வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, February 26, 2010

வட்டி கொடுக்கும் சேமிப்பு வங்கி கணக்கு !



இன்று மாத சம்பளம் வாங்குபவர்கள் பலருக்கு சேமிப்பு வங்கி கணக்கு வைத்திப்பார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை நம் வங்கி கணக்கில் 3.5% வட்டி என்ற பெயரில் ஒரு தொகை வங்கி போடும். வீட்டில் சும்மா இருக்கும் பணம் வங்கியில் போட்டால் எதோ வட்டியாவது வருகிறது என்று பல நடுத்தர வர்கத்தினர்கள் இருக்கிறார்கள். இப்படி இந்தியர்கள் பல கோடி ரூபாய் பணம் சேமித்து வைக்கும் வாடிக்கையாளர்கள் பயனடைவதை விட வங்கி லாபம் சம்பாதிக்கும் சுட்சமம் பலர் அறிந்திருக்க நியாயமில்லை.

முதலில் சேமிப்பு கணக்கில் எப்படி வட்டி கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

வங்கியின் சேமிப்பு வட்டி கணக்கு மிகவும் வினோதமாக இருக்கிறது. ஆதாவது, ஒரு மாதத்தில் 10 தேதி முதல் 30 ஆம் தேதி வரை எந்த தேதியில் குறைந்த பணம் இருக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு வட்டி கணக்கு போடுவார்கள்.

உதாரணத்திற்கு,

ஏப்ரல் 10 - வங்கி கணக்கில் பணமில்லை
ஏப்ரல் 11 - 30 - வங்கியில் 1,00,000 உள்ளது.


குறைந்த பணம் (0) எடுத்து வட்டி கணக்கு போட்டால், உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இருக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு எந்த வட்டியும் தராது.

அதே போல், மே 10 - 1,00,000 உள்ளது
மே 31 - எல்லா பணத்தையும் வங்கியில் இருந்து எடுத்தாகி விட்டது. வங்கியில் பணமில்லை
.

இப்போதும் உங்கள் சேமிப்பு வங்கி கணக்கிற்கு வட்டி கிடையாது. ஆதாவது, 51 நாள் வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் 1 லட்ச ரூபாய்க்கு எந்த பயனும் அனுபவிக்காமல் வங்கி மட்டும் லாபம் சம்பாதிக்கிறது.

உங்கள் பணம் உங்களுக்கு லாபம் கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.

மேல் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.

உங்கள் வங்கி கணக்கில் எப்ரல் 11ஆம் தேதி ஒரு லட்ச ரூபாய் போடுவதிற்கு பதிலாக எப்ரல் 10ஆம் தேதி போட வேண்டும். அதே போல் பணம் எடுக்க வேண்டியதாக இருந்தால் ஜூன் முதல் தேதியில் எடுத்து விட வேண்டும். அப்படி செய்தால், உங்கள் வங்கியில் இருக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி பெறலாம்.

இதுவரை எல்லா வங்கிகளும் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 3.5% வட்டி தருகிறோம் என்ற பெயரில் இப்படி தான் வட்டி வழங்கிவந்துள்ளது. இப்போது, RBI புது சட்டப்படி (April 1,2010 முதல்) எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர் வங்கி கணக்குக்கு தின வட்டி கொடுக்க வேண்டும். (Daily Interest - தமிழாக்கம் )

உதாரணத்திற்கு,
உங்கள் சேமிப்பு கணக்கில், எப்ரல் மாத கீழ் காணும் நாட்களில் இவ்வளவு பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஏப்ரல் 1 - Rs.500
ஏப்ரல் 10 - Rs.1000
ஏப்ரல் 25 - Rs.300

உங்கள் சேமிப்பு கணக்கு வட்டி = (500 * 3.5%* 9/365) + (1000 * 3.5%* 15/365) + (700 * 3.5%* 6/365) = Rs.2.04 கிடைக்கும்
.

இதற்கு முன்பு வட்டி கணக்கு படி உங்களுக்கு வட்டி பணம் Rs. 0.86 ( 300 * 3.5% * 30/365) கொடுப்பார்கள். புது கணக்கு படி வாடிக்கையாளருக்கு Rs.1.18 லாபம் கிடைக்கிறது. ஆனால், சேமிப்பு கணக்கில் வரும் வட்டியை இனிமேல் வருட வருமானத்தில் காட்ட வேண்டும் என்று புதிய வருமான வரி சட்டம் வரப்போவதாக தெரிக்கிறது. (PAN Card கொடுக்க வேண்டும்).

சந்தோஷத்திலும் ஒரு...... ஆப்பு !!

8 comments:

puduvaisiva said...

Thanks Guhan I learn something form this post

and tell me any possible to safe invesment to alternative saving Bank account..

இராகவன் நைஜிரியா said...

போகிற போக்கில் பார்த்தால், எல்லாத்துக்கும் பான் கார்ட் கேட்கப் போகின்றார்கள்.

butterfly Surya said...

இராகவன், பஸ் டிக்கெட் வாங்க கூட வைத்திருக்க வேண்டிய காலம் வரும்.

இதை தவிர அமெரிக்கா போல சோஷியல் செக்யூரிட்டி நம்பர் கொடுக்கும் பணியும் ஆரமிக்க இருக்கிறது.

க ரா said...

குகன் நல்ல பதிவு இது. ஒரு சிறு திருத்தம். ”வட்டி கொடுக்கும் செமிப்பு வங்கி கணக்கு !" என்பதில் சேமிப்பு தானே சரி.

க ரா said...

குகன் கட்டுரை முழுவதிலும் சேமிப்பு செமிப்புன்னே இருக்கு பாருங்க.

Cable சங்கர் said...

நலல் பதிவு

priyamudanprabu said...

நலல் பதிவு

Unknown said...

சேமிப்பு இருக்கட்டும். இன்று பலருக்கும் பணத்தை சம்பாதிப்பதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

LinkWithin

Related Posts with Thumbnails