Wasted Death என்ற ஆங்கில புத்தகத்தை தமிழில் ‘நீதியின் கொலை’ பெயரில் புத்தகமாக வந்திருக்கிறது.
நீதியின் கொலை என்ற ஒரு புத்தக ஒன்று இல்லை என்றால் 'ராஜன் பிள்ளை' என்ற ஒருவர் வாழ்ந்து, அரசு அதிகாரிகளின் கவனக் குறைவால் இறந்தக் கதை எனக்கு தெரிந்திருக்காது. பதினைந்து வருடம் முன் (1995) உலக புகழ்ப் பெற்ற ஒரு தொழிலதிபர் திஹார் ஜெயிலில் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்திருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறைகள் அறிந்துக் கொள்ள வேண்டியது ஒன்று. அங்கு, 6000 கைதிகளுக்கு ஆறு மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள்.
சாதாரன தொழிலாளி இறந்திருந்தால் பெரிய செய்தியாக இருந்திருக்காது. பெரிய முதலாளி சிறையில் இறந்ததால்,அதுவும் சிங்கப்பூர் குற்றவாளி சிறையில் இறந்தது கைதிகளை அலட்சியமாக நடத்தும் அதிகாரிகளின் நிர்வாகத்தை காட்டியுள்ளது.
யார் இந்த ராஜன் பின்னை ?
பிரிட்டானியா கம்பெனியின் முதல் இந்திய சேர்மன். ‘பிஸ்கட் கிங்’ என உலகத்தோரால் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர். கோகோ கோலாவை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவர முதலில் முயன்றவர்.... சாப்பிட்ட தொகைக்கு மேல் டிப்ஸ் கொடுக்கக்கூடியவர். ஒரு திருமணத்துக்கு அவர் தரும் பரிசு, திருமணச் செலவைவிட விலை கூடியதாக இருக்கும்.
இப்படி பெரும் புகழ்ப் பெற்ற தொழிலதிபர் பிஸினஸ் தில்லாலங்கடி வேலைகளை செய்திருக்கிறார்.
ஒரு நிறுவனத்தின் பணத்தைக் கொண்டே அதன் பங்குகளை வாங்கியிருப்பதாகவும், தனக்கு சொந்தமான இருந்த கூட்டு நிறுவனத்துக்கு ஒரு ட்ரேட் மார்க்கை விற்றதாகவும் போன்ற 29 வணிக குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் அவர் மீது சுமத்தியது. வணிகத்திற்காக சிங்கப்பூர் சட்டத்திற்கு எதிராக நிறுவணத்தின் பணத்தை செலவு செய்திருக்கிறார்.
சிங்கப்பூரில் தனக்கு எதிரான வழக்கில் இருந்து தப்பித்து இந்தியா வந்ததும், இந்திய அரசால் கைது செய்யப்படுகிறார். திஹார் ஜெயிலில் உடல் நலம் குன்றி இறக்கிறார்.
ராஜன் பிள்ளை எப்படி ‘பிஸ்கட் கிங்’ அழைத்தார்கள் என்று தெரியவில்லை.
1. ஜோதிடத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவர்.
2. கோக்க கோலா நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து இந்தியாவில் வணிக செய்ய பல டாலர் முதலீடு செய்தார். இறுதியில், கோக்க கொலா நிறுவனம் தனியாக இந்தியாவில் வியாபாரம் செய்ய முடிவு எடுக்க பெரிய தொகையை இழந்தவர்.
3.ராஜேஷ் சக்ஸேனா போன்றவர்கள் தன்னை முந்திவிட அளவிற்கு பிஸினஸில் மெத்தமையாக இருந்தவர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வியாபாரத்தில் நண்பர்களை நம்பி ஏமாற்றப்பட்டவர்.
4. 20 பாத் மதிப்புள்ள தாய் அக்ரி புட்ஸை பங்கை 80-103 பாத் வாங்கியவர்.
இந்த புத்தகத்தை எழுதியவர் ராஜன் பிள்ளையின் தம்பி ராஜ்மோகன் பிள்ளை.
ராஜ்மோகன் தன் அண்ணன் ராஜன் இந்தியாவுக்கு வந்தது மிக பெரிய தவறு. சிங்கப்பூர் ஜெயிலில் இருந்திருந்தால், நிச்சயமாகப் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறந்திருக்க மாட்டார். செய்யாத குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார் என்று சொல்லுகிறார். பல இடங்களில் தன் அண்ணனை கதாநாயகனாக்கும் மனப் போக்கு அவர் எழுத்தில் தெரிந்தது.
உண்மையில், சிங்கப்பூரில் செய்யாத தவறை இந்தியாவில் தைரியமாக தெரிந்தே செய்யலாம். தனது நிறுவனத்தின் பணத்தில் பங்குகளை வாங்குவது, ஆட்களை வைத்து பங்கு சந்தையில் விலை ஏற்றுவது இங்கு சர்வசாதாரம். சத்யம், ரிலையன்ஸ் போன்ற நிறுவனம் செய்யாத தவறை ராஜன் பிள்ளை செய்துவிட்டார் என்று அப்பாவி தனமாக கேள்வி இந்த புத்தக முடிக்கும் போது தோன்றுகிறது.
ராஜன் பிள்ளை தண்டிக்கப்பட்ட ஒரே காரணம் வழக்கு சிங்கப்பூரில் நடந்த்தால் தான். ( இந்தியாவில் நடந்திருந்தால் வருட கணக்கில் இழுத்திருப்பார் என்பதை இந்த புத்தகத்தில் குறிப்பிடாமல் இல்லை.)
அதிகாரிகளின் மெத்த தனத்தை ஒரு முதலாளியின் மரணத்தின் மூலம் வெளிச்சதிற்கு வந்திருக்கிறது. பத்து வருடம் கழித்து இந்த புத்தகம் நினைவுப்படுத்தியிருக்கிறது.
புத்தகத்தை வாங்க.. இங்கே.
No comments:
Post a Comment