நாளைய இயக்குனர் - 2 ல் பார்த்து ரசித்து சிரித்த படம். குறும் படம் என்றால் கருத்து சொல்ல வேண்டும், நீதி இருக்க வேண்டும், நெஞ்சை வருட வேண்டும் போன்ற எழுதப்படாத விதிகளை தகர்த்த படம்.
சிறுகதை, நாவலை வாசித்தவர்கள் திரையில் படமாக பார்க்கும் போது படத்தை எடுத்தவர்களை திட்டாமல் இருக்க மாட்டார்கள். வாசிக்கும் போது கொடுத்த அனுபவம் காட்சிப்படுத்தும் போது இயக்குனர் தவறிவிட்டார் என்பது தான் பலரது விமர்சனமாக இருக்கும். ஆனால், "போஸ்டர்" சிறுகதையை வாசித்த பிறகு குறும்படமாய் பார்க்கும் போது வாசித்த அனுபவத்தை விட திரையில் பார்த்த அனுபவம் சிறப்பாக இருந்தது. இன்னும், சொல்லப் போனால் வாசிக்கும் போது கிடைக்காத நகைச்சுவை உணர்வு, நடிகரின் உடல் மொழியில் சிரிப்பு வர வழைத்தது.
"பட்டப்பகலில் ஒன்றாவது மெயின் ரோட்டில் விபச்சாரம் செய்யும் சாந்தியே உன்னை தட்டிக் கேட்க ஆளில்லையா?" என்ற போஸ்டரை காவல்துறையினர் கிழிப்பது போல் படம் தொடங்குகிறது. பொது இடத்தில், அதுவும் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் இப்படி ஒரு போஸ்டர் ஓட்டியிருப்பது பத்திரிகைக்காரர்களுக்கு தெரிந்தால் தன் வேலைக்கு வெட்டு வந்து விடும் என்று பயப்படுகிறான் இன்ஸ்பெக்டர் சாமிநாதன். பயந்த மாதிரி மேலிடத்தில் இருந்து விசாரிக்க சொல்லி அழுத்தம் வருகிறது.
அதே சமயம், ஒரு பெரிய வீட்டில் வயதான பெண்மனி சாந்தி தன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கற்புற ஆராதனை காட்டுகிறாள். வேலை செய்பவனிடம் தெலுங்கில் தன் வாடிக்கையாளரிடம் புது பெண் வந்திருப்பதை சொல்ல சொல்லுகிறாள்.
சாமிநாதன் அந்த ஏரியாவில் போஸ்டர் ஒட்டுபவர்களை விசாரிக்கிறான். அதில் ஒருவன், "போஸ்டர் ஓட்டியது எங்க ஆளே இருக்க மாட்டான்" என்பதை தீற்கமாக சொல்லுகிறான். தங்கள் ஆட்கள் ஒட்டியிருந்தால் போலீஸால் இவ்வளவு விரைவில் எல்லா போஸ்டர்களையும் அப்புறப்படுத்தியிருக்க முடியாது என்கிறான்.
விபச்சார விடுதியில் இருப்பவன் தன் வாடிக்கையாளருக்கு போன் போடுவதற்கு பதிலாக குடிப்போதையில் காவல்துறைக்கு போன் போட்டு விலாசமும் சொல்லுக்கிறான். காவல்துறையினர் அவர்களை கைது செய்கிறது.
உண்மையில் இந்த போஸ்டர் ஒட்டியது யார் என்பதை குறும்படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
இணைய எழுத்தாளர் சங்கர் நாராயண் எழுதிய "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து இயக்குனர் ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த சிறுகதைக்கு கதை எழுத்திய எழுத்தாளரே திரைகதை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
(நன்றி : ஆகஸ்ட்,2011, பொதிகை மின்னல் - மாத இதழ்)
1 comment:
ஹா..ஹா.. எதிர்பார்க்காத முடிவு:)
Post a Comment