வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, August 8, 2018

புதிய பராசக்தி

இந்த நீதிமன்றம் பல வழக்குகளை கண்டுள்ளது, புதுமையான மனிதர்களை கண்டுள்ளது. இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல… 

வழக்காடவந்தவனும் நானும் புதுமையாவன் அல்ல… கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன், கடவுள் இல்லை என்று கூறினேன். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். இப்படியெல்லாம் குற்றச் சாட்டப்பட்டிருக்கிறேன். 

நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை நிச்சமயாக இல்லை.

கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன். அனைத்து சாதியினர் புன்னியம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்ல. கோயில் ஒரு சாதியினருக்கு சொத்தாக மாறிவிடக்கூடாது என்பதற்காக. 

கடவுள் இல்லை என்று கூறினேன். அவர் எனக்கு அருள் வழங்காததற்காக அல்ல. கடவுள் என்ற பெயரில் பக்தியை வியாபாரமாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக… 

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். பெண்களின் வாக்குவங்கிகாக அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக… 

உனக்கு ஏன் அக்கரை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கரை. என்று கேட்பீர்கள். 

நான் பாதிக்கப்பட்டவில்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட இல்லை. 

நடிப்பு என்பீர்கள். என் நடிப்பிலும் நல்ல எண்ணமே கலந்துள்ளது. 

ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல. என்னை குற்றவாளி என்கிறீர்களே… இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும். 



பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன. 

தென்றலை தீண்டியதில்லை நான். தீயை தாண்டியிருக்கிறேன். 

கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே இந்த திருவாரூலிலே பிறந்தவன் நான்.

தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா? சென்னை என் உயிரை வளர்த்தது. அண்ணாவின் தம்பியாக்கியது. ஐந்துமுறை முதல்வராக்கி அழகு பார்த்தது. ஆறாம் முறை முதல்வராக்கி காவிகளுக்கும், பச்சை இலைக்கும் சவாலாக இருக்கலாம் என்று தேர்தலில் போட்டியிட்டேன். 

தம்பியாக இருந்த ஒருவன் ம.ந.கூட்டனி என்ற பெயரில் எதிர்கட்சி அம்மையாரை முதல்வராக்கினார். அவர்கள் சரியான ஆட்சி செய்தார்களா? செய்யும் ஒவ்வொரு வேலையும் லஞ்சத்தை தட்சணையாக கேட்டார்கள்.

மருத்துவனையில் அந்த அம்மையார் அனுமதிக்கப்பட்ட எல்லாவற்றையும் மர்மமாகவே நடத்தினர். முதல்வர் உயிரோடு இருக்கிறாரா என்ற மக்களின் கேள்விக்கும் பதிலளிக்காமல் இருந்தார்கள். 

முதல்வர் மரணத்திற்கு பிறகு முதல்வர் பதவியை பச்சை குழந்தை பந்தை தூக்கி விளையாடுவது போல் விளையாடினார்கள். இந்தியளவில் தமிழனின் மானத்தை பறக்கவிட்டார்கள். கூவத்தூர் ரெஸார்ட்டில் குடித்தனம் நடத்தினார்கள். 

’திராவிடம்’ என்ற பெயரில் சுயமரியாதை வளர்த்து ஆட்சி செய்தவன் முன் அடிமைகள் மத்தியிலிருப்பவர்களுக்கு அடிப்படிந்தனர். GST, Sterlite, NEET, எட்டு வழி சாலை என்று மக்கள் பிரச்சனைக்கு மௌனமாக இருந்தனர். 

மோடி வருகைக்கு கருப்பு கொடிக்காட்டினோம், 2ஜி வழக்கை காட்டி பயமுறுத்தினர். வழக்கில் வென்றெடுத்தோம். செயல் தலைவரை ஆட்சியை கலைக்காததால் செயல்ப்படாத தலைவர் என்றனர். 

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார். 

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை. அதுவும் என் வழக்குதான். தமிழ்நாட்டு மக்களின் வழக்கு.

தமிழ் மொழிக்காக வாழ்க்கை முழுதும் போராடினேன். வங்கியிலும், தேர்விலும் ஹிந்தியை கட்டாயமாக்கினார்கள். போராடினேன். திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கினேன். பெண்களை மானபங்கப்படுத்துவர்களுக்கு அடைக்களம் கொடுத்தார்கள். போராடினேன். 

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேர்தலில் முன்னுரை வழங்கினேன். மாட்டிறைச்சி என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டவர்களை தாக்கினான். போராடினேன். 

விமர்சனங்களுக்கு பதிலளித்து பழக்கப்பட்டவன் நான். கேள்வி எழுப்பும் விமர்சனர்களை மதத்தின் பெயர் கொண்டே அடக்க முயன்றனர். போராடினேன். 

போராடினேன்… போராடினேன்… நான் மடிந்தப் பிறகும் கல்லறை செல்லும் வரை போராடினேன். எனது போராட்டத்தின் கோரிக்கை நிறைவேற்றியிருக்க வேண்டும். சமூக சமநிலை உருவாக்கியிருக்க வேண்டும். அவர்கள் தான் செய்தார்களா ? நான் எதிர்த்ததை அனைத்தும் மீண்டும் கொண்டு வந்தார்கள்.

பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்? வாக்களித்த வாக்காளர்களின் குற்றமா ? நாம் தேர்வு செய்யாதவர்கள் ஆண்டு கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் மக்களின் குற்றமா ? 

சாமியார்களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் காவிகள் குற்றமா? 

இந்த குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகள் குறைய போவதில்லை. 

எனக்கு ஒதுக்குவதாக சொன்ன இரண்டு எக்கர் நிலத்தை பத்திரமாக பாதுகாத்துகொள்ளுங்கள். நாளை தமிழ்நாட்டு மக்கள் இந்த இடத்தை உங்கள் சடலத்திற்கு கூட தராமல் போகலாம்.

அடிமைகளை விரட்டுகள். காவிகள் தானாக திரும்பி செல்லும்…. 

வாழ்க திராவிடம்.

Wednesday, September 20, 2017

கமலின் தனி கட்சி ?

ஒரு காலத்தில் கமல் அரசியலுக்கு வருவார். கமல் தனிக் கட்சி தொடங்குவார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏன் கமலுக்கு கூட இருந்திருக்காது. ஆனால், நடக்கும் நிகழ்வுகளில் பார்த்தால் கமல் அரசியலுக்கு வந்தால் அவர் தொடங்கும் கட்சியின் Agenda என்னவாக இருக்கும் என்பதில் இதை எழுதிகிறேன். 



முதல் Agenda. தேர்தலில் போட்டியிடும் கட்சியாக இருக்காது. அதாவது, அவர் தொடங்கும் கட்சி அரசியல் கட்சியாக இருக்காது. ஒரு இயக்கமாக இருக்கும். 

தேர்தல் அரசியலில் வராததற்கு எதற்காக கட்சி தொடங்க வேண்டும் ? என்ற கேள்வி வரலாம். 

இதே கேள்வியை பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தந்த பதில், “தேர்தல் அரசியல் போட்டியிட்டால், நாம் யாரை எதிர்த்து பேசுகிறோமோ அவர்களோடு சமரசம் செய்துகொள்ள வேண்டியது இருக்கும். அதனால், தனது தி.க இயக்கம் தேர்தல் அரசியலில் போட்டியிடாது” என்றார். இன்று வரை, தி.கவினர் தேர்தலில் பிரச்சாரம் செய்தாலும் எந்த தேர்தலிலும் நேரடியாக போட்டியிட்டதில்லை. 

கமல் தனது பல பேட்டிகளில் இதை தான் குறிப்பிட்டுவருகிறார். “தமிழகத்தில் ஆளும் வர்க்கத்தை கேள்விக் கேட்கும் சக்தி வாய்ந்த இயக்கம் இல்லை. தமிழகத்தில் பெரியார் போன்ற தலைவர் இல்லை”. 


இரண்டாவது Agenda. மக்களை ஆளும் அதிகாரம் தேவையில்லை. மக்களோடு மக்களாக அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேவை. 

கமல் அரசியல் அதிகாரத்தை விரும்புபவராக தன்னை காட்டியதில்லை. மற்ற நடிகர்களை போல் தனது படத்தில் ஏழை பங்காளனாகவோ, நல்லவனாகவோ, உத்தப்புத்திரனாகவோ காட்டிக்கொண்டதில்லை. தனது சொந்த வாழ்க்கையை கூட திறந்தப் புத்தகமாகவே வாழ்ந்திருக்கிறார். கட்சி தொடங்கி முதல்வர் ஆசையெல்லாம் கமலுக்கு இருக்காது என்று நம்புகிறேன். 

கமல் தொடங்கும் இயக்கம் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை கேள்வி கேட்கும் முதல் குரலாக இருக்கும் என்று கூறலாம். இன்று பலர் தங்கள் அரசியல் அதிகார அதிருப்தியை சமூக வலைதளங்கள் எதோ ஒரு வகையில் பதிவு செய்துவருகிறார்கள். அதை ஒருங்கிணைக்கும் சக்தி ஒன்று தேவைப்படுகிறது. அதை கமல் மேற்கொள்ளலாம். 


மூன்றாவது Agenda. எப்போதும் கமல் சொல்வது தான். ஒரு இந்திய குடிமகனாக சரியாக வரி கட்ட வேண்டும். தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டும். 

கமல் தொடங்கவிருக்கும் இயக்கம் இதை முன்மொழியும். அதற்கானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். 

கமல் தேர்தல் அரசியல் தவிர்த்து அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் இயக்கமாக இருந்தால் பலர் அவருக்கு ஆதரவாக வருவார்கள். அவரும் தேர்தல் அரசியலில் குதிக்கும் கட்சியாக இருந்தால் பத்தோடு பதினொன்றாக தான் அவர் இருப்பார். 

** 

ஆக கமல் தொடங்கும் இயக்கம் (கட்சி அல்ல)….. ஆளும் கட்சி யாராக இருந்தாலும் (அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க இன்னும் பல) அவர்களை கேள்வி கேட்கும் மக்கள் குரலாக இருக்கும் இயக்கத்தை தான் தொடங்குவார் என்பது என் கணிப்பு. 

எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் அரசியலில் கோடிக்கணக்காக பணம் செலவு செய்ய வேண்டும். பொதுகூட்டம், பிரச்சாரம், போஸ்டர் என்று ஆயிரத்தெட்டு செலவுகள் இருக்கிறது. அதற்கு பல கோடிகள் தேவைப்படுகிறது.

கமல் அப்பழுக்கற்ற, 100% உண்மையான கலைஞன். கோடிக்கணக்கான பணம் கிடைத்தால் தேர்தலுக்கு செலவு செய்யமாட்டார். ’மருதநாயகம்’ படம் தான் எடுப்பார்.

Friday, June 30, 2017

அண்ணன் எஸ்.வி.சேகருக்கு திறந்த மடல் !!

மதிப்புக்குரிய அண்ணன் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, 

சிறு வயதில் உங்கள் நகைச்சுவையால் ஈர்க்கப்பட்ட ரசிகனின் மடல். தங்களின் அரசியல் பார்வை என் பார்வைக்கும் ஒத்துப்போகாத காலத்தில் கூட தங்களின் நாடகத்தை வாணி மஹால், ராணி சீதை ஹாலில் காசுக் கொடுத்துப்பார்த்திருக்கிறேன். ஆனால், சமிபக்காலமாக தங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சி சார்பாக பேசுவதாக நினைத்து தங்களின் சாதியை தூக்கிப்பிடித்து கட்சிக்கு துரோகம் செய்வதாக எனக்குப்படுகிறது. அதனால் திறந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.



 * 

1. 

’ஒரு முறை உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பிராமண இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கையே இருந்துவிடுங்கள். இந்தியா வராதீர்கள். பிராமணர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது’ என்று சொன்னீர்கள். இதே கருத்தை அமீர்கான் வேறு மாதிரியாக முன் வைத்தப்போது ஊடகம் அவரை வறுத்தெடுத்தது. ஆனால், தாங்கள் சார்ந்த பா.ஜ.க கட்சிக்கு எதிரான கருத்து என்று கூட பார்க்காமல் கூறியிருக்குறீர்கள். இதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. 

 2. 

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பல பிரச்சனைகள், பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தாங்கள் சுவாதி பிராமணப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அந்த கொலை வழக்கை குறித்து பேசினீர்கள். 

3. 

தற்போதைய பிரச்சனை எடுத்துக்கொள்வோம். வெ.மதிமாறன் டி.வி விவாதத்தில் மத்திய அரசை கண்டித்து பல கருத்துகளை கூறியிருக்கிறார். மோடி எதிர்த்து விமர்சித்திருக்கிறார். அதற்காக பொங்காமல் “திரு.நாராயணனை பார்ப்பனன்” என்று கூறியதற்கு பொங்கியிருக்கிறீர்கள். அதற்கான கண்டன வீடியோவும் வெளியீட்டு இருக்கிறீர்கள். தாங்கள் சார்ந்த கட்சியை விட உங்களுக்கு சாதி முக்கியமாக இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்திருப்பதை உங்களால் மறுக்கமுடியாது. 

*
 4. 


 // இப்பொழுதும் என் வீட்டில் சமையல் வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்துக்கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்லர்// என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

எதனால் என் நெருங்கிய நண்பர்கள், நலம் விரும்பிகள் என் ஜாதியினர் இல்லை என்று உங்களால் சொல்ல முடியவில்லை. நீங்கள் நடத்தும் நாடகத்திற்கு ஸ்பான்ஸர் வேறு சாதியிடம் இருந்து வந்திருக்கிறது. அதை குறிப்பிட்டு இருக்கலாமே ? உங்கள் வீட்டு வேலை செய்பவர்கள் பற்றி ஏன் குறிப்பிட வேண்டும் ? உங்கள் ஆதிக்க சாதி சிந்தனை தான் இதைக் காட்டுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா ? 


5. // சுன்னத் பற்றிய கேள்வியை தென் வட மாவட்டங்களில் நீங்கள் நேரில் போய் கேட்க துணிச்சல் உள்ளதா நண்பரே ? “ // என்று கேட்டிருப்பதை பார்த்தேன். 

பல நூற்றாண்டுகளாக கல்வி கற்று அறிவாளி என்று காட்டிக் கொள்ளும் பிராமணர்கள் புத்தியில் இருந்து ‘சாதி’யை நீக்குவதில் தி.கவினர் தோல்வியடைந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக வேல் கம்பு, வீரம் என்று இருப்பந்தவர்கள் தற்போது தான் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். தோல்வியுற்ற தி.கவினர் எப்படி தென் மாவட்டத்தினரிடம் ”சாதி இல்லை” என்று சொல்லி அவர்களால் புரிய வைக்க முடியும். 

கல்விச்சாலையில் பட்டம் பெற்ற நீங்களே “சாதி தாய், தந்தை போன்றது” என்று குறிப்பிடும் போது, கல்வி அறிவற்றவர்களிடம் “சாதி தவறு” என்று யாரால் புரிய வைக்க முடியும். 


6. 
// என் நண்பர் திரு.ஸ்டாலின் அவர்களது தொடர் உழைப்பால் வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. // 

திராவிடக்கட்சியை ஒழிப்போம் என்று சபதம் செய்த பா.ஜ.க கட்சியில் இருக்குறீர்களை என்பதை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இதுவரை அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க என்று மூன்று கட்சியிலும் இருந்துவிட்டீர்கள். அடுத்து தி.மு.கவுக்கு தாவும் சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக தற்போதைய பா.ஜ.க உறுப்பினர்கள் நினைப்பார்கள். 

 “இதுக்கு தான் இந்த பார்ப்பனர்கள் நம்ம கட்சியில சேர்க்கக்கூடாது” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இவர்கள் திராவிடக் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. பா.ஜ.கவினர். 

அதை நீங்கள் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறீர்கள் என்பது கவலையாக இருக்கிறது. 

7. 

தி.க., தி.மு.கவினரை விட மூன்று வேளை கோயிலுக்கு சென்று கடவுளை வழிப்படும் மற்ற சாதியினரிடம் ‘பிராமண வெறுப்பு’ அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாது. பகுத்தறிவு குறித்து புரிதல் கிடையாது. ஆனால், பிராமணர்கள் என்றால் இப்படி தான் நடந்துக்கொள்வார்கள் என்று எண்ணம் உடையவர்கள். எதனால் அவர்கள் மனதில் இப்படி எண்ணம் உருவானது என்றாவது சிந்தித்ததுண்டா ? 


8. 
// அடுத்த வாரம் நடக்க இருக்கும் உங்கள் இல்ல திருமணத்தில் சாதிப் பெயருடன் அழைப்பிதழ் அச்சடித்திருப்பதை ஏற்கனவே சொன்னேன் அல்லவா...// 

 ஒரு சம்பவம் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தனுஷ் திருமணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திரு. ரஜினியும், தனுஷ் தந்தை கஸ்தூரிராஜாவும் பிராமணர்கள் அல்ல. ஆனால், திருமணம் பிராமண முறைப்படி நடந்தது. எதற்காக பிராமண முறைப்படி நடத்தப்பட்டது என்று நான் கேட்கப் போவதில்லை. அந்த திருமணத்திற்கு கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டதா ? பகுத்தறிவாளிகளும், கடவுள் மறுப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ? 

அதேப் போல், கடவுள் மறுப்பாளர் கலைஞர் இல்ல நிகழ்ச்சிக்கு கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கலந்துகொள்வதில்லையா ? நம்மை சார்ந்துள்ளவர்கள், உறவினர்கள் நமது கொள்கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அவர்களின் அன்புக்கு அடிப்பணிவது மனித இயல்வு. அன்பை விட கொள்கை முக்கியமில்லை. அந்த அடிப்படையில் சுப.வீ வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராகியிருக்கலாம். பெற்றோர்கள் மீது கொண்ட அன்பால் அவர்கள் காட்டியப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். உரிமையோடு அவருடைய பெயரை உறவினர்கள் பத்