வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, January 15, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 4

நேற்று பொங்கல், சக்கரை பொங்கல், வடை என்று ஒரு பெரிய கட்டு கட்டிவிட்டு மாலை 4 மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன்.

என்.சொக்கன் எழுதிய "சி.ஐ.ஏ : அடாவடிக் கோட்டை" புத்தகம் தவிர எதுவும் வாங்கவில்லை. பதிவர் நண்பர்கள் அனைவரும் டிஸ்கவரி புக் பேலஸ் சங்கமிக்க, நானும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டேன். அங்கிருந்து கொடி நடையாக நடந்து.... ஜூஸ் குடித்தோம்.

புத்தகக் கண்காட்சியில் மாட்டப்பட்ட விளம்பர பேனர்களைப் பற்றி பேசிக்கொண்டே அஜயன் பாலாவின் நாதன் பதிப்பகம் (ஸ்டால். 559) சென்றோம். சினிமா தீவிரமாக இயங்கி கொண்டு, பல புத்தகங்களை இந்த புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வந்திருக்கிறார். இவரின் உலக சினிமா வரலாறு பாகம் 1 & 2 அங்கு நன்றாக விற்பனையாகிறது.

நண்பர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இருவாட்சி இலக்கிய துறைமுகத்தில் (ஸ்டால். 554) நிஜந்தனின் "பேரலை" நூல் வேளியிட்டுக்கு சரியாக காலதாமதமாக சென்றோம். சல்மா நூலை வெளியிட்டு சென்று விட்டார்.

இந்த நான்கு நாளில் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய புத்தகம் எதுவும் கண்ணில் படவில்லை. வாசகர் பலர் ஸ்டாலுக்கு ஒரு புத்தகம் என்று கணக்காக வாங்குகிறார்கள். பெரிய பில் எதுவும் எந்த ஸ்டாலுக்கு வந்ததாக தெரியவில்லை. அதிக புத்தகம் வாங்கினால், கண்காட்சியில் இருந்து 2 கி.மீ நடக்க வேண்டும் என்ற மனநிலைக் கூட இருக்கலாம்.

வரும் நாளில் இந்த நிலைமை மாறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2 comments:

M.Mani said...

அடடா.. நான் 1 மணிக்கு உள்ளே நுழைந்து 4 மணிக்கு வெளியேறினேன். இதற்கே பாதி கண்காட்சியைத்தான் பார்க்கமுடிந்தது.பேருந்து நிறுத்தத்திலிருந்து அதிக தூரம்தான்.

M. Shanmugam said...

தகவலுக்கு நன்றி.
அவசியம் வர முயற்சிக்கிறோம்

Indian Sri Lanka Tamil Newspaper

LinkWithin

Related Posts with Thumbnails