வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 23, 2017

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – ச.தமிழ்ச்செல்வன்

தனிப்பட்ட முறையில் எனக்கு கம்யூனிசக் கொள்கையில் பெரிய ஈடுபாடு கிடையாது. காரணம், நான் நாளைய முதலாளி. என்றாவது ஒரு நாள் முதலாளியாகிவிடுவோம் என்று நம்பிக்கையில் உழைப்பவர்களால் கம்யூனிசத்தை ஏற்பது கடினம். முதலாளி கனவோடு இயங்குபவர்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் உழைக்கத் தயாரானவர்கள். அவர்களுக்கு கம்யூனிசக் கொள்கை ஏற்புடையதாக இருக்காது.

ஆனால், ஒரு தொழிலாளருக்கு பிரச்சனை என்று வரும்போது அவர்களுக்காக களம் இறங்கிப்போராடும் தொழிற்சங்க இயக்கம் என்பதை மறுக்க முடியாது. அதனால், அவர்கள் மீது ஒரு சாப்ட்கார்னர். 

முக்கியமாக அரசாங்க ஊழியர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளையும், இயக்கங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். சம்பளம், போனஸ், பஞ்சப்படி போன்ற எல்லா விஷயத்திலும் அவர்களுக்காக பேசக்கூடியவர்கள், போராடக்கூடியவர்கள் இவர்கள் தான். அதனால், ஊழியர்கள் தங்கள் நலனுக்காக இதில் இணைத்துக்கொள்வதில் நன்மை இருக்கிறது. 
ச.தமிழ்ச்செல்வன் அஞ்சல்துறையில் பணியாற்றும் தொழிலாளர் சங்கத்தின் ஏற்ப்பட்ட அனுபவங்கள், சங்கத்தோழர்கள் குணாதியங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என்று பல தரப்பை சொல்கிறது. ஒவ்வொருத்தரோடு பற்றிய அனுபவக் கட்டுரையும் தனி சிறுகதையாக வர வேண்டியது என்று சொல்லலாம். 

தோழர்களின் தத்துவம் சாமான்யங்களுக்கு ஏதார்த்தத்திற்கு ஏற்புடையதாக தெரியாது. ஆனால், தோழர்களுக்கு தத்துவம் தப்புக்கிடையாது, அது நடைமுறை கோளாறு என்பார்கள். 

இந்தப் புத்தகம் அவர்களின் போராட்டத்தை மட்டும் பேசவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அன்பு, பழக்கம், உதவும் மனப்பான்மை போன்ற பல விஷயங்கள் பேசுகிறது. சொந்தப் பணத்தில் கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்து அனுதாபப்படவில்லை. ”சங்கத்துக்கு கைப்பணத்தை செலவழிப்பதும், சங்கப்பணத்தை சொந்தச் செலவுக்கு எடுப்பது ஒரே விளைவைத்தான் ஏற்படுத்தும்” என்ற அறிவுரை கூறுகிறார். 

ஒரு தோழன் வீழ்ந்தால்… இன்னொரு தோழன் எழுவான் என்ற வாசகம் என்ற வாசகத்தோடு முடிக்கும் போது, “அது நான் தான்” என்று தமிழ்ச்செல்வன் சொல்லும்போது வாசகன் சத்தமாக ” ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” என்று சொல்லத்தோன்றும். 

பிறந்த நாள் பரிசாக இந்தப் புத்தகத்தை பரிசளித்த உரத்த சிந்தனை அமைப்புக்கும், உதயம்ராமுக்கும் நன்றி !! 

** 

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் 
– ச.தமிழ்ச்செல்வன் 
- Rs.130 

1 comment:

Suriyaa Screens said...

முதலாளி கனவோடு இயங்குபவர்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் உழைக்கத் தயாரானவர்கள். ******இப்ப வேலை பார்ப்பவர்கள் அனைவரும் கடனுக்குதான் வேலை செய்கிநார்கள். தனக்கு என்ன தெரியுமென்று சொல்லாமல்,எவ்வளவு சம்பளம் என்று மட்டும் கேட்கிறார்கள்.******நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails