ஒவ்வொரு புத்தக்க் கண்காட்சியிலும் அதிகமாக விற்பனையாகும் நூல் என்றால் ஜோதிடம், சமையல் என்பார்கள். ஆசிரியர் யாராக இருந்தாலும் இந்த இரண்டு பிரிவு நூல்களை வாங்கும் கூட்டம் இருந்துக் கொண்டு தான் இருக்கும். இந்த இரண்டை தவிர்த்து அடுத்து அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் சுயமுன்னேற்றம் தான். குட்டி கதை, தன்னம்பிக்கை தரும் வரிகள், உத்வேகம் தரக்கூடிய தலைப்பு இருந்தால் போதும் சுயமுன்னேற்ற நூல்கள் விற்பனையாகிவிடும்.
ஒரு முறை ஆதிஷா, லக்கியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு நடிகர் சுயமுன்னேற்ற நூலை கடுமையாக சாடினார் என்பதை கூறிப்பிட்டார்கள். ”சுயமுன்னேற்ற நூல் எழுதுபவர்கள் எல்லோரும் என்ன சாதித்துவிட்டார்கள் ? பணம் சம்பாதிப்பது எப்படி ? என்று புத்தகம் போட்டு பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள். புத்தகம் வாங்குபவன் அப்படியே தான் இருக்கிறான்” என்பதை அந்த நடிகர் குறிப்பிட்டதாக கூறினார். அப்போது அவரிடம் பதில் கூறும் நிலையில் இல்லை. ஆனால், அதற்கு பதில் இந்த கட்டுரையில் சொல்லியாக வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேறி அதிகம் பணம் சம்பாதித்தவர்கள் தான் சுயமுன்னேற்ற நூல் எழுத வேண்டும் என்றால் அம்பானி, பில் கேட்ஸ் மட்டுமே நூல் எழுத முடியும். ஆனால், அவர்கள் வாழ்க்கையை படித்து, அறிந்து எத்தனையோ பேர் தன்னம்பிக்கை வளர்த்திருக்கிறார்கள். அப்படி பலரது தன்னம்பிக்கை வளர்த்த அம்பானி, பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் பங்கு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.
சுயமுன்னேற்ற நூல் எல்லாம் பேத்தல் என்று சொல்லும் அந்த நடிகர் எத்தனை வெற்றிகளை குவித்துவிட்டார். சோர்வு பெற்ற மனதிற்கு குடி, தற்கொலை என்று காட்டிலும் தன்னம்பிக்கை தரக் கூடிய சுயமுன்னேற்ற நூல்கள் மிகவும் நல்லது.
பொதுவாக, சுயமுன்னேற்ற நூல் ஒரு பொழுதுபோக்கு நூல் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். பத்திரிகை செய்திப் போல் அல்லது சிறுகதை, நாவல் போல் பரபரப்பாக வாசிக்க முடியாது. வாசிக்கவும் கூடாது. தோல்வி அடைந்தவர்களுக்கு வெற்றி அவர்கள் காலடியில் ஒளிந்திருப்பதை காட்டுவது சுயமுன்னேற்ற நூலின் தலையாத கடமை.
உண்மையில், சுயமுன்னேற்ற நூலை வாசிக்கும் போது ஏற்கனவே நமக்கு தெரிந்து விஷயத்தை வாசிப்பது போல் தான் இருக்கும். புதிதாக இல்லாத ஒன்றுக்காக பணம் கொடுத்து புத்தகம் வாங்கினோம் என்று கூட தோன்றும். ஆனால், ஒன்று நாம் மறந்துவிடுகிறோம். இந்த புத்தகம் படிக்கும் வரை நமக்கு தெரிந்த விஷயம் ஏன் ஞாபகத்திற்கு வரவில்லை. ஒவ்வொரு வரியும் வாசிக்கும் போது நமக்கு தெரியாத புதுசா என்ன சொல்லிவிட்டான் ? என்ற எண்ணத்துடன் எந்த புத்தகத்தை அணுக்க கூடாது.
சுயமுன்னேற்ற நூல்களை நல்ல நண்பனாக அணுக வேண்டும். கருத்துக்கள் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ முழுமையாக படித்துவிட வேண்டும். அதன் பிறகு அதற்கு எதிர்வாதங்கள், கேள்விகளும் கேட்கலாம். மன சோர்வு அடையும் போது தன்னம்பிகையுட்டும் நண்பர்கள் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்படி அமையாதவர்களுக்கு சுயமுன்னேற்ற நூல் ஒரு வரப்பிரசாதம்.
ஆரம்பக்காலத்தில் எனக்கு அதிகம் தன்னம்பிக்கைம் கொடுத்தது ‘You Can Win’ புத்தகம் தான். இதுவரை, நானே பதினைந்து பேருக்கு பரிசாக இந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன். இதை விட சிறந்த தன்னம்பிக்கை புத்தகங்கள் (Neopolean Hill, Richard Templar புத்தகங்கள்) பல இருந்தாலும், நான் தோல்வி விலும்பில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது ‘You Can Win’ புத்தகத்தை தான் வாசிப்பேன்.
ஒவ்வொரு பூஜையறையில் பகவத் கீதை, குரான், பைபிள் என்று இருப்பது போல் உங்கள் புத்தக அலமாரியில் உங்கள் விருப்பமான சுயமுன்னேற்ற நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நல்லது மட்டும் சொல்லி, நல்லதே செய்யக் கூடிய நண்பர்கள் அமைவது கடினம். நல்ல சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பது சுலபம். உங்கள் வாழ்க்கைக்கான விடை உங்களிடம் இருக்கிறது எனபதை உணர உதவுவது சுயமுன்னேற்ற புத்தகங்கள் தான்.
No comments:
Post a Comment