ஜெ.ஜெ.ப்ளிம்ஸ் ( அம்மாவுக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை)
தயாரிப்பில் ரித்விக் கட்டக் இயக்கியப் படம் 'சுபர்ண ரேகா'.
சுதந்திர சந்தோஷத்தை விட வலியும், வேதனையும் கொடுத்த இந்திய, பாகிஸ்தான்
பிரிவினை பிந்தைய காலமான 1948ல் கதை தொடங்குகிறது. தாக்காவில் சொத்துக்களை இழந்து தன்
தங்கை சீதாவுடன் அகதி முகாம்மில் இருக்கிறான் ஈஸ்வர். அவனது நண்பன் ஹரபிரசாத் சமூகத்
தொண்டில் அதிக ஆர்வமுள்ளவன். பொதுவுடைமை சிந்தனையாளன். ஈஸ்வரும், ஹரபிரசாத்துக்கும்
அகதி முகாம்மில் இருக்கும் சிறுவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். இந்த சமயத்தில்
அகதி முகாம்மில் புகலிடம் கேட்டு ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த சிறுவன் அவிராம், அவனது
அம்மா வருகிறார்கள். அகதி முகாமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அங்கு அனுமதி
அளிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், குண்டர்கள் கூட்டம் ஒடுக்க இனத்தினரை ஒரு வேன்னில்
ஏற்றி இழுத்து செல்கிறார்கள். அதில் இருந்து அவிராம் மட்டும் தப்பிக்கிறான். தாய்யை
இழந்த அவிராம்மை ஈஸ்வர் ஆதரவு தருகிறான்.
பொதுவுடமை சிந்தனைவாதியான ஹரபிரசாத் காந்தியின் மரணத்துக்கு அழுகிறான்.
ஆனால், ஈஸ்வர் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. தன் தங்கைப் பற்றி தான் அதிகம்
சிந்திக்கிறான்.
ஈஸ்வரின் நண்பன் ராம்தாஸ் அவனது மில்லில் வேலை செய்ய அழைக்கிறான். தன்
தங்கை சீதாவுக்காக அவன் வேலையை ஏற்கிறான். ஆனால், அவனது ஹரபிரசாத் ஈஸ்வரை சுயநலவாதி
என்று சொல்லி அவனிடம் பேச மறுக்கிறான். ஈஸ்வரின் தங்கை சீதா தாங்கள் செல்ல விருக்கும்
புது வீட்டைப் பற்றி ஈஸ்வரிடம் கேட்கிறாள். அங்கு நீல ஆறு, நீல மலை, எல்லாம் இருக்குமா
என்று கேட்கிறாள். ( தாக்காவை நினைவுப்படுத்துபவை). ஆனால், ஈஸ்வர் எதற்கும் பதிலளிக்கவில்லை.
தனக்கு வேலை கிடைத்த மில்லுக்கு சீதாவுடன், அவிராம்மையும் அழைத்து செல்கிறான்.
அந்த மில் 'சுபர்ண ரேகா' என்ற நதியின் அருகே இருக்கிறது. ரயிலில் இருந்து இறங்கியதும்
மில்லில் வேலை செய்யும் முகர்ஜி அவர்களை அழைத்து சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில்
விடுகிறான். சீதா சங்கீதத்தில் அதிக ஆர்வமுடையவள். எப்போது நதிக்கரையில் பாடுவாள்.
சிறுவனான அவிராம்மை வெளியூரில் அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று ஈஸ்வர் முடிவெடுக்கிறான்.
அவிராம் ஊருக்கு செல்வதை சீதாவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவன் மீது
கோபப்படுகிறாள். பிறகு, சமாதானமாகி இருவரும் விளையாடுகிறார்கள். நதிக்கரை அருகில் போரால்
பாதிக்கப்பட்ட வீடு, விமானம், கோயில் ஒவ்வொன்றையும் சுற்றிப்பார்கிறார்கள். விமானம்
தரையிரங்கும் இடத்தில் விளையாடுகிறார்கள். போருக்கு பின் ஒழிந்து இருக்கும் கொடுமை
பிஞ்சு சிறுவன், சிறுமிக்கு தெரியவில்லை.
அவிராம் ஊருக்கு சென்றதும், ஆற்றக்கரை அருகே காளி வேடத்தில் ஒருவன் பார்த்து
பயப்படுகிறாள் சீதா. அப்போது ஈஸ்வரின் மேனேஜர் அங்கு வர, ‘காளி’ வேடத்தில் இருப்பவனுக்கு
காசுக் கொடுத்து அனுப்புகிறார். தன் பெயர் சீதா என்றதும், மேனேஜர் ராமாயணத்தில் வரும்
சீதாவின் கதையை சொல்லுகிறார். ( ராம்யாணம் - சீதையுடைய கதை என்று சொல்லுவதை இந்த இடத்தில்
கவனிக்கப்பட வேண்டிய ஒன்று)
பல ஆண்டுகள் செல்கிறது.
பழைய மேனேஜர் ஓய்வுப் பெற ஈஸ்வர் மேனேஜர் பொருப் பெற்றுக் கொள்கிறான்.
படிப்பு முடித்து வரும் அவிராம், தனது முதல் நாவலை சீதாவிடம் படித்து காட்டி தன் காதலை
சொல்கிறான். சீதா வெட்கத்தால் அவிராம் காதலுக்கு சம்மதம் சொல்லுகிறாள். இருவரும் காதலிப்பது
ஈஸ்வருக்கு தெரியவருகிறது. இதற்கிடையில், வெளியூரில் இருந்து வரும் ராம்தாஸ், தன் மில்லில்
இரண்டு சதவீத உரிமையை ஈஸ்வருக்கு தருவதாக சொல்கிறான். அப்போது, ராம்தாஸ் ஈஸ்வர் அவிராமை
வளர்த்து, படிக்க வைப்பதை தெரிந்துக் கொண்டு "அவன் என்ன ஜாதி தெரியாமல் ஏன் உதவி
செய்கிறாய் ?" என்று கேட்கிறான். அவிராம் ஈஸ்வர் ஆசைப்படி பொறியியல் படிக்க ஜெர்மன்
செல்ல நினைக்கும் போது சிறு வயதில் தொலைந்த அம்மாவை சந்திக்கிறான். மகன் பார்த்த சந்தோஷத்தில்
அந்த அம்மா இறக்கிறாள். அவிராம் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பது, ஈஸ்வருக்கு
இன்னும் உறுதியாகிறது.
அவிராமை வெளியூருக்கு அனுப்பிவிட்டு, சீதாவுக்கு அவசர அவசரமாக திருமண
ஏற்பாடு செய்கிறான். திருமணத்துக்கு மறுக்கும் சீதாவை, ஈஸ்வர் அடித்து சம்மதிக்க வைக்கிறான்.
ஆனால், திருமண முதல் நாள் சீதா அவிராமுடன் ஓடி திருமணம் செய்துக் கொள்கிறாள்.
மேலும் சில ஆண்டுகள் செல்கிறது.
ஐந்து வயது மகனுடன் அவிராம், சீதா வறுமையில் வாழ்கிறார்கள். எழுத்தை விட்டு
டிரைவராக முடிவெடுக்கிறான் அவிராம். அந்த வறுமையிலும், சீதா தன் அண்ணனை தேடி செல்ல
விரும்பவில்லை. அப்படி சென்றால், உயிர் விட்டுவிடுவேன் என்கிறாள்.
ஆசையாய் வளர்த்த தன் தங்கை தன்னை பிரிந்ததில் இருந்து மனது பாதிக்கப்பட்டவனாக
திறிக்கிறான் ஈஸ்வர். மில்லில் தன்னை புறம் பேசுவதை உணர்ந்தும், பேசாமல் அமைதியாக இருக்கிறான்.
ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது பாலிய நண்பன் ஹரபிரசாத்
வருகிறான். தான் வாழ்க்கை தோல்வியுற்று எதுவும் இல்லாதவனாக இருப்பதை சொல்கிறான். ஈஸ்வர்,
ஹரபிரசாத் வேறு வேறு வழி சென்றாலும், இறுதியில் இருவரும் தோல்வி பெற்றதை பற்றி பேசிக்
கொள்கிறார்கள். இறுதி நாட்களை சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்கிறான் ஹரபிரசாத். அவன்
சொன்னதை போலவே குடி, சூதாட்டம் என்று பணத்தை செலவு செய்கிறான் ஈஸ்வர்.
அவிராம் டிரைவர் வேலை செய்யும் போது ஒரு சிறுமி மீது வண்டி ஏற்றி கொன்று
விட, பொது மக்கள் அவனை அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். இது வரை வறுமையில் இருந்த சீதா,
மேலும் வறுமையில் வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் விபச்சாரத்தை செய்ய வேண்டிய சூழ்நிலையில்
தள்ளப்படுகிறாள். அதை விட பெரிய கொடுமை, முதல் வாடிக்கையாளராக அவன் அண்ணன் ஈஸ்வர் வருவது.
அண்ணன் முன் விபச்சாரியாக நிற்க முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறாள் சீதா. தற்கொலைக்கு
தூண்டியதற்காக ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறான். சிறையில் இருந்து வெளியே
வந்ததும் அவன் வேலை பரிபோனதை தெரிந்துக் கொள்கிறாள். அதாரமற்ற தன் வாழ்க்கை இருக்கிறதே
என்று நினைக்கும் போது, சீதாவின் மகன் அவனை 'மாமா' என்று அழைக்கிறான்.
'சுபரணரேகா' ஆற்றங்கரையில் மீண்டும் தன் வாழ்க்கையை ஈஸ்வர் தொடங்குவது
படம் முடிகிறது.
சுபரணரேகா என்றால் நிற்காமல் ஓடும் நதி என்று பொருள். 1962 எடுக்கப்பட்ட
இத்திரைப்படம், வெளியானது 1965ல் தான்.
பெங்காலி படங்களில் மட்டும் எப்படி சிறுவர்களுக்காக உலகத்தை அழகிய கவிதைப்
போல் காட்டுகிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட இடத்தில், விமானம் தரையிறங்கும் இடத்தை
சிறுவர்கள் பேசும் போது, போரில் கொடுமையை மறந்து இவர்களை ரசிக்க வைக்கிறது.
கருப்புவெள்ளை திரைப்படத்தில் கதாநாயகி இவ்வளவு அழகாக தமிழ் படங்களில்
காட்டியிருக்கிறார்களா ? என்று தெரியவில்லை. நாயகி அவ்வளவு அழகாக இருக்கிறார். நாயகி
பாத்திரத்துடன் ஒட்டி வரக்கூடிய பாடல், அர்தம் புரியாமல் இருந்தாலும் நெஞ்சய் அழகாக
வருடுகிறது.
அவிராமை சகோதரனாக நினைத்து படிக்க வைத்தவர். ஜெர்மன் அனுப்பி பொறியியல்
படிக்க வைக்க ஆசைப்படும் ஈஸ்வர், தன் சகோதரியை ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்தவன்
என்று ஒரு காரணத்துக்காக மறுக்கிறார் என்பதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் தங்கைக்காக
பொதுவுடைமை சிந்தனை விட்டு, சுய நலமாக முடிவெடுக்கிறார். மேட்டுக்குடியில் பிறந்த ஆணவமோ,
அகந்தையோ அந்த பாத்திரத்துக்கு காட்டவில்லை. அவிராம், சீதா திருமணத்துக்கு சம்மதித்தால்,
ராம்தாஸ் மூலம் வரும் பங்கு பாதுக்கப்படும் என்று அஞ்சுவதாக இருந்தாலும், அச்சத்தை
விட இருவர் கோபம் தான் அந்த பாத்திரத்துக்கு இருக்கிறது. அப்படி, ஜாதி பார்ப்பவன் ஏன்
ஒடுக்கப்பட்ட இனத்தில் இருப்பவனை படிக்க வைக்க வேண்டும் ?
பொதுவுடைமை சிந்தனையாளரின் தோல்வியையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.
ஈஸ்வரின் நண்பன் ஹரபிரசாத், தன் சிந்தனையில் தோல்வி அடைந்து நெழிந்து ஈஸ்வர் வருகிறார்.
பெரிய எழுத்தாளராக வேண்டும் என்று நினைக்கும் அவிராமும் தன் நாவலை தூக்கிப் போட்டு,
டிரைவராக மாறுகிறார். எழுத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொள்வதும் , சமூகத்தீய்மைக்காக போராடுவதும்
வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பே தோல்வியை ஏற்றுக் கொள்வதை காட்டியுள்ளார்கள்.
அதே சமயம், சுய நலமாக முடிவெடுத்த ஈஸ்வரும் இறுதில் தோற்றுப் போகிறான். அதே சமயம், வசதியான
ராம்தாஸ் மேலும் மேலும் பணத்தை பெருகி வெளிநாட்டுக்கெல்லாம் செல்கிறான். சிந்தனை, கருத்து
என்று இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. அதுவும், எதார்த்த உண்மையே
!!!
இந்திய சினிமாவில் ரித்விக் கட்டக்கின் ஆளுமை யை நம்மால் மறக்க
முடியாது ஒன்று. இன்று, இந்திய சினிமாவை நாம் பேசுவதாக இருந்தால், பெங்காலி படங்களை
தவிர்த்து பேசாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சத்தியஜித்ரே, ரித்விக் கட்டக் பெங்காலி
படங்கள் மக்கள் மனதில் பதியவைத்திருக்கிறார்கள்.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினையில் எத்தனையோ சோகக் கதைகள் ஒழிந்து இருக்கிறது.
அதை சொல்லும் துணிச்சல் நம் இந்திய சினிமாவுக்கு இல்லை என்பது தான் வருத்தமான ஒன்று.
ஆரம்ப காட்சியில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை வன்முறையால் உணர்த்தாமல் , காட்சியால்
உணர்த்திய ரித்விக் கட்டக்கு கோடான கோடி நன்றி.
2 comments:
மிக்க நன்றி...
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள் ...
ஹேராமும் இதே மாதிரியான பிரச்னையை தொட்டு சென்ற படம்..
Post a Comment