். எத்தனையாவது நபர் கற்பழிக்கும் போது அந்தப் பெண் இறந்திருப்பால் என்று சொல்ல முடியாத அளவுக்கு மத மும், குரோதமும் பலரது தலையில் ஏறி இருந்தது. அப்படி இறந்ததே தெரியாமல் புணர்ந்த ஒருவன், புணர்ந்து முடித்த பிறகு அந்தப் பெண் இறந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் மிருகமான மனதில் கொஞ்சம் மனிதத்தன்மை ஏட்டிப்பார்க்கும் போது குற்றவுணர்வாக மாறுகிறது. அதை இந்த குறும்படத்தில் தெளிவாக காட்டுகிறது.



காரமாட் (The Miracle)

மூட நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் இருக்கிறது என்பதை உணர்த்தும் குறும்படம்.

1947ல் இந்திய – பாகிஸ்தான் பிரிவினைப் போது ஒரு இஸ்லாமியன் ஒரு இந்து வியாபாரியை கொன்று, அவன் கடையில் இரண்டு மூட்டை சக்கரையை திருடி தனது வீட்டுக்கு கொண்டு வருகிறான். காவலர்கள் திருடிய பொருளை யார் வீட்டில் இருந்தாலும் அவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்வதை கேட்கிறான். பயத்தில் இரண்டு மூட்டை சக்கரையை கிணற்றில் போட்டு, மறைந்துக் கொள்ள நினைக்கும் போது கினற்றில் விழுந்து இறக்கிறான்.

அடுத்து நாள் குழந்தைகள் தண்ணீரை குடித்து இனிப்பாக இருப்பதை கூறுகிறார்கள். 'அல்லா' இறந்தவனை அனுப்பி கசப்பான தண்ணீரை இனிப்பாக மாற்றினார் இறந்த இஸ்லாமியனை தொழுகிறார்கள்.

பாவிகளை மனிதர்கள் தான் கடவுளாக்குகிறார்கள். கடவுளில்லை. என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.


 Tob Tek Singh ( தோப் டேக் சிங்) 

பாகிஸ்தானின் இருக்கும் மனநல காப்பகத்தில் நடக்கும் கதை. இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று ஒன்றும் புரியாமலையே தங்களை இந்துஸ்தான் என்றும், பாகிஸ்தான் என்றும் பிரித்துக் கொண்டு மனநோயாளிகள் பேசுகிறார்கள். விளையாடும் போது கூட இரண்டு அணிகளும் இதையே பெயராக வைத்து விளையாடுகிறார்கள். அவர்களில் ஒருவனான பிசன் சிங் யாருடனும் ஒட்டாமல் 'தோப் டேக் சிங்' செல்ல வேண்டும் என்கிறான். அவனது மகள் வந்து பார்க்கும் போது கூட தோப் டேக் சிங் செல்ல வேண்டும் என்கிறான்.

இறுதியில் இந்து மற்றும் சீக்கிய மனநோயாளிகளை இந்திய எல்லையில் விட்டுவிட்டு பாகிஸ்தான் காவலாளிகள் செல்கிறார்கள். பிசன் சிங் தோப் டேக் சிங் செல்ல விரும்புவதாக சொல்ல, காவலாளி “அது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. நீ இந்தியாவுக்கு போ !” என்று எல்லையில் விடுகிறார்கள்.

"ஒரு பக்கம் இந்திய முள்வேலி கம்பிகள், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் முள்வேலி கம்பிகள். இரண்டுக்கும் நடுவில் உறங்குகிறது  தோப் டேக் சிங் என்று" சொல்லி, அவன் அங்கையே மயங்கி கீழே விழுகிறான்.

பிரிவினை போது உயிரை விட்டவர்களை விட தனது சுயத்தை இழந்தவர்கள் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குறியது என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.


திற 

சாதத் ஹசன் மாண்டோவின் “Khol do” (Open it) என்ற சிறுகதையை குறும்படமாக எடுத்திருக்கிறார் பிரின்ஸ் அவர்கள்.

குஜராத் மதக்கலவரத்தில் தனது மகள் சகினாவை தேடுகிறார் தந்தை. முகாமில் இருக்கும் சேவாக்காரர்களிடம் உதவி கேட்கிறார். அவர்களும் அந்த பெண்ணை கண்டுபிடித்து முகாமுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அவள் தந்தை இருக்கும் முகாமுக்கு அழைத்து செல்லப்படவில்லை. அந்தப் பெண்ணின் தந்தையிடம் இன்னும் பெண் கிடைக்கவில்லை என்கின்றனர்.

நினைவற்ற ஒரு பெண்ணின் உடல் மருத்துவ முகாமுக்கு வருவதை அந்த தந்தை கேள்விப்பட்டு செல்கிறார். அவள் தனது மகள் ‘சகினா’ என்று பார்த்ததும் அடையாளம் காண்கிறார். மருத்துவர் அந்த தந்தையிடம் “ஜன்னல் கதவை திறங்கள் காற்று வரட்டும்” என்று சொல்ல, மயங்கிய நிலையில் அந்த பெண் காதில் "திற" என்ற வார்த்தை மட்டும் விழுகிறது. அந்த பெண் தனது பெண்ணுருப்பை திறந்து காட்ட செல்கிறாள். கரச் சேவகர்கள் அவளை கற்பழிக்கும் போது ‘திற’ என்று கூறிய வார்த்தைகளோடு சிவப்பாடையில் காட்டியப்படி படம் முடிகிறது.

பூட்டிய மனிதனின் உள்ளத்தை திறப்பது போன்ற கருத்துள்ள படம் என்று நினைத்தால், இறுதிக் காட்சியில் திறக்கப்படும் இடம் நம்மை கண் கலங்க வைக்கிறது. சாதத் ஹசன் மாண்டோ இந்திய - பாகிஸ்தான் பிரிவினை வைத்து எழுதிய கதைக்களனை குஜராத் மதக் கலவரப்பின்னனியில் எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரின்ஸ்.

காலங்கள் மாறினாலும், பின்னனி மாறினால் மனிதனுக்கு இருக்கும் மிருக குணமும், அதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் வலியும் மாறுவதில்லை என்பதை இந்த குறும்படம் சொல்கிறது.

ராஜாங்கத்தின் முடிவு

ஒரு அறையில் தொலைப்பேசியும், ஒரு மனிதனை வைத்து குறும்படத்தை ஸ்வாரஸ்யமாக எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாமல், கிடைக்கும் இடத்தில் தங்கக் கூடியவனாக இருக்கும் கதாநாயகன் ரவி ஒரு வாரம் தன் நண்பன் வெளியூருக்கு சென்றுயிருப்பதால் அவன் அலுவலகத்தில் தங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

கற்பனை உலகத்தில் வாழும் ரவி, நடைமுறை வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்கிறான். அப்போது, அந்த அலுவலக தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொள்ள, அவர்கள் இருவருக்குள் நட்பு உருவாகிறது. பல சமயம் ரவி அந்த பெண்ணை வெறுப்பெற்றுவது போல் பேசுகிறான். அந்தப் பெண்ணின் பெயரையோ, எண்ணையோ ரவி கேட்கவில்லை. ஆர்வமில்லாமல் இருந்தவன், அவள் அழைக்காமல் இருக்கும் சமயத்தில் தவிக்கிறான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தவனுக்கு, அந்தப் பெண்ணின் குரல் அவனை மிகவும் பாதித்திருக்கிறது.

ரவியின் நண்பன் தொலைப்பேசியில் ஊர் திரும்புவதாக சொல்ல, அதை கவலையுடன் அந்தப் பெண்ணிடம் கூறுகிறான். அவன் இராஜாங்கம் முடியப்போகிறது என்று கவலையாக சொல்ல, அன்றைய தினம் தன்னை தொடர்புக் கொள்ளும் எண்ணை தருவதாக சொல்கிறாள். இரண்டு நாளுக்கு ஊருக்கு செல்வதாக சொல்லி அழைப்பு தூண்டிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாள் கலித்து அந்தப் பெண் தொலைப்பேசியில் அழைக்க, ரவி இன்றோடு தன் ராஜாங்கம் முடிவதாக சொல்லி அழைப்பை தூண்டித்து இறக்கிறான். தொலைப்பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும் போது படம் முடிகிறது.

கற்பனை உலகிற்கும், நிஜ உலகிற்கும் நடுவில் வாழும் மனிதர்களுக்கு சமர்ப்பணம் என்று இந்தப்படத்தை முடித்திருக்கிறார்கள். படத்தின் முடிவில் ரவி பாத்திர இறந்ததற்கு காரணம் காட்டவில்லை என்ற கேள்விக்கு வேண்டுமென்றே சொல்லவில்லை. அந்த பாத்திரம் வாழ்வதற்கான அர்த்தமில்லாதப் போது இறப்பதற்கான காரணம் தேவையற்றதாக இருக்கிறது இயக்குனர் கூறினார்.

இந்த ஐந்து குறும்படங்களை திரையிட்ட அருணுக்கும், தமிழ் ஸ்டுடியோவிற்கும் நன்றிகள் பல....!!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails