எந்த வருடம் இல்லமாமல் இந்த 2007ல் மிக குறைவான வெற்றி படங்கள் தான் வந்தன. 'சிவாஜி', 'போக்கிரி' தவிர மிக பெரிய வெற்றி படங்கள் என்று சொல்லும் படியாக எந்த படமும் இல்லை. ஆனால், நல்ல படங்கள் ஒரளவு மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அம்முவாகிய நான், பள்ளிக்கூடம், மொழி, கற்றது தமிழ் போன்ற நல்ல படங்கள் வணிக ரீதியாகவும், குடும்பத்துடம் பார்க்கும் படியாகவும் அமைந்தன. முழுக்க முழுக்க பொழுது போக்குக்கான வெற்றிபடங்களை சொல்வதென்றால் 'நான் அவன் இல்லை', தாமிரபரணி', 'மருதமலை' போன்ற படங்களை சொல்லலாம்.
இந்த வருடம் ரஜினி, சங்கர் கூட்டனியில் வந்த 'சிவாஜி' படம் மட்டும் எந்த படத்திற்கும் இல்லாமல் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமில்லாமல் முதல் முறையாக ஒரே சமயத்தில் சென்னையில் மட்டும் 19 திரை அரங்குகளில் திரையிடப் பட்டது. 'சிவாஜி' படத்தின் எதிர்ப்பார்ப்புப்பில் பல தாயாரிப்பாளார்கள் தங்கள் படங்களை வெளியீடுவதை தள்ளிப் போட்டார்கள். 'ஆழ்வார்', கீரிடம்' தோல்விக்கு பிறகு 'பில்லா' வை நம்பியிருகிறார் அஜீத். 'போக்கிரி' வெற்றி படத்தை தந்திருக்கிறார் விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ சும்மார் ரகம் தான்.
தேசிய விருது வாங்கிய கமல், விகரம் அவர்களின் படம் இந்த வருடம் வராதது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம். அதை, 'தசாவதாரம்', 'கந்தசாமி' படங்களில் வரும் வருடத்தில் ஈடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். கமல், விக்ரம் பிறகு அடுத்து தேசிய விருது வாங்க போகும் நடிகர் சத்யராஜ் என்று தான் சொல்ல வேண்டும். 'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' படங்களில் அவ்வளவு நடிப்பை கொட்டி நடித்திருக்கிறார் சத்யராஜ். 'லொள்ளு', 'ஜொள்ளு' இரண்டும் இல்லாமல் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
பிற மொழி படங்களை தமிழில் எடுத்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது பழைய வெற்றி படங்களை புது பொழிவுடன் கொடுக்கிறார்கள். 'நான் அவன் இல்லை', 'பில்லா' வெற்றி பெற்ற படங்களின் கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதை மாற்றி எடுத்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல், பல பழைய பாடல்கள் ரீ-மிக்ஸ் வடிவத்தில் வந்த பாடல்கள் இந்த வருடம் அதிகம்.
தயாரிப்பாளர்களை திருப்தி படுத்திய ஒரே நடிகர் விஷால் தான். விஷால் நடித்த 'தாமிரபரணி', 'மலைக்கோட்டை' தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளது. சென்ற வருடம் அதிக படங்கள் நடித்த பரத் இந்த வருடம் 'கூடல் நகர்' படம் மட்டுமே நடித்துள்ளார். 'கற்றது தமிழ்', 'ராமேஸ்வரம்' படங்கள் மூலம் நல்ல நடிகர் என்று ஜீவா நிருப்பித்துள்ளார்.
நடிகைகளில் பெரிதாக சொல்லும் படி யாருமில்லை. 'சிம்ரன்' இடத்தை 'சிவாஜி' படத்தின் ஸ்ரேயா நிரப்பியிருக்கிறார். 'தீபாவளி', 'கூடல் நகர் ', 'ஆரியா', ராமேஸ்வரம்' படங்களில் மூலம் இந்த வருடம் அதிக படங்கள் நடித்த நடிகை பெயரை மட்டும் பாவனா பெருகிறார். மற்ற நடிகைகள் எல்லாம் ஒரு படத்தின் நடித்து தொலைந்து போகும் நிலையில் தான் இருக்கிறார்கள்.
ஸ்ரீ காந்த் - வந்தனா திருமணம், நடிகர் ஜீவா திருமணம், பிரஷாந்த் - கிரகலக்ஷ்மி விவகாரம், சிவாஜியின் மனைவி மரணம், ஸ்ரீ வித்யா மரணம் - இந்த வருடத்தின் மிக முக்கிய நிகழ்வுகளாகும்.
இந்த வருடம் போல் அடுத்த வருடமும் நல்ல படங்களையும், மேலும் அதிக வெற்றி படங்கள் கிடைக்கும் என்று நம்புவோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
No comments:
Post a Comment