சிதம்பரத்தில் மிக பிரபலமானது இரண்டே இடங்கள் தான். அந்த இரண்டு இடங்கள் இல்லை என்றால் சிதம்பரமே வெறுமையாகத் தான் தெரியும். ஒன்று சிதம்பரம் நடராஜன் கோயில், இன்னொன்று அண்ணாமலை பல்கலைக்கழகம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படுவதற்காக அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் இருக்கும் அதே ஊரில் தான் நடராஜன் கோயிலில் வருடத்திற்கு நாட்டியஞ்சலி நடக்கும். இது சிதம்பரம் கோயிலை பற்றி எல்லோருக்கும் தெரிந்த விஷயம். காலம் காலமாக மாற்ற முடியாத விஷயங்கள் அங்கு நடந்துக் கொண்டு இருகிறது. அது எத்தனை பேருக்கு தெரியும் ?
"யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்" என்பார்கள். சிதம்பர ரகசியத்தை வெளியே சொன்னால் புன்னியம் போய்விடும் என்று சொல்லி தீட்சிதர்கள் பார்க்க வந்தவர்களின் வாய்யை அடைக்கின்றனர். சிதம்பரம் கோயிலில் எல்லாம் தீட்சிதர் கீழ் தான். அவர் சொல் தான் அங்கு எடுப்படும்.
வெளியூரில் இருந்து ஒருவர் அண்ணாமலை நடராஜன் கோயிலுக்கு சென்றால் அங்கு தீட்சிதர் கேட்கும் முதல் கேள்வி "நீங்க உள்ளூரா? வெளியூரா? " என்று தான். உள்ளூர் என்றால் அடுத்த வார்த்தை எதுவும் சொல்ல மாட்டர்கள். ஆனால், வெளியூர் என்று சொன்னால் போதும் அடுத்து தீட்சிதர்கள் தேன் தித்திக்க தித்திக்க பேசுவார்கள். " இது கோயில் பிரசாதம். நடராஜனுக்கு ஷேமிச்சது" என்று சொல்லிக் கொடுப்பார்கள். பக்திமார்களும் அதை பயப்பக்தியுடன் வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு தான் பக்திமார்களுக்கு புரியும்.
பிரசாதம் வாங்கிய அடுத்த நொடியே தீட்சதர் "பத்து ரூபாய் கொடுங்கோ" என்பார். அந்த பிரசாதத்தில் விபூதி, குங்குமம், பூ, ஆபிஷேக தீர்தம் (ஆபிஷேக தீர்தமா அல்லது வெறும் தீர்தமா என்று த்ரியாது) தான் இருக்கும். அதன் விலை அதிகப் பட்சம் இரண்டு ரூபாய்க் கூட இருக்காது. ஆனால், பத்து ரூபாய் கேட்பார்கள் தீட்சதர்கள்.ஒவ்வொரு கடவுள் பிரகாரத்தில் இது போன்ற விஷயங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கும். வாங்கிய பிரசாதம் திருப்பி எப்படி கொடுப்பது என்று தெரியாமல் பலர் பத்து ரூபாய் கொடுத்துவிடுவார்கள். ஆதனாலே பலர் வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட தாங்களை உள்ளூர் என்று சொல்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஒரு சிலர் நூறு ரூபாய் கொடுத்து வருஷ வருஷம் கோயிலில் நடக்கும் விசேஷங்களுக்கு பிரசாதத்தை கொடுக்க தங்கள் வீட்டு முகவரியை கொடுத்து விட்டு வருவார்கள். ஆனால், வருஷ வருஷம் கோயிலுக்கு நன்கோடை கேட்டு தான் கடிதம் வரும். அப்படியே பிரசாதம் வந்தாலும் வெறும் விபூதி, குங்குமம் தான் வரும்.
வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தான் பிரசாதம் விலை பத்து ரூபாய். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பிரசாதம் பத்து டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் நாலாயிரம் மேல் இருக்கும். ஒரு முறை வெளிநாட்டவர்கள் அந்த பிரசாதத்தை திறந்த பிறகு தீட்சதர் பத்து டாலர் கேட்டார். வெளிநாட்டவர் பணம் தர மறுத்த போது பெரும் பிரச்சனையே நடந்து விட்டது. வெளிநாட்டவர்களை சுற்றி காட்டிய இந்தியருக்கு பெரும் தர்ம சங்கடமாக இருந்தது. அதன் பிறகு அவரே பணம் கொடுத்து பிரச்சனையை அத்தோடு முடித்தார்.
இறந்தால் மனிதன் உடல் சாம்பல் தான். அதை உணர்த்த தான் விபூதியை நெற்றியில் வைக்கிறோம். ஆனால் அந்த சாம்பலையே கடவுள் பிரசாதம் என்ற பெயரில் ஒவ்வொரு கோயிலிலும் விற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.[ விலைவாசி ஏறிய பிறகு அந்த பிரசாதத்தின் விலை 20 ரூபாயாக ஆகிவிட்டதாக கேள்வி.]
இது எல்லாம் கூட பரவயில்லை. சிதம்பர ரகசியத்தை பார்க்க ஆண்கள் சட்டையில்லாமல் தான் உள்ளே செல்ல வேண்டும்.[நல்ல வேளை பெண்களை இதில் விட்டு வைத்தார்கள்]. மந்திரியாக இருந்தாலும், ஜில்லா கலேக்டராக இருந்தாலும் அங்கு இருக்கும் தீட்சதர் முன்பு சட்டையில்லாமல் தான் உள்ளே சென்றாக வேண்டும். யாராக இருந்தாலும் சட்டையில்லாமல் தான் தீட்சதர் முன் நிற்க வேண்டும் என்பது எழுதப் படாத விதிமுறை. உள்ளே செல்வதற்கு பத்து ரூபாய் கட்டனம் கூட வசூலிக்க படுகிறது. அங்கு தட்சனையே பத்து ரூபாய்க்கு கீழ் யாருமே வாங்குவதில்லை [ பிச்சைக்காரர்கள் தவிர]
பெரிய மனிதர்களை சட்டையில்லாமல் தங்கள் முன் நிற்க வைப்பதில் தீட்சதர்களுக்கு பெரும் சந்தோஷம் தான். இதை எல்லாம் விட கோயில் மூலம் வரும் வருவாயில் ஒவ்வொரு தீட்சதர்களின் குடுமபத்திற்கு பங்குண்டு. நடராஜன் கோயிலில் தீட்சதர்கள் ராஜ்ஜியம் பல ஆண்டுகளாக நடந்துக் கொண்டு இருக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டவருக்கு நூலகத்திலும், விடுதியிலும் சிறப்பு சலுகைகள் வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அதே இடதில் அண்ணாமலை நடராஜன் கோயிலில் தீட்சதர் குடும்பங்கள் நடத்தும் வியாபாரமாக தான் உள்ளது. பிரதஷோம் சமயத்தில் தேர் இழுக்கும் போது கூட பூஜை செய்யும் தீட்சதர்கள் இழுப்பதில்லை. கடவுளை வழிப்பட வரும் பக்தர்கள் தான் கடவுளோடு தீட்சதர்களையும் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். வைஷ்ணவ பிரமணன் கூட அங்கு அர்ச்சகனாக இருக்க அனுமதியில்லை. அங்கு இருப்பவர்கள் அனைவருமே சைவ பிரமணர்கள் (தீட்சதர்) தான்.
பணத்திற்க கடவுளை உருவாக்கியவர்கள்... அவர்கள் இயக்கும் கோயில் மட்டும் பக்தியிலா இயக்க போகிறார்கள்...? பக்தியை கூட கோயிலில் பணத்தை கொடுத்து தானே காட்டுகிறார்கள். வாழ்க பக்தி வியாபாரம் !!!
1 comment:
நல்ல கட்டுரை நண்பா
இன்னும் இப்படித்தான் இருக்கிறதா?
//வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தான் பிரசாதம் விலை பத்து ரூபாய். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பிரசாதம் பத்து டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் நாலாயிரம் மேல் இருக்கும். ஒரு முறை வெளிநாட்டவர்கள் அந்த பிரசாதத்தை திறந்த பிறகு தீட்சதர் பத்து டாலர் கேட்டார். வெளிநாட்டவர் பணம் தர மறுத்த போது பெரும் பிரச்சனையே நடந்து விட்டது. வெளிநாட்டவர்களை சுற்றி காட்டிய இந்தியருக்கு பெரும் தர்ம சங்கடமாக இருந்தது. அதன் பிறகு அவரே பணம் கொடுத்து பிரச்சனையை அத்தோடு முடித்தார்.//
இதில் 10 டாலர் என்பது மிஞ்சிபோனால் 450 வரலாம்.4500 வராது சரிபார்க்கவும்.தீட்சிதர்கள் 10வயதிலேயே திருமணம் செய்கிறார்களாமே?உண்மையா?
Post a Comment