வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 28, 2013

RAW – உருவானக் கதை

“அப்பா காலம் வேறு. என் காலம் வேறு”

“அப்போது இருந்த இந்தியாவா இப்போது இருக்கிறது ?”

“வெள்ளையர் காலத்தில் சகோதரர்களாக இருந்தவர்கள், இப்போது பாகிஸ்தானில் இருந்துக் கொண்டு இரண்டு போர் (1947, 1965) தாக்குதல் நடத்திவிட்டார்கள். கம்யூனிஸ்ட் நமது நண்பர் என்று அப்பாவின் நம்பிக்கையை சீனாவின் போர் தாக்குதல் பொய்துவிட்டது.”

பகைவர்கள் படையெடுத்த பிறகு போர் நடவடிக்கை எடுப்பதை விட, பகைவர்களை கண்காணித்து போர் வரும் முன் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று பிரதமர் இந்திரா காந்தி நினைத்தார்.

“ இந்தியாவில் பிறந்த சாணக்கியர் தான் உலகத்திற்கு “அர்த்த சாஸ்திரம்” என்ற நூலே கொடுத்தார். அந்த காலத்திலேயே அந்நிய மன்னர்களின் படையெடுப்பை எப்படி முன் கூட்டியே தெரிந்துக் கொள்வது, உள் நாட்டில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிற சக்திகளைப் பற்றி தகவல் திரட்டுகிறவதை எல்லாம் சொல்லியிருக்கிறார். இந்த புக்குல….”

“வரலாறு, அர்த்தசாஸ்திரம், சாணக்கியர் பற்றி எனக்கும் தெரியும். அதைப்பற்றி கேட்க எனக்கு இப்போது நேரமில்லை. அண்டை நாடுகளை கண்காணிக்க, அவர்கள் செயல்பாட்டை தெரிந்துக் கொள்ள ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ?”

 “புது உளவு நிறுவனம் தேவை” என்றார் தளபதி ஜென்ரல் சவுத்ரி.

“ஏற்கனவே, ஐ.பி ( Intelligence Bureau) என்ற உளவு நிறுவனம் அந்த வேலையை செய்கிறதே !”

“அது போதுமனதாக இல்லை. அந்நிய நாடுகளை கண்காணிப்பதற்கே தனி உளவுத்துறை இருந்தால் நல்லது” என்றார்.

“ஐ.பிக்கு என்ன தான் குறை ?”

“ 1962ல் இந்தோ – சீனா யுத்தத்தில் இந்தியாவுக்கு நேர்ந்த பின்னடைவுக்கு உளவுத்துறையின் தோல்வி தான் காரணம். 1965ல் நடந்த இந்தோ – பாகிஸ்தான் யுத்தத்தில் உளவு நிறுவனம் சரியாக செயல்படவில்லை. ஐ.பி. உள்நாட்டு, வெளிநாடு என்று இரண்டு குதிரை மேல் சவாரி செய்கிறது” என்றார்.

தளபதி ஜென்ரல் சவுத்ரி சொன்னது சரி தான். விடுதலை அடைந்து இருபது வருடத்தில் இரண்டு பெரிய யுத்தங்களை சந்தித்த பிறகு, அண்டை நாடுகளை வேவுப் பார்ப்பதற்கு ஒரு தனி உளவு நிறுவனம் வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி உணர்ந்தார்.



1968 அந்நியர்களை கண்காணிக்க ஒரு புது உளவு நிறுவனம் உருவாக்கினார். ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு என்று அந்த உளவு நிறுவனத்துக்கு பெயர் வைத்தனர். சுத்தமான ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Research & Analysis Wing. சுருக்கமாக R&AW. அதன் முதல் இயக்குனராக R.N.Kao என்பவரை நியமித்தார் பிரதமர்.

‘ரா’ என்ற உளவு நிறுவனத்துக்கு முழு வடிவம் கொடுத்தவர் ‘பிரதமர் இந்திரா காந்தி’ என்று சரித்திரத்தில் பொன்னான எழுத்துக்களில் பொறிக்கப்பட்டது.

Monday, March 18, 2013

ஐ.எஸ்.ஐயிடம் மாட்டிய ரா உளவாளிகள் !

அடுத்த ஒரு மாதத்திற்கு பத்திரிக்கைகளுக்கு பரப்பரப்பான செய்தி கிடைத்திருக்கிறது என்று தான் முதலில் நினைத்தார்கள். ஆனால், தங்கள் நாட்டையே வேவு பார்க்கும் வேலை நடக்கிறது ஒரு சிறு பொறி தட்டியதில் ஐ.எஸ்.ஐ உஷாராகிவிட்டார்கள்.

இஸ்லாமாபாத்தில் ஒர் இந்திய பள்ளிக்கூடம். பெரும்பாலும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். பொதுவாக, அந்நிய நாட்டு அலுவலகங்கள், இடங்கள் எல்லாம் கொஞ்சம் சந்தேக கண்ணோடு பார்ப்பது தான் அந்த நாட்டின் உளவுத்துறையின் வேலை. அதையே தான், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பும் செய்தது.

அந்த இந்திய பள்ளியில் ஒரு அழகானப் பெண். பார்த்த மாத்திரத்தில் கொஞ்சம் தடுமாற வைக்கும் அழகு. ஐ.எஸ்.ஐ உளவாளி அவள் அழகை ரசிப்பதற்காகவோ அல்லது நிஜமாக அவளை உளவு பார்க்க சென்றார்களோ தெரியாது. ஆனால், அவள் அடிக்கடி ஒரு பெரிய ஹோட்டலில் ஒரு பாகிஸ்தானியனிடம் சிரித்து பேசும் செய்தியை கண்டுபிடித்தனர்.

இந்தியப் பெண் பாகிஸ்தானியர் ஒருவரை காதலிக்கிறாரா ? இன்னொரு சானியா – சோயிப் மாலிக் ஜோடி. ஐ.எஸ்.ஐ உளவுத்துறை பத்திரிக்கைக்கான தலையங்கத்தை யோசிக்க தொடங்கினர். எதற்கும் கொஞ்சம் விசாரித்து பார்க்கலாம் என்று விசாரித்தார்கள்.

அந்தப் பெண் சந்திக்கும் பையனின் ஜாதகத்தை கொண்டு வந்தார்கள். ராகு, கேது இல்லாத ஜாதகம். அவன் இது வரை வேலை செய்த இடங்கள், படிப்பு என்று எல்லா விபரங்களும் இருந்தது. அவன் வேலை செய்தது எல்லாம் தனியார் நிறுவனங்கள். காதலாக தான் இருக்கும் என்றே உறுதி செய்யும் நிலையில்… ஒரு இடம் அவர்கள் கண்ணை உறுத்தியது. அவன் இதற்கு முன் கொஞ்ச நாட்கள் அணு ஆய்வு மையத்தில் வேலைப் பார்த்திருக்கிறான்.

இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள் அந்த இந்தியப் பெண் வீட்டுக்கு சென்றே விசாரித்தனர். முதலில், எதையும் சொல்ல மறுத்த அவள், பிறகு உண்மையை சொல்லத் தொடங்கினாள். அவள் ஒரு இந்திய உளவாளி. Research and Analysis Wing என்கிற ராவில் பணி செய்பவள்.

வேறு நாட்டு உளவாளி என்றால் சுட்டுவிடலாம். இல்லை என்றால் கைது செய்து அந்த நாட்டின் தூதரக சொல்லியிருக்கலாம். மாட்டியது இந்திய உளவாளியாயிற்றே !!

விஷயம் சர்வதேச மீடியாவுக்கு கொண்டு சென்றார்கள். இந்தியா மறுத்தது. இரண்டு பரப்பரப்புக்கு பின் மீடியா நீயூஸ் குறைந்தது. அந்தப் பெண் இந்தியா திரும்பவில்லை. ஐ.எஸ்.ஐ அந்தப் பெண் பேசி, மிரட்டி தங்கள் நாட்டுக்கு வேலை செய்ய வைத்தனர். டபுள் ஏஜெண்ட் வேலை. தன்னை காப்பாற்றாத இந்திய அரசு, மாட்டிக்கொண்டது பாகிஸ்தானிடம். வேறு என்ன செய்வது ?

**

கொண்டாட்டங்கள் நிறைந்த தினம். இராணுவ அணி வகுப்பு, கலை நிகழ்ச்சி, கோலாக்கலம், ஆயுத எந்திய வீரர்களின் ஊர்வலம். அப்படி சுபயோக தினம். மார்ச் 23. பாகிஸ்தான் தினம்.

அன்றைய நிகழ்ச்சி தொடங்கும் முன் அதிகாலை இரண்டு பேர் எல்லைக்கடக்க முயற்சித்தனர். மாட்டியவர்கள் இந்தியர்கள். அதுவும் பாகிஸ்தான் அரசு நிகழ்ச்சி நடக்கும் அன்று !!

ஐ.எஸ்.ஐ அடித்து விசாரிக்க அதிக நேர எடுத்துக் கொள்ளவில்லை. இருவரும் இந்திய உளவாளிகள். இன்றைய நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் புதிய ஆயுதங்கள், வாகனங்கள் பற்றிய விபரங்களை சேகரித்து ஒரு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றனர். மாட்டிய இந்திய உளவாளிகளை அவர்கள் ஒன்றும் செய்ய விரும்பவில்லை. அதற்கு மாறாக அவர்களே ஒரு ஆயுதப்பட்டியலை தயார் செய்து சீல் வைத்த ஒரு ரிப்போர்ட்டை கொடுத்து இந்தியாவுக்கு அனுப்ப சொன்னார்கள்.

அதில் என்ன ஆயுதம் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று அந்த இருவருக்கும் தெரியாது. உயிருக்கு ஆபத்து இல்லாததால், அவர்கள் கொடுத்த பட்டியலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இப்படி, மாட்டிய இந்திய உளவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக, அவர்களை வைத்து தவறான தகவல்களை அனுப்பி வைத்தது ஐ.எஸ்.ஐ.


 உதவிய நூல் :

ISI :  நிழல் அரசின் நிஜமுகம்.


Tuesday, February 19, 2013

மாற்றம் தந்த இந்திய சினிமா - 4 :: நாலு பெண்ணுகள்

 இந்திய சினிமாவில் தரமான படங்கள் என்று எடுத்துக் கொண்டால் வங்காள படங்களும், மலையாளப் படங்களும் அதிகம் இடம் பெறும். மற்ற மொழி படங்களை காட்டிலும் குறைவான படங்கள் இந்த இரண்டு மொழியில் வந்தாலும், இந்த இரண்டு மொழியின் படங்கள் இந்திய சினிமாவில் ஆற்றும் பங்கு மிக பெரியது.
 
“நாலு பெண்ணுகள்” நான்கு குறும்படங்களின் தொகுப்பு. ஒவ்வொரு படமும் 20 - 25 நிமிடம். மலையாள எழுத்தாளரான ‘தகழி’ சிவசங்கரன் பிள்ளை எழுதிய நான்கு சிறுகதைகளை மையமாக கொண்டு அடூர் கோபால கிருஷ்ணன் இயக்கியப் படம்.

இந்திய சினிமா இயக்குனர்களில் அடூர் கோபால கிருஷ்ணனுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த இயக்குனருக்காக ஐந்து முறை தேசிய விருது வாங்கியவர். தாதாசாயிப் பால்கே விருது பெற்றவர். கேரள அரசின் பல விருதுகள் வாங்கி குவித்தவர். திரைப்படங்களில் மட்டுமில்லாமல் குறும்படம், ஆவணப்படத்திலும் அதிக ஆர்வமுடையவர். கிருஷ்ணாட்டம், கலாமண்டலம் கோபி போன்ற ஆவணபடங்களுக்கும் விருது வாங்கி இருக்கிறார்.

நான்கு கதைகளும் 1940 - 1960 வரையிலான் நடக்கும் கதைகள்.

விபச்சாரி 

தெருவோர விபச்சாரியான குஞ்சிப்பெண்ணுவை (பத்மபிரியா) மணக்க விரும்புகிறான் பப்புக்குட்டி. முதலில் திருமணம் செய்துக் கொள்ள தயங்கும் குஞ்சிபெண்ணு, அவளின் தொழியின் வற்ப்புருத்தலால் பப்புக்குட்டியை ஏற்றுக் கொள்கிறாள். இருவரும் தங்க வீடு இல்லாமல், காலியான கடை திண்ணையில் உறங்குகிறார்கள். பகலில் கூலி வேலை செய்கிறார்கள்.

ஒரு நாள் காவலர்கள் அவர்களை விபச்சார வழக்கில் கைது செய்து நீதி மன்றத்திற்கு அழைத்து செல்கிறது. இருவரும் கணவன்-மனைவி என்று சொல்லியும், சட்டப்படி இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட சான்று இல்லாததால் விபச்சார வழக்கில் தண்டிக்கப்படுகிறார்கள்.

கன்னிப்பெண்

குமாரி (கீதுமோகன் தாஸ்) தன் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலையும், விவசாய வேலையும் செய்யும் பொறுப்புள்ள பெண். அவளுக்கு திருமண வந்தும் நல்ல வரன் கிடைக்காமல் அவளது தந்தை சிரமப்பட, ஒரு நண்பன் மூலம் 'நாராயணன்' என்ற மணமகன் கிடைத்து குமாரிக்கு திருமணம் செய்து வைக்கிறார். நாராயணன் குமாரியிடம் சிரித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவனை தொட அனுமதிக்கவில்லை. அவளை மனைவியாக அவன் நடத்தவில்லை. கணவனின் நடத்தை புரியாமல் குமாரி தவிக்கிறாள்.

குமாரியும், நாராயணனும் விருந்துக்காக குமாரியின் வீட்டுக்கும், உறவினர் வீட்டுக்கும் செல்ல அங்கு தனது கணவனின் அகோர பசி உணவு சாப்பிடுவதை பார்த்து முகம் சுலிக்கிறாள். விருந்து முடிந்ததும், குமாரியை அங்கையே விட்டுவிட்டு நாராயணன் சென்றுவிடுகிறான். அவளை அழைத்து செல்ல அவனோ, அவன் வீட்டில் இருந்தோ யாரும் வரவில்லை. ஊரில் உள்ளவர்கள் குமாரியின் நடத்தையால், அவள் கணவன் அவளை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்று கேலிப் பேச, அவருக்கு வரன் கொண்டு வந்த நண்பரிடம் குமாரியிடம் சண்டைக்கு செல்கிறார். அது வரை அமைதியாக இருந்த குமாரி, தன் பொறுமை இழந்து “தனக்கு உண்மையான திருமணமே நடக்கவில்லை” என்கிறாள்.

இல்லத்தரசி

தன் கணவனுடன் சந்தோஷமாக வாழும் சின்னம்மா (மஞ்சு பிள்ளை), குழந்தை இல்லை என்பது தான் மிக பெரிய குறை. அவளது கணவன் பக்கத்து கிராமத்தில் வேலை செய்வதால், பெரும்பால நேரங்களில் வீட்டில் தனிமையில் வாழ்கிறாள். ஒரு நாள், அவளை பார்க்க அவளுடன் பள்ளியில் படித்த நரபிள்ளை என்பவன் வருகிறான். சிறு வயதில் பிழைப்புக்காக தமிழ் நாட்டு சென்று, அங்கையே குடும்பத்துடன் வாழ்பவன். பிறந்த ஊருக்கு திரும்பும் நரன், சின்னம்மாவுடன் தனது பாலியக்கால நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்கிறான். ஒரு கட்டத்தில், அவளிடம் உன் கணவனுக்கு தான் குறையிருக்கும், தன்னுடன் ஒரு நாள் வாழ்ந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறான். குழந்தை ஆசையில் சின்னம்மாவின் மனம் தடுமாறினாலும், நர பிள்ளையின் ஆசையை நிராகரிக்கிறாள்.

வயதான பெண் குரல் "அன்று மட்டும் அவன் ஆசைக்கு இணங்கியிருந்தால் நான் என் பிள்ளைகளோடு இருந்திருப்பேன். இப்போது, என் கணவனுக்கு உண்மையாக இருந்ததை விட வேறு எந்த பெருமையும் இல்லை" என்று சொல்லி படம் முடிகிறது.

முதுக்கன்னி

நடுத்தர வயது வந்தும் திருமணமாகாமல் அம்மா, சகோதரன், இரண்டு சகோதரியோடு வாழ்கிறாள் நந்திதா தாஸ். அவளை பார்க்க வரும் பையன், அவளது சகோதரியை திருமணம் செய்துக் கொள்வதாய் சொல்ல, தன் பாரத்தை குறைக்க நினைக்கும் அம்மாவும் தனது இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். நாட்கள் செல்ல செல்ல... நந்திதாவின் சகோதரி குழந்தை பெற்றுக் கொண்டாலே தவிற நந்தித்தாவுக்கு வரன் அமையவில்லை. அவளது சகோதரன் ஆரம்பத்தில் அக்காவுக்கு திருமணம் செய்யாமல் தான் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று இருந்தவன், அம்மாவுக்கு தெரியாமல் தனக்கு பெண் பார்க்கிறான். தரகன் பார்த்ததுப் போல் வரனை காட்டி அவனும் திருமணம் செய்துக் கொள்கிறாள். அதன் பிறகு, நந்திதாவின் இரண்டாவது சகோதரிக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணம் ஆகவில்லை என்ற குறை அவளின் அம்மாவின் மறைவுக்கு பிறகு அவளுக்கு மேலும் பெரிதாக தெரிகிறது. நந்திதா தனது பெரிய தங்கை வீட்டில் இருந்து, அவளது குழந்தைகளை கவனித்துக் கொள்கிறாள். குழந்தைகளும் அவள் மேல் அதிக பாசமாக இருக்கிறாள். ஒரு நாள் தங்கையின் கணவன் நந்திதவிடம் அவளை திருமணம் செய்யாமல் அவள் தங்கையை திருமணம் செய்து உனக்கு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்கிறான். இதை கேட்ட அவளது சகோதரி தன் அக்கா மீது சந்தேகம் வந்து அவளை மறைமுகமாக வார்தையால் வதைக்கிறாள். தன் சகோதரன், சகோதரி வீட்டில் வாழ விருப்பமில்லாமல் தனிமையில் வாழ முடிவெடுக்கிறாள்.

இந்தப்படம் சத்யஜித் ரேயின் “தீன் கன்யா”, கே.பாலசந்தரின் "ஒரு வீடு இரு வாசல்" போன்ற படங்களை நமக்கு ஞாபகப்படுத்துவதை தவிற்க்க முடியவில்லை.

1940 - 1960யில் கதை நடப்பதாக சொல்லப்பட்டாலும், 'விபச்சாரி' என்ற கதையை தவிர மற்ற கதைக்களனின் பின்னனி வருடங்களை சரியாக சொல்லவில்லை.

நான்கு படங்களில் கன்னிபெண், முதுக்கன்னி மட்டுமே அதிகம் மனதில் நிற்கிறது. குறிப்பாக, ‘கன்னிப்பெண்’ கதையில் வரும் குமாரி கணவனின் ‘நாராயணன்’ பாத்திரம், எதனால் தன் மனைவியை நிராகரிக்கிறான் என்பதை தெளிவாக சொல்லப்படவில்லை. அவனின் அகோரப்பசியும், பேசாமல் மனைவியை வதைப்பதும் போன்ற குணாதியங்களை காட்டும் போது, 'குமாரி’யாக வரும் கீதா மோகன்தாஸ் அமைதியாக ஏன் இருக்கிறார் என்பதற்கு காரணம் புரியவில்லை.

நான்கு கதையில் வரும் பெண்களில் ‘நந்திதா தாஸ்’ பாத்திரம் தான் சரியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தனக்கு திருமணமாகாத்தை நினைத்து வருந்துவதும், சகோதரி மீது பார்வையிலே பொறாமைப்படுவதும், வருடம் செல்ல செல்ல இடுப்பு பகுதியை அதிகமாக காட்டும்படி ஆடை அணிவதும் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். மற்ற மூன்று படங்களில் முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அதிகம் மனதில் நிற்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

 “நாலு பெண்ணுகள்” – ‘தகழி’ சிவசங்கரன் பிள்ளை என்ற எழுத்தாளரை கௌரவிக்கும் விதமாக எடுக்கப்பட்ட படமாக இருக்கிறதே தவிர, ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்த்த திருப்தி பார்வையாளனுக்கு ஏற்படவில்லை.

Thursday, February 7, 2013

திற - குறும்படம் விமர்சனம்

"பொதிகை மின்னல்" மாத இதழில், Prince Ennares Periyar இயக்கிய "திற" குறும்படத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை.


Tuesday, January 29, 2013

கவிதை : இல்லாதவன்

கிருஷ்ணன் –
ஆண்ணின் காமத்தின்
மொத்த உருவம்

அல்லா –
முகமது நபியின்
கற்பனை பாத்திரம்

ஏசு –
கடவுளாக்கப்பட்ட
சராசரி மனிதன்

மொத்தத்தில் கடவுள் -
மனிதன் பயத்தின்
உருவம் !

* *


கடவுளைப் பற்றி
நிறைய இதிகாசகங்கள் உண்டு
வரலாறு இல்லை !

மனிதனின்
வன்முறை வரலாற்றை
கடவுள் தடுத்ததில்லை !

தடுக்க 'அவன்' இருந்தால்
இத்தனை பிரச்சனையில்லை.

இத்தனை
'இல்லை'களுக்கு நடுவில்
என் கேள்வி...

இல்லாத ஒன்றுக்காக
மனிதன்
ஏன் மனிதனாக
வாழ்வதில்லை ?

LinkWithin

Related Posts with Thumbnails