வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, March 22, 2017

இளையராஜாவும், காப்புரிமையும்

ஒரு பாடலுக்கு உயிர் கொடுப்பதில் இருவரின் முக்கிய பங்கு இருக்கிறது. ஒருவர் இசையமைப்பாளர். மற்றொருவர் பாடலாசிரியர். 

இருவரும் தான் ஒரு பாடலுக்கான Creators. 

அந்த வகையில் ‘பாடகர்’ என்பவர் இசையமைப்பாளர் சொன்னதை செய்ய வேண்டும். பாடலாசிரியர் எழுதிய வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும். அதில் பாடகர் தனது Creative தன்மை அவர்களின் அனுமதியில்லாமல் உள்ளே புகுத்தமுடியாது. அவருடைய Creative மூளைக்கு வேலை கிடையாது. 

தயாரிப்பாளர், இயக்குநர் இசையமைப்பாளரின் இசை பயன்படுத்துவதற்கு தான் சம்பளம் கொடுக்கிறார். அவரது கற்பனையையோ, படைப்பையோ முழுமையாக வாங்கியவர்கள் என்று கருதமுடியாது. 

படத்தின் சொந்தக்காரர்களாக அவர்கள் பாடலின் இசையை ஏற்கலாம், ஏற்காமல் போகலாம், படத்தில் இருந்து நீக்கலாம். ஆனால், தங்களுக்கு தான் சொந்தம் என்று தயாரிப்பாளர், இயக்குநர் உரிமை கேட்க முடியாது. இளையராஜா தனது பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவதும் அதற்கான ராயல்டி கேட்பது தவறில்லை. அது படைப்பாளிக்கான உரிமை. 

ஆனால், அதில் பாடலாசிரியருக்கும் பங்கு இருக்கிறது என்பதை அவரால் மறுக்கமுடியாது. பெரும்பாலான இளையராஜா இசையில் பாடல் எழுதியது அவரது சகோதரன் கங்கை அமரனாக இருந்தாலும், வைரமுத்து, இன்னும் சில பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள். 

தனக்கு கிடைக்கும் ராயல்டியை இளையராஜா உரிய முறையில் பாடலாசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும். கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails