வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 25, 2010

பௌத்த சூத்திரங்கள் எப்படிப் பிறந்தன?

புத்தர் இறக்கும் போது ஞானம் பெற்றுவிட்ட அவருடைய சீடர்கள் அனைவரும் அவரைச் சுற்றிக் கூடிவிட்டனர்.அவருடைய உபதேசங்களை எழுதிவைக்க முடிவு செய்தார்கள் .குரு இறந்துவிடப் போகிறார்.வருங்காலத்துக்கு அவருடைய உஅபதேசங்களை எழுதி வைக்க வேண்டு மல்லவா?

பிரமாதமான சீடர்கள் இருந்தார்கள். மிகப் பெரிய ஞானியர்.ஆனால் யாரும் அவருடைய உபதேசங்களை அப்படியே திருப்பிச் சொல்ல முடியவில்லை.சிலர் முழு மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.அவர்களை கேட்ட போது தோள்களைக் குழுக்கி ,”ஏதாவது தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே.பிழைகள் இருக்கத்தான் செய்யும்.அவரிடம் நாங்கள் கண்டதை எல்லாம் அப்படியே வார்த்தைகளில் வடிக்க முடியாது “ என்று சொல்லிவிட்டார்.



எந்த ஒரு ஞானியும் புத்தரின் உபதேசங்களைத் தொகுத்துச் சொல்ல முன் வரவில்லை.கடைசியாக ஆனந்தரை அனுகினார்கள்,புத்தரோடு நாற்பத்திரெண்டு வருடங்கள் இருந்தவர் அவர் ஒருவர் தான்.ஆனாலும் ஞானம் சித்திக்கவில்லை.எல்லாமும் அவருக்கு நினைவிருந்து .வார்த்தைக்கு வார்த்தை புத்தருடைய உபதேசங்களை அவர் நினைவில் வைத்திருந்தார்.

அசாதாரணமான நினைவாற்றலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது.ஒரு ஞானியின் வார்த்தைகளை அஞ்ஞானியின் வாய் வழியாகக் கேட்டு நம்ப புடியுமா?

புத்தர் இறந்த அன்று ஆனந்தாவை அழைத்து ,”ஆனந்தா!நாளைக்கு நான் இங்கே இருக்கமாட்டேன்.எனவே அவசரப்படு,இனியும் தள்ளிப் போடாதே!”என்றார்.

புத்த்ர் இறந்தப்பின் அங்கே கூடியவர்கள் கேட்டுக் கொண்ட்தற்காக ஆனந்தர் இருபத்து நான்கு மணி நேரம் கண்கலை மூடி அமர்ந்தார்.அவருடைய வாழ்வில் முதல் முறையாக அப்படி அமர்ந்தார்.எப்போதும் புத்தரோடேயே இருந்துவிட்டதால் அவருக்கு கண்களை மூடி அமர்வதே முடியாத காரியமாக இருந்தது.

தினமும் அவரை சுற்றி பல காரியங்கள் நடந்துக் கொண்டே இருந்த்தால் அவருக்கு எப்போதும் ஏதாவது செய்வதற்க்கு வேலை இருந்து கொண்டே இருந்தது இப்போதுதான் புத்தர் போய்ச் சேர்ந்துவிட்டாரே !வேறு வேலை ஏதும் இல்லை .கண்களை மூடி இருபத்து நான்கு மணிநேரம் அமர்ந்துவிட்டார்.தன் வாழ்வில் முதல் முறையாக மௌனத்தில் அமர்ந்துவிட்டார்.
இருபத்து நான்கு மணிநேரத்தில் ஞானம் பெற்றார்.நாற்பத்திரெண்டு வருடம் நடக்காத காரியம் இருபத்து நான்கு மணிநேரத்தில் நடந்துவிட்ட்து.

அவருடைய ஞானப் பிரகாசத்தை பிற ஞானியர் கண்டனர்.அவருடைய ஜோதியை கண்டனர்.பிறகு “ஆனந்தா இனி சத்சங்கத்துக்கு வரலாம் நீர் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதிக் கொள்கிறோம் “என்றார்கள்.

அப்படித்தான் பௌத்த சூத்திரங்கள் யாவும் தொகுக்கப்பட்டன.

**

புத்தரை ஒருவர் திட்டினார்.புத்தர் கேட்டார்,தன் வழி நடந்தார்.புத்த பிட்சு ஆனந்தர்,”திட்டியவனுக்கு மறுமொழி எதுவும் கூறவில்லையே” என்று கேட்டார்.

புத்தர் “மற்றவர்களது தவற்றுக்கு என்னைத் தண்டித்துக் கொள்வதை,வெகு காலத்திற்கு முன்பே நிறுத்தி விட்டேன்.அவன் திட்டுகிறான்.திட்டுவது அவன் செயல்,அவன் தவறு.அதில் நான் எங்கே நுழைந்தேன்”திட்டட்டும்,திட்டாதிருக்கட்டும்.மோசமாகத் திட்டட்டும்.லேசாகத் திட்டட்டும்,பலத்தைச் செலுத்தித் திட்டட்டும்,பலமற்று திட்டட்டும்,அவன் உழைத்தான்.கிராமத்திலிருந்துநடந்து,நம் பாதை வரையில்,திட்டுவதறகாக் வந்தான்.திட்டி விட்டான்.தனது வேலையை முடித்து விட்டான்,திரும்பினான்.இதில் எனக்கு என்ன சம்பந்தம்?

திட்டுவதற்க்கு,அவனை நான் தூண்டவில்லை அவனை நான் உற்ச்சாகபடுத்தவுமில்லை. எனக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை.நான் தொடர் பற்றவன்.அவனது தவற்றிற்காக ,எனக்கு ஏன் தண்டனை விதித்துக் கொள்ளவேண்டும்?நான் கோபமைடைந்தால்,அதில் எரிபடுவது நானே .தீ,எனக்குள் எழும்.எனது மயிர்கால்கள் அனைத்தும் குத்திடும்;எனது பிராணன் துடிக்கும்,எனது ரத்த அழுத்தமே அதிகரிக்கும்,இரவு எனக்கு உறக்கம் வராது;இந்த மனிதன்,திட்டி முடிதாயிற்று,வேலை முடிந்தது,என்று ஆனந்தமாக உறங்குவான்!”எனறார்.

1 comment:

நிகழ்காலத்தில்... said...

பிறர் நம்மைத் திட்டும்போது எப்படி இருக்கவேண்டும் என வாழ்ந்து காட்டிய புத்தர் வழி பின்பற்றுவோம்..

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

LinkWithin

Related Posts with Thumbnails