சுதந்திர தினம் என்பதால், காலை எங்கள் பகுதியில் கொடியென்ற நிகழ்ச்சி, என் மகன் பள்ளி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மூன்றாவது நிகழ்ச்சியாக அவரது நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டேன். அங்கு சென்றதும், இது வரை நூல் வெளியீட்டு விழாவில் பார்க்காத ஒரு விஷயத்தை தோழர் சீதா கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார். பார்வையாளர் ஒரு பகுதியில் மனநல பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து இருந்தனர் !!!!
உண்மையில், இவர்களை மனநல பாதிக்கப்பட்டவர்கள்/ இழந்தவர்கள் என்று எப்படி அழைப்பது ? அளவுக்கு அதிகமான கோபம், துக்கத்தில் துவண்டு போகும் மனம், கருத்துக்கு எதிர் கருத்து கூறினால் நண்பனை எதிரியாக பார்க்கும் எண்ணம்.... என்று நம்மில் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். எதோ ஒரு கனத்தில் மனிதன் தன் மனநிலையை இழக்கிறான். கொஞ்ச நேரத்தில் மீண்டும் தன் இயல்பு நிலைக்கு திரும்புகிறான். இது மனிதனின் சராசரி குணமாக இருக்கும் போது எல்லோரும் மனநிலை இழப்பவர்களே !! இவர்கள் மட்டும் எப்படி நாம் ஒதுக்க முடியும் ??
இவர்களை மனநிலை இழந்தவர்கள் என்று சொல்லுவதை விட, மனநிலை மறந்தவர்கள் என்று சொல்லுவது தான் சரி !! மனநிலை ஒன்று இருப்பதை மறந்து எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பவர்கள். ஒரு கனம் சராசரி மனிதர்களோடு இவர்களை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன். சிலர் சீரூடையணியாமல் வெளியே இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் குறையறிந்து, பச்சையாடையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
இவர்களும் பள்ளி மாணவர்கள் போல் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் கை தட்டினார்கள். உட்கார வைத்த இடத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். நிகழ்ச்சி இடையே வெளியே சென்று வரும் பழக்கம் இவர்களிடம் இல்லை. இவர்கள் வரைந்த ஓவியத்தை அரங்கு சுவற்றில் ஒட்டிவைத்திருந்தார்கள். உண்மையில் இவர்களின் சிரிப்பு நூறு கவிதை சொல்லும். பல புத்தகங்கள் எண்ணங்கள் இவர்களிடம் மறைந்துக் கிடக்கிறது.
நிகழ்ச்சி முடியும் போது கனத்த மனதோடு வெளியே வந்தேன்.
3 comments:
மனம் தொட்ட பகிர்வு...
/// இவர்களின் சிரிப்பு நூறு கவிதை சொல்லும். பல புத்தகங்கள் எண்ணங்கள் இவர்களிடம் மறைந்துக் கிடக்கிறது. ///
உண்மை...
பதிவாக்கிதற்கு நன்றி...
? அளவுக்கு அதிகமான கோபம், துக்கத்தில் துவண்டு போகும் மனம், கருத்துக்கு எதிர் கருத்து கூறினால் நண்பனை எதிரியாக பார்க்கும் எண்ணம்.... என்று நம்மில் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். //
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Nenjai kanakka vaitha pathivu
Post a Comment