வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, May 7, 2015

கமல் என்னும் மாபெரும் கலைஞன் !

சிவகுமார் எழுதிய ”இது ராஜப்பாட்டை அல்ல” நூலில், சிவாஜி கணேசன் நடிகர் முத்துராமன் மரணத்தை பற்றி இப்படி கூறிப்பிட்டிருப்பார். 

”ஒரு நடிகன் தான் நடித்துக் கொண்டு இருக்கும் போதே இறப்பது பெரும் பாக்கியம்” என்று சிவகுமாரிடம் கூறியிருப்பார். ஏறக்குறைய ‘மனோரஞ்சன்’ பாத்திரம் அப்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அறிவுக்கு தெரிகிறது கமல் ஏற்று நடித்தது ‘மனோரஞ்சன்’ பாத்திரம் என்று. ஆனால், மனதுக்கு ‘கமலுக்கு அப்படி ஏதாவது இருக்குமோ’ என்று அஞ்சுகிறது. 

எத்தனையோ படங்களில் (வாழ்வே மாயம், நாயகன், குருதிபுனல், குணா etc.) கமல் இறந்திருக்கிறார். அதில் எல்லாம் அவர் நடித்த பாத்திரங்கள். ஆனால், இதில் எனக்கு கமல் ‘கமலாக’ தான் தெரிகிறார். 



தன் வாழ்வில் உச்சத்தை தொடுவதற்காக எத்தனை உறவுகளை கடந்திருப்பார். அத்தனை உறவுகளை தேடி கடைசி நிமிடத்தில் மன்னிப்பு கேட்ட முடியாது என்பதற்காக இப்படி ஒரு படத்தை எடுத்தாரோ என்று தோன்றுகிறது. 

ரஞ்சன் பாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் அழுதுக் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக, ‘உத்தமன்’ பாத்திரித்தில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். தனக்கு கிடைத்த குறைவான நேரத்தில் ரசிகர்களை எப்படியாவது சிரித்து திருப்திபடுத்திவிட வேண்டும் என்று நினைத்ததால் என்னவோ, உத்தமன் பாத்திரத்தில் செயற்கை தனம் இருக்கலாம். ஆனால், மரணத்தை நெருங்கும் ஒருவன் மற்றவர்களை சிரிக்க வைக்க நினைக்கும் உழைப்பை பார்க்கத் தோன்றுகிறது. 

பல வருடங்களாக கமலின் நடிப்பை, அறிவு ஜீவி தனத்தை பார்த்து வருகிறோம். தலைகனம், திமீர் பேச்சு, அரசியல் கருத்து என்று தனது படத்தில் எதையாவது பதிவு செய்வார். ஒரு கலைஞனுக்கு உரிய பிடிவாதம் அவரிடத்தில் இருக்கும். ஆனால், அப்படி எதுவும் இந்த படத்தில் இல்லை.

இப்படி ஒரு படம் செய்ய வேண்டும் என்று கமலுக்கு அவசியம் இல்லை. சிவாஜி, நாகேஷ், பாலு மகேந்திரா போன்றவர்களின் மரணம் கமலை இப்படி யோசிக்க வைத்ததா ? கே.பி மரணத்துக்கு கூட இதற்கு தான் வரவில்லையா ? தன்னை சுற்றியிருப்பவர்களின் மரணத்தால் வந்த பிரதிபலிப்பா ?

 உண்மையில், தனது மரணத்துக்காக ரசிகர்களை ஒத்திகை பார்க்க சொல்கிறாரரா ? ஒரு கலைஞன் தனது ரசிகர்களை தேற்றுவதற்கும், தனது மரணத்தை கூட கொண்டாட வேண்டும் என்பதாக படம் எடுத்திருக்கிறாரா?

இந்த படத்தில் கமல் சொல்ல வருவது புரிகிறது. ஆனால், மனம் ஏற்க மறுக்கிறது.

என் கமல் எனக்காக, என்னை போன்ற தன் ரசிகர்களான படம். அவருடன் பழகிய உறவுகளுக்கான படம். லிங்காவாசிகளுக்காகவோ, தல – தளபதி ரசிகர்ளுக்காகவோ, ஏன் மற்ற ரசிகர்களுக்காவோ இந்த படம் எடுக்கவில்லை.

”தலைவா ! நீ நூறு வருடம் வாழனும்” என்று உரக்கச் கத்த வேண்டும் போல் இருக்கிறது. 

’சாக வரம் போல் சோகம் உண்டோ’ தனது ரசிகர்களை தேற்றுவதற்காக எழுதினாரோ என்று தோன்றுகிறது. அதில் ஒவ்வொரு வரியும் தனது மரணத்தை குறித்து கமல் எழுதியது போல் இருக்கிறது. படத்தின் அறிமுகக் காட்சிக்கு பாடல் எழுதுபவர்களின் மத்தியில் தனது வாழ்வின் மரணத்தை குறித்து யாரால் எழுத முடியும். 

எந்த ரசிகனுக்கு கிடைப்பார் இப்படி ஒரு கலைஞன். தனது மரணத்தை ரசிகர்களோடு உரையாடும் கலைஞன் எனக்கு கிடைத்திருக்கிறார். இது நடிப்பு என்று கமலே வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். 

இதை படிக்கும் உங்களுக்கு ‘சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியாத முட்டாளாக தெரியலாம்’. அதை பற்றி எனக்கு கவலையில்லை. வாழ்க்கை எத்தனையோ தருணத்தில் நான் முட்டாளாக இருந்திருக்கிறேன். இந்த கட்டுரையில் அப்படி தெரிவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் கமலுக்கான நான் அழுதுக் கொண்டு எழுதும் இந்த கட்டுரையில் முட்டாளாக இருந்துவிடுகிறேன்.

உண்மையில் படம் முடியும் போது கமலை கட்டிபிடித்து அழ வேண்டும் போல இருந்தது.

3 comments:

mani said...

இதுவரை என் சினிமா அனுபவத்தில் இப்படி ஒரு கதையைக் கண்டதில்லை. வாழ்விலே முதல் முறை என்று சொல்லலாம். அந்த வகையில் உத்தம வில்லன் ஒரு அபூர்வமான அனுபவம். கமல் கதையை உருவாக்கவில்லை. வாழ்ந்ததை சினிமாவாக எடுத்திருக்கிறார். அதில் அவர் ஒளிவு மறைவு வைக்கவில்லை. தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒத்து வருமா என்பது போன்ற கேள்விகளில் இறங்கவில்லை. ராட்சச நேர்மையுடன் எடுத்திருப்பதாலேயே அது ஒரு மகத்தான கலாசிருஷ்டியாக மாறியிருக்கிறது

vikaaasan said...

I AM A GREAT FAN OF PADMA SHRI UNIVERSAL STAR DR KAMALHASSAN.
WAT I HAD IN MY MIND WAS WELL EXPRESSED BY GUHAN.. WONDERFUL ESSAY GUHAN.. THANK YOU..

ravikumar said...

But producers will be on street

LinkWithin

Related Posts with Thumbnails