வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, July 13, 2012

பில்லா - 2 (திரை விமர்சனம்)

பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்பது அறிதான ஒன்று. அதிசய மனிதனின் பிறகு வந்த ‘நாளைய மனிதன்’, நான் அவன் இல்லையில் இரண்டாம் பாகத்தின் தோல்விக்கு பிறகு இரண்டாம் பாகம் முதல் படத்தின் வெற்றியின் பெயரை கெடுப்பதுப் போல் தான் இருந்து வந்தது. ஆனால், முனி - 2 (காஞ்சனா) இந்த சினிமா சென்டிமென்ட்டை உடைத்து, மற்றவர்களையும் இரண்டாம் பாகம் எடுக்க தூண்டியுள்ளது. இந்த சமயத்தில் பில்லா - 2 வந்துள்ளது. இதில் இவர்கள் வெற்றிப் பெற்றார்களா இல்லையா என்ற கேள்விக்கு ஒரளவுக்கு வெற்றிப் பெற்றுயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


"நாம வாழுறதுக்காக... யார வேண்டுமானாலும் கொல்லாலாம்" என்ற முதல் பாகத்தின் வசனத்தை மைய கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

அகதியாக தமிழகத்துக்கு வரும் பில்லா, வைரக்கடத்தல், போதை கடத்தல் என்று... கடைசியில் ஆயுத கடத்தல் செய்கிறான். அவன் வளர வளர எதிரிகள் பெறுகிறார்கள். அதனால், படம் முழுக்க அஜீத் யாரையாவது சுட்டுக் கொண்டே இருக்கிறார். யாராவது இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டும் இல்லை என்றால்... டூ பீஸ் கவர்ச்சியில் பெண்கள் வருகிறார்கள். இறுதியில், பில்லா தன் எதிரிகளை எல்லாம் கொன்றாரா என்பது க்ளைமாக்ஸ்.

படம் முழுக்க அஜீத்தின் ஆதிக்கம். அஜீத்துக்கு பழகிய வில்லன் பாத்திரம் தான். இதில் அன்டர் பிளே செய்திருக்கிறார். (Coat, cooling glass விடுவதாக இல்லை). அகதி பாத்திரத்தில் அஜீத்துக்கு எடுப்பட வில்லை. முகத்தில் சோகமோ, வருத்தமோ பெரிதாக இல்லை. ஆனால், அதன் பின் வரும் காட்சிகளுக்கு சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகி என்று யாருமில்லை. பாடலுக்குக் கூட ‘நாயகி’ என்று சொல்லப்படுபவர்கள் பயன்ப்படுத்தவில்லை. கவர்ச்சிக்கு என்று ஒரு பெரிய குப் பெண்களை இறக்கியிருக்கிறார்கள். எந்த பெண்ணின் முகத்தை பார்க்க தோன்றவில்லை. (முகத்த தவிர மத்தது காட்டுன என்ன பண்ணுறது !! )

முன்பாகம் (prequel) என்பதை தமிழ் சினிமாவில் பிளாஷ் பேக்காக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், பிளாஷ் பேக்காக சொல்ல வேண்டிய கதையை ஒரு படமாக எடுத்து இருக்கிறார்கள். (இரண்டாம் பாகம் என்றால் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுக்க வேண்டும் என்று இல்லை. அதன் முந்தைய பகுதியைக் கூட படமாக்கலாம் என்பதை இந்த படம் காட்டியுள்ளது.)படத்தின் மிக பெரிய ப்ளஸ் என்று சொன்னால் வசனம் தான். ( வாழ்த்துக்கள் இரா.முருகன் சார். கமலின் "உன்னைப் போல் ஒருவன்" மறைக்கப்பட்ட உங்கள் பெயர் இதில் தெரியும் என்று நினைக்கிறேன்.)

 “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்… ஜெய்க்கிறது. ஜெய்ச்சிட்டா போராளி....”

“இறங்கி வேல செய்றவனுக்கும், உக்காந்து வேல வாங்குறவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.” 

இளவரசு "நீ ரொம்ப பேராசப்பட்டுற" என்று சொல்லும் போது, " இது பேராச இல்ல... பசி" என்று சொல்லும் இடமாகட்டும்.

வில்லன், “I made two mistakes. One, i believed him. Another one, i didnt believe him (Ajith).” போன்ற வசனங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அடுத்த ப்ளஸ். இரண்டாம் பகுதி. முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வேகமாக செல்கிறது. முதல் பாதியில் அஜீத் கடத்தல்க்காரனாக மாறும் காட்சிகள் மெதுவாக தெரிந்தாலும் நன்றாக உள்ளது.

தீம் ம்யூசிக்கை தவிர பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ( உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ரசிகர்களின் சத்தத்தில் கேட்கவில்லை).

மருந்துக்குக் கூட காமெடி இல்லை. அதிக வன்முறை, அதிக கவர்ச்சியால் குடும்பத்துடன் என்று பார்க்க முடியாது. ( அதான் போஸ்டர்ல A certitifcate போட்டிருக்காங்களே !)

ப்ளஸ் 

1.அஜீத்தின் Transformation scenes. (அவசரத்துக்கு தமிழ் வார்த்தை கிடைக்கல.)
2. இரண்டாம் பகுதி வேகம்.
3.ரத்தின சுருக்கமான வசனங்கள்.
4. முதல் முன்பாகம் தமிழ்ப்படம் (First Tamil prequel movie).

மைனஸ்

1. அகதி பாத்திரத்தில் பொருந்தாத அஜீத்தின் அறிமுகம்.
2. வேற்று மொழி வசனங்கள். சில இடங்களில் சப் டைட்டில் கூட இல்லை.
3.அதிக வன்முறை, அதிக கவர்ச்சி.
4. பல கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இரண்டு பேர் கடத்துவது. உலகளவில் ஆயுத வியாபாரம் செய்பவன் கோட்டைக்குள், மூன்று பேர் நுழைந்து துப்பாக்கியால் சுடுவது போன்ற பழைய சினிமா சண்டைக் காட்சிகள்.

கொஞ்சம் மெனகெட்டு இருந்தால் நல்ல Gangster படம் கிடைத்திருக்கும்.

5 comments:

PREM.S said...

நடுநிலையான விமர்சனம் வாழ்த்துக்கள்

Doha Talkies said...

அருமையான விமர்சனம் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்.

UDAYA said...

படத்தைவிட விமர்சனம் சூப்பர்

Gobinath said...

அருமையான விமர்சனம். பக்கச்சார்பின்றி தந்திருக்கிறீர்கள்.

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

LinkWithin

Related Posts with Thumbnails