வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 15, 2018

USS Indianapolis: Men of Courage ( English - 2016)

USS Indianapolis: Men of Courage இரண்டாம் உலகப் போரில் எத்தனையோ கப்பல்கள் முழ்கியிருக்கிறது. பல வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியிருக்கிறது. அடையாளம் தெரியாத பல கப்பல்களுக்குள் இன்னும் கடலில் இருக்கிறது. அதில், USS Indianapolis என்ற தாக்கப்பட்ட சம்மவமும் ஒன்று என்று ஒதுக்கமுடியாது. 

USS Indianapolis தாக்குதல் அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு முன் நடந்த சம்பவம். USS Indianapolis போர் கப்பல் அல்ல. அணு ஆயுத உபரி பாகங்களை பாதுகாப்பாக ஏற்று செல்வதற்காக ரகசியமாகப் பயன்படுத்தப்பட்ட நீர்முழ்கி கப்பல். ஜப்பான் இராணுவம் போர் கப்பல் என்ற சந்தேகத்தில் USS Indianapolis கப்பலை தாக்க, அதில் இருக்கும் பாதுக்காப்பு வீரர்கள் தத்தலிக்கிறார்கள். ஐந்து நாள் உண்ண உணவின்றி நடுக்கடலில் உயிருக்காகப் போராடி மீட்பு பணி குழுக்களால் மீட்கப்படுகிறார்கள். 

1196 பேர் சென்ற USS Indianapolis கப்பலில் 317 மட்டுமே உயிருடன் மீட்கப்படுகிறார்கள். அதில் USS Indianapolis கப்பலின் கேப்டன் சார்லஸ் மெக்வே ஒருவர். சில காயங்களுடன் திரும்பிய கேப்டன் தங்களை மீட்பதற்கு ஏன் இவ்வளவு நாட்களானது என்று கேள்வி கேட்கிறார். ரெடியோ சரியாக கேட்கவில்லை, ஜப்பானின் சூழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தோம், போதையில் யாராவது கத்துகிறார்கள் என்று நினைத்தோம் என்ற சப்பை பதில்கள் அளித்தார்கள். அதிகாரப்பூர்வமாக கேப்டனின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தங்களை காப்பாற்றிகொள்ள USS Indianapolis கப்பல் மூழ்கியதற்கு கேப்டன் சார்லஸ் மெக்வே தான் காரணம் என்று கூறினார்கள்.USS Indianapolis முழ்கியதைக்குறித்து விசாரணை நடக்கிறது. ஜப்பான் தாக்குவதை அறிந்து கப்பலை ‘Zig-Zag’ திருப்பியிருக்கலாம். சாட்சியங்கள் கேப்டனுக்கு ஆதரவாக இருந்தும், கேப்டன் மீது குற்றம் சுமத்தி அவரை கோர்ட் மார்ஷல் செய்தார்கள். ( USS Indianapolis கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஜப்பானிய கேப்டன் தனது தாக்குதலிலிருந்து அவர்களால் தப்பிக்க வாய்ப்பில்லை என்று சாட்சி அளித்திருக்கிறார்.) 

இரண்டாம் உலகப் போரில் தண்டனைக்கு உள்ளான ஒரே அமெரிக்க கேப்டன் என்ற பெயரை சார்லஸ் மெக்வே பெற்றார். 1968ல் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அந்த தாக்குதலில் மீட்கப்பட்ட 150 வீரர்களின் முயற்சியால் 800 ஆவணங்கள் தயார் செய்து கேப்டன் சார்லஸ் மெக்வேவுக்கு அளிக்கப்பட்ட அநீதிக்காக போராடுகிறார்கள். 

2000ல் அதிபர் கிளிண்டன் கேப்டன் சார்லஸ் மெக்வே குற்றமற்றவர் என்று கூறி, அவரிடம் திரும்பப் பெற்ற பதக்கங்களை எல்லாம் அவரது வாரிசுகளுக்கு அளிக்க உத்தரவிடுகிறார். 

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டப்படம் தான் ”USS Indianapolis: Men of Courage”. 

ஐந்து நாள் நடுக்கடலில் உண்ண உணவின்றி உயிருக்கு போராடிய தனது வீரர்களை கண்முன் கேப்டன் பார்க்கிறார். தனது வீரர்கள் சுறா மீன் கடித்து இறப்பதும், தனிமை புத்திப்பேதலித்ததும், கடலின் உப்பு தண்ணீர் குடித்து இறப்பதையும் மனவேதனை அடைக்கிறார். மிக காலத்தாமதமாக தங்களை மீட்க வந்ததில் கோபமடைகிறார். ஒரு கேப்டனாக கேள்வியை கேட்கிறார். அதற்கு பதலளிக்க முடியாமல் தண்டனை அளிக்கிறார்கள். 

கேப்டன் சார்லஸ் மெக்வே பாத்திரத்தில் Nicholas Cage. அவரின் இயல்பான நடிப்பை அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தனது வீரர்கள் கண்முன் இறக்கும் போது குற்றவுணர்வில் தவிக்கும் ஒரு இடம் போதும் அவரது நடிப்பைப் பற்றி சொல்வதற்கு. 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய வீரர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கி அமெரிக்கா அழகுப் பார்த்தது. பல லட்சப் பேரை கொன்று குவித்தவரக்ளுக்கு விருது வழங்கியது. ஆனால், தனது வீரர்கள் கண்முன் இறப்பதைப் பார்த்து கேள்விக் கேட்ட கேப்டனுக்கு “கப்பலை Zig-Zagஆக திருப்பாததை குற்றமாக” கூறி தண்டனையை அமெரிக்கா வழங்கியிருக்கிறது என்பதை இந்தப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

அதிகாரத்தில் இருப்பவர்களை கேட்டால் அதற்கான தண்டனை நிச்சயம் என்பதற்கு ” USS Indianapolis: Men of Courage” படம் ஒரு உதாரணம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails