வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 6, 2008

ராம். கோபலனுக்காக இதோ தசாவதாரம் கதை !!



தசாவதாரம் கதை படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம். கோபாலன் வழக்கு போட்டுள்ளார். அவருக்காக இந்த தசாவதாரம் கதையை வெளியிடுகிறேன்.

வயதை குறைத்து இளமையாக காட்டிக் கொள்வதில் கமலுக்கு நிகர் கமல் தான்.

12 ஆம் நூற்றாண்டில் இருந்து கதை துவங்குகிறது. குலோத்துங்க மன்னன் ( நெப்போலியன் ) போரில் தோல்வியுற்ற விரக்தியில் தன் நகரத்தில் இருக்கும் பெருமாள் சிலையை கடலில் தூக்கி ஏறிய சொல்கிறார். கோயிலில் பணி புறியும் கமல் இதை எதிர்க்கிறார். அதனால், அவரையும் சேர்த்து பெருமாள் விக்கிரகத்தை கடலில் எறிகிறார்கள்.

இப்போது கதை 12ஆம் நுற்றாண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டுக்கு நகர்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜேன்டுக்கள் மல்லிகா உட்பட கடலில் விழுந்த பெருமாள் விக்கிரகத்தை தேடி இந்தியா வருகிறார்கள். காரணம், அந்த விக்கிரகத்தில் விஞ்ஞானப் பூர்வமான சக்திகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அங்கு பணி புறியும் விஞ்ஞானி கமல் சி.ஐ.ஏ எஜேன்டுக்கு தெரியாமல் விக்கிரகத்தை காப்பற்ற இந்தியா வருக்கிறார். அசின் அவருக்கு உதவியாக இருக்கிறார். பாட்டி கமல் பல நூற்றாண்டுக்கள் முன் நடந்த சம்பவந்தை கூறி விஞ்ஞானி கமலுக்கு உதவி செய்து, பெருமாள் விக்கிரகத்தை இந்தியாவை விட்டு தூக்கி செல்லாமல் காப்பற்றுவது தான் மீது கதை. இதில் அமெரிக்க அதிபர் வேடத்தில் வருவதும் கமல் தான்.

கதையை உறுதி செய்துக் கொள்ள திரைப்படத்தை பார்க்கவும். :)

படம் பார்க்காமல் சர்ச்சை செய்து பெயர் வாங்வதில் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, ஆன்மீகவாதிகளும் இறங்கிவிட்டனர்.

Monday, April 21, 2008

வடிவேல் கம்ப்யூட்டரின் கதை

( இன்று உலகம் முழுக்க கணினியின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். பல மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்த நிலையில் ஒரு கணினியின் புலம்பலே இந்த கதை.)

" நம்மல இப்படி அஸ்ஸம்பில் பண்ணுறத பார்த்தா... யாரோ புது டெவலபர் வாறான் போலிருக்கு..... இவனாவது நல்ல கோடிங் அடிக்கிறானா பார்ப்போம்...."

அந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த டெவலபரை அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொருவரின் அறிமுகங்கள் முடிந்தவுடன் கம்ப்யூட்டர் முன் அமர்கிறான்.

"வந்துடாய்யா.... வந்துடான்... இவ்வளவு நாள நம்பல ஜாலியா விட்டாங்க... இப்போ ஒரு டெவலபர போட்டு நம்மல வேல செய்ய வைக்கிறாங்க போலிருக்கு... இவன பார்த்தா அஞ்சு வருஷமாவது எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்... முதல்ல என்ன செய்ய போறானு பார்ப்போம்"

புது டெவலபர் தன் மெயில் பாக்சை திறந்தான்.

"அடபாவி நீயுமாட... இதுக்கு முன்னாடி இருந்தவன் தான் மத்தவங்களுக்கு பார்வட் மெயில் அனுப்புசிக்கிட்டு இருந்தான்... இவனும் மெயில் பாக்சை திறக்குறான்... சரி முதல் நாள்ல வேல இருக்காது போலிருக்கு... என்ன தான் மெயில் அடிக்கிறான்னு பார்ப்போம்..

