நீண்ட நாட்கள் ஆனது இப்படி ஒரு ஆங்கிலப்படத்திற்கு நான் சிரித்து ரசித்து பார்த்தது. சமக்கால சர்வதேச அரசியலை இந்த அளவுக்கு பகடி செய்யும் அளவிற்கு படம் வந்திருக்காமா என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க நல்ல டைம் பாஸ் படம் தான்.
சார்லி சாப்லின் ‘The Great Dictator’(1940) படத்தின் கதை தான். வடையா நாட்டின் சர்வாதிகாரியான அலாதின் வெளிநாட்டுக்கு எண்ணெய் விற்க மறுக்கிறான். ஆனால், அவனின் ஆலோசகர் தமீர் அலாதின்னை கொல்ல முயல, அலாதின் நகல் கொல்லப்படுகிறான். அலாதினின் சர்வாதிகாரத்தை எதிர்த்து பல நாடுகள் கண்ட தெரிவித்தும், அவன் கண்டுக் கொள்ளவில்லை. ஐ.நாவில் தலையீட்டால் அங்கு விளக்கம் அளிக்க அலாதின் அழைக்கப்படுகிறான்.
அலாதின் அமெரிக்காவில் கால் பதிய அவனுக்கு எதிர்ப்பலைகள் பெறுகிறது. அங்கு விடுதியில் தங்கியிருக்கும் போது ஒரு உளவாளியால் அலாதின் கடத்தப்படுகிறான். அவனிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், உளவாளியை கொன்று தனது தாடியை இழக்கிறான். தாடி இல்லாததால் அவன் சாமான்ய மனிதனாக அமெரிக்காவில் உளாவுகிறான். இதைப் பயன்ப்படுத்திக் கொண்டு தமீர் அலாதின் நகலை வைத்து, வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வருவதாக ஐ.நா அமைப்பு முன் சொல்கிறான். ஐ.நா உறுப்பினர் கைதட்டி அவனது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த சதி திட்டத்திற்கு அலாதின் ஆலோசகர் தமீர் இருக்கிறான். வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வந்து சீனாவுக்கு எண்ணெய் வளத்தை விற்க சதி செய்திருந்தான்.
பெரிய சர்வாதிகாரியான அலாதின் சராசரி காவலர்கள் தாக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறான். அவனுக்கு சொயே என்ற பெண் உதவுகிறாள். இதற்கிடையில், அலாதின் கொல்லச் சொன்ன விஞ்ஞானியான நாடல் உயிருடன் இருப்பதைப் பார்க்கிறான். அதுமட்டுமில்லாமல், அவன் கொல்லச் சொன்ன அனைவரும் அமெரிக்காவில் லிட்டில் வடையாவில் உயிருடன் இருப்பதை பார்க்கிறான். நாடல் பின் தொடர்ந்து லிட்டில் வடையாவுக்கு செல்ல, அவனை அடையாளம் கண்டுக் கொள்கிறான் நாடல். அங்கு அலாதினுக்கு என்ன ஆனது ? அவன் எப்படி மீண்டும் தன் சர்வாதிகாரத்தைப் பெற்றானா ? வடையாவில் மக்கள் ஆட்சி வந்து, தமீர் சதி வென்றதா ? என்று வயிறு வலிக்க சிரித்து பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
சார்லி சாப்லின் “The Great Dictator” படத்தில் எப்படி ஹிட்லரை கிண்டல் செய்தாரோ, அதேப் போல் இதில் இஸ்லாமிய நாடுகளையும், அதன் தீவிரவாதத்தையும், கொஞ்சம் அமெரிக்காவையும் நையாண்டி செய்திருக்கின்றனர்.
அலாதின் அமெரிக்காவில் வளம் வரும் போது, “அமெரிக்கா எயிட்ஸின் பிறப்பிடம்”, ஹோட்டல் அறையில், “ ஒரு மணி நேர இன்டர்நெட்டுக்கு 20$ வாங்குபவர்கள், என்னை சர்வதேச தீவிரவாதி என்கிறார்களா !!!” என்று அதிர்வதில் அமெரிக்காவை நக்கல் செய்திருக்கிறார்.
வடையாவில் மக்கள் ஆட்சி வரும் என்று ‘நகல்’ அலாதின் சொல்ல, சீனா அதிபர் “சீனாக் கூட மக்கள் ஆட்சி நாடு தான்” என்று சொல்லி சிரிப்பது சீனாவுக்கான வசனம். அதுவும், சீனா அதிபரின் மனைவி ஆங்கில அறிவு இல்லாதவர் என்று காட்டுவதும், அதை அதிபரே கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் சீனாவின் உளவுத்துறை பகையை சம்பாதித்திருக்கிறார்கள்.
அலாதினின் ஆங்கில புலமை, குறிப்பாக லிட்டில் வடையாவில் தன் பெயரை மறைத்து வேறு பெயர்கள் சொல்லும் இடம், சொயே பெண்ணின் கடையில் வேலை செய்வது, கூலிப்படை பெண்ணுடன் சண்டை, இறுதிக் காட்சியில் இரண்டு கட்டிடத்து நடுவில் தொங்குவது… என்று சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் காட்சிகள்.
மறைந்த லிப்யாவின் சர்வாதிகாரியான கடாபியை நினைவுப்படுத்தும் விதமாக அலாதின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிக்காட்சியில், சர்வாதிகாரத்தை விமர்சிப்பவர்களுக்கு மக்கள் ஆட்சி எதிராக பேசும் அலாதின் வசனங்கள் பல உண்மைகள் சொல்கிறாது. நகைச்சுவை படமாக இருந்தாலும், சொல்ல வந்த செய்தி ‘ஏ’ ரக நகைச்சுவையை கொஞ்சம் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் பார்த்திருக்கலாம்.
சார்லி சாப்லின் ‘The Great Dictator’(1940) படத்தின் கதை தான். வடையா நாட்டின் சர்வாதிகாரியான அலாதின் வெளிநாட்டுக்கு எண்ணெய் விற்க மறுக்கிறான். ஆனால், அவனின் ஆலோசகர் தமீர் அலாதின்னை கொல்ல முயல, அலாதின் நகல் கொல்லப்படுகிறான். அலாதினின் சர்வாதிகாரத்தை எதிர்த்து பல நாடுகள் கண்ட தெரிவித்தும், அவன் கண்டுக் கொள்ளவில்லை. ஐ.நாவில் தலையீட்டால் அங்கு விளக்கம் அளிக்க அலாதின் அழைக்கப்படுகிறான்.
அலாதின் அமெரிக்காவில் கால் பதிய அவனுக்கு எதிர்ப்பலைகள் பெறுகிறது. அங்கு விடுதியில் தங்கியிருக்கும் போது ஒரு உளவாளியால் அலாதின் கடத்தப்படுகிறான். அவனிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், உளவாளியை கொன்று தனது தாடியை இழக்கிறான். தாடி இல்லாததால் அவன் சாமான்ய மனிதனாக அமெரிக்காவில் உளாவுகிறான். இதைப் பயன்ப்படுத்திக் கொண்டு தமீர் அலாதின் நகலை வைத்து, வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வருவதாக ஐ.நா அமைப்பு முன் சொல்கிறான். ஐ.நா உறுப்பினர் கைதட்டி அவனது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த சதி திட்டத்திற்கு அலாதின் ஆலோசகர் தமீர் இருக்கிறான். வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வந்து சீனாவுக்கு எண்ணெய் வளத்தை விற்க சதி செய்திருந்தான்.
பெரிய சர்வாதிகாரியான அலாதின் சராசரி காவலர்கள் தாக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறான். அவனுக்கு சொயே என்ற பெண் உதவுகிறாள். இதற்கிடையில், அலாதின் கொல்லச் சொன்ன விஞ்ஞானியான நாடல் உயிருடன் இருப்பதைப் பார்க்கிறான். அதுமட்டுமில்லாமல், அவன் கொல்லச் சொன்ன அனைவரும் அமெரிக்காவில் லிட்டில் வடையாவில் உயிருடன் இருப்பதை பார்க்கிறான். நாடல் பின் தொடர்ந்து லிட்டில் வடையாவுக்கு செல்ல, அவனை அடையாளம் கண்டுக் கொள்கிறான் நாடல். அங்கு அலாதினுக்கு என்ன ஆனது ? அவன் எப்படி மீண்டும் தன் சர்வாதிகாரத்தைப் பெற்றானா ? வடையாவில் மக்கள் ஆட்சி வந்து, தமீர் சதி வென்றதா ? என்று வயிறு வலிக்க சிரித்து பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
சார்லி சாப்லின் “The Great Dictator” படத்தில் எப்படி ஹிட்லரை கிண்டல் செய்தாரோ, அதேப் போல் இதில் இஸ்லாமிய நாடுகளையும், அதன் தீவிரவாதத்தையும், கொஞ்சம் அமெரிக்காவையும் நையாண்டி செய்திருக்கின்றனர்.
அலாதின் அமெரிக்காவில் வளம் வரும் போது, “அமெரிக்கா எயிட்ஸின் பிறப்பிடம்”, ஹோட்டல் அறையில், “ ஒரு மணி நேர இன்டர்நெட்டுக்கு 20$ வாங்குபவர்கள், என்னை சர்வதேச தீவிரவாதி என்கிறார்களா !!!” என்று அதிர்வதில் அமெரிக்காவை நக்கல் செய்திருக்கிறார்.
வடையாவில் மக்கள் ஆட்சி வரும் என்று ‘நகல்’ அலாதின் சொல்ல, சீனா அதிபர் “சீனாக் கூட மக்கள் ஆட்சி நாடு தான்” என்று சொல்லி சிரிப்பது சீனாவுக்கான வசனம். அதுவும், சீனா அதிபரின் மனைவி ஆங்கில அறிவு இல்லாதவர் என்று காட்டுவதும், அதை அதிபரே கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் சீனாவின் உளவுத்துறை பகையை சம்பாதித்திருக்கிறார்கள்.
அலாதினின் ஆங்கில புலமை, குறிப்பாக லிட்டில் வடையாவில் தன் பெயரை மறைத்து வேறு பெயர்கள் சொல்லும் இடம், சொயே பெண்ணின் கடையில் வேலை செய்வது, கூலிப்படை பெண்ணுடன் சண்டை, இறுதிக் காட்சியில் இரண்டு கட்டிடத்து நடுவில் தொங்குவது… என்று சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் காட்சிகள்.
2 comments:
நல்ல விமர்சனம். ஆனாலும் சாச்சா கோஹனின் படங்களில் அவரின் ஏ-ரக ஜோக்ஸ் தான் படத்தின் ஹைலைட்ஸே. அதிலும் அந்த விமானத்தில் இவரும் விஞ்ஞானியும் பேசிக் கொள்ளும் இடம் எல்லாம் அருமையான நகைச்சுவை.
சூப்பர் படம் ! எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது
Post a Comment