தலைப்பை படித்ததும் இந்தியா வல்லரசு நாடாகிவிட்டது என்று நினைத்தீர்களா...!! இல்லை... இந்தியா 20- 20 உலக கோப்பை வெற்றி பெற்றதை தான் சொன்னேன். 6 மாதம் முன்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் படு தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளி ஏறிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர்கள் புது போலிவுடன் 20- 20 உலக கோப்பையில் இறுதி சுற்றுக்கு நுழைந்து இரண்டு அணியகளும் மிக சிறப்பாக விளையாடினார்கள். தோல்வி பெற்ற பிறகு... இந்திய அணிக்கு மாபெரும் வெற்றி !!!
அப்தூல் கலாம் கண்ட கனவு இது தான். தோல்வியின் போது துவண்டு போகாமல் இளைஞர்கள் துடித்து எழுந்து வெற்றி கதவை நோக்கி ஓட வேண்டும். நகைச்சுவைக்காக கிரிக்கெடை அப்தூல் கலாம் கனவோடு இணைத்து பேசினாலும், கனவு மெய்பட போராட்டம் மிகவும் முக்கியம். அப்தூல் கலாம் அவர்கள் எட்டு பேர் தேர்வாகும் தேர்வில் ஒன்பதாவது இடம் தான் அவருக்கு கிடைத்தது. தோல்வியின் போது அவர் துவண்டு இருந்தால், இன்று நாள் இதழ்களில் தலைப்பு செய்தியாக இருந்திருக்க மாட்டார்.அப்தூல் கலாம் - " தோல்வியின் போது தன் வெற்றி இது இல்லை, தனக்காக வேறு வெற்றி கத்துக் கொண்டு இருக்கிறது" என்று நினைத்தார்.
தோல்வியின் போது வரும் கோபமும், வேதனையும் இருந்தால் அடுத்த வெற்றியை நாமே தள்ளி வைக்கிறோம். தோல்வியில் வெற்றி பெற்றவர்களில் அப்தூல் கலாம் அவர்கள் முன் உதாரணம்.
( உலக கோப்பை தோல்வியின் போது தோனி வீட்டை உடைத்தவர், இப்பொது தோனிக்கு வீடு கட்டி கொடுப்பார்களா...!! )