வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 13, 2008

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன்

காதுவரை மீசை வளர்த்தால் வீரம் என்று நினைத்தவர்கள் மத்தியில் தன் அரை இன்ச் மீசையில் உலகை அளந்தவன். ‘ஹிட்லர்’ என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது சர்வாதிகாரமும், அவன் செய்த கொலைகளும் தான். அடிப்படையில் நல்ல ஒவியர், ஜெர்மன் நாட்டின் படை வீரன் என்று தன் வாழ்க்கையை தொடங்கினான். ஒரு உலகத்தை வியக்கும் அளவிற்கு மட்டுமல்லாமல், அச்சுருத்தும் அளவிற்கு வளர்ந்தான். இன்றும் ஹிட்லரை கெட்டவனாகத் தான் உலகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.



சரித்திர பக்கங்கள் வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடுகிறது. தோல்வி அடைந்தவர்களை மிகவும் கெட்டவனாகவும் அல்லது கோமாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். தோல்வியாளர்களின் சரித்திரத்தை யாரும் படிக்க விரும்புவதில்லை. வெற்றியாளர்கள் மீது எல்லோரும் கவனம் செலுத்துகிறார்கள். கிரிக்கெட் எடுத்துக் கொண்டாலும் ஆஸ்திரலேய அணி வெற்றி பெற்றால் அவர்கள் வெற்றி கையாண்ட விதத்தை சொல்கிறார்கள். தோல்வி அடைந்தால் அவர்கள் செய்த தவறுகளை சொல்கிறார்கள். பங்காதேஷ், கென்யா போன்ற வலுயில்லாத அணிகளை பற்றி யாரும் விமர்சனம் செய்வதில்லை. இவர்கள் வலுவான அணியிடம் வெற்றி பெற்றால், குறுட்டு அதிஷ்டம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

என்னை பொருத்த வரையில் ஹிட்லரும் ஒரு வெற்றியாளர் தான். ஒரு விடுதியின் காப்பாளர் விடுதியை கண்டிப்பாக வைத்துக் கொண்டால் அந்த காப்பாளருக்கு ஹிட்லர் என்ற புனைப் பெயர் வைப்பார்கள். ஆசிரியர் கண்டிப்பாக இருந்தாலும் அவர்களும் இதே பெயர் தான்.
வீட்டில் தந்தை சொல்வது தான் செய்ய வேண்டும். யாரும் அவரை எதிர்த்து பேசக் கூடாது என்று இருந்தால், அந்த வீட்டில் ‘ஹிட்லர் ராஜ்ஜியம்’ என்றே கேலி செய்கிறோம்.ஹிட்லரை நாம் மறைமுகமாக அங்கிகரித்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.

ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கேலிப் பேசுபவர்கள், இன்னும் ஒவ்வொரு நாட்டு ராணுவத்திலும் ஹிட்லர் முறையை தான் பயன் படுத்துகிறார்கள். ஹிட்லரின் சர்வாதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றாலும், ராணுவத்தில் சர்வாதிகார ஆட்சியை தான் பின்பற்றுகிறார்கள். போர் நடக்கும் போது வீரனின் தாய் அல்லது மனைவி இறந்தாலும் அவன் போருக்கு தான் செல்ல வேண்டும். இந்த முறைகள் எல்லாம் ‘ஹிட்லர்’ கையாண்டது.

எந்த வேலையாகயிருந்தாலும் வேலை பிடிக்கவில்லை என்றால் மிக எளிதில் வேலையை விட்டு வெளியே வந்துவிடலாம். இராணுவத்தில் மட்டும் வேலையை விட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இராணுவத்தில் வேலையாக கருவதில்லை, நாட்டின் சேவையாகவே கருதுகிறார்கள். ஒருவர் குடும்பத்துகாக போரை விட்டு சென்றால், மற்றவர்களும் தங்கள் குடும்பத்தை நினைக்க தொடங்கி விடுவார்கள். இதனால் போரில் கிடைக்கும் வெற்றியை பாதிக்கும்.

போர் சமயத்தில் ஒருவனின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து ஊருக்கு அனுப்பினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி ஊருக்கு செல்ல பார்ப்பார்கள். அதனால், இராணுவத்துறையில் மட்டும் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் நாட்டின் வெற்றியை மட்டும் மனதில் வைத்திருக்க வேண்டும். இராணுவ வீரர்கள் சற்றும் மனதளராமல் இருப்பதற்காக சர்வாதிகார முறையை கையாள்கிறார்கள். சர்வாதிகார முறை இருப்பதால் எல்லா வீரர்களும் தங்கள் மேலாளர்களின் கட்டளை கீழ்பணிவது தங்கள் கடமையாக கொண்டுள்ளனர். இராணுவ விதிப்படி மேலாளர் கட்டளை கீழ் பணியாதவர்கள் தண்டிக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜனநாயகத்தையும், மனித உணர்வுகளையும் பற்றி பேசிக் கொண்டு இருந்தால் கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இராணுவத்துறையில் மட்டும் ஹிட்லர் கையாண்ட சர்வாதிகார முறையே சரியானது.
இராணுவத்துறை தவிர வேறு எதிலும் சர்வாதிகார ஆட்சி செய்வது தவறானது. ஜனநாயகத்திற்கு எதிரானது. ஹிட்லர் தன் சர்வாதிகார ஆட்சியை இராணுவத்தில் மட்டுமே செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் மக்கள் மீது செலுத்தியதால் சரித்திர பக்கங்களில் அவரை கொடுங்கோளனாக பார்க்கிறார்கள்.

ஹிட்லர் தன் ஆட்சியில் பல நல்லதுகளை செய்துயிருக்கிறார். அவைகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகள் பின் பற்ற வேண்டிய ஒன்றாகும். ஒரு வேளை தன் ஆட்சி காலத்தில் முதல் நான்கு ஆண்டுகளில் ஹிட்லர் இறந்திருந்தால், உலகில் பெரும் தலைவர்களின் ஹிட்லர் பெருமையாக போற்ற பட்டிருப்பார். ஆனால், அதிகார பலம் தலைக்கு எறியதில் தலைக்கால் தெரியாமல் ஆடியதால் அவர் செய்த நன்மை யார் கண்ணுக்கும் தென்படுவதில்லை.

ஒசமா பில்லெடனுக்காக அமெரிக்க தாலிபன் நாட்டை எதிர்க்கும் விதமாக போர் செய்தது. இரண்டாம் உலகப்போரை ஹிரோஷிமா, நாகசாக்கியை அனுகுண்டு மூலம் அழித்தது முதல் தாலிபம் நாட்டை போர் வரை அமெரிக்கா உலகத்தின் காவலர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு லட்ச யூதர்களை கொன்ற ஹிட்லர் கேட்டவன் என்றால், ஜப்பானின் இரண்டு நகரத்தை அழித்த அமெரிக்காவை என்னவென்று சொல்வது ? தனி ஒரு மனிதனை பிடிக்க முடியாமல், அந்த நாட்டின் அப்பாவி மக்களை கொன்ற அமெரிக்காவின் போரில் எதாவது நியாயம் உண்டா ? மற்ற நாடுகளும் அமெரிக்காவிற்கு பயந்தே ஆதரிக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி அமெரிக்கா ஒன்றும் அறியாத மக்களை தான் கொன்று குவிக்கிறது. தாலிபன் வீரர்களை நிர்வானப்படுத்தி அமெரிக்க வீரர்கள் செய்ய செயலை செய்தித்தாளில் பார்த்திருக்கிறோம். இப்படி கொடுமை செய்பவர்கள், ஐ.நா.சபையில் உலக அமைதியை பற்றி இவர்கள் பேசுவதை மற்ற நாடுகள் கேட்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் மன வேதனையில் அமெரிக்காவைக் காட்டிலும் ஹிட்லரே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது.

தாலிபன் நாட்டு உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நாடு என்று உலக அரசியலில் பேசும் அளவிற்கு செய்தது அமெரிக்கா. ஒரு வேளை அமெரிக்கா நிலைமை சரியும் போது ஹிட்லரை பேசுவது போல் அமெரிக்காவையும் பேசுவார்கள் போல் தெரிகிறது.

ஹிட்லரின் இறந்த பிறகே அவன் ஆட்சியை பலர் விமர்சனம் செய்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது அவரை எதிர்த்து பேச யாருக்கும் தைரியமில்லை. அமெரிக்காவில் யார் அதிபராக வந்தால் அவர்கள் குணத்தின் நிறம் மாற போவதில்லை. அவர்களை காட்டிலும் 'ஹிட்லர்' நல்லவர் தான்.

14 comments:

Robin said...

ஏதாவது வித்தியாசமாக கருத்துக்கள் சொன்னால் பெயர் கிடைக்கும் என்று நல்லவர்களை கெட்டவர்களாகவும் கேட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் மனப்பான்மை அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.

Unknown said...

குசன் உங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு...
எழுத்தாளர் பா.ரா. ஒருமுறை இதே கருத்தை தான் எழுதி இருந்தார்...
முதலாம் உலகப்போரில் பங்கேற்று மரணத்தின் வாயிலில் இருந்த ஜெர்மனியை...மிக குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிய/விளங்குகின்ற நாடாக கட்டமைத்த பெருமை ஹிட்லரை மட்டுமே சேரும்....
அவரின் துரதிர்ஷ்டம் அல்லது ஜெர்மனியின் துரதிர்ஷ்டம் ஹிட்லர் கொடுங்கோலன் ஆகிவிட்டார் :(((

ராபின், நீங்கள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படாமல் பதிவில் என்ன சொல்லிருக்கிறார் என்று பார்த்து பின்னூட்டமிட்டால் உங்கள் உடல் நலத்திற்கு நல்லது :))))))

Robin said...

கமல்,
என்னுடைய உடல் நலத்தை பற்றிய உங்கள் அக்கறைக்கு நன்றி. பதிவை நன்றாக படித்த பின் பின்னூட்டம் இடுவதுதான் என் வழக்கம். இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். வன்முறையை, அழித்தொழித்தலை விரும்புபவர்கள் ஹிட்லர் போன்றவர்களை பாராட்டுவது இயற்கையே. ஹிட்லர் செய்த சாதனைகள் எல்லாவற்றுக்கும் காரணம் தேசபக்த வெறியும், தான்தான் உயர்ந்தவன் என்ற இறுமாப்பும், மற்ற நாடுகளையெல்லாம் அடக்கியாள வேண்டும் என்ற ஆதிக்க வெறியும்தான். இதனால் அந்த நாட்டு மக்கள் அனுபவித்த கஷ்டங்களை நாசிசம் என்றாலே ஒரு கெட்ட வார்த்தை போல பார்க்கும் அவர்களின் தற்போதைய மனநிலையிலிருந்து அறியலாம்.

Robin said...

நாட்டுப்பற்று இனப்பற்று என்பவை கூட வெறியாக மாறிவிட்டால் அதனால் அழிவே ஏற்படும் என்பதற்கு ஹிட்லர் ஒரு சரியான உதாரணம். அதை விட்டுவிட்டு ஹிட்லர் அதை செய்தார் இதை செய்தார் என்று புகழ்வது நாசிசத்தை மறைமுகமாக ஊக்கபடுத்துவது போலவே அமையும். நம் நாட்டில் ஹிட்லர், கோட்சே, வீரப்பன், மோடி போன்றவர்களை பாராட்டும் மனப்பான்மை வளர்ந்து வருவது இங்கும் நாசிசம் தழைக்க ஆரம்பித்துள்ளதையே காட்டுகிறது.

Unknown said...

ராபின்...நான் எந்த இடத்திலும் ஹிட்லர் செய்தது சரி அவர் கொன்றது சரி என்று சொல்லவில்லை...மீண்டும் ஒரு முறை நான் இட்ட பின்னூட்டத்தை பார்க்கவும்...
அவர் என்னதான் கொலைகாரனாக, கொடுங்கோலனாக இருந்தாலும் அவர் காலத்தில் தான் ஜெர்மனி மிகப்பெரிய நாடாக வளர்ந்தது என்றுதான் சொன்னேன்...இது எப்படி வன்முறைக்கு வக்காலத்து வாங்குவதாக இருக்கும்???
உகாண்டாவில் இடி அமீன் கூடத்தான் கொடுங்கோல் ஆட்சி நடத்தினான் அவனப்பற்றி யாரும் இங்கு பெருமையாக பேசவில்லையே???
மேலும் நீங்கள் மோடி பற்றி கொண்டுள்ள கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது...ஆனால் இந்த பதிவில் அதை பற்றி நாம் விவாதிக்க வேண்டாம்......

குகன் said...

பதிவர்களுக்குள் போட்டிகள் இருக்கலாம் சண்டை இருக்க கூடாது. :)

கமல்.. என்னை ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி..என் பெயர் குகன்... 'குசன்' அல்ல..

ராபின்,
// அவர்களை காட்டிலும் 'ஹிட்லர்' நல்லவர் தான். //
இங்கு 'அவர்களை' காட்டிலும் என்று நான் சொல்வது அமெரிக்காவை...
ஹிட்லரிடம் கூட சில நல்ல குணங்கள் உண்டு. அந்த குணம் அமெரிக்காவிடம் இல்லை என்பது தான் என் கருத்து.

ஒபாமா அதிபரகாயிருந்தாலும்... வேறு யார் அதிபராக வந்தாலும்.. அமெரிக்கா இப்படி தான். அவர்களை காட்டிலும் 'ஹிட்லர்' நல்லவர் தான்.

ஆட்காட்டி said...

ஹிடல்ர் கெட்டவனா? யார் சொன்னான்? யாருக்கு கெட்டவன்? இந்திய சுதந்திரத்துகு உதவவில்லையா? அவனுக்குள்ளும் மனிதன் இருந்திருக்கிறானே? அது எத்தனை பேருக்குத் தெரியும்? நம் மக்களின் குறைபாடு இரு தரப்பு செய்திகளாஇ மட்டுமே படிப்பது. முடிந்தால் முதல் உலகப் போர் -ஹிட்லர் படியுங்கள். தமிழில் உள்ளது.

குகன் said...

வாங்க ஆட்காட்டி...

ஹிட்லருக்குள் மனிதன் இருப்பதை இரண்டாவது பாகமாக பதிவு எழுதியிருக்கிறேன். பார்த்து... உங்கள் கருத்தை சொல்லுங்கள் !!

http://guhankatturai.blogspot.com/2008/11/blog-post_29.html

kumar said...

Gi avaru unmyaa thanaa
Sonnaruu....

kumar said...

Robi bro:
Hitler senchathu 100% thapu
Than i agree.
Nengaa marandutingaa avroda. Child age problumsaa.....

kumar said...

Robin bro:
oru vishayathil nallathu kattathu rendum irrukum nengaa nalltha choose panrathm kattatha choose pandrathum unga kettathan irrukku ....
Hitler avaridaa Nattukgaaa senchaathhuu ellam nanmikaa....

kumar said...

Robin bro:
Modi
Thapanavar Ok
Appo congress pannathu ellam nalla vishangalaaaa???? Solungaa
Know our condition
Rich get richer poor get poorr

kumar said...

I suport

kumar said...

I suport....

LinkWithin

Related Posts with Thumbnails