வெள்ளையர்களின் காலனி காலத்தில் அடிமையாய் இருந்த சிட்டங்காங் (இப்போது பங்களாதேஷ்யில் இருக்கிறது) நடந்த ஆயுத எழுச்சி தான் படத்தின் கதை. சுதந்திரப் போராட்டத்தில் இவர்களின் போராட்டம் மிக முக்கியமானது. காரணம், இதில் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய 56 பதின்ம வயது சிறுவர்கள். அவர்களை வழி நடத்தியவர் ’மாஸ்டர்டா’ என்று அழைக்கப்படும் சூர்யா சென்.
சரியான திட்டமிடலும், சரியான நேரத்தில் நடத்திய தாக்குதலிலும் சிட்டங்காங் நகரத்தை ஒரு நாள் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். இந்திய தேசிய கோடியை ஏற்றுகிறார்கள். வெள்ளையர்களின் இராணுவம் வருவதை அறிந்து தப்பிச் செல்லும் போது வெள்ளையர்களால் ஒவ்வொரு சிறுவர்களாக சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒரு சில சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதில் ஜூக்கு என்ற சிறுவன் மிக முக்கியமானவன்.
மாணவர்களை போராட்டத்திற்கு வழி நடத்திய ஆசிரியர் சூர்யா சென்னும் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படுகிறார். Khelein Hum Jee Jaan Se படத்தின் கதை இத்தோடு முடிகிறது.
Chittagong படத்தில் ஜூக்கு சிறையில் இருந்து வாலிபனாக வெளியே வந்து வெள்ளையர்களுக்கு எதிராக தனது கிராமத்தை போராட வைக்கிறான். தனது முதுமைக் காலத்தில் இளமைப் போராட்ட நினைவுகளை கூறுவது போல் படம் முடிகிறது.
Khelein Hum Jee Jaan Se படத்தில் சூர்யா சென் முதன்மை பாத்திரமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் போன்ற பெரிய நட்சத்திர பலத்தோடு களம் இறங்கியப் படம். வணிக ரீதியாக திரில், செண்டிமெண்ட், ஒரு காட்சிக்கு காதல் என்று பொருத்தி திரைக்கதை அமைத்திருப்பார்கள்.
Chittagong படத்தில் சூர்யா சென்னிடம் பயிற்சி பெற்ற 56 மாணவர்களின் ஒருவனான ஜூக்குவை முதன்மை பாத்திரமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 14 வயது சிறுவன் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, அவர்களின் செய்யும் கொடுமையை அனுபவித்து சிறையில் இருந்து வருகிறான். அவனின் அனுபவம் ஒரு கிராமத்தின் போராட்டத்தை தலைமை தாங்க வைக்கிறது. எந்த நட்சத்திர பலம் இல்லாதப்படம். ஒரே நேர்கோட்டில் மிக மெதுவாக செல்லும் கதை. 2012ல் சிறந்த இயக்குனர் உட்பட மூன்று தேசிய விருதுகள் பெற்று இருக்கிறது.
பெரும்பாலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதால் இரண்டு திரைக்கதையையும் இது மோசம், இது சிறந்தது என்று சொல்ல விரும்பவில்லை. இரண்டு இயக்குனர்களும் தங்களுக்கு எது தேவை என்று முன்பே தீர்மானித்து தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். தங்கள் தேவைக்கு சரியாக தான் படம் இயக்கியிருக்கிறார்கள்.
இரண்டு படங்களிலும் தோல்வி என்றாலும் இதில் கற்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. ஒரு உண்மை சம்பவத்தை எப்படி சொல்லலாம் என்பதற்கு இரண்டு விதமான திரைக்கதை சொல்லும் படங்கள். திரைக்கதை படிப்பினைக்கான கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் உதவும் என்று தோன்றுகிறது.
வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் பாருங்கள்.
No comments:
Post a Comment