டியர் செல்லம்,

இன்னைக்கு ஆபிச்ல ஜாயின் பண்ணிட்டேன். இது தான் என் அபிசியல் மெயில் ஐ.டி. : ABC@COMPANY.com

ஐ லவ் யூ செல்லம்..

வித் லவ்,
ABC

"இவரு தமிழ இங்கிலீஷ்ல தான் டைப் பண்ணுவாரு போலிருக்கு... தமிழ் பான்ட் நெட்டுல டௌன் லோட் பண்ணி தமிழ டைப் பண்ணு... இல்ல இங்கிலீஷ்ல டைப் பண்ணு... ஏன்ட ரெண்டும் சேர்த்து என்ன கொழப்புறீங்க.... பாரு ரெட் லைன் போட்டு ஸ்பெல்ச்செக் மிஸ்டேக்னு (Spell check) காட்ட வேண்டியதா இருக்கு...."

அந்த மெயிலில் சப்ஜெக்ட் (Subject) போட்டு பி.சி.சியில் ஐந்து பெண்களின் மெயில் ஐ.டி. போட்டு அனுப்பினான்.

"கொய்யால... ஒரே நேரத்தில அஞ்சு பொண்ணுங்ககிட்ட ஐ லவ் யூ சொல்லுறானே... அஞ்சு வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும் பார்த்தா... அஞ்சு பொண்ணுங்கல மடக்குன எக்ஸ்பிரியன்ஸ் இருக்குறவன இருக்கானே.."


"என்னடா எதோ ரிப்லை மெயில் வர மாதிரி இருக்கு.... அ ஆ... அஞ்சு பொண்ணுங்களும் ரிப்லை அடிச்சிருக்காங்க... எப்போ இவன் மெயில் அடிப்பான்... எப்பொ ரிப்லை அனுப்பனும் இருந்திருக்காங்கையா..."

ரிப்லை மெயிலில்

ஐ லவ் யூ ட செல்லம்
ஆல் தி பெஸ்ட் செல்லம்
பெஸ்ட் ஆப் லக் செல்லம்

" அடப்பாவிகளா..... அந்த பொண்ணுங்களும் செல்லம் போட்டு அனுப்பிச்சிருக்காங்க்டா.... அவ எத்தனை பேருக்கு பி.சி.சி(BCC) போட்டு அனுப்புச்சிருக்காளோ யாருக்கு தெரியும்"

"சரி விடு... மெயில் பாக்ஸ் க்ளோஸ் பண்ணிட்டான்... இனிமே வேல பார்ப்பானு நினைக்கிறேன்"

"இன்டர்நெட் எக்ஸ்போலர் ஓபன் பண்ணி ஏதோ வெப் சைட் அடிக்கிற மாதிரி தெரியுது..."

"அட நாதாரிபயலே.... யாஹூ மெசேஜர் டௌன்லோட் பண்ணுறான்யா... ஆபிஸ் விட்டு போற வரைக்கும் யாஹூ மெசேஜர்ல கடலைய போடுவானே..."

"டேய்... நாலு வின்டோ ஓபன் பண்ணி கடலைய போடுரான்னே... யாரும்மே இவன கேட்க மாட்டிங்களா... ஒரு மெசேஜ் டைப் பண்ணி... நாலு வின்டோவிலும் காபி அன்ட் பேஸ்ட் ( copy & paste ) பண்ணுறானே.... கொஞ்சமாவது வேலைய பாருங்கடா... ஐய்யோ என்னால வாய திறந்து சொல்லக்கூட முடியலியே..."

"எனக்கு மட்டும் வாய் இருந்தா உங்க ப்ராஜக்ட் மேனேஜர் கிட்ட போட்டு கொடுத்திருப்பேன்.. நீங்க வேலையா பண்ணுறீங்க..."

அந்த டெவலபர் எழுந்து சென்று மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தான்.

"எங்கடா போய்ட்டு வர... காபி மிஷின்ல காபி எடுத்திட்டு வருயாடா... ஓசி காபினா ஒரு நாளைக்கு நாலு வாட்டி குடிப்பிங்களே...

காபிக்கு, லன்சுக்கு, ரெஸ்ட்ரூமுக்கு தவிர வேற எதுக்கும் எழுந்திருக்க மாட்டான் போலிருக்கு.."

மீண்டும் எழுந்து பக்கத்து க்யூப் (cube) யில் தலையை விட்டு பேசிக்கொண்டு இருந்தான்.

"டேய் கடவுளுக்கே அடுக்காதுடா... பக்கத்து க்யூபில இருக்குறவ வேற ப்ராஜக்ட்டுட...உன் ப்ராஜக்ட பத்தி அவளுக்கு எப்படி தெரியும்... சந்தேகம் கேக்குற சாக்குல கடலைய போடுறானே... டாய்.. உன் ப்ராஜக்ட் டீம்ல இருக்குறவங்க கிட்ட சந்தேகம் கேளுடா...."
" நல்ல வேளை... உன் டீம்ல பொண்ணுங்க இல்ல.... வேலை சமயத்துலக் கூட கடலை போட்டிருப்பான்..."

மாலை 6 மணியானதும்.. அவன் செல்போனில் அலாரம் ஒலித்தது.

"எதுக்குடா... அலாரம் வச்சிருக்க.. ஆறு மணிக்கு மேல தான் வேல செய்வியா?..."

"அடப்பாவி... என்ன CTTL+ALT+DEL போட்டு எங்கட போறே..."

"ஆ...வீட்டுக்கு போய்டான்யா.. என்ன ஷட் டௌன் (shut down) பண்ணிட்டு போக கூடாதா... அது என்ன லாக் பண்ணிட்டு போறது... கரன்ட் பில் உங்க அப்பன் வந்து கட்டுவானா... கரன்ட ஏன்டா வேஸ்ட் பண்ணுறீங்க..."

" இவங்க மட்டும் ராத்திரியானா நல்லா தூங்குறாங்க... என்ன லாக் பண்ணி ராத்திரி தூங்க விடாம வேலை செய்ய வைக்கறாங்க... எத்தன வைரஸ் வந்து என்ன அட்டாக் (attack) பண்ணப்போதோ தெரியலையே..."

"அட... இது வேற.. எனக்கு சைடுல வந்து தொல்ல கொடுக்குது... இந்த வைரஸ் பேரு கூட எனக்கு தெரியுல... உன் பேரு என்ன...?"

"என் பேரு தெரிஞ்சு என்ன பண்ண போற.. ஸ்கேன் பண்ணப்போறியா..."

"அது இல்லப்பா.... சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்"

"உன் நெட்வோர்க் ஆளுவந்து கண்டு பிடிப்பான்... அப்ப தெரிஞ்சுக்கோ..."

"இந்த வைரஸ்...யாருக்கோ சிக்னல் கொடுக்குற மாதிரி தெரியுது..."

" மச்சி... நான் பி2 வைரஸ் பேசுறேன்... இங்க அன்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர் இருக்கு.. நீ ப்ரியா இருந்தா அவன ஆட்டாக் பண்ணிட்டு போ..."

" க்யூல... வந்து அட்டாக் பண்ணுறாங்களே... ஒன்னு, இரண்டு, மூன்னு..."

" என்ன எவ்வளவு வைரஸ் வந்து அட்டாக் பண்ணாளும் அடிவாங்குற மாதிரி அப்படியே எண்ணிக்கிட்டு இருக்குற..."

"போறவன் வந்தவன் எல்லாம் வைரஸ் ப்ரொகிராமுல ரூம் போட்டு அட்டாக் பண்ணுறீங்க... ஒரு கணக்கு வச்சிக்க வேண்டாமா..."

"எத்தனை வைரஸ் வந்து அட்டாக் பண்ணாளும் தாங்குதே... ரொம்ப நல்ல கம்ப்யூட்டர்டா.." என்று ஒரு வைரஸ் சொன்னது.

அடுத்த நாள் காலையில்....

கடவுச்சொல் ( Password) அடித்து புது டெவலபர் தன் வேலையை தொடங்குகிறான்.

"வந்துட்டான்யா... வந்துட்டான்... அது என்னடா பாஸ்வாட் செல்லம் வச்சிருக்க.... மனசுல பிரகாஷ் ராஜ் நினைப்பு... எனக்கு மட்டும் கை கால் இருந்துச்சு உன்ன கில்லி மாதிரி அடிச்சிருப்பேன்..."

"மறு படியும் மெயில் பாக்ஸ் ஓபன் பண்ணுறானே... யாருய்யா இவனோட ப்ராஜக்ட் மேனேஜர் இவன கேள்வியே கேட்க மாட்டீங்களா..."

"ஒருத்தன் வந்து அவன் கிட்ட பேசுறான்.. என்ன தான் பேசுறானு கேட்போம்..."

இந்த இருவரும் பேசி முடிந்ததும் கணினி தன் புலம்பலை தொடர்ந்தது.

"அடபாவி... நீ தான் ப்ராஜக்ட் மேனேஜரா... அது தான் உன் கிட்ட வந்து ஸ்டேடஸ் ரிப்போட் சொல்லுறாங்களா... ஐய்யோ.. இவன் எக்ஸல் ஷீட் தவிர எதையும் ஓபன் பண்ணி வேல செய்ய மாட்டானே... தினமும் இப்படி தான் வேலை செய்யாம கடலை போடுறத நான் பார்க்கணுமே... அந்த கடவுள் தான் என்ன காப்பாத்தணும்..."

"என்னால முடியாது... நான் ஹாங் ஆக போரேன்... யாரு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க..."

அந்த ப்ராஜக்ட் மேனேஜர் கம்ப்யூட்டரை ரிஸ்டார்ட் செய்கிறான்.

"அப்பா... ஒரு நிமிஷம் நமக்கு ரெஸ்ட் கொடுத்திட்டான்.... சந்தோஷம்...."

தன் புலம்பலை ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டது. மீண்டும் தன் புலம்பலை தொடரும்........

Wednesday, April 2, 2008

ஜெயா நியூஸ் vs சன் நியூஸ்

JAYA NEWS MANAGER : என்னப்பா.... நியூஸ் படிக்க நம்ம ஆளு எங்க...?
ASST.. MANAGER : அவரு நேத்து resign பண்ணி வேற டி.வியில சேர்ந்துட்டாரு...

JAYA NEWS MANAGER : அட பாவி... இப்போ அவன் எந்த டி.வியில இருக்கான்..?
ASST.. : மெகா டி.வி ஆபர் இருந்தது... அத வச்சு சன் டி.வி ஆபர் வாங்கி... இப்போ ராஜ் டி.வியில நியூஸ் படிக்கிறான்...

JAYA NEWS MANAGER : : வர..வர... டி.வி க்கூட ஐ.டி கம்பெனி மாதிரி ஆயிடுச்சு... சரி..அத விடு... இப்போ நமக்கு நியூஸ் படிக்க போற ஆளு யாரு...?
ASST.. : ஒரு புது ஆளு... நல்ல தமிழ் பேசுவான்...

JAYA NEWS MANAGER : அந்த பையன கூப்பிடு....
ASST.. : தம்பி இங்க வாப்பா... இவ பேரு ரவி....
ரவி : வணக்கம்...

JAYA NEWS MANAGER : இப்போ வணக்கம் வை... 2 வருஷம் கலிச்சு சன் டி.வி, கலைஞர் டி.விக்கு போய் எங்களுக்கே ஆப்பு வை...
ரவி : ???????

JAYA NEWS MANAGER : இந்த தம்பி கிட்ட அப்புறம் பேசுறேன்... இன்னைக்கு DMK Government என்ன பன்னாங்க..?
ASST.. MANAGER. : 1. கலைஞர் ரூ.2 அரிசி திட்டம்.
2. இலவச கலர் டி.வி கொடுத்தாங்க.
3. ராமர் பாலம் ஆலோசனை.
4. புதுசா இரண்டு பாலம் கட்டுறாங்க...

JAYA NEWS MANAGER : ரவி தம்பி... நான் சொல்லுறத அப்படியே எழுது...
முதல....DMK Government கொடுத்த அரிசியில பயங்கர கல்லு...
ரவி : ஒரு சந்தேகம்...
JAYA NEWS MANAGER : வந்த அன்னைக்கேவா...சொல்லு..
ரவி : இப்போ தான் சார் உங்களுக்கு நியூஸ் சொன்னாரு...அதுக்குள்ள அப்படி அரிசியில கல்லு சொல்லுறீங்க...
JAYA NEWS MANAGER : இங்க பாருங்க தம்பி... DMK Government பண்ணரத அப்படியே சொன்னா கலைஞர் டி.விக்கும், நமக்கும் என்ன வித்தியாசம். நான் சொல்லுற அப்படியே எழுது. ASST..! அடுத்த நியூஸ் மறந்திட்டேன்...

ASST.. MANAGER. : இலவச கலர் டி.வி கொடுத்தாங்க.
JAYA NEWS MANAGER : ஆ... அந்த டி.வி எல்லாம் Blackல 1000 ரூபாய்க்கு வித்தாங்க சொல்லு...
ASST.. MANAGER.: இதுக்கு Evidence காட்டினா நல்லா இருக்கும்..
JAYA NEWS MANAGER : அப்படியா... இரண்டு பேரு டி.விய வித்ததுக்கு போலீஸ் அரஸ்ட் பண்ணதா நியூஸ் சொல்லு... யாராவது இரண்டு பேர புடிச்சு கவர் பண்ணு...நாளைக்கு அவங்கள ஜாமின்ல எடுத்துடுவோம். அடுத்த நியூஸ்....

ASST.. MANAGER : ராமர் பாலம் ஆலோசனை.
JAYA NEWS MANAGER : அ த BJP பாத்துப்பாங்க... இருந்தாலும் நம்ம பங்குக்கு... எதாவச்சு சொல்லுங்க... அடுத்து...
ASST.. MANAGER : புதுசா இரண்டு பாலம் கட்டுறாங்க...
JAYA NEWS MANAGER : இந்த நியூஸ பெரிசா கவர் பண்ணுங்க...
ASST.. MANAGER : எப்படி சார்...?
JAYA NEWS MANAGER : பாலம் கட்டுறதுக்கு இரண்டு கோயில கவர்மென்ட் இடிச்சாங்க சொல்லு... நாலு பொம்மளைங்கள வாய்லையும், வயுத்துலையும் அடிச்சு கத்துற மாதிரி நம்ம கெமிராமென்ன கவர் பண்ணி வர சொல்லு...
ASST.. : கோயிலுக்கு எங்க போறது...
JAYA NEWS MANAGER : AVM Studio வுல set பொட்டு இடிங்க.... ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிப்பு நிஜம்மா இருக்கனும்... Jaya TV Set-upனு தெரிய கூடாது...
ASST.. : ஒ.கே சார்...
JAYA NEWS MANAGER : தம்பி ரவி... நான் சொன்னத நோட் பண்ணியா...
ரவி : எஸ் சார்...
JAYA NEWS MANAGER : படிங்க ...
ரவி : கலைஞர் அவர்கள் இரண்டு ரூபாய் அரிசியில் மக்கள் கல்லிருப்பதா அதிருப்தி தெரிவித்துள்ளனர்....
JAYA NEWS MANAGER : தப்பு தப்பா படிகாதிங்க...
ரவி : கரெக்டா தான் சார் படிச்சேன்...
JAYA NEWS MANAGER : நியூஸ் கரெக்ட் தான்... சொல்லும் போது கலைஞர் மரியாதையா சொல்ல கூடாது... அத நீங்க சன் டி.வி, கலைஞர் டி.வியில படிக்கும் போது சொல்லுங்க... Jaya T.V ல சொல்லுங் போது மைனாரிட்டி தி.மு.க ஆட்சினு தான் சொல்லனும்.
ரவி : சரி சார்....

JAYA NEWS MANAGER : ஒரு பன்ட்ச் டைலாக்....
" I.T எடுத்தா... சன் கம்பனியில... JAVA தான் முக்கியம் !
T.V எடுத்துக்கிட்டா... சன் டி.விக்கு... JAYA தான் எதிரியா இருக்கும் !" -இத ஞாபகம் வச்சி படிங்க....

ரவி : சரிங்க....

Monday, March 24, 2008

மறுக்கப்பட்ட மனிதநேயம்

உலகில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தொகை. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொடுத்தோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன கொடுத்தோம் ?

மனித எண்ணிக்கைகள் தான் அதிகமே தவிர, மனித நேயத்தில் இல்லை. இன்று வாகன விபத்துக்கள் நடப்பது மிக சகஜமான விஷயமாகிவிட்டது. அதிலும் விபத்தில் பெரும் பாலும் இறப்பது இளைஞர்கள். இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் போது அவனிடம் இருக்கும் செயின், பணம், பொருள் எல்லாம் திருட நினைக்கிறார்களே தவிர அவனை மருத்துவமனையில் சேர்த்து உதவ நினைப்பதில்லை. அப்படியெ மருத்துவமனையில் சேர்த்தலும் போலீஸ், கோர்ட் எல்லாம் செல்ல வேண்டுமே என்று அஞ்சுகின்றனர். உதவுவதற்கு அஞ்சுகின்றனர், திருடுவதற்கு அஞ்சுவதில்லை. இப்படி நம் நாட்டில் மனித நேயம் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.

ஐந்து நிமிடம், பத்து நிமிடம் தாமதத்தில் எத்தனை உயிரை இழந்து இருக்கிறோம். பத்து நிமிடம் முன்னாடி வந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர் கூறும் போது நாம் யாரை நோந்துக் கொள்வது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பற்றி கவலை படமுடியாத அவசர உலகத்தில் இருக்கிறோம்.

ஹைவேயில் லாரியை வேகமாக ஓட்டி ஒரு மனிதர் மீது இடித்து விடுகிறான். சுற்றி எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர மருத்துவமனையில் சேர்ப்பவர்கள் மிக குறைவானவர்கள் தன். அந்த வண்டி ஓட்டுனர் கூட அபராதம் மட்டும் கட்டிவிட்டு வெளiயே வந்துவிடுவான். இறந்தவர் குடும்பத்தை பற்றி யாரும் கவலைபடுவதில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உயிரை மதிக்காமல் தான் வண்டியை ஓட்டி செல்கிறான்.

மனிதர்களை பாதுகாக்கும் சட்டங்களை விட மான்களை பாதுகாக்கும் சட்டங்கள் சரியாகவே இயங்குகின்றன. காரணம், மானின் தோளுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மனிதனின் தோளுக்கும், உயிருக்கும் மதிப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மிஞ்சி இருக்கும் மனி நேயம்
இப்பொது பிச்சையாக மாறும் நேரம்

- என்று கருதி கை, கால் இருப்பவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். பேரூந்து நிலையம், பொது இடம் போன்ற இடத்தில் நின்று பேசுபவர்களiடம் அம்மா தாயே.. குழந்தைக்கு பசிக்குதுமா... தர்ம பிரபுவே... இப்படி எத்தனை வார்த்தைகளை சேகரித்து வைத்து இருக்கும் மனிதநேயத்தை காசாக மாற்றுவது தான் இவர்களது முதல் வேலை. நம் நாட்டில மனிதநேயத்தை காசாக மாற்ற பல வித்தைகளை கற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனிதநேயத்தை வளர்க்கத் தான் யாருமில்லை.

உதவி செய்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் தான் மனித நேயங்கள் செத்துக் கொண்டு இருக்கின்றன. உதவி செய்வது போல் ஏமாற்றுபவர்களை நாம் வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஆனால் இரக்கப்பட்டு உதவி செய்ய செல்லும் போது நம்மை ஏமாற்றும் அனுபவமே மிகவும் கசப்பாக இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளால் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்குகிறோம். நம் நாட்டில் பாதி மனிதநேயங்கள் செத்ததற்கு மிகப் பெரிய காரணம் உதவி செய்ய வந்தவர்களை ஏமாற்றி லாபம் அடைவது தான்.

மிக இக்கட்டான நேரத்தில் பணம் வேண்டும் என்று காலில் விழாத குறையாக விழுந்து கெஞ்சுவார்கள். பணம் கொடுத்த பிறகு அவர்களிடம் பணம் வாங்க நம்மை அலைக்கடிப்பார்கள். கடன் வாங்குவது அவமானம் என்று கருதிய காலம் சென்று பணம் கொடுத்தால் திரும்பி வருமோ என்ற அச்சம் தான் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது.

இன்று உதவி செய்யச் சென்றாலும் அதில் வரும் ஆபத்துகளை மனதில் வைத்தே செல்ல வேண்டிய காலத்தில் இருக்கிறோம். எந்த அச்சமும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் மனிதநேயத்தை வளர விடுங்கள். இனியாவது மனிதனை மனிதனாய் வாழவிடுங்கள்.

Thursday, February 28, 2008

மிருக கதை - 2

ஒரு மாலை நேரத்தில் முயல் மும்முரமாக ஒன்றை எழுதிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியில் வந்த நரி

நரி : என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் ?

முயல் : தன் கண்டுபிடிப்பின் செய்முறை விளக்கத்தை எழுதிக்கிறேன்.

நரி : என்ன உன் கண்டுபிடிப்பு ?

முயல் : முயல் எப்படி நரியை சாப்பிடும் என்பதை பற்றியது.

நரி : நீ என்ன முட்டாளா ! யாராவது இதை நம்ப முடியுமா ?

முயல் : என்னுடன் வா ! நான் உனக்கு காட்டுகிறேன்.

நரியும், முயலும் ஒரு மரத்தின் பின்னால் சென்றது. சிறிது நேரம் கழித்து முயல் நரியின் எழும்பைக் கொண்டு வெளியே வந்தது. அதன் பின் தன் எழுதும் வேலையை செய்துக்கொண்டு இருந்த போது, அங்கு ஓனாய் முயலிடம் விசாரித்தது.

ஓனாய் : என்ன செய்கிறாய் ?

முயல் : முயல் எப்படி ஓனாய்யை சாப்பிடும் என்பதை பற்றி எழுதுகிறேன்

ஒனாய் : உனக்கு என்ன பைத்தியமா ? யாரும் நம்ப மாட்டார்கள்.

முயல் : என்னுடன் வா ! உனக்கு காட்டுகிறேன்.

ஓனாயும், முயலும் அதே மரத்தின் பின்னால் சென்றது. சற்று நேரம் கழித்து முயல் ஓனாயின் எழும்பைக் கொண்டு வெளியே வந்தது. இறுதியாக ஒரு கரடி முயலிடம் மற்றதை போல் அதே கேள்வியை கேட்டது.

முயல் அந்த கரடியை மரத்தின் பின் அழைத்து சென்றது. அங்கே, மரத்தின் பின் இருக்கும் சிங்கமிடம் கரடிக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

செய்தி : நாம் நம்பும் படி வேலை செய்கிறோம் என்பதை விட நம் மேல் அதிகாரி பிடித்திருந்தால் தான் நாம் எந்த வேலையிலும் நிடிக்க முடியும்.

LinkWithin

Related Posts with Thumbnails