வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, October 14, 2014

மெட்ராஸ் ( Madras )

நானும் வடசென்னை பகுதியை சேர்ந்தவன் என்பதால் இந்த படத்தை பற்றி சொல்லியாக வேண்டும். தினமும் இந்த பாதை வழியாக கடந்து செல்கிறேன்.

பெண்களின் சண்டை, எருமை மாடுகள் ரோட்டில் கடந்து செல்வது, குப்பை நாற்றம், மைதானத்தில் கிரிக்கெட் என்று பல வருடங்களாக பார்த்து பழக்கப்பட்ட விஷயம். திரைப்படமாக பார்க்கும் போது அதைப் பாதிக்கூட எடுக்கவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது. (எந்த படத்திலும் எந்த விஷயமும் முழுமையாக காட்ட முடியாது என்பது வேறு விஷயம்) ஆனால், இதுவரை இந்த பாதிக்கூட யாரும் எடுக்காமல் இருக்கும் போது இயக்குனர் ரஞ்சித் அதை செய்திருக்கிறார் என்பதை பாராட்டியாக வேண்டும்.

அரசியல் லாபத்திற்காக பழகியவனை கொலை செய்யும் புளித்துப்போன பழைய கதை தான். என் உயிர் தோழன் தொடங்கி சுப்பிரமணியப்புரம் வரை பார்த்தது தான். புதிய கதைக்களனும், அதற்கு துணை நிற்கும் துணை பாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது.கார்த்தி தனது பாத்திரத்திற்கு பாதி தான் செய்திருக்கிறார். சகுனி, அலேக்ஸ் பாண்டியன் பாதிப்பில் இருந்து அவர் இன்னும் மீண்டு வரவில்லை என்று தான் தெரிகிறது. (கடைசி வரைக்கும் கார்த்தி என்ன வேலை செய்கிறார் என்று சொல்லவே இல்லை)

நாயகனிடம் இவ்வளவு பேசும் நாயகி, மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் அமைதியான பெண்ணாக காட்டிருப்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நாயகி உண்மையிலேயே அடக்கமானவரா அல்லது அராத்தா என்பதில் குழப்பம். படத்திற்கு நாயகி தேவையில்லை என்பதால் இவரின் குழப்பமான பாத்திரப்படைப்பு பெரிதாக பாதிக்கவில்லை. ( பிற்ப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வியல் எடுக்கும் போது கூட வட இந்தியப் பெண் தான் வேண்டுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.)

நாயகன், நாயகி தவிர்த்து மற்ற பாத்திரங்கள் படு இயல்பு. குறிப்பாக அன்பு - மேரி காதல், ஜானி பேசிக் கொண்டே இருப்பது, கார்த்தியின் அம்மா பெண் பார்ப்பது, ரௌடிகள், கவுன்சிலர் என்று காஸ்ட்டிங் படு கச்சிதம். உண்மையில் படத்தின் பலமே இந்த துணை பாத்திரங்கள் தான்.

காதல் காட்சிகள், நாயகன், நாயகி காஸ்ட்டிங் தவிர்த்து பார்த்தால் RGVயின் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டிருக்கும்.

இயக்குனர் நாயகன், தயாரிப்பாளருக்கு வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது புரிக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் தனது இரண்டாவது, மூன்றாவது படத்தை தான் முழு சுதந்திரத்தோடு இயக்க முடியும் என்ற விதியை யாரால் மாற்ற முடியும். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக ரஞ்சித் வருவார் என்பதை தான் ‘மெட்ராஸ்’ படம் காட்டுகிறது.

அதே சமயம் அனைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு படம் இல்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails