வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, August 4, 2014

மூடப்படும் புத்தகக் கடைகள் !!

2005ல் டைடல் பார்க்கில் இருக்கும் Calsoft நிறுவனத்தில் வேலை செய்யும் போது வாரத்திற்கு மூன்று, நான்கு புத்தகங்கள் படிப்பேன். தினமும் இரண்டு மணி நேர ரயில் பயணம், பிரம்மச்சாரி, பொருளாதார நெருக்கடியற்ற வாழ்க்கை… புத்தகங்களோடு காதல் இனிமையாக இருந்தது.

பெரம்பூர் கிளை நூலகத்தில் இருக்கும் பிடித்தப் புத்தகங்களை படித்துவிடுவேன். ஒரு வாரத்தில் புத்தகங்கள் ரிடிட்டனாகி, அடுத்த இரண்டு புத்தகங்களை எடுத்து விடுவேன். புது புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால் மட்டும் அலுவலக நேரம் ஒத்துவரமால் இருந்தது. 6 நாள் வேலை. ஞாயிறு மதியம் வரை தூக்கம். மாலை நண்பர்களை யாராவது பார்ப்பது அல்லது மொக்கை தமிழ் படங்களை ரசிப்பது என்று இருப்பேன்.டைடல் புட் கோர்ட் அருகே ஒரு ஹிக்கின் பாதம்ஸ் ஷோ ரூம் இருந்தது. பெரும்பாலும் ஆங்கில புத்தகங்கள் இருந்ததால் நான் அங்கு போகாமல் இருந்தேன். ஆனால், என் கண் ஷோ ரூம் பார்க்காமல் செல்லாது. ஒரு நாள் சாண்டில்யன், சுஜாதா, சுகி.சிவம் நூல்கள் வெளியே தெரியும் படி வைத்திருந்தார்கள். அப்போது தான் நான் முதன் முதலில் அங்கு புத்தகம் வாங்கினேன்.

அன்றைய ரசனை நான் சுகி.சிவம், சோ, ஓஷோ, வைரமுத்து போன்றவர்களின் புத்தகங்களை வாங்குவேன். குறைவான தமிழ் புத்தகங்கள் இருந்தாலும், மாதம் என்னால் இரண்டு பில் டைடல் ஹிக்கின் பாதம்ஸ்க்கு வரும். அங்கு வேலை செய்யும் லால் எனக்கு நெருக்கமானார். எனக்காகவே சில நூல்கள் வரவழைத்தார். அங்கு தான் இயக்குனர் Azhagappan Rasi எனக்கு அறிமுகமானார்.

2006ல் திருமணத்திற்கு பிறகு இரண்டு பில், ஒரு பில்லாக மாறியது. 2007ல் வேறு நிறுவனத்திற்கு வேலை மாற்றம் பெற்றேன். என் அலுவலக நண்பர்கள் ரூ.1000 ஹிக்கின் பாதம்ஸ்க்கு புத்தகம் வாங்க பரிசாகக் கொடுத்தார்கள். கடைசியாக அங்கு சில புத்தகங்களை வாங்கி டைடல் ஹிக்கின் பாதம்ஸ்யை விட்டு விடைப் பெற்றேன்.

அங்கு கொடுக்கும் வாடகைக்கு பாதிக்கூட புத்தகங்கள் விற்பனையாகிறாதா என்று தெரியவில்லை. ஒரு விளம்பரத்திற்காக அங்கு கடை வைத்திருப்பதாக சொன்னார்கள். ஒரு புத்தகக்கடை வேலை செய்யும் ஐ.டி. நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் லாபமாக இயங்கினால் சந்தோஷம் தான். ஆனால், அது நஷ்டத்தை ஏற்படுத்துவிடக் கூடாது !!!

ஒரு புத்தகக் கடைக்கு பெரிய முதலீடு அதன் வாடகையும், விளம்பரத்திற்கான செலவு மட்டும் தான். புத்தக ரேக், கம்ப்யூட்டர், இத்தாயி பொருட்கள் எல்லாம் நாட்களானாலும் எதோ மதிப்பு இருக்கிறது. ஆனால், விளம்பரத்திற்கு செய்யும் ஆடம்பர செலவு விற்பனையில் வரும் லாபத்தின் மூலமே சரி செய்ய முடியும். எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்றால், விளம்பரத்திற்கு செய்த செலவு முழுவதும் நஷ்டம் தான். மீண்டும் அந்த பணத்தை எடுப்பது என்பது சிரமம்.

லெண்ட்மார்க் கடைகள் ஒவ்வொன்றாக மூடி வருவதை பார்க்கும் போது எனது பயம் ஹிக்கின் பாத்தம்ஸ் போன்ற புத்தகக்கடைகளுக்கு இந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்பது தான். அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் வேலையால் அமெரிக்கன் புக் ஹவுஸ் இடம் மாறியிருக்கிறது. இன்னும் புத்தகக் கடைகள் விற்பனை குறைந்திருக்கிறது. அரண்மனைப் போல் இருக்கும் ஹிக்கின் பாத்தம்ஸ் இன்னும் பல தலைமுறை வாசகர்களை உருவாக்க வேண்டும். சில ஆடம்பர செலவுகளை அவர்கள் குறைக்க வேண்டும்.

சென்னையில் லெண்ட்மார்க் தோல்விக்கான காரணங்களை அவர்கள் வெளியிட்டால் ஹிக்கின் பாத்தம்ஸ் மட்டுமில்லாமல், இன்னும் மற்ற புத்தகக் கடைகளுக்கு படிப்பினையாக இருக்கும். புத்தகக் கடை தொடர்ந்து இயங்க உதவியாக இருக்கும்.

மூடு விழா லெண்ட்மார்க் மட்டுமே கடைசியாக இருக்க வேண்டும். புத்தகக் கடைகளுக்கு இருக்கக் கூடாது என்பது தான் எனது ஆசை.

”எனக்கு சிறந்த நண்பன் புத்தகம்.
 எனக்கு பிடித்த கோயில் புத்தகக் கடை.”

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails