வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, January 28, 2011

மூன்றாவது அணி !!

நாளுக்கு நாள் தேர்தல்ப் பற்றி செய்திகள் சூடாக விவாதங்களை ஏற்ப்படுத்துகிறது. கட்சி தாவல், பொட்டி மாறுதல், கூட்டனி என்று ஏதாவது ஒரு செய்தி தாங்கி எல்லா பத்திரிகைகள் வந்துக் கொண்டு இருக்கிறது.

தி.மு.க

1996 - 2001 ஆண்டு தி.மு.க ஆட்சி செய்யும் போது அவர்களுக்கு எதிராக பெரிய ஊழல் குற்றமோ, கரும்புள்ளியோ பெரிதாக ஒன்றும் இல்லை. அடிப்படை பொருளின் விலை ஏற்றம் மீண்டும் அ.தி.மு.க வை 2001ல் ஆட்சியில் அமர வைத்தது. ஆனால், 2006 - 11 வரை தி.மு.க வுக்கு எதிராக பல கரும்புள்ளிகளும், ஊழல்களும் உள்ளது.

தி.மு.கவுக்கு எதிராக இருப்பது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்.
இலங்கை பிரச்சனை.
மீனவர்கள் கொலையை எதிர்த்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது.
குடும்ப அங்கத்தினரை அரசியல், சினிமா ஈடுப்பட வைத்தது.
குடும்ப உள் அரசியல் பிரச்சனை
காவேரி பிரச்சனை. ( உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் கர்நாட அரசிடம் இருந்து தண்ணீர் வாங்க தெரியாமல் இருப்பது)
கடந்த இருபது ஆண்டுகளாக யாரும் தொடர்ந்து ஆட்சி அமைக்கவில்லை.

தி.மு.க சாதகமாக இருப்பது.

ஒரு ரூபாய் அரிசி திட்டம்
கலைஞர் காப்பீடு திட்டம்
இலவச டி.வி வழங்கியது.
இலவச வீடு வழங்கும் திட்டம்

ஊழல், பிரச்சனை போன்ற பல விவகாரங்கள் இருக்கும் போது 'இலவச திட்டங்கள்' ஓட்டாக மாறுமா என்பது தேர்தல் முடிவு தான் பதில் சொல்ல வேண்டும்.

**
அ.தி.மு.க

தி.மு.க மீது இருக்கும் அதிருப்தி மட்டுமே அ.தி.மு.க வின் பலமாக உள்ளது. தொலை நோக்கு பார்வையோ, திட்டமோ அவர்களிடம் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்பார்க்கலாம்.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் ?

சென்னை சங்கமம் அடுத்த வருடம் முதல் ரத்து செய்யப்படும்
மீண்டும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டாக அறிவிக்கலாம்
கலைஞர் காப்பீடு, ஒரு ரூபாய் அரிசி திட்டம் ரத்து செய்யப்படலாம் அல்லது பெயர் மாற்றப்படலாம்.
வாரிசுகள் கைது நடவடிக்கை மற்றும் பேரன்கள் வீட்டில் வருமான வரி சோதனை போன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம்.

வை.கோ வை தவிர அம்மாவுக்கு பக்க பலமாக பிரச்சாரத்திற்கு இதுவரைக்கு ஆள் கிடைக்கவில்லை. இந்த நிலை அடுத்த ஒரு மாதத்தில் மாறலாம்.

அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதை விட தி.மு.க ஆட்சிக்கு வரட்டும் என்பது அரசாங்க ஊழியர்களின் கருத்தாக இருக்கும். கொஞ்ச நேர்மையான இருக்கும் அதிகாரிகளை கூட சம்பள குறைப்பில் லஞ்சம் வாங்க வைத்துவிடுவார். எந்த அரசாங்க ஊழியர்களுக்கு சதகமாக அ.தி.மு.க அருசு இருக்க போவதில்லை என்பது அரசாங்க ஊழியர்களின் கருத்து.

**

தி.மு.க , அ.தி.மு.க என்று இரண்டும் கட்சிகள் மீது அதிருப்தி கொண்டவர்கள் வாக்கு தான் மூன்றாவது அணியின் பலமாக இருக்கும்.

ஒரு தி.மு.க நண்பர் என்னிடம், " நா எப்போது தி.மு.க தான் ஓட்டு போடுவேன். ஆனா, இந்த வாட்டி கண்டிப்பாக தி.மு.கவுக்கு ஓட்டு போட மாட்டேன்" என்றார். கண்டிப்பாக இவர் அ.தி.மு.கவுக்கும் ஓட்டு போட மாட்டார். இவரைப் போன்றவர்கள் வாக்கை கவர்வது தான் மூன்றாவது அணியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

யார் மூன்றாவது அணி அமைக்க முடியும் ?

இன்றைய அரசியல் நிலவரப்படி விஜயகாந்த் தவிர மூன்றவாது அணியை யாராலும் அமைக்க முடியாது. அ.தி.மு.கவுடன் கூட்டனி ஏற்ப்பட்டால் சந்தேகமில்லாமல் அடுத்த ராம்தாஸாக விஜயகாந்த் கருதப்படுவது உறுதி. அவரின் முதலமைச்சர் கனவு சிதைக்கப்படு ம் என்பதில் சந்தேகமில்லை. ஐம்பது சீட்டு, பொட்டி போன்ற விஷயங்களுக்கு ஆசைப்பட்டு அ.தி.மு.க வுடன் கூட்டனி ஆட்சி அமைத்தால் விஜய்காந்த் டம்மியாக தான் இருப்பார். அப்படி டம்மியாக இருப்பதை விட (ம.தி.மு.க, ப.மா.க உதாரணம்) விஜயகாந்த் தனித்து போட்டியிடுவது நல்லது. இதுவரை விஜயகாந்த் பலமாக இருப்பது தனித்து போட்டியிடுவது தான்.

அப்படி கூட்டனி அமைக்க நினைத்தால், நம் தமிழர் கட்சி, ப.ஜ.க போன்ற இதர கட்சிகளுடன் கூட்டனி வைத்துக் கொண்டால் விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது.

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை தி.மு.க, அ.தி.மு.க எதிர்ப்பு அலை அதிகமாக தெரிகிறது. இதை விஜயகாந்த் பயன்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறை ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் எதிர்கட்சியிலாவது அமரலாம். பத்து, இருபது தொகுதியில் வெற்றி பெறலாம். ஆனால், மற்றவர் தலைமையில் இவர் கூட்டனி அமைத்தால்.... எதிர்காலத்தில் தே.மு.தி.க தமிழகத்தில் மற்றுமொரு கட்சியாக தான் இருக்கும்.

எது எப்படியிருந்தாலும் தமிழகத்தில் மீண்டும் கூட்டனி ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த மைனாரிட்டி அரசு எது என்பது தான் தேர்தலின் முடிவாக இருக்கும்.

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//சென்னை சங்கமம் அடுத்த வருடம் முதல் ரத்து செய்யப்படும்
மீண்டும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டாக அறிவிக்கலாம்
கலைஞர் காப்பீடு, ஒரு ரூபாய் அரிசி திட்டம் ரத்து செய்யப்படலாம் அல்லது பெயர் மாற்றப்படலாம்.
வாரிசுகள் கைது நடவடிக்கை மற்றும் பேரன்கள் வீட்டில் வருமான வரி சோதனை போன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம்.//


ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அருமை அருமை ஹா ஹா ஹா ஹா ஹா......

MANO நாஞ்சில் மனோ said...

அட பார்ரா வடையும் எனக்குதான்....

தங்கம்பழனி said...

எப்படியும் ஏமாறப்போகிறவர்கள் நாம்தான்.. ஏமாற்றுக்கார்ர்கள் அவர்கள்தான்.. ஒரே குட்டை வெவ்வேறு மட்டைகள்..! அவ்வளவுதான் வித்தியாசம்..!

LinkWithin

Related Posts with Thumbnails