வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, July 7, 2014

அகம் புறம் அந்தப்புறம் - முகில்

சமஸ்தானங்களில் அந்தரங்க வாழ்க்கை. யார் யார் எத்தனை பெண்கள் வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எத்தனை மகாராணிகள். எத்தனை பிள்ளைகள் என்று அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை கணக்கு சொல்கிறது இந்த புத்தகம்.

மகாராஜாக்கள் அந்தப்புரத்தில் உல்லாசமாக இருந்தது நமக்கு ஒரு வரி தகவலாக தான் தெரியும். ஆனால், அதுவே தலையணை அளவில் ஒரு புத்தகமாக எழுதி சொல்லிருக்கிறார் முகில்.

முகிலின் நகைச்சுவை கலந்த எழுத்து, எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் லொள்ளு தர்பார், லொள்ளு காப்பியம் போன்ற புத்தகங்கள் நாளிதழலில் தொடராக வந்தாலும், நூலாக வரும் போது பெரிய அளவில் கவரவில்லை. பேக் பிரோபைலில் இண்டர்வியூவுக்கு செல்லும் கட்டுரை இன்று வரை என்னால் மறமுடியாத ஒன்று.'அகம் புறம் அந்தப்புறம்' - புத்தகத்தின் உள்ளட்டத்தை பார்த்தால் மிகவும் ட்ரையான ஒன்று. மேடையில் பேசு பேச்சாளர்களுக்கும், நண்பர்களுடன் விவாதிப்பதற்கும், நாம் அறிவாளி என்று காட்டி கொள்வதற்கும் பயண்படாத புத்தகம். ஆனால், முகிலின் நகைச்சுவை எழுத்து நடை புத்தகத்தை ஸ்வரஸ்யமாக நகர்த்தி செல்கிறது. இரண்டு வரி தகவல் வைத்து ஒரு அத்தியாயமாக சிறுகதை வடிவில் எழுதுகிறார். இடை இடையே தகவலும் கொடுக்கிறார். இடையைப் பற்றி வர்ணிக்கிறார்.

அந்தக் காலத்தில் வாழ்க்கையை மகாராஜாக்கள் எப்படியெல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் என்ற பிரமிப்பு வருகிறது. இன்று விஜய மாலியா போன்ற தொழில் அதிபர்கள் உல்லாசமாக வாழ்வதை எத்தனையோ ஊடகங்கள் காட்டுகிறது. ஆனால், அன்றைய காலத்தில் அடிமை இந்தியாவில் ஊடக வளர்ச்சியில்லாத சமயத்தில் விருந்து என்ற பெயரில் அவர்கள் அடித்த கூத்து பதிவு செய்கிறது இந்த நூல்.

மக்களைப் பற்றி கவலைபடாமல் வாழ்ந்தவர்கள். சுதந்திரம் அடைந்து காங்கிரஸ்ஸில் சேர்ந்து அரச பரம்பரை, ராஜா பரம்பரையில் வந்தவர்கள் என்று பெருமையாக பேசி கொள்பவர்கள் தெற்கில் இல்லையென்றாலும் வடக்கில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பரம்பரை முகத்திரையை இந்தப் புத்தகம் கிழித்து காட்டுகிறது.

இந்த நூலின் விலை பிரமிப்பாக இருக்கலாம். ஆனால், அதன் வடிவமைப்பு, புகைப்படங்கள், உள்ளடக்கம் என்று எல்லாம் சேர்த்து பார்த்தால் இந்த புத்தகத்தின் விலை குறைவு தான்.

வரலாற்று பிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல். கல்லூரி, அரசு நூலகத்தில் அவசியமாக இருக்க வேண்டிய குறிப்பு புத்தகம் இது.

**

அகம் புறம் அந்தப்புறம்
- முகில்
- Rs.999

இணையத்தில் வாங்க

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails