வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 24, 2016

Yes, I am Yasmin ! - டிடெக்டிவ்

பெண் துப்பறியும் நிபுணர்களை பற்றிய தமிழில் வந்த முதல் புத்தகம் என்று சொல்லலாம். என்ன தான் பெண்ணியம், பெண் உரிமை பேசினாலும் பெரும்பாலான பெண்கள் சமூகத்தில் ஆண் காட்டிய பாதையில் தான் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்களே அஞ்சக்கூடிய ‘ஜெம்ஸ்பாண்ட்’ வேலையான துப்பறியும் வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார் யாஸ்மின். துப்பறியும் துறையில் தன்னை தேடி வந்த வழக்குகள், அதை எப்படி எதிர்கொண்டார், அதை கையாளும் போது சந்தித்த சவால்கள் என்று யாஸ்மின் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்தப் புத்தகத்தில் பெண் உளவாளி, RAW பற்றிய ஒரு சில தகவல்களும் உண்டு. 

யாஸ்மினின் வாழ்க்கை வரலாற்று நூலாக இருந்தாலும், வெளிநாட்டு உளவாளிகளை பற்றிய தகவல்கள் என்று இந்த புத்தகத்திற்கு தேவையில்லாதது என்று தோன்றுகிறது. 

யாஸ்மின்னை பேட்டிக் கண்டு சலீம் அக்பர் என்பவர் எழுதியிருக்கிறார். யாஸ்மின் நேரடியாக எழுதியிருந்தால் அல்லது அவரே நேரடியாக விளக்குவது போல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 

**
 Yes, I am Yasmin ! - டிடெக்டிவ் 
- சலீம் அக்பர்
- Rs.100

 இணையத்தில் வாங்க… 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails