வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 10, 2016

மிருகம் சொல்லும் Management கதைகள் - 12

பெரிய காட்டை ஆளும் சிங்கம், உலகில் தான் தான் பெரிய நீதிபதி என்ற கர்வம் இருந்தது. தவறு செய்பவர்கள் தண்டிக்க விதவிதமான தண்டமை முறையை கண்டுப்பிடித்து வந்தது.

முக்கியமான பொய் சொல்பவர்களை வெறிப்பிடித்த காட்டு நாய் ஒன்றை கடிக்க வைத்துக் கொன்று வந்தது. அதனால், அந்த காட்டில் சிங்கத்திற்கு எதிராக தவறு செய்யவே மற்ற மிருகங்கள் அஞ்சியது.

ஒரு முறை, சிங்கத்தின் மந்திரியான நரி பொய் சொன்னதை சிங்கம் கண்டுப்பிடிக்க, அதை கட்டி வைத்து வெறிப்பிடித்த நாய்யிடன் அடைக்க வேண்டும் என்கிறார். அப்போது, நரி “நான் தங்களிடம் நீண்ட நாட்களாக விஸ்வாசமாக இருந்திருக்கிறேன். என் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும். “ என்றது.”உன் ஆசை என்ன ?”

“என்னை கொல்லப்போகும் நாய்க்கு நான் சேகவம் செய்து இறக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்” என்றது.

சிங்கமும் சம்மதித்தது. நரி தினமும் அந்த நாய்க்கு உணவளித்து, குளிப்பாட்டி நட்போடு பலகியது.

பத்து நாள் கலித்து, சிங்கம் நரிக்கு தண்டனை அளிக்க வெறிப்பிடித்த நாய்யிடம் விட, அது கடிக்காமல் நரியின் கட்டை கடித்து காப்பாற்ற முயற்சித்தது.

சிங்கம் வியப்பாக பார்த்தது. நரி, “சிங்க ராஜா ! பல வருடங்களாக உங்களுக்கு சேவை செய்தேன். மரண தண்டனை வழங்கினீர்கள். இந்த நாய்க்கு பத்து நாட்கள் தான் சேவை செய்தேன். தனது நன்றியை காட்டியிருக்கிறது. பார்த்தீர்களா ?” என்றது.

சிங்கம் தன் தவறை உணர்ந்தது.

“உண்மை தான் மந்திரி. இனி பொய் சொல்பவர்கள் நாயிடம் விட மாட்டேன். அதற்கு பதிலாக முதலைகளிடம் விடுகிறேன்.” என்றது.

நரி அதிர்ச்சியடைய, தனது எடுப்பிடி சிங்கத்திடம் நரியை முதலை இருக்கும் இடத்தில் வீச உத்தரவிட்டது.

மேனேஜ்மெண்ட் நீதி : 

மேலாளர் முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்ற தான் நினைப்பார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails