வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 21, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 1

வேலையை மாற்றிக் கொடுப்பது

ஒரு வியாபாரி தனது வீட்டில் குதிரையும், கழுதையும் வைத்திருந்தான். வியாபாரத்திற்காக தனது பொருட்களை கழுதையின் முதுகு மீது கட்டுவான். குதிரை மீது தான் அமர்ந்தவாறு கழுதையின் இழுத்துச் செல்வான்.

பொருட்கள் எடுத்து செல்லும் எல்லா ஊரிலும் வியாபாரியின் பொருட்கள் நன்றாக விற்பனையானது. அந்த வியாபாரிக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதனால், வழக்கத்திற்கு மாறாக விற்பனைக்கு அதிகப் பொருட்கள் எடுத்துச் செல்லலாம் என்று தீர்மாணித்தான். அடுத்த நாள் வியாபாரத்திற்கு கழுதையின் மூதுகில் ஒரு மூட்டைக்கு பதிலாக இரண்டு மூட்டையை கட்டினான். கழுதையால் சுமக்க முடியாமல் பாதி வழியில் திணறியது. வேறு வழியில்லாமல் ஒரு மூட்டையை தான் சுமந்தவாறு குதிரையில் பயணம் செய்தான். சிறுது தூரம் சென்றதும் குதிரை கடிவாளம் பிடித்துக் கொண்டு மூட்டையை வியாபாரியால் சுமக்க முடியவில்லை. அதனால், இரண்டு மூட்டையை குதிரை மீது கட்டினான். 

குதிரையின் முதுகில் விற்பனை பொருட்கள் இருந்ததால் அந்த வியாபாரி குதிரை மீது அமர முடியவில்லை. வேறுவழியில்லாமல் கழுதை மீது அமர்ந்துக் கொண்டு பயணம் செய்தான். 

வியாபாரியின் எடையையை விட இரண்டு மூட்டைகளின் எடை குறைவாக இருந்ததால் குதிரை சந்தோஷமாக நடந்து வந்தது. ஆனால், இரண்டு மூட்டையை சுமக்க முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து வந்த கழுதை, வியாபாரியை சுமக்க முடியாமல் அங்கையே சோர்ந்து விழுந்தது. அதன் பிறகு வழக்கமாக சுமக்கும் ஒரு மூட்டை எடையைக் கூட சுமக்க முடியவில்லை. 

வியாபாரத்திற்கு சரியான நேரத்தில் சென்றால் தான் இரண்டு மூட்டை பொருட்களையும் அந்த வியாபாரியால் விற்பனை செய்ய முடியும். இப்போது ஒன்றுக்குமே உதவாக கழுதை என்ன செய்வது என்று யோசித்தான். 

வேறு வழியில்லாமல் கழுதையை அங்கேயே விட்டுவிட்டு குதிரையோடு நடந்து பயணம் செய்தான். யார் உதவி செய்ய முடியாததல் கழுதை அங்கையே இருந்தது. வியாபாரி நடந்து சென்றதால் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. 

Management நீதி : 
கழுதைக்கு கொடுக்க வேண்டிய வேலையை குதிரைக்கும், குதிரைக்கு கொடுக்க வேண்டிய வேலையை கழுதைக்கு கொடுத்தாலும் அந்த வேலை உருப்படாது. மேலும் அதிக வேலை தான் நமக்கு கொடுக்கும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails