வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, May 12, 2016

மிருகம் சொல்லும் Management கதைகள் - 11

புலியும் , சிங்கமும் தங்களுக்கு வேலை செய்ய நான்கு நரியை வேலைக்கு வைத்திருந்தது. நான்கு நரிகளும் சிங்கம், புலி வேட்டைக்கு உதவியாக இருந்தார்கள். இருந்தாலும், நான்கில் யார் திறமையானவர்கள் என்பதில் தேர்வு செய்ய கடினமாக இருந்தது. அதனால், சிங்கமும், புலியும் நான்கு நரிகளுக்கு ஒரு சோதனை நடத்த முடிவெடுத்தது.சிங்கம் நரிகளிடம், “இன்று நாங்கள் இருவரும் வேட்டைக்கு வரப் போவதில்லை. நீங்கள் தான் முயலை வேட்டையாடி கொண்டு வரப் போகிறீர்கள். ஒவ்வொருவரும் பத்து முயலாவது கொண்டு வர வேண்டும்” என்றது சிங்கம்.

முதல் நரி, “ஒருவரே பத்து முயல் கொண்டு வருவது கடினமானது. நாங்கள் குழுவாக செல்கிறோம்.”

புலி அதை ஏற்கவில்லை. உங்களிடம் இருக்கும் திறமையை கொண்டு வருவதற்கே இந்த சோதனை என்றது.

நான்கு நரிகளும் தங்களால் முடிந்த அளவுக்கு முயலை வேட்டையாடி வேட்டைக்கு சென்ற இடத்தில் 26 முயல்கள் மட்டுமே இருந்தது. இரண்டு நரி விரைவாக முயல்களை தாக்கி ஆளுக்கு பத்து முயலை கொண்டு கொண்டு வந்தது. மூன்றாவது முயல் கிடைத்த 6 முயலை கொண்டு சென்றது. நான்காவது வெறும் கையோடு திரும்பி வந்தது.

முதல் இரண்டு நரியைப் பார்த்ததும் புலிக்கு மகிழ்ச்சி. மூன்றாவது நரி, “மன்னிக்கவும் என்னால் மீதம் நான்கு முயலை கொண்டுவர முடியவில்லை என்று வருத்தமாக கூறியது.

வெறும் கையோடு வந்த நரி, “நாங்கள் நால்வரும் 26 முயலை கொன்று, உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறோம்” என்றது.

சிங்கம் அந்த நான்காவது நரியை மேலாளராக்கியது. மூன்றாவது முயலை மேற்பார்வை பார்ப்பவனாகாக்கியது. முதல் இரண்டு நரியை வேட்டையாடுவதற்கு வேலை செய்பவனாக மாற்றியது.

மேனேஜ்மெண்ட் நீதி :
வேலை செய்ய தெரிந்தவர்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டும். வேலை செய்யத்தெரியாதவர்களுக்கு, வேலை செய்பவர்களை கண்காணிக்கும் ’மேலாளர்’ பொறுப்பை கொடுக்க வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails