வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, July 8, 2013

கவிதை : அப்பா

மகனின்
முதல் கதாநாயகன்
முதல் வில்லன்
அப்பா !

எந்த பாத்திரம்
ஏற்க போகிறார் என்பதில்
மகன் எழுதும்
திரைக்கதையில் தான் உள்ளது !

*

மகன் விழும் போது எழுவோம் என்று
நம்பிய முதல் மனிதர்
அப்பா !

அன்பை உள்ளே வைத்துக் கொண்டு
எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு
அப்பா !

‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில்
கொடுத்த செயற்கை வலியால்
‘முடியும்’ என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா !

*

கொண்டுவந்தால் தான் தந்தை என்று
யார் பொய் சொன்னது
தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர்
தந்தை உண்மை சொல்கிறது !

*

மகனிடம் தோற்பதை
   லட்சியமாய் கொண்டவர் !
மகன் தோற்றாலும்
   வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில
   மகன் வேகத்துக்கு நடப்பவர் !
மகன் ஒடுவதை
   ஒதுங்கி நின்று ரசிப்பவர் !

முதுமையில் மகன் கரம் பிடித்து
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா !

*

பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அம்மாவை பாட்டியாக பார்க்கலாம்
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
   அப்பாவை குழந்தையாக தெரிவார் !

அம்மா – அன்பை அன்பாக காட்டுவார்
அப்பா – அன்பை கண்டிப்பாக காட்டுவார்

*
"மாறாத அன்பு
அம்மாவின் அன்பு" என்று
திருமணமாகதவன் சொன்னது !

"மாறாத அன்பு
அப்பாவின் அன்பு" என்று
திருமணமானவன் சொன்னது !

*

அம்மாவின் அன்பை விட
சிறந்த அன்பு உலகில்
இருக்கிறதென்றால்
அது அப்பாவின் அன்பு !


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை...

தந்தையை சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

தனக்கென வாழாமல் இருப்பதில் அம்மா ஒரு படி முன்னே...!

ராஜி said...

அப்பா பற்றிய கவிதை அருமை

Unknown said...

super kavithai.........

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கவிதையில் அப்பாவின் அன்பை அழகுற எடுத்துக் கூறினீர்கள். நன்று.

Unknown said...

I miss u dad

Unknown said...

hats off

great thinking

Unknown said...

Love u அப்பா

அருள்மொழிவர்மன் said...

அருமையான வரிகள்!!!

அம்மா – அன்பை அன்பாக காட்டுவார்
அப்பா – அன்பை கண்டிப்பாக காட்டுவார்.

... said...

அம்மாவும் குழந்தைகளும் வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்பவர் அப்பா

... said...

அம்மாவும் குழந்தைகளும் வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்பவர் அப்பா

LinkWithin

Related Posts with Thumbnails