வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, June 16, 2016

விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் "போர்த்திரை "

சினிமா, வரலாறு இரண்டும் எனக்கு பிடித்தமான விஷயம். அதனால், விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் “போர்த்திரை” புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது.

வழக்கமான சினிமா விமர்சனம் போல் இல்லாமல், சினிமா எடுக்கப்பட்ட அரசியல் நிலவரத்தையும் சேர்த்து சொல்கிறார். அவர் முன்மொழியும் பல படங்கள் அந்த நாட்டின் அரசியல் புரியவில்லை என்றால், படத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது. ஒரு சில படங்கள் அவர் கூறிய அரசியல் பிரச்சனைக்காகவே பார்க்கலாம். ஹிட்லரையும், இரண்டாம் உலகப் போரை சுற்றியும் எடுக்கப்பட்ட பல படங்கள் பலருக்கு தெரிந்ததிருக்கும். ஆனால், வியட்நாம் போர், சீனா – ஜப்பான் போர் போன்ற யுத்தங்களை பேசும் படத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புத்தகம் பல போர் படங்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. 

இறுதியில் எழுத்தாளர் சுஜாதாவிடம் வெளிநாட்டு நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் சொல்ல முடியாமல் தினறியது ‘நச்’. உண்மையில் தமிழ் இயக்குனர்கள் யாரும் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. சினிமா பிரியர்கள், வரலாற்று பிரியர்கள் இருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் !! 

 வாழ்த்துகள் விஜய் ஆம்ஸ்ட்ராங் !!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails