வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, September 28, 2010

ஓரின சேர்கையாளர்கள் மிருகங்களா ?

தன் மதர் சூப்பிரியர் ஓரின சேர்கையின் ஆசைக்கு இனங்காமல், மனநோயாளி என்று சொல்லி ஒரு கன்னியாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவர் பெரிய பாதரியாரிடம் சொல்லியும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. தன் சுயசரிதையில் தனக்கு ஏற்ப்பட்ட ஓரின கொடுமைகளை விளக்கிய பிறகு பலர் மனநோயாளி புத்தகம் என்றே விமர்சனம் செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.

*

சென்னை விடுதியின் மேனேஜர் ஒருவர், ஒரு இளைஞனை ஓரின உடல் உறவுக்காக தொல்லைக் கொடுத்தார். வற்புறுத்திய மேனேஜரின் தொல்லை தாங்காமல் இந்த இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான்.

மேனேஜரின் ஓரின வேட்கை அந்த இளைஞனை மிருகமாக மாற்றிவிட்டது.

*ஜனவரி 24, 1994.

திருப்பதி.

ஐந்தாவது தேசிய அளவில் மகளிர் மாநாடு நடைப்பெறவிருந்தது. பெண் இயக்கங்கள், பெண் முன்னேற்ற அமைப்புகள், பெண்கள் மறுவாழ்வு என்று பல அமைப்புகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை சில புது அமைப்பினரும் வந்திருந்தனர்.

இதற்கு முன் நடந்த நான்கு மாநாட்டில் இல்லாத ஒரு அஜென்டா இந்த மாநாட்டில் சேர்த்திருந்தார்கள். அந்த அஜென்டாவை பார்த்தும் ஒரு சிலர் முனு முனுத்தனர். இன்னும் சிலர் அதை பற்றி பேச எதிர்த்தனர். முதல் முறையாக மகளிர் மாநாட்டில் 'லெஸ்பியனை' பற்றி அஜென்டாவாக சேர்த்திருந்தனர். லெஸ்பியன் பெண்கள் பொருத்தமட்டில் இது தான் முதல் மாநாடு. முதல் முறையாக லெஸ்பியன் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்படிருந்தது.

ஒரு சில எதிர்ப்புகள் மீறி லெஸ்பியன் பற்றி கருத்துகள் அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. எதிர்த்தவர்கள் கூறிய கருத்து " ஓரின சேர்க்கையாளர்கள் மிருகங்கள்" என்றது தான்.

ஓரின சேர்கையாளர்கள் உடல் சுகத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர்கள், மிருகங்கள் போல் நடந்துக் கொள்பவர்கள், கொலை கூட செய்வார்கள் என்று பல கருத்து நிலவி வருகிறது.

‘செக்ஸ்’ விஷயத்தில் ஓரின சேர்கையாளர்கள் மட்டும் தான் மிருகங்களாக நடந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு முதலில் பதிலளித்தால், மேல் சொன்ன கருத்துக்கு பதில் வந்துவிடும்.

மனைவியின் மரணத்திற்கு பிறகு பாலியல் உறவுக்காக தன் சொந்த மகளை ஒரு பாதள அறையில் அடைத்து இருபது வருடங்களாக ஒருவன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்ற செய்தியை சமிபத்தில் படித்திருப்பீர்கள். சொந்த மகளை புணர நினைத்தவன் மனிதன் என்பதா அல்லது மிருகம் என்பதா ?

நொய்டாவில் சின்ன சிறுமிகளை வன்புணர்ச்சிக்காக கொலை செய்தவனை இயற்கைக்கு ஒப்பான உறவில் ஈடுப்பட்டவன் என்று யாராலும் சொல்லமுடியாமா ?

இன்னும் மலையடிவாரத்தில் பழங்குடி மக்களின் பெண்கள் அதிகார வர்கத்தினரால் தொல்லைகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை மனித உணர்ச்சிகள் என்று சொல்லி நம்மால் நிராகரிக்க முடியுமா ? இல்லை நியாயம் தான் படுத்த முடியுமா ?

அளவுக்கு மீறிய செக்ஸ் ஆசை ஒரு மனிதனை மிருகமாக மாற்றிவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மற்ற உறவில் ஜோடி கிடைப்பது போல் எதிர்பால் உறவுகளை விட சுயபால் உறவுக்கு ஜோடி கிடைப்பது சிக்கல் மட்டுமல்ல… இது பகிரங்கமாகத் தேடலில் ஈடுபட முடியாத ஒன்று. அதனால் மற்ற உறவு தேடலில் விட இதில் வன்முறை கூடுதலாக உள்ளது.

இயற்கையான உறவு என்று சொல்லப்படும் ஆண் - பெண் உறவாகட்டும், ஓரின சேர்கையாகட்டும்... செக்ஸ் உணர்வுக்கான உடல் கிடைக்காத போது கிடைத்த உடலில் மீது வன்முறை அதிகமாக இருப்பதை தான் தினமும் செய்திதாளில் பார்க்கிறோம்.

மேல் சொன்ன எல்லா வன்முறைகளும் 'செக்ஸ்' வன்முறையாகவே பார்க்க வேண்டிய ஒன்று. எந்த வன்முறையையும் நம்மால் எப்படி நியாயப்படுத்த முடியாதோ அதே போல் ஓரின சேர்க்கையாளர்கள் இப்படி தான் என்று முத்திரை குத்தவும் முடியாது.

“சுயபால் விழைவு இயற்கைக்கு ஒவ்வாத கொடூரச் செயல். அதனால் தான் மிருகத்தனமான நிலை” என்று சொல்லுபவர்களுக்கு இன்னும் சில உதாரணங்கள்.

விலங்கு, பறவைகளில் தாமே இரு பாலுமாக இருக்கும் வகைகள் இயற்கையிலேயே உண்டு. ஒரு ஜோடி ஆண் பறவைகள் தம்பதியாகக் கூடு கட்டி வாழும் போது முட்டைகளுக்குப் பதிலாக அதே போன்ற தோற்றமுடைய கற்களைச் சேகரித்து வந்து தங்கள் கூட்டில் வைக்கும் பழக்கத்தில் உள்ளன. இவை சில சமயம் வேறு பறவையின் அசல் முட்டையைத் திருடி வந்து தம் கூட்டில் வைத்துப் பொரித்து வளர்ப்பதும் உண்டு !

சுமார் 1500 வகை உயிரினங்களில் சுயபால் விழைவுச் செயல்பாடுகளுக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காட்டெருமை, யானை, சிங்கம், மான், பூனை, சிறுத்தை, நாய், பசு, முயல், ஓட்டைச்சிவிஅங்கி, ஆடு, குரங்கு, கரடி, குதிரை, நரி, கழுகு என்று இன்னும் பல இனங்கள் இந்த பட்டியலில் உண்டு.

( நன்றி : ஞாநியின் 'அறிந்ததும் அறியாமலும்' )

‘சுயபால் விழைவு’ என்பது இயற்கையில் இல்லாத ஒன்று என்ற அணுகுமுறையில் இருந்து மிருக தனமான உணர்வு என்று நிலையில் தான் இன்று பார்க்கிறார்கள். மிருக தனமான உணர்வு என்ற நிலையில் இருந்து மாறினால் தான், மிருகங்களாக பார்க்கும் ஓரினசேர்கையாளர்கள் மனிதர்களாக நடத்த பட முடியும்.

செக்ஸ்காக கொலை செய்பவர்கள், வன்முறையில் இறங்குபவர்கள், கொடூரமாக நடந்துக் கொள்பவர்கள் போன்றவர்களை மிருகங்கள் என்று சொல்லலாம். ஆனால், ஓரினசேர்கையாளர்கள் மிருகங்கள் என்ற பொதுவான பார்ப்பது எந்த வகையிலும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

இதில், ஓரின சேர்க்கையாளர்களால் நடத்தப்படும் செக்ஸ் வன்முறைக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. எதிர்பாலில் செக்ஸ் வன்முறை இருப்பது போல் சுயபாலிலும் உள்ளது என்பதை தான் இந்த கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

6 comments:

RAJ said...

CLICK AND READ

1.ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்ய??

2.கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ?

...

Rajakamal said...

எத்தனை கூட்டங்கள் போட்டாலும் எத்தனை மாநாடு நடத்தினாலும் எத்தனை அறிவு ஜீவிகள்? வக்காலத்து வாங்கினாலும் எக்கலத்திற்கும் ஏற்றுக் கொள்ளமுடியாத, மனித இனத்திற்கும், இயற்கைக்கும் எதிரானது. ஒரினமே போதும் என்றால் என்றால் அனைத்து ஜிவராசிகளிலும் மாற்று இனம் எதற்கு அறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா?

sumus said...

நல்ல பகிர்வு... நன்றி...

கோவி.கண்ணன் said...

இது போன்ற இடுகைகளை சத்தமில்லாமல் படித்துச் செல்லுவார்கள் யாரும் கருத்துக் கூற மாட்டார்கள், காரணம் இதன் மீது ஆர்வம் காட்டுவதாக பிறர் நினைக்க வைத்துவிடும் மற்றும் இத்தகைய நாட்டம் கொண்டவரோ என்று நினைக்க வைத்துவிடும் என்கிற மன அச்சமே.

//மனித இனத்திற்கும், இயற்கைக்கும் எதிரானது. //

கருத்தடைகள் கூட மனித இனத்திற்கு எதிரானவை, இயற்கைக்கு எதிரானவை என்றே மதவாதிகள் சொல்லி வருகின்றனர். கைப்பழக்கம் இயற்கைக்கு எதிரானது என்றும் சொல்லிவருகிறார்கள். இவற்றையெல்லாம் இயற்கை, இயற்கை இல்லை என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது, சமூக அமைப்புகள் தான் இயற்கை, இயற்கை அல்ல என்பதை வரையறுக்கின்றன. அதே சமூகம் நீங்கள் சொல்வது போன்ற இயற்கையான ஆண் பெண் ஈர்ப்புகளை, எதைக் காரணம் காட்டி இந்த மதத்து / சாதி இளைஞனும் அந்த மதத்து / சாதி இளைஞையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கின்றன என்பதை விளக்கூவீர்களா ? ஆக இவை இயற்கை/செயற்கையெல்லாம் வெறும் பெரும்பான்மை சமூகப் பார்வை தான். அவை பொதுப் பார்வையும் அல்ல

//ஒரினமே போதும் என்றால் என்றால் அனைத்து ஜிவராசிகளிலும் மாற்று இனம் எதற்கு அறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா?// இந்த கவலை உள்ள சமூகமும் அரசும் ஆண்கைதிகளை ஒன்றாக சிறையில் அடைப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

இராணுவம், கப்பல், சிறை போன்று ஆண்கள் அல்லது பெண்கள் நீண்ட நாள்கள் ஒன்றாக வேலை பார்க்கும் இடங்களில் அவர்களுக்கான பாலியல் தீர்வு என்று எதேனும் இருக்கிறதா ? அவர்களெல்லாம் உணர்வுகளை கட்டுப்படுத்தி கடமையைத்தான் ஆற்ற வேண்டும், தேவையெனில் கொஞ்சோண்டு செயற்கையான சுய இன்பம் அனுபவிப்பதில் தவறில்லை என்று சலுகை கொடுப்பீர்களா ?

*****

என்னைக் கேட்டால் ஓரின நாட்டமுள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டால் அவர்களுக்கு விருப்பமானவர்களிடம், அவர்களை அனுமதிப்பவர்களிடம் மட்டுமே உறவு வைத்துக் கொள்வர், தேவையற்ற சமூகத் தூற்றல்களினால் மாட்டிக் கொள்ளாமல் தப்புச் செய்யலாம் என்பதான சமூகக் பாலியல் குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள், ஆனாலும் இத்தகைய சமூக பாலியல் குற்றம் செய்பவர்கள் ஓரின நாட்டமுள்ளவர்கள் மட்டுமே இல்லை.

sriram brabu said...

மிக நன்றாக விளக்கினீர்கள் ஐயா,நானும் ஓரின சேர்க்கையாளன் தான்,இது எங்கள் தளம் http://anbaithedi.activeboard.com/

பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க

sriram brabu said...

மிக நன்றாக விளக்கினீர்கள் ஐயா,நானும் ஓரின சேர்க்கையாளன் தான்,இது எங்கள் தளம் http://anbaithedi.activeboard.com/

பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க

LinkWithin

Related Posts with Thumbnails