வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, October 15, 2008

பங்குச்சந்தை ஆலோசனை

'பங்குச்சந்தை ஆலோசனை' என்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பங்கு சந்தை விழுந்திருக்கும் இச்சமயத்தில் பெரிய யோசனை சொல்ல போகிறார் என்று ஆர்வமாக மின்னஞ்சலை படித்தேன்.

அதில்....

ஒரு வருடம் முன்பு $1000 Delta Airlines பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $33.

ஒரு வருடம் முன்பு $1000 AIG பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $46.

ஒரு வருடம் முன்பு $1000 Lehmann Brothers பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $0.

ஆனால்,

ஒரு வடும் முன்பு $1000 டின் பீர் ( Tin Beer) வாங்கி இருந்தால் , அதை குடித்ததோடு இல்லாமல், ரீசைக்கில் செய்ய பழைய கடையில் போட்டிருந்தால் $214 கிடைக்கும் என்று இருந்தது.

'எது சிறந்த முதலீட்டு என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்?' என்று இருந்தது.

பழைய பேப்பர் கடைக்காரன் கொடுக்கும் பணம் கூட பங்கு சந்தையில் கிடைப்பதில்லை என்று நகைச்சுவையாக அந்த மின்னஞ்சில் கூறியிருந்தார்கள். அந்த நண்பருக்கு நன்றி.


இப்போது முதலீடு செய்வது சரியான நேரம் என்று ஒரு சிலர் கூறிகிறார்கள். என்னை பொருத்த வரையில் இப்போது வெடிக்கை பார்ப்பது தான் நல்லது. BSE 9500 புள்ளிகள் இறங்கலாம் என்று இன்னொரு கருத்து உள்ளது என்பது காதில் வாங்கிக் கொண்டு முதலீடு செய்யுங்கள்

Tuesday, October 7, 2008

இந்திரா நூயி – இந்தியர்களை நிமிர வைத்த பெண்

'இந்திரா நூயி' பெயரை கேட்டால் எதோ வெறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவர் 100% தமிழச்சி. இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் 'B.Sc' படிப்பும், 'IIM'- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் 'Public & Private Management' முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் 'Beardsell' டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnson' என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார்.



பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development' ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் 'Chairman & CEO’ வாக பணிபுரிந்து வருகிறார். ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்கிறார். உலகில் பெப்ஸி நிறுவனம் இரண்டாம் இடத்தில் வர மிக முக்கிய பங்கு வகித்தவர். பெப்ஸி என்றவுடன் குளிர்சாதனம் பொருள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக கொழுப்பு சத்து குறைவுள்ள எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை கூட தயாரிக்கிறார்கள்.

இந்திரா நூயி யார் என்று தெரியாதவர்களுக்கு இது சிறு முன்னுரை மட்டுமே ( எனக்கும் பெரிய அளவில் அவரை பற்றி ஒன்றும் தெரியாது ) ! நான் சொல்ல வந்த விஷயமே வேறு !!
சமிபத்தில் பிஸ்னஸ் வோல்ட் இதழில் அவர் அளித்த பேட்டியை படித்தேன். அவர் பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு புறம், பெப்ஸி குளிர்பானத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டம் இருக்க, பெப்ஸி குளிர்பான விற்பனையில் 'இந்தியா' முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

2015ல் பெப்ஸி நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் 2015ல் தன் நிறுவனம் அடைய போகும் லாபத்தை பற்றி பேசவில்லை. தன் குளிர்பான தயாரிப்பில் 20 சதவிகிதம் தண்ணீர், 20 சதவிகிதம் எண்ணெய், 25 சதவிகிதம் பெட்ரோல் குறைக்கப்படும் என்றார். அது மட்டுமில்லாமல். 25 சதவிகிதம் பெப்ஸி பாட்டில்களை ரீஸைக்கில் (Re-cycle) செய்து மீண்டும் பயன்படுத்துவதாக கூறினார்.
இப்போது அமெரிக்காவில் உள்ள பொருளாதார வீழ்ச்சியை பற்றி கேட்ட போது தங்கள் நிறுவனத்துக்கும் ஒரளவு பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டார். உலகில் பல இடங்களில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதால் ஒரு இடத்தில் இறங்குமுகமாக இருந்தாலும், மற்றொரு இடத்தில் ஏறுமுகமாக இருப்பதை கூறினார். உலகளவில் பெப்ஸி விற்பனை இந்தியா அதிக உள்ளது என்பதை தெரிவித்தார். இந்தியர்கள் Purchase Capacity மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளதையும் கூறினார்.

100 % வியாபாரியாக இல்லாமல் சுற்றுப்புறத்தை பற்றி நினைத்து செயல்ப்படுவதும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக இருப்பதும், அதிக சம்பளம் வாங்கும் CEO என்ற கர்வமில்லாமல் இருக்கிறார். உலகளவில் இந்தியர்களை தலை நிமிர வைத்த பெண்களில் இவருக்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு.

Thursday, September 11, 2008

"மனசாட்சி சொன்னது" - பரிசு வென்ற சிறுகதை

இந்த முறையாவது கிடைக்குமா... இது நம்முடைய மூன்றாவது முயற்சி... ஏன் இரண்டு முறை கிடைக்கவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது....? பல சிந்தனைகளை மனதில் ஓட்டிக் கொண்டு இருந்தான் ரமேஷ். ரமேஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொறியாளர். மூன்று வருடங்களாக கண்ட கனவு நாளை நிறைவேறுமா என்ற அச்சம். இது அவனுக்கு மூன்றாவது முறை... என்ன நடக்க போகிறது....?

ரமேஷின் பிராஜெக்ட் மேனேஜர் ராமன் அங்கு வருகிறான்.

"ஹெலோ ரமேஷ்.... என்ன ரொம்ப டென்ஷனா இருக்க..." என்றான்.

" ஆமா சார்.... ரொம்ப டென்ஷனா இருக்கு... இந்த தடவை கிடைச்சா..என் லைப்பே மாறிடும்..."

"கவலை படாத... இந்த பிராஜக்ட் சக்ஸஸ் ஆனதற்கு காரணம் நீ தான்.... கண்டிப்பா கிடைக்கும்... டோட் வொரி..."

யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம்... ஆனால், நடந்து காட்டுவது வேறு... இரண்டு தடவை விசா கிடைக்கவில்லை... இது எனக்கு மூன்றாவது தடவை. கிடைத்தால், இரண்டு வருஷம் நல்ல சம்பளம்....இனி வாழ்க்கையில் வேலை கூட செய்ய வேண்டியதில்லை.... ஆனால், விசா கிடைத்த பிறகே எல்லாம் சாத்தியம்.

2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது. எந்த காரணத்திற்காக விசா மறுக்கப்படுகிறது என்ற காரணம் கூட தெரிவதில்லை.நாம் கொடுக்கும் தகவல்களில் ஒரு சிறு தவறு இருந்தால் கூட விசா கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்.

மறுநாள்....
அமெரிக்கா தூதரகத்தில் ரமேஷ் காத்துக்கொண்டு இருந்தான். மூன்று மணி நேரம் கழிந்தது, ஒவ்வொரு முறையும் இப்படி தான் பல மணி நேரம் பலருக்கு செலவாகிறது. விசா மறுக்கப்பட்டால் பல மணி நேரம் காத்து கிடந்ததற்கு பலன் இல்லாமல் போய்விடுகிறது.

"ரமேஷ்...." - என்று ஒரு வெள்ளைக்காரன் குரல் அழைப்பு.

ரமேஷ் உள்ளே செல்கிறான். அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வெளியே வரவில்லை.
"சோ... மிஸ்டர் ரமேஷ்... யூவர் எச்1பி விசா இஸ் கிரன்டட் ...."

"தாங்க் யூ சார்...."

"ஒ.கே.... ஆல் தி பெஸ்ட்...."

ரமேஷின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.... பல நாள் கனவு இன்றே நிஜமானது... இரண்டு வருடம் கஷ்டப்பட்டு வேலை செய்தால் போதும், வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்.
தனக்கு விசா கிடைத்துவிட்டதை தன் நிறுவனத்திற்கு போன் செய்து சொல்கிறான். தன் நண்பர்களுக்கு விருந்துகள் எல்லாம் கொடுத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான்.

அவன் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அமெரிக்காவுக்கு புறப்பட நல்ல துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். 2007ஆம் ஆண்டு தன் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்றே இருந்தான். அந்த நேரத்திலா அவன் தொலைக்காட்சியில் அதை பார்க்க வேண்டும்.. அதை பார்த்ததும் மிகவும் மனம் வேதனையுடன் அன்று இரவு பொழுது அவனுக்கு கழிந்தது.
மறு நாள் தன் அலுவலகதில் தன் மேனேஜர் ராமனை பார்க்கிறான்.

"சார்... நான்... அமெரிக்காவுக்கு போகல... நான் இங்கேயே இருந்து வேலை செய்றேனே.."

"என்ன... ரமேஷ்... என்ன ஆச்சு உங்களுக்கு... விசாக்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்க... இப்போ ஏன் இந்த தீடிர் முடிவு? "

"இல்ல...என க்கு அமெரிக்கா போக மனசு இல்ல... நான் இந்தியாவிலே இருந்து வேலை செய்யனும்னு ஆசை படுறேன்..."

சிரித்துக்கொண்டே ராமன் " அமெரிக்கா போயி வேலை செய்தா தேச திரோகம்னு யாராவது அட்வைஸ் பண்ணாங்கள...? அப்படி யாராவது சொன்னா நம்பாதிங்க... அமெரிக்கா போயி வேலை செய்தா இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் தான்.... யாரோ உங்கள நல்லா குழப்பி இருக்காங்க..."

"யாரும் என்ன குழப்பலை...இது நானா எடுத்த முடிவு தான்... அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு சொன்னேன்"

" அப்படியா....சரி..! என்ன காரணம்... எனி பர்சனல் ரீசன்.."

" சொந்த காரணம் இல்லை... உலக காரணம்... அதான் போகலை...."

"புரியல..."

" நேத்து டி.வியில சதாம் ஹுசைனை தூக்குல போடுறத பார்த்தீங்களா...."

"பார்த்தேன்... ஆனா அதுக்கும் நீங்க சொல்ல வந்ததுக்கும் என்ன சம்மந்தம் இப்போ.."

" நம்மல மாதிரி சாப்ட்வேர் ஆளுங்க சம்பாதிச்சு... இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் வாங்கி தரோம்... ஆன அமெரிக்கா அந்த பணத்தை நல்ல வழியில செலவு செய்யல... மத்த நாடு கிட்ட சண்ட போடுரதுல தான் செலவு பண்றாங்க.."

"அதுனால நமக்கு என்ன ?... நம்ம இந்தியா மட்டும் என்ன... நல்ல விஷயத்துக்கா பணம் செலவு பண்றாங்க.... எத்தனையோ அரசியல்வாதி நம்ப வரி பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க.."

" நம்ம இந்தியாவால எந்த நாடும் கஷ்டப்பட்டது இல்ல.... ஒரு பிலைட் ஹைஜாக் பண்ணி தீவிரவாதிகளை விட சொன்னா கூட... எந்த உயிரும் சாகக் கூடாதுனு நாம தீவிரவாதியை விடுதலை பண்ணியிருக்கோம்.... ஆனா ஒரு பிரதமர கொன்னு.. ஈராக்ல கலவரத்த உண்டு பண்ணிட்டாங்க அமெரிக்கா.."

"ரமேஷ்... எனக்கும் விஷயம் தெரியும்... ஆனா உலக அரசியல் பேசி இவ்வளவு வருஷம் காத்திருந்து வாங்கின விசாவ தூக்கி எறியப் போறிங்களா"

"கண்டிப்பா நான் தூக்கி ஏறியதான் போறேன்.... அமெரிக்கா பண்ணுற காரியத்திற்கு மறைமுகமா நாம சம்மந்தம் படுறோம்... க்யூபா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், இப்போ ஈராக் இன்னும் எவ்வளவு நாட்டை அழிக்க போறாங்கனு தெரியலை.... ஆனா இவங்க பண்ணுரதுக்கு தைரியம் கொடுக்குறது நாம சம்பாதிச்சு கொடுக்கும் பணம் தான்...."

" அப்போ.. உங்க முடிவுல இருந்து மாறப் போறதில்லையா..."

" கண்டிப்பா மாற மாட்டேன்... நீங்க என்னை வர்புறுத்தி அமெரிக்கா போக சொன்னா வேலையை விட்டு தான் மாறுவேன்..."

ராமன் என்ன பேசுவது என்று தெரியவில்லை... ஆனால், இறுதியாக ராமன் "நான் வேற யாராவது இந்த பிராஜக்ட்காக அனுப்பிடுவேன்... உங்களுக்கு கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடுறீங்க... அது தான் என்னால சொல்ல முடியும்"

"சந்தர்ப்பத்தை நழுவவிட்டா பரவாயில்லை... ஆனா, மத்தவங்க சாகுறதுக்கு நாம மறைமுகமாக காரணம் நினைக்கும் குற்ற உணர்ச்சியை விட பரவாயில்லைனு தோன்னுது..."

சரி..உங்க இஷ்டம்..." என்று சொல்லி ராமன் தன் குழுவில் இருக்கும் வேறொருவரை தேர்ந்தெடுத்து அமெரிக்கா செல்ல விசா வேலைகளை தொடங்க சொல்கிறான்.

ரமேஷ் செய்தது முட்டாள் தனமாக தெரிந்தாலும்..அதில் இருக்கும் உண்மை ராமனின் மனிதநேயம், அந்த குழுவில் வேலை செய்யும் எல்லோருக்கும் புரிந்தது. புரிந்தும் இந்த சுயநல உலகில் சுயநலமான முடிவைத்தான் எடுக்க வேண்டியுள்ளது. அந்த குழுவில் ஒருவன் அமெரிக்கா செல்கிறான்.

( "நம் உரத்தசிந்தனை" சிற்றிதழ் நடத்திய சிறுகதை போட்டியில் ரூ.250 பரிசுவென்றது. என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது.

என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது. "நடைபாதை" நூல் வெளியீட்டு விழா செப்.14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு.....
http://tamilbookreview.blogspot.com/2008/09/14.html பார்க்கவும்)

Tuesday, August 12, 2008

குண்டக்க மண்டக்க – 4

(‘குண்டக்க மண்டக்க – 3 ’வின் தொடர்ச்சி.)

காட்சி 2: பார்த்திபன் - ட்ராபிக் போலீஸ், வடிவேலு - டூ வீலர் ஒட்டுநர்



( ஒரு முறை சிக்னலில் மாட்டிக் கொண்டு பார்த்திபனிடம் பட்ட பிறகு வடிவேலு சிக்னல் விழுவது போல் தெரிந்தால் போதும், பத்தடி தொலைவில் நின்று விடுவார். பார்க்கும் ட்ராபிக் போலீஸ் எல்லாம் பார்த்திபன் போல் தெரிந்தது. இந்நிலை மீண்டும் அதே மவுன்ட் ரோட் சிக்னலில் பார்த்திபன் நிறுத்துகிறார்.)

பார்த்திபன் : வண்டிய நிறுத்து..
வடிவேலு : அடபாவி... மறுபடியும் நீயா...?

பார்த்திபன் : நானே தான்..!
வடிவேலு : இப்ப சிக்னல ஒழுங்க தானே வந்தேன்... எய்யா நிக்க சொன்ன...?

பார்த்திபன் : சும்மா... பொழுது போகல... பேச்சு துணைக்கு ஆள் வேணும் அதான் நிறுத்துனேன்.
வடிவேலு : இது உன்னகே கொஞ்சம் ஓவரா இல்ல.. பேச்சு துணைக்கு ஆள் வேணும்னா உன் பக்கதுல இருக்குற போலீஸ்கார கிட்ட பேசுறது... வண்டியில போறவன நிறுத்தி பேசனும் சொல்லுற... சின்ன புள்ளதனமா விளையாட்டா இருக்கு...

பார்த்திபன் : சரி அதெல்லாம் இருக்கட்டும்... லைசன்ஸ் எடு..
வடிவேலு : பேச்சு துணைக்கு நிறுத்துனேன்னு சொல்லிட்டு இதெல்லாம் கேக்குற..

பார்த்திபன் : வெட்டியா பேச முடியுமா...! எதோ உன் கிட்ட இருக்குற லைசன்ஸ், ஆர்.சி பூக், இன்ஷூரன்ஸ் எடுத்து காட்டினா அத பத்தி பேசலாம்.
வடிவேலு : உனக்கு பயந்து வண்டி ஒட்டும் போது சிக்னல் விழுது தெரிஞ்சதும் பத்தடி தூரம் வண்டி நிறுத்துறேன்... என்னையே ரவுட் கட்டி ஏன் புடிக்கிற...?

பார்த்திபன் : நா கேட்டது எடுக்க போறிய இல்லையா...?
வடிவேலு : சரி.. தரேன்... ஆள விடமாட்ட... இந்தா என் வண்டி இன்ஷூரன்ஸ், ஆர்.சி பூக், லைசன்ஸ்... போதுமா..

பார்த்திபன் ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்கிறான்.
வடிவேலு : எல்லா சரியா இருக்கா.. நான் கிளம்புறேன்..

பார்த்திபன் : இரு.. பைன் கட்டிடு போ...
வடிவேலு : சொந்தக்கார வீட்டுல சொல்லுற மாதிரி பேசுற... எல்லா பேப்பரும் சரியா இருக்குல..

பார்த்திபன் : அப்படினு யார் சொன்னா... இன்ஷூரன்ஸ் நேத்தோட லாப்ஸ் ஆயிடுச்சு...
வடிவேலு : என்னது நேத்தோட முடிஞ்சு போச்சா... ( இன்ஷூரன்ஸ் பேப்பரை பார்க்க) அட ஆமா... நல்ல வேல நியாபகம் படுத்துன.. இப்போவே போய் ரென்யூ பண்ணிடுறேன்..

பார்த்திபன் : உனக்கு நியாபகம் படுத்த நான் என்ன உன் பி.ஏவா... ரென்யூ பண்ணாததுக்கு பைன் கட்டு.
வடிவேலு : யோவ்.. ஒரு நாள் தானே... ரென்யூ பண்ணிட்டு வந்து உனக்கு காட்டுறேன்

பார்த்திபன் : அப்படியா.... சரி லஞ்சமா அம்பது ரூபா கொடுத்திட்டு போ..
வடிவேலு : இத முன்னேடியே கேக்க வேண்டியது... இதுக்கு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு... இந்த வச்சிக்கோ.. நா போகட்டா..

பார்த்திபன் : சரி போ..
வடிவேலு : ( அப்பாடா...எதோ அம்பது ரூபாவோட போச்சு... ஆயிரம், இரண்டாயிரம் சொன்ன.. கையில் பணம் கூட இல்ல )

மவுட் ரோட் ப்லை ஓவரில் இருந்து கிளம்பிய வடிவேலும் தேனாம்ப்பேட்டை சிக்னலில் ட்ராபிக் போலீஸ் நிறுத்துகிறார்.

வடிவேலு : யோவ்... சிக்னலுக்கு சிக்னல் ஏன்ய்யா வண்டிய நிறுத்துறீங்க...
தேனாம்ப்பேட்டை போலீஸ் : மவுன்ட் ரோட் போலீஸ் போன் பண்ணி உன் வண்டிய நிறுத்த சொன்னாரு.. அத நிறுத்துனேன்.

வடிவேலு : இப்ப தான் மவுன்ட் ரோட் போலீஸ்க்கு பணம் கொடுத்தேன்.. ஒரு வேல ஆவனா இருப்பானோ...?
பார்த்திபன் பைக்கில் வந்து அங்கு இறங்குகிறான்.
வடிவேலு : அவனே தாய்யா...

பார்த்திபன் : என்னப்பா பிரச்சனை
வடிவேலு : நீ தான் பிரச்சன.. போன் பண்ணி வண்டிய ஏன் நிறுத்த சொன்ன...?

பார்த்திபன் : ( தேனாம்ப்பேட்டை போலீஸ்யிடம்) நீ போப்பா நான் பார்த்துக்கிறேன்... (வடிவேலுவிடம்) உன் லைசன்ஸ், இன்ஷூரன்ஸ் பேப்பர் எல்லாம் எடு...
வடிவேலு : நினச்சேன்... என்னடா வம்பு பண்ணாம அம்பது ரூபா வாங்கிட்டு விட்டானே சந்தோஷப்பட்டேன்.. என்ன விட மாட்ட.! மனசாட்சி தொட்டு சொல்லு போன சிக்னல தானே எல்லாத்தையும் பார்த்த..

பார்த்திபன் : அது போன சிக்னல்... இது இந்த சிக்னல்.
வடிவேலு : ( என் பிட்ட எனக்கே போடுறியா..) இந்தா எல்லா பேப்பரையும் இன்னொரு வாட்டி பாரு...

பார்த்திபன் : எதுக்கு இன்னொரு வாட்டி பார்த்து டைம் வேஸ்ட் பண்ணுறது.. இன்ஷூரன்ஸ் நேத்தோட முடிஞ்சு போச்சு... அதுக்கு பைன் கட்டு..
வடிவேலு : அதுக்கு தான் போன சிக்னல அம்பது ரூபா வாங்குனல்ல...

பார்த்திபன் : அது போன சிக்னல்... இது இந்த சிக்னல்.
வடிவேலு : (மறுபடியும் அதே பிட்டா...) இப்ப என்ன தான் வேணும்.

பார்த்திபன் : அம்பது பணம் கொடுத்திட்டு போ...
வடிவேலு : போன சிக்னலையே நூறு ரூபா கேட்டா கொடுத்திருப்பேனே... எதுக்கு இன்னொரு சிகனல்லுக்கு வந்து அம்பது ரூபா வாங்குற..

பார்த்திபன் : இப்ப தரியா... இல்ல கேஸ் எழுத சொல்லவா..
வடிவேலு : என்னப்பா மிரட்டுறியே... இந்த அம்பது ரூபா... அடுத்த சிக்னல்ல வந்து நீ என்ன தொந்தரவு கொடுக்க மாட்டியே..

பார்த்திபன் : கவலப்படாத... அடுத்த சிக்னல்ல நா உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன் போதுமா..
வடிவேலு : ( அப்பாடா... எதோ நூறு ரூபாவோட போய் தொலையுது )

அடுத்து நந்தனம் சிக்னலில் வடிவேலு இன்னொரு ட்ராபிக் போலீஸால் நிறுத்தப்படுகிறார்.

வடிவேலு : (அடுத்தபிரச்சன வந்திடுச்சு...) இப்ப தான் இரண்டு சிக்னல்ல போலீஸ் நிறுத்துனாங்க... நீ வேறையா...?

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : அம்பது ரூபா லஞ்சம் கொடுத்திட்டு போ...!
வடிவேலு : யோவ்.. இப்ப தான் வண்டிய நிறுத்த்தினேன்.. எந்த பேப்பரும் பார்க்காம லஞ்சம் கேக்குற...

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : முன்னாடியே மவுன்ட் ரோட் போலீஸ் பார்த்திபன் கிட்ட இருந்து ஒயர்லஸ் இன்பர்மேஷன் கொடுத்திருடாரு...
வடிவேலு : என்னனு கொடுத்திடாரு...

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : உன் இந்ஷூரன்ஸ் லாப்ஸ் அயிடுச்சு சொன்னாரு..
வடிவேலு : அடபாவிங்களா.... களவாளி பசங்கல புடிக்குறது ஒயர்லஸ் யூஸ் பண்ணமா... அப்பாவி என்ன புடிக்கிறது யூஸ் பண்ணுறீங்க..

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : பணம் எடு...
வடிவேலு : கொடுத்து வச்ச மாதிரி கேக்குற... நான் பேசாம பைன் கட்டுறேன்...
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : அது எல்லாம் முடியாது... லஞ்சம் வாங்க சொல்லி தான் எனக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க..
வடிவேலு : லஞ்சம் வாங்குறதுக்கு எல்லாம் ஆர்டர் போடுறாங்களா … கொடுக்கலைனா... ?
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : வண்டிய வாங்கி வச்சிக்க சொன்னாங்க...
வடிவேலு : ஆ ஆ ஆ... பாவி மக்கா... இப்படியும் ஒரு பொலப்பா...
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : நீ ரொம்ப பேசுற... வண்டிய கொடு...
வடிவேலு : இல்லப்பா.. இல்லப்பா.. இந்த அம்பது ரூபா... ( காலையில யாரு முகத்துல முழிச்சேனோ.. எனக்கு நேரமே சரியில்ல...)

மூன்று சிக்னலிலும் அம்பது ரூபா லஞ்சம் கொடுத்த வடிவேலுவின் விதி விடவில்லை. அதான் பார்த்திபன் விடவில்லை. மீண்டும் சைதாப்பேட்டை சிக்னல் பார்த்திபனால் மடக்கப்படுகிறான்.

பார்த்திபன் : நான் சொன்ன மாதிரி போன சிக்னல்ல உன்ன தொந்தரவு பண்ணல பார்த்தியா...
வடிவேலு : யோவ்... விரட்டி விரட்டி வெட்டுவாங்கனு கேள்வி பட்டிருக்கேன்... விரட்டி விரட்டி லஞ்சம் வாங்குறத இப்ப தான் பார்க்குறேன்... பேசமா மவுன்ட் ரோட்டுலைய பைன் கட்டிருப்பேன். உங்களுக்கு லஞ்ச கொடுத்தே என் சம்பள பண போய்யிடும் போலிருக்கு...

பார்த்திபன் : சரி... பைன் கட்டனும் ரொம்ப ஆச படுற.. உன் ஆசைய ஏன் கெடுக்கனும்... ஆயிரம் ரூபா பைன் கட்டு...
வடிவேலு : அடபாவி... மூனு சிக்னல் லஞ்சம் வாங்குனது இல்லாமா... இப்போ அயிரம் ரூபா பைன் கட்ட சொல்லுறீயே.. இது உனக்கே நியாயமா தெரியுதா...

பார்த்திபன் : லஞ்சம் வாங்குறது எங்களுக்காக... பைன் கட்ட சொல்லுறதுக்கு கவர்மென்ட்காக...
வடிவேலு : இதுல பன்ச் டைலாக் வேற… அப்படினா... முன்னாடியே பைன் கட்ட சொல்ல வேண்டியது தானே

பார்த்திபன் : நீ நேர்மையான ஆளா இருந்த என்ன சொல்லிருக்கனும்... "இல்ல சார் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன்.. பேசாம பைன் கட்டுறேன் சொல்லிருக்கனும்"... இப்படி செய்யாம உன் புத்தி எங்க போச்சு...?
வடிவேலு : ( வ்...வ்..வ்.வ்) என் கிட்ட பணம் கூட இல்ல. இந்தா கிரடிட் கார்டு...

பார்த்திபன் : நாங்க லஞ்சம் வாங்குறதுக்கு மட்டும் தான் கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணிப்போம்.. கோர்ட் பைன் எல்லாம் பணம் மட்டும் தான் கட்டனும்
வடிவேலு : அடபாவி... எத்தன வாட்டி நீ கேக்கும் போதெல்லாம் பணம் கொடுத்திருக்கேன்... கொஞ்சம் மாச்சி கருண காட்டுறியா.

பார்த்திபன் : சரி... இவ்வளவு கெஞ்சுறதுனால... உன் வண்டிய இங்கையே விட்டு போய்டு...
வடிவேலு : விட்டு எங்க போறது...?

பார்த்திபன் : இந்த வண்டிக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லனு சொல்லிடு... பைன் கட்ட தேவையில்ல...
வடிவேலு : என்ன ஒரு புத்திசாலிதனம்... ஆயிரம் ரூபா லஞ்சத்துக்கு மூப்பதாயிரம் ரூபா வண்டிய விட்டு போ சொல்லுற... நல்ல இருக்கு.. நா பைன் கட்டுறேன் போதுமா...

பார்த்திபன் : பணம் இல்லனு சொன்ன...
வடிவேலு :(கோபமாக) போய் சொன்ன போதுமா.... நீ எல்லாம் உண்மைய மட்டும் பேசுற மாதிரி... இந்த ஆயிர ரூபா... எங்க போய் கட்டனும்

பார்த்திபன் : பைன் கட்டுறது ஒரு பக்க இருக்கட்டும்... பணம் வச்சிக்கிட்டு இல்லனு போலீஸ் கிட்ட போய் சொன்னியே அதுக்கு ஒரு கேஸ் எழுதனுமே....!
வடிவேலு : டேய்... இப்படியே பேச்சு கொடுத்து... உலகத்துல இருக்குற எல்லா தப்பையும் என் மேல கட்டிடுவியே... உன் கூட குடும்ப நடத்த என்னால முடியாது. நா ஜெயிலுக்கே போறேன்...

Friday, August 8, 2008

குண்டக்க மண்டக்க - 3

காட்சி : பார்த்திபன் - ட்ராபிக் போலீஸ், வடிவேலு - டூ வீலர் ஒட்டுநர்

வடிவேல் வேகமாக மவுன்ட் ரோட் சிக்னலில் நிறுத்தாமல் வண்டி ஓட்டிவர, அதை ட்ராபிக் போலீஸ் பார்த்திபன் நிறுத்திகிறார்.

பார்த்திபன் : நிறுத்து.... வண்டிய ஒறங்கட்டு...
வடிவேலு : ( திரு திரு... முழியுடன்....)

பார்த்திபன் : ஏன்டா... சிகனல்ல வண்டிய நிறுத்தல...
வடிவேலு : சாரி..சார்... அவசரமா போகனும்...

பார்த்திபன் : அவசரம்னா ... பாத்ரூம் போ.. ஏன் சிக்னல்ல நிக்கல...
வடிவேலு : சார்... அவசரமா ஒரு இடத்துக்கு போனும்

பார்த்திபன் : அவசரமா போனும்னு சொல்லிட்டு… ஏன்டா ! என் கிட்ட பேசிக்கிட்டு இருக்க..
வடிவேலு : நீங்க தான் என்ன நிருத்தி ஒறங்கட்ட சொன்னிங்க...

பார்த்திபன் : ஓறம்மா நிக்க தெரிஞ்ச உனக்கு....சிக்னல்ல ஏன்டா நிறுத்த தெரியல...
வடிவேலு : அதான் சொன்னல்ல சார்...அவசரமா போனும்...

பார்த்திபன் : அவசரம்னா ... பாத்ரூம் போ.
வடிவேலு : (வ்வ்வ்வ்)... ஒரு இடத்துக்கு போனும்ப்பா...

பார்த்திபன் : போனும்னு சொல்லிட்டு... ஏன் பேசி டைப் வேஸ்ட் பண்ணுற..
வடிவேலு : ( ஆ.. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துல இருந்தே பேசுறானே....) உங்களுக்கு என்ன சார் வேணும்

பார்த்திபன் : சிக்னல்ல வண்டி ஏன் நிறுத்தல்ல.... அதுக்கு பதில் சொல்லு
வடிவேலு : அட பாவி... இவ்வளவு நேரம் அத தான்டா சொன்னே... என்ன ஏய்யா படுத்துற

பார்த்திபன் : சரி...சிக்னல்ல நிறுத்தாதது பைன் கட்டு
வடிவேலு : எவ்வளவு கட்டனும்...?

பார்த்திபன் : ஆயிரம் ரூபா..
வடிவேலு : ஏய்..யார ஏமாத்துற... சிக்னல்ல வண்டி நிறுத்தலைன்னா நூறு ரூபா தான் பைன்... என்ன பார்த்தா கேன பைய மாதிரி தெரியுதா...

பார்த்திபன் : நா அதுக்கு கேஸ் போடல்ல... வாண்டிய ஓட்டும் போது செல்போன் பேசுனதா கேஸ் எழுதியிருக்கேன்
வடிவேலு : என் கிட்ட.. செல்போன்னே இல்லையடா...

பார்த்திபன் : செல்போனே இல்லன்னா.. புதுசா வாங்கு... இப்போ பைன கட்டு...
வடிவேலு : முடியாது... கோர்ட்க்கு போய் ஜட்ஜ் முன்னாடி … என் கிட்ட செல்போன் இல்லனு சொல்லுவேன்...

பார்த்திபன் : வர வழியா.. செல்போன் தூக்கிப் போட்டேனு நான் சொல்லுவேன்... இல்ல நீ வண்டியில வரும் போது ஸ்கூட்டியில போர பொண்ண கிண்டல் பண்ண சொல்லி பொய் சாட்சி வச்சு… ஈவ் டிசிங் கேஸ்ல உள்ள தள்ளுவேன்... உனக்கு வசதி எப்படி ?
வடிவேலு : யோவ்.. உனக்கு என்ன பாவம் பண்ண.. ஊரு உலகத்துல எத்தன பேரு சிக்னல்ல வண்டிய நிறுத்தமா போறான்... நான் தானா உனக்கும் கிடைச்சேன்...

பார்த்திபன் : யாரு ஏமாந்தவங்களோ அவங்கள தான் நாங்க புடிப்போம்.. என்ன சொல்ற..?
வடிவேலு : இந்த அம்பது ரூபவ லஞ்சமா வச்சிக்கோ..

பார்த்திபன் : டாய்... யாருக்கு லஞ்சம் கொடுக்க பாக்குற.. ஒரு நேர்மையான அதிகாரிய
வடிவேலு : யாரு நீ நேர்மையான அதிகாரி...?

பார்த்திபன் : ஒரு நேர்மையான அதிகாரிய கலங்க படுத்த பாக்குரியா.. இது இன்னொரு கேஸ் எழுதுறேன்..
வடிவேலு : உனக்கு என்னய்யா வேணும்... ஏன் உசுர வாங்குற...

பார்த்திபன் : ஒழுங்க பைன கட்டு...
வடிவேலு : இப்படி ரௌடினதமா ஆயிர ரூபா பைன் கட்ட சொல்லுறியே... உனக்கே நியாயமா இருக்கா...?

பார்த்திபன் : போலீஸ்கார பார்த்து 'ரௌடி' திட்டுற... அரசு காவல் அதிகாரி மதிக்காதது... இன்னொரு கேஸ் எழுதுறேன்...
வடிவேலு : (புதுசு.. புதுசா... டெக்னிக் கண்டு பிடிக்கிறாய்யா...) சரி... இந்தா ஆயிரம் ரூபா....

பார்த்திபன் : என்னது... ஆயிரம் ரூபா கொடுக்குற.. மூவாயிரம் ரூபா பைன்.
வடிவேலு : எப்படி..???

பார்த்திபன் : சிக்னல்ல செல்போன் பேசுனது, போலீஸ்க்கு லஞ்ச கொடுக்க முயற்சி பண்ணது, அப்புறம் போலீஸ ரௌடினு சொன்னது... மூனு கேஸ்சுக்கு மூவாயிரம் ரூபா...பைன்..
வடிவேலு : அடபாவி... ஒரு சின்ன கேஸ்ச வைச்சு பெரிய பெரிய கேஸ்ச எல்லாம் தன் தலைமேல கட்டுரானே... இப்படி பண்ணுவ தெரிஞ்சிருந்தா அப்போவே ஆயிரம் ரூபா கொடுத்திருப்பேன்..

பார்த்திபன் : என்ன கொடுக்குறியா.... ஜெயிலுக்கு போறியா...
வடிவேலு : என் கிட்ட ஆயிரம் ரூபா தாய்யா இருக்கு.. வேற எதுவும் இல்ல...

பார்த்திபன் : உண்மைய சொல்லு... வேற எதுவுமில்ல....
வடிவேலு : கிரடிட் கார்ட் இருக்கு..

பார்த்திபன் : நோ பிராப்ளம்... நாங்க எல்லா கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணுவோம்
வடிவேலு : என்னது ?? கார்ட் அக்ஸப்ட்டா....????

பார்த்திபன் : அமா... இப்போ நிறைய பேர் பணம் கையில வச்சிக்கிறாது இல்ல... அவங்க வசதிக்காக நாங்க கிரடிட் கார்ட் ஸ்வைப்பிங் மிஷின் வாங்கிட்டோம். இனிமே நீங்க லஞ்சம், அன்பளிப்பு, பைன் எல்லாம் கிரடிட் கார்ட்ல கூட கட்டலாம். கூடிய சிக்கிரத்துல ‘ஆன் – லைன்ல’ கூட கட்டுறதுக்கு ஏற்பாடு செய்ய போறோம்...
வடிவேலு : என்னைய்யா... பகல் கொள்ளையா இருக்கு... லஞ்சம் வாங்குறத மீட்டிங் போட்டு யோசிப்பிங்களோ ?

பார்த்திபன் : மறுபடியும் போலீஸ திட்டுற...
வடிவேலு : இல்ல.. இல்ல... இந்தாப்பா கிரடிட் கார்டு... மூவாயிரத்துக்கு என்டிரி போட்டு கொடு...

பார்த்திபன் கார்ட்டை வாங்கி கிரடிட் கார்ட் மிஷினில் தெய்கிறார்.

பார்த்திபன் : இந்தா.. சிலிப்பல கையெழுத்து போடு.
வடிவேலு : என்னது... இது மூவாயிரத்தி அம்பது போட்டிருக்க...

பார்த்திபன் : நாங்க கட்ட வேண்டிய.. சர்வீஸ் டாக்ஸ், இன்கம் டாக்ஸ் சேர்த்து என்டிரி போட்டிருக்கேன்.
வடிவேலு : தினிசான லஞ்சமா இருக்கு...? இன்கம் டாக்ஸ் சேர்த்து லஞ்சம்மா...?? ரோம்ப முன்னேறிடிங்க..

பார்த்திபன் : இப்போ கையெழுத்து போடுறீயா... இன்னும் ஏதாவது பைன்...
வடிவேலு : கைழுத்து போடுறேன்... ஆளா விடுடா சாமி...

பார்த்திபன் : ம்ம்... இந்த மாசம் லஞ்சம் வாங்குற டார்கெட் முடிஞ்சது....
வடிவேலு : என்னது... லஞ்சம் வாங்குறதுக்கு டார்க்கெட்டா..???

LinkWithin

Related Posts with Thumbnails