வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Proverb. Show all posts
Showing posts with label Proverb. Show all posts

Monday, March 7, 2011

காதல் பொன்மொழிகள் !

காதலுக்காகத் திருமணம் செய்து கொள்வது சவாலானது.
கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்கு மட்டுமே முடிகிறது.

- ஜோஷ் பில்லிங்ஸ்

**

முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு எத்தனை பேருக்கு வாய்க்கிறது ?

- அ.வெண்ணிலா

**

தாய் அவளுடைய குழந்தை என்றழைக்கப்படுவதன் பெற்றோர் அல்ல.
மாறாக வளர்ச்சியடைந்த புதிதாக விதைக்கப்பட்ட விதையின் செவிலியாகும்.
ஏறுபவன் எவனோ அவனே பெற்றோர் ஆவான்.
- புகழ்பெற்ற அப்போலஸ் தீர்ப்பு


**

ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான்.
பெண்ணோ ஒரு ஆண்ணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
- ஆஸ்கர் ஓயில்டு


நன்றி :
ஆதலால் காதல் செய்வீர், ரூ.10 (பக்:32),
பாரதி புத்தகலாயம்.

Friday, March 4, 2011

ப(பி)டித்த தத்துவங்கள் !

சதுரங்கத்தில் எல்லா காய்களும் முன்னே கொண்டு செல்பவன் வெற்று பெறுவதில்லை. சில காய்களை பின்னுக்கு தள்ளினால் தான் முன்னேறி வெற்றி கிடைக்கும்.

**

தனிமையில் இருக்கும் போது
சிந்தனையில் கவனமாக இரு !
கூட்டத்தில் இருக்கும் போது
வார்த்தையில் கவனமாக இரு !

**

அன்பை வெளிப்படுத்தும் முன் யோசிக்காதே
கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறக்காதே !
-விவேகானந்தர்

**

உனக்கு விதிமுறைகளை பிடிக்கவில்லை என்றால்
அதை பின்பற்று, சிகரத்தை தொடு
விதிமுறைகளை மாற்றியமை !

**

சூரியன் போல் பிரகாசமாக ஓளிர வேண்டும் என்றால்
சூரியன் போல் எரிவதற்கு தயாராக இருக்க வேண்டும்
- அப்தூல் கலாம்

**

என் முதுக்கு பின் பேசுபவர்களைப் பற்றி
நான் கவலைப்படுவதில்லை
காரணம்,
அவர்களை விட இரண்டு அடி
நான் முன் நிற்கிறேன் !

**

நீ வேகமாக நடக்க வேண்டும் என்றால்
தனியாக நட !
நெடுந்தூரம் நடக்க வேண்டும் என்றால்
மற்றவர்களோடு சேர்ந்து நட !!

**

LinkWithin

Related Posts with Thumbnails