வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 3, 2014

கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

எனக்கு எந்த பெண்ணும் பிடிக்காது என்று ஒருவன் கூறினால் என்றால்... ஒன்று அவன் காமத்தை விரும்பாதவனாக இருக்க வேண்டும். அல்லது அவன் ஓர் பால்சேர்க்கையாளராக இருக்க வேண்டும்.

அதேப் போல், எனக்கு எந்த அரசியல் தலைவரும் பிடிக்கவில்லை என்று ஒருவன் கூறினால்... ஒன்று அவன் அரசியல் ஆர்வமில்லாதவனாக இருக்க வேண்டும். அல்லது அரசியல் அறிவு இல்லாதவனாக இருக்க வேண்டும். 

எல்லா பெண்களிடம் எதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக எந்த ஆண் மகனும் பெண் இனத்தையே தள்ளி வைக்க முடியாது. கிடைக்கும் பெண்ணின் நிறைகளை நினைத்து, குறைகளை மறந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கிறான்.

 அதுப் போலதான், நமக்கு இருக்கும் அரசியல் தலைவர்கள். யாரோ ஒருவரை தேர்வு செய்து தான் ஆக வேண்டும். அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் கிடைக்காது. எனக்கு கிடைத்த தமிழ்நாட்டு தலைவர்களில் எனக்கு ’கலைஞர்’ பிடிக்கும். அதற்காக என்னை சுற்றி இருப்பவர்கள் மூலம் மூலம் பல விமர்சனம் சந்தித்திருக்கிறேன். தி.மு.கவினர் சொல்ல வேண்டிய பதிலை நான் சொல்லியிருக்கிறேன். பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் இருந்திருக்கிறேன். ஆனால், ஒரு முறைக் கூட கலைஞரை நான் வெறுத்ததில்லை.

எனக்கு பிடித்த கலைஞர் பத்தாண்டுகளாக காணவில்லை என்ற வருத்தம் உள்ளூர இருக்கிறது. 70, 80 களில் இருந்த கலைஞர் எங்கு சென்றார் என்று பல முறை வருந்தியிருக்கிறேன். ஆனால், கலைஞரை என்னால் ஒதுக்க முடியாது. இவ்வளவு ஏன் ? அரசியல் அறிவு அற்றவர்களாலும் அவரை ஒதுக்க முடியாது.

நான் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. தி.மு.கவின் பல செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், எனக்கு கலைஞர் பிடிக்கும். அது தான் அவரின் பலம். தி.மு.க என்ற கட்சியை தாண்டி கலைஞருக்கு அபிமானிகள் அதிகம். ரசிகர்கள் அதிகம். இவர் காலில் விழுந்து ஆசிப் பெற்றவர்கள் யாரும் தன்மானத்தை இழந்து விழுவதில்லை.

கலைஞர் மீது மக்களுக்கு இருக்கும் கோபம், இனிப்பு வாங்கி தராத அப்பா மீது குழந்தைக் காட்டும் கோபம். அம்மா மீது மக்களுக்கு இருக்கும் அன்பு, இனிப்பு வாங்கி தந்த மாமா மீது இருக்கும் அன்பு. இனிப்பு கரைந்ததும் மாமா மீது இருக்கும் அன்பு குழந்தைக்கு குறைந்துவிடும். இனிப்பே வாங்கி தரவில்லை என்றாலும் அப்பாவை தேடி குழந்தை வந்துவிடும்.

அரசியலை தாண்டி தனக்கென்று இன்று வரை ஒரு கூட்டம் வைத்திருக்கும் ஒரே தலைவர்... கலைஞருக்கு மட்டும் தான்.

கலைஞரைப் பற்றி நான் தொகுத்த நூல்... இணையத்தில் வாங்க

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails