வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 12, 2010

படித்ததும் பார்த்ததும் - 12.4.10

10 ஆண்டுகளாக ஏழை புற்று நோயாளிகளுக்கு 'ஸ்ரீ மாதா டிரஸ்ட்' சேவை செய்து வருகிறது. புற்று நோயில் "கடைசிக்கட்ட நோயாளிகள்" என்று ஒதுக்கப்பட்ட பல ஏழைகள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யலாமே !

நிர்வாகி : வி.இருஷ்ணமூர்த்தி (94440 01065)

உங்கள் நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரி :

ஸ்ரீ மாத டிரஸ்ட்,
ராஜஸ்தானி தர்மசாலா,
பழைய கேன்சர் பேங்க் ரோடு,
காந்தி நகர்,
அடையாறு, சென்னை - 20
போன் : 2442 0727 / 2440 4950

**

9/11 தாக்குதல் பற்றி எத்தனையோ செய்திகள், விசாரனை,வதந்தி பற்றி கேள்விப்பட்டுயிருப்பீர்கள். சமிபத்தில் படித்த தகவல் என்னை அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, 9/11 தாக்குதலில் அமெரிக்காவில் சதி வேலை இருக்கிறது என்பது தான் அந்த தகவல்.

இரட்டை கோபுரத்தை மேல் பகுதியை தாக்கிய விமானம் எப்படி பக்கத்தில் இருக்கும் எந்த கட்டிடத்துக்கும் சேதாரமில்லாமல் உள்ளுக்குள்ளே சரிந்து விழுந்தது என்ற கேள்வி சிந்திக்க வைக்கிறது. இந்த தளத்தில் இருக்கும் பல தகவல்கள் நமையும் அமெரிக்கா மீது சந்தேகப்பட வைக்கிறது. அதே சமயம் குழப்பமாகவும் இருக்கிறது.

நீங்கள் படித்து குழம்புங்கள்.... இங்கே....

***

ஒரு போராளியின் நாட் குறிப்புகள் பயங்கரமானதகவும், இரத்த கரை படிந்ததாகவும், லட்சியத்தை நோக்கி பயணிக்கும் கதையாக தான் இருக்கும். ஆனால், எர்ன்ஸ்டோ கேகுவேராவின் 'மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள்' ( கனவிலிருந்து போராட்டத்திற்கு - 1) நூல் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் குறிப்புகளாக இருந்தாலும் காதல், நட்பு போன்ற பல எண்ண ஓட்டங்களை பிரதிபலித்துள்ளது.

கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள் மட்டுமல்ல, அடுத்தவர் டைரி படிக்கும் ஆர்வமுடையவர்கள் கூட இந்த புத்தகத்தை படிக்கலாம்.

விலை. 90. பக்கங்கள் . 182
விடியல் படிப்பகம்
கோயம்புத்தூர் - 641015

***

இரண்டு வருடங்களாக 'வருது...வருது..' என்று சொல்லிக் கொண்டு இருந்த 'கேப்டன் டி.வி' ஒரு வழியாக (முன்னாள்) தமிழ் புத்தாண்டில் வரப் போகிறது. ஒரு கட்சியின் டி.வி எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. எப்படியோ அரசியலில் விட்ட பணத்தை இதில் எடுக்கிறார்களோ என்று பார்ப்போம்.

இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு பேசாம ஒரு ஐ.பி.எல் டீம் வாங்கியிருந்தா ஒரு வருஷத்துல லாபம் பார்த்திருக்கலாம்.

***

என்ன ஒரு சிந்தனை ?

வட இந்திய நடிகர்கள்
கிரிக்கெட்டில் முதலீடு போட்டு லாபம் பார்க்கிறார்கள் !
தென் இந்திய நடிகர்கள்
அரசியல் பற்றி பேசி லாபம் பார்க்க முயற்சிக்கிறார்கள் !!

Friday, April 9, 2010

உதவி தேவை !!

"நீங்க ப்ளாக் எழுதுவீங்களா ! அதுல நீங்க எழுதுனா நிறைய பேர் கமன்ட்ஸ் போடுவாங்க ! உங்க எழுத்த பத்தி நீங்களே தெரிஞ்சுக்குவீங்க..." என்று ஒரு சந்திப்பில் நண்பர் ஒருவர் கூறினார். அதன் பிறகு பல வலைப்பதிவுகளை வாசித்தேன். ஒரு எழுத்தாளனாக வர துடிப்பவனுக்கு ப்ளாகின் அவசியத்தை உணர்ந்தேன். அப்படி வலைப்பதிவின் முக்கியதுவத்தை சொன்னவர் முத்துராமன்.

கிழக்கு பதிப்பகத்தில் ஆரம்ப காலத்தில் எனக்கு அறிமுகமானவர். நெருங்கி பழக்கம் இல்லை என்றாலும், நான் எழுதிய "கலிலீயோ கலிலி" எடிட்டிங் பார்த்தவர் என்ற முறையில் பல முறை பேசியிருக்கிறோம்.

அவர் இப்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். டயாலிஸி்ஸுக்கான மருத்துவச் செலவு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு என்று லட்ச கணக்கில் ரூபாய் தேவைப்படுகிறது.

பலபேர் உதவினால் மட்டுமே சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்கிற நிலைமை. எனவே உங்களால் முடிந்த தொகையை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறு உதவியாக இருந்தாலும் அது நிச்சயம் நண்பரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இது தொடர்பாக உதவக்கூடிய டிரஸ்டுகளில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தாலும் சொல்லவும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com 9841489907
பாலபாரதி – kuilbala@gmail.com 99402 03132
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch –
A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :
முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

Thursday, April 8, 2010

தினமலர் விமர்சனம்


சங்கர் நாராயண் எழுதிய “லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகத்தை பற்றிய விமர்சனம் ஞாயிறு தினமலரில் (4.4.10) வெளிவந்துள்ளது.

நூல் வாங்க.... இங்கே

Wednesday, April 7, 2010

சமூக கவிதைகள்

பதிநான்கு

உழவர் எல்லாம் புன்னகை சிந்தும்
- ஜனவரி பதிநான்கு
தமிழர்கள் எல்லாம் பெருமைக் கொள்ளும்
- ஏப்ரல் பதிநான்கு
குழந்தைகள் உதட்டில் இனிப்பு மிதக்கும்
- நவம்பர் பதிநான்கு
காதலர்கள் எல்லாம் பூக்கள் ஏந்தும்
- பிப்ரவரி பதிநான்கு

மகிழ்ச்சியான உள்ளங்களை
அஞ்சி நடுங்க வைக்கும்
- டிசம்பர் ஆறு....... !!

***

அன்றும் இன்றும்

1940

தேவை - புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்
ஊதியம் - மரணம்
பரிசு - வீரத்தியாகி என்ற பட்டம்
பேன்ஷன் - இந்திய விடுதலை
பணியாற்றும் இடம் - இந்தியா

2010

தேவை - கணிப்பொறி கற்ற இளைஞர்கள்
ஊதியம் - மாதம் ஒரு லட்சம்
பரிசு - வெளிநாட்டு கிரீன் கார்ட்
பேன்ஷன் - சுக போக வாழ்க்கை
பணியாற்றும் இடம் - அமெரிக்கா

1940 ல்
நாட்டுக்காக வாழ்க்கையை இழந்தோம் |
2010 ல்
சுகபோக வாழ்க்கைகாக நாட்டை இழந்தோம் |

***



லஞ்சம்

கையேந்தி
யாசகம் கேட்டான்
பிச்சைக்காரன்
ஒன்றும் கிடைக்கவில்லை...


அதிகாரத்துடன்
அதட்டிக் கேட்டான்
அரசாங்க அதிகாரி
கிடைத்தது
ஒரு லட்சம் !

Monday, April 5, 2010

படித்ததும் பார்த்ததும் - 5.4.10

நேற்று(4.4.10) காலை 9 மணிக்கு, விஜய் டி.வியில் புது டாக் ஹோ 'நாளும் நமதே' என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பினார்கள். அதில் ஒரு யுவதி, இந்தியாவில் 70% சதவீத இளைஞர்களுக்கு 'AIDS' இருப்பதாக சொன்னதும் என்னை தூக்கி வாரிப்போட்டது. பிறகு, Arrears In Different Subject என்ற விளக்கம் சொன்னவுடன் கூட்டத்தின் ஆரவார கை தட்டல்கள் ஒலித்தது.

ஒரு இளைஞன், "20 வருடங்கள் முன்பு அரசாங்கம் கல்வி நிறுவனங்களையும், தனியார் மது கடையையும் நடத்தியது. ஆனால், இப்போது அரசாங்கம் மது கடையையும், தனியார் கல்வி நிறுவங்களையும் நடத்தி வருகிறது" என்றார். இதற்கும் பலத்த கைதட்டல்.

இதுவும் இன்னொரு டாக் ஷோ என்று இல்லாமல் சில வித்தியாசமாக உத்தியை கையாண்டு இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய நான்கு பேச்சாளரை தேர்வு செய்து அவர்கள் முன் உண்மையான பிரச்சனை முன் வைத்து தீர்வு கேட்கிறார்கள். இந்த பகுதி கண்டிப்பாக பேச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அரம்ப காலத்தில் விசுவின் 'அரட்டை அரங்கத்தை இயக்கிய 'உதயம்' ராம் அவர்கள் இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தேர்தல் அணையர் டி.என்.சேஷன் அவர்கள் கலந்துக் கொண்டார். தொகுத்து வழங்கியவர் மதன் பாப். ( நகைச்சுவை டைமிங் வர மாட்டேன் என்ற்கிறது.)

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள். தொடர்பு கொள்க.... 'உதயம்' ராம் - 94440 11105

***

நேற்று தினதந்தியில் 'போலி சாமியார்கள்' பற்றிய கட்டுரை படித்தேன். பிரேமானந்தா, ஷிவ் முராத் திவிவேதி, ஸ்ரீகுமார் முதல் சமிபத்திய நித்யானந்தா வரை குறிப்பிட்டு இருந்தார்கள். இதில், நடிகையுடன் தொடர்பு வைத்து கொண்ட சாமியார்களில் நிதியானந்தாவுக்கு சீனியர் சாமியார் பற்றி குறிப்பிடவில்லை. எல்லாம் 'அவாள்' செயல் என்று புரிகிறது.

***

ஒரு வழியாக புத்தக கண்காட்சி வாங்கிய எல்லா புத்தகங்களையும் படித்து முடித்தேன். 'Prodigy' வெளியீட்ட உலக எழுத்தாளர்களின் நாவல், சிறுகதை நூல்கள் மொத்தம் 24 நூல்களை வாசித்தேன். எல்லா நூல்களும் மிக நன்றாக எளிமையாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். சிறு வயதில் ஆங்கில பாட புத்தகங்களில் கேட்ட கதை, படிக்க தவறிய கதை மீண்டும் தமிழில் படிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்.

***

'IPL' கிரிக்கெட் காய்ச்சல் இணையத்தையும் விட்டு வைக்கவில்லை. நீங்களும் 'IPL' கிரிக்கெட் விளையாடலாம். கீழ் காணும் தளத்தும் உங்களுக்கு விருப்பமான ஒரு அணியை தேர்வு செய்து மற்ற ஏழு ஐ.பி.எல் அணியுடன் விளையாட வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு.

10 ஓவரில் 180 ரன் மேல் எடுக்க வேண்டும் என்று கடின இழக்கை கொடுக்கிறது. விளையாட விளையாட பழகிவிடும். அலுவலகத்தில் சும்மா இருப்பவர்கள் விளையாடி பாருங்கள்.

www.stickcricket.aol.in/gamepremierleague.php

LinkWithin

Related Posts with Thumbnails