வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 24, 2013

ஹேராம் படமும், நாளைய தலைமுறையின் கேள்வியும்

நேற்று, கலைஞர் தொலைக்காட்சி "ஹே ராம்" ஓடியது.



அதைப் பார்த்து, என் ஆறு வயது மகன் "எதுக்காக காந்திய சுட்டாங்க?" என்று கேட்டான்.

எவ்வளவு காலம் தான் பசங்களுக்கு காக்கா, நரி கதை சொல்லுவது. இந்திய வரலாற்றை சொல்லிக் கொடுப்போம் என்று இந்தியா - பாகிஸ்தான் வரைப்படத்தை வரைந்து விளக்க தொடங்கினேன்.

“சின்ன பசங்களுக்கு சொல்லுற கதையா” என்று என் மனைவி கேட்டாள்.

“இப்போவே இந்த கதைய தெரிஞ்சிக்கிட்டாதான் நாளை பசங்களுக்கு படிக்கும் போது புரியும்” என்றேன்.

அதுமட்டுமல்ல… நாளைய தலைமுறைகள் நமது சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா - பாகிஸ்தான் பிரிந்த கதை, ஹிந்து - முஸ்லிம் அடித்துக் கொண்டு இறந்தது என்று கூறியதோடு இல்லாமல், வரைப்படத்தில் இப்படி தான் பிடிக்கப்பட்டது என்று விளக்கினேன்.

" அதுக்கு ஏன் காந்திய சுட்டாங்க...?" என்று கேள்வி கேட்டான்.

"காந்தி, நேரு, ஜின்னா, மவுன்ட்பேட்டன் எல்லாம் சேர்ந்து தான் இந்தியா - பாகிஸ்தான் பிரிச்சாங்க. இந்து - முஸ்லிம் சண்டையில நிறைய பேரு செத்ததுக்கு காந்தி தான் காரணம் நினைச்சு சுட்டுட்டாங்க..." என்றேன்.

"அப்போ ! மத்தவங்களும் இதே மாதிரி சுட்டு தான் செத்துப்போனாங்களா ?" என்று கேள்வி கேட்டான்.

"இல்ல... எல்லாரும் வயசாகி தான் செத்துப் போனாங்க..." என்றேன். (1979ல் மவுன்ட்பேட்டன் (தனது 79 வயதில்) ஐரிஷ் போராளிகளால் கொல்லப்பட்டது இந்த இடத்தில் சொல்ல வேண்டாம் என்று தோன்றியது.)

"எல்லாரும் சேர்ந்து தானே தப்பு பண்ணாங்க... அப்போ எதுக்கு காந்திய மட்டும் சுட்டாங்க... பாவம் தானே அவரு..." என்றான்.

இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை. சரித்திரப் பக்கத்திற்கு நாளைய தலைமுறை கேட்க போகும் கேள்விக்கு பதில் இல்லை.

4 comments:

காரிகன் said...

காந்தியை கொன்றதற்கான காரணத்தை கோட்சே தெளிவாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறான். இன்டர்நெட்டில் தேடினால் கிடைக்கும். படித்துப் பார்க்கவும். காந்தியைப் பற்றி நமக்கு செலுத்தப் பட்டிருக்கும் பிம்பங்களை களைந்துவிட்டு படித்தால் உண்மையை சற்று உணரலாம்.

"இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை. சரித்திரப் பக்கத்திற்கு நாளைய தலைமுறை கேட்க போகும் கேள்விக்கு பதில் இல்லை."

இது ஆப்ரஹாம் லிங்கன், ஜான் எப் கென்னடி, போன்றவர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

மர்மயோகி said...

காரிகன் said...
//காந்தியை கொன்றதற்கான காரணத்தை கோட்சே தெளிவாக நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறான். இன்டர்நெட்டில் தேடினால் கிடைக்கும். படித்துப் பார்க்கவும். காந்தியைப் பற்றி நமக்கு செலுத்தப் பட்டிருக்கும் பிம்பங்களை களைந்துவிட்டு படித்தால் உண்மையை சற்று உணரலாம்.//

பெரிய புடுங்கி மாதிரி இதே சொல்லிக்கிட்டு இருங்கட..rss தேவடியா பசங்க கொலை செஞ்சதை இதை வெச்சு சமாளிக்கிரானுங்க பயங்கரவாத நாய்கள்...

M.Sathishkumar said...

Ni ethuda.....
Rss pathi solla vanhuta......ethu sari ethu thappunu enhaliku therium.

Ni mooodu...

M.Sathishkumar said...

Ni ethuda.....
Rss pathi solla vanhuta......ethu sari ethu thappunu enhaliku therium.

Ni mooodu...

LinkWithin

Related Posts with Thumbnails