வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, October 21, 2014

இலக்கியம் மாறுமா ? - அ.ஞா.பேரறிவாளன்

தூக்குத் தண்டைக்கும், அரசியலுக்கும் நடுவில் மாட்டி தவிக்கும் பேரறிவாளன் எழுதிய புத்தகம் “இலக்கியம் மாறுமா ?”

சங்கக் காலத்தில் நடந்த சிலப்பதிகாரத்தில் நடந்த அநீதியும், தற்காலத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் அநீதியையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.தவறு செய்யாத கோவலன் மீது திருட்டு பழி சுமத்தி கொல்லப்படுவதையும், அதேப் போல் தற்காலத்தில் 'அழகர்சாமி' என்ற அப்பாவி மீது திருட்டு பழி சுமத்தி கோர்ட்டில் விசாரணை நடத்தப்படுவதையும் சரியான ஒப்பிட்டாக இருக்கிறது.

சிறுகதை வடிவில் இல்லாமல் நாடக வடிவத்தில் எழுதியிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் மேடை நாடகமாக போட விரும்புபவர்கள் இந்த நாடகத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

கடைசியாக முடிக்கும் போது…

”ஆயிரம் ஆயிரம் 
  ஆண்டுகளின் பின்னும் 
  அநீதிகள் 
  தொடரவே செய்கின்றன. 
  ஆயினும் 
  அநீதிக்கான தீர்வுகள் மட்டும் 
  திசையறியாமல் திண்டாடுகிறது” 

- என்று சொல்லி முடிக்கிறார்.

பேரறிவாளன் - சிறை கம்மிகளுக்கு பின்னால் ஒரு எழுத்தாளனாக இருக்கிறார். அவரை தான் விடுதலை செய்ய முடியவில்லை. அவரது எழுத்துக்களையாவது விடுதலை செய்து, மக்களிடம் கொண்டு செல்வோம்.

**
இலக்கியம் மாறுமா ?
- அ.ஞா.பேரறிவாளன்
பக்கங்கள் : 60 விலை. ரூ.50

வெளியீடு :
திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்
11, கே.கே. தங்கவேல் தெரு,
பெரியார் நகர்,
சோலையார் பேட்டை – 635851
அலைப்பேசி : 94430 58565

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails