வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, December 13, 2015

பல கேள்விகளை உருவாக்கும் விளம்பர நோட்டீஸ் !

[ Disclaimer (என் நலன் கருதி): இதில் நான் யாரையும் குறைக் கூறவில்லை. நோட்டீஸில் இருக்கும் கணக்கைப் பற்றி கேள்விக்கேட்கிறேன். பதில் தெரிந்தவர்கள் கூறலாம். ] 


1. 600+1200+1400+1920+45000+300000 = மொத்தம் 3,50,120... 80120 அல்ல (யாரு போட்ட கணக்கோ !!). 

2. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461 பாதுகாப்பு மூகாம் = 5554 சென்னை (14), காஞ்சிபுரம் (6), கடலூர் (6) = மொத்தம் 26 தொகுதிகள். 

அப்படியென்றால், ஒரு தொகுதியில் 214 மூகாம் (5554 / 26 = 213.615) அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் (13,80,461 / 5554 = 248.55) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு பள்ளி / சமூகக்கூடம் / தனியார் திருமண மண்டபங்கள் என்று கணக்கு வைத்தால் ஒவ்வொரு தொகுதியிலும் 214 மூகாம் அமைக்க முடியுமா ? ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் இருக்க இடம் இருக்கிறதா ? 

3. உணவு பொட்டலம் = 72, 64, 353 மூகாம்மில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படும் எண்ணிக்கை. மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461 ஒருவருக்கு 5.26 பொட்டலம் வழங்கப்பட்டிருக்கிறது. 

அப்படியென்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டு நாள் (ஒரு நாளுக்கு 3 வேளை உணவு) மட்டும் தான் மூகாமில் தங்கியிருக்கிறார்கள். அதற்கு மேல் தங்கவில்லையா ? அப்படி தங்கியிருந்தால் அவர்களுக்கு உணவு வழங்கியது யார் ? 

அப்படியென்றால் மூகாமுக்கு வராமல் வெள்ளத்திலும் வீட்டில் இருந்தவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்க வில்லையா ? உதவியை எண்ணிக்கை வைத்து செய்தால் இப்படி தான் கணக்கு தவறாக வரும். 

இப்படி பல கேள்விகளை இந்த நோட்டீஸ் உருவாக்குகிறது. 

கடைசி கேள்வி, உண்மையிலேயே இந்த நோட்டீஸ்யை அதிமுக ஐ.டி விங் தயாரித்ததா ? அல்லது எதிர்கட்சி ஐ.டி விங் சதியா ?

5 comments:

பழனி. கந்தசாமி said...

ஊட்டுக்கு வெள்ளம் வரது மட்டும் தெரியுது, ஆனா ஆட்டோ வரப்போறது ரொம்பப் பேருக்குத் தெரியறதில்ல

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆடடோவா?

எதுக்கு?
எதுக்கு?
எதுக்கு?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆடடோவா?

எதுக்கு?
எதுக்கு?
எதுக்கு?

ராஜ நடராஜன் said...

//ஆடடோவா?//

அஞ்சி அஞ்சி சாவார்!இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே
இந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்

நன்றி: தமிழகத்தின் நோஸ்டர்டாம் பாரதியார்.

ராஜ நடராஜன் said...

பரவாயில்லையே!மட்டுறுத்தல் மகாராசங்க மாத்ரியில்லாமல் பின்னூட்டம் துள்ளிக் குதிச்சு உட்காருதே!

LinkWithin

Related Posts with Thumbnails