வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 6, 2015

சுடுகாடும் சில சுந்தரிகளும் - மரண கானா விஜி வாழ்க்கை வரலாறு

இது வரை எந்த நூலிலும் சொல்லப்படாத பெண்களை பற்றி இந்த நூலில் பார்க்க முடிகிறது. ஒரு வேலை, விஜிக்கு மட்டும் எழுத தெரிந்திருந்தால், எல்லா எழுத்தாளர்களையும் தூக்கி சாப்பிட்டிருப்பார் என்று சொல்லலாம். சமக்கால இலக்கியம் எல்லாம் குப்பை என்று சொல்லும் அளவிற்கு அவரிடம் அனுபவம் கொட்டிக்கிடக்கிறது. அந்த அளவுக்கு பல மோசமான பெண்களை, அனுபவங்களை கடந்திருக்கிறார். 

“டங்கமாரி” பாடலின் குரலுக்கு பின் இப்படி பெரிய சோகம் இருப்பது மனதை கனமாக்கிறது.’விஜி’ என்பது தன்னுடைய பெயரல்ல. உண்மையில் தனக்கு பெயரே இல்லை என்று தான் அவர் சொல்கிறார். தன்னை முதன் முதலாக கவனித்துக் கொண்ட விபரச்சாரியின் பெயர் விஜி. விஜியுடன் இருந்ததாலே அந்த பெயர் தனக்கு வந்தது என்கிறார். 

தனக்கு கிடைத்த முதல் தோழி எக்மோர் ராணி. விஜிக்கு டீ வாங்கி தருவதற்காக அடுத்தவரிடம் படுக்க தயங்காதவள் (அப்போது ராணிக்கு 8 வயது). விஜியுடன் இருக்கும் மூன்று நண்பர்களுடன் ஒன்றாக உறங்குபவள். புணர்ச்சிக் கொள்பவள். குடிப்பவள். எல்லாவற்றிக்கும் மேலாக அவர்களிடம் அன்பு காட்டும் ஒரே பெண். இது தவறு, சரி சொல்ல ஆளில்லாததால், தங்களுக்கு தெரிந்ததை செய்பவர்கள். 

இன்னொரு பெண் (பெயர் குறிப்பிடப்படவில்லை), தான் இறக்கும் தருவாயில் விஜியின் பாடலை கேட்க விரும்புகிறாள். தான் சாகும் முன் ஒரு ஆண்ணுடன் இருக்க வேண்டும் என்று விரும்பி விஜியுடன் உறவுக் கொள்கிறாள். 

பல உலக இலக்கியமே கொண்டாடிய தாய்மைக்கு எதிராக தான் சந்தித்த மோசமான தாய்யை கூறியிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரை குற்றத்தின் பிறப்பிடமாக இருப்பதற்கு எடுத்துக்காட்டு ’மரண கானா’ விஜி வாழ்க்கை ஒரு உதாரணம். 

பணக்காரன், நடுத்தரம், ஏழை என்று பொருளாதார அடிப்படையில் மக்களை மூன்று விதமாக பிரித்திருக்கிறோம். ஆனால், ஏழைக்கு கீழ் ஒரு மக்கள் வாழ்க்கிறார்கள். அவர்களுக்கு சரி, தவறு என்பதே தெரியாது. அன்றைய தின உணவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள். மரணத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள். மரணத்தோடு வாழ்பவர்கள். மரணத்தை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். 

இவர்களுடைய வாழ்க்கை முறையை யாரும் பதிவு செய்ததில்லை. பதிவு செய்ய இவர்களின் வாழ்க்கை முறை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அது மிகப் பெரிய கடினமான விஷயம். ஒரு வேலை அப்படி சாத்தியப்பட்டால், அது சமக்கால புத்தகங்களில் மிக முக்கியமானதாக இருக்கும். 

இந்த புத்தகத்தில் விஜி தன் வாழ்க்கைப் பற்றி முழுமையாக சொல்லவில்லை என்றே தெரிகிறது. அப்படி ஒரு வேலை சொல்லியிருந்தால், மிகவும் அருவருப்பான மனிதர்களை பற்றியதாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. 

வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் You tubeல் “சொல்வதெல்லாம் உண்மை”யில் மரண கானா விஜி பேட்டி பார்க்கவும். 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails