வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, September 2, 2011

மங்காத்தா - விமர்சனம்



மூன் மூர்த்திகளில் இரண்டு மூர்த்திகள் ஒருவர் தயாரிக்க, இன்னொருவர் வெளியீட்டுயிருக்கும் படம் ‘மங்காத்தா’. ஆட்சி மாற்றத்தால் படம் இவ்வளவு நாள் வாங்க பயந்து ஒரு வழியாக வெளியீட்டுயிருக்கிறார்கள். இத்தனை போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றுயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐ.பி.எல் பைனல் மேட்ச் பிக்ஸ்க்காக மும்பையில் 500 கோடி வருவதை அறிந்த நான்கு பேர் கொள்ளை அடிக்க திட்டம் போட, இடையில் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அஜித்தும் திட்டத்தில் சேர்ந்துக் கொள்கிறார். இதற்கு இடையில், அர்ஜூன் புக்கிங் பணத்தை கைப்பற்ற ஒரு குழுவோடு அலைகிறார். ஐந்து பேரும் கொள்ளை அடித்த பணத்தை பிரித்துக் கொண்டார்களா ? அர்ஜூன் அவர்களை கைது செய்தாரா ? என்பது தான் இரண்டாவது பாதி கதை.




அஜித்துக்கு நாயகன் வேஷத்தை விட வில்லன் வேஷம் தான் கச்சிதமாக பொருந்துகிறது. வாலி, வரலாறு, பில்லா என்று நெகட்டிவ் பாத்திரத்தில் பட்டை கலப்பியது போல் இதிலும் செய்திருக்கிறார். அதுவும் இடைவேளைக்கு முன்பு சேஸ் போர்ட் வைத்து தனியாக பேசும் காட்டி கொஞ்சம் நீளம் என்றாலும், சூப்பர். தல Rocks again.

மேட்ச் பிக்ஸ்சிங் புக்கர்ஸ்யை கைது செய்யும் போலீஸ் பாத்திரத்தில் அர்ஜூன். பழக்கமான வேடம் என்றாலும், இதில் கொஞ்சம் ஸ்டைலாக தெரிகிறார். அஜித்துக்கும், அர்ஜூனுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் ரசிக்க முடிகிறது.

த்ரிஷாவுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. அஞ்சலி, அண்டிரினா வில்லன்கள் மிரட்ட பயன்பட்டிருக்கிறார்கள். மற்றப்படி லஷ்மி ராய் ஆட்டம் கொஞ்ச நேரம் திக்கமுக்கு ஆட வைக்கிறது.

ராபரி படம் என்றதும் முதல் பாது வேகமாக போகாமல் கொஞ்சம் மெதுவாக தான் போகிறது. இரண்டாவது பாதில், யார் யாரை டபுள் க்ராஸ் செய்கிறார்கள் என்ற காட்சியும், அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வம் படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது.

ஆடிப்பாரு மங்காத்தா, ஆடாம ஜெய்சோமடா பாடல்களை தவிர மற்ற எல்லா பாடல்களும் மொக்கை தான். பாடல்கள் நடுவில் அப்பா ட்யூனை சுட்டுயிருக்கிறார் யுவன்சங்கர்.

வழக்கம் போல் ஆங்கில படத்தை காபி அடித்து, தமிழுக்கு பொருந்துவது போல் படம் எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஓசன் 11, இட்டாலியம் ஜாப் போன்ற படங்களை பார்த்தவர்கள் இந்த படம் பெரிய பாதிப்பு இருக்காது. தமிழ் படம் மட்டும் பார்ப்பவர்களுக்கு இது கண்டிப்பாக சூப்பர் படம்.



படத்தின் குறை என்று சொன்னால், நாற்பது வயது போலீஸ் ஆபிசரை எப்படி த்ரிஷா காதலித்தார் ? மும்பையில் நடப்பதாக கதை சொன்னாலும் முக்கிய பாத்திரங்கள் ஹிந்தி பேசவில்லை. இப்படி சின்ன ஓட்டைகள் இருந்தாலும் இரண்டாவது பாதியின் ‘ரேஸ்’ திரைக்கதையில் படம் போவதே தெரியவில்லை.

மங்காத்தா – New Game for Tamil movie

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails