
உலகத்தை ஆள வேண்டும் என்று ஹிட்லர் நினைத்ததால் இரண்டாம் உலகப்போர் தோடங்கியது. ஹிட்லர் முன்பே உலகத்தை ஆள வேன்டும் என்று நினைத்தவன் தான் அலெக்ஸாண்டர். தன் லட்சியத்தில் 75 சதவீதம் வெற்றியை கண்டவன். ஹிட்லரிடம் இல்லாத அன்பு, போர் வீரர்களை மதித்தல், பெண் ஆசை ஆற்றவன் பலரின் பாராட்டுகளுக்கு உரியவன் தான் அலெக்ஸாண்டர்.
அவன் படையில் இருக்கும் வீரர்களை ஒவ்வொருவரையும் பெயரை சொல்லித்தான் அழைப்பான். அவன் படை வீரர்களின் பெயர்கள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. படைகளுக்கு கட்டளையிட்டு அவர்களின் வெற்றியை கொண்டாடுபவன் அல்ல...அலெக்ஸாண்டர். தன் படையில் முதல் வீரனாக இருந்து அவர்களை வழி நடத்தி போர்ப்புரியும் உண்மையான வீரன் அவன். தான் இறந்தாலும் போரை தொடர்ந்து நடத்த வீரர்களுக்கு ஆணையிட்டவன். பாராட்டு விழாவில் தன் வீரர்கள் எப்படி எதிரியை வீழ்த்தினார்கள் என்பதை போரிட்டவர்களை விட தெளிவாக சொல்வான்.
அவன் இருபது வயதில் இருந்து போர்களம் தான் அவன் வீடு. போர் வாள் தான் அவன் மனைவி. உலகத்தையே ஒரு குடைக்குள் கொண்டு வருதே அவன் சிந்தனை.மசடோனியா சரித்திரத்தில் தன் பெயர் உலகம் முழுக்க உச்சரிக்க வேண்டும் என்பது தன் அவனது லச்சியம்.
எந்த ஒரு ரஜ்ஜியமும் பெண்ணால் கவிழ்ந்து விடும் என்பார்கள். எத்தனையோ பெண்கள் அவனை மயக்க நினைத்தும், அதற்கெல்லாம் மயங்காதவன் தான் அலெக்ஸாண்டர். அதனால் தான், அலெக்ஸாண்டர் இறக்கும் போது மன்னனாகவே இறந்தான்.
அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம் பிளிப்பை விட அலெக்ஸாண்டருக்கு வீரம்,விவேகம், திறமை அதிகம். அலெக்ஸாண்டர் தந்தையுடன் சில மன கசப்பு இருந்தாலும் அவர்க்கு போர் போழுதில் மிக உதவியாக இருந்தான். ஆனால், பிளிப்யின் மரணம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. ஒரு சிலர் அலெக்ஸாண்டருக்கும் பிளிப் கொலையில் பங்கு இருக்க வேண்டும் என்பார்கள். இன்னும் ஒரு சிலர் அலெக்ஸாண்டரின் அம்மா ஒலிம்பஸ்க்கு சம்மந்தம் உண்டு என்பார்கள். உண்மையை சொல்லப்போனால் பிளிப் இருந்தால் கூட அலெக்ஸாண்டரை போல் இப்படி சாதித்து இருக்க முடியாது. சிறு வயதில் அரசு போருப்பு ஏற்று இப்படி சாதனையை நிகழ்த்தியதில் அலெக்ஸாண்டருக்கு நிகர் அலெக்ஸாண்டர் தான்.
அலெக்ஸாண்டரை கொல்ல அவன் படையில் ஒரு சிலர் இருந்தார்கள். துரோகிகளை தன்னுடன் வைத்துக் கொண்டு பல வெற்றிக்களை கண்ட அலெக்ஸாண்டர் தன்னுடைய முப்பத்திண்டாவது வயதில் இறந்தார். சரித்திர நாயகன் அலெக்ஸாண்டரின் மரணம் இன்னும் இந்த உலகிற்கு மர்மமாகவே உள்ளன. அவர் வியாதியில் இறந்தாரா ? அல்லது குடி போதையில் இறந்தாரா ? இல்லை விஷம் கொடுத்து கொள்ளப்பட்டாரா ? என்று எந்த குறிப்பும் இல்லை. இந்த உலகத்தை ஆள நினைத்த உண்மையான வீரன் தான் அலெக்ஸாண்டர் என்பது மறுக்க முடியாத உண்மை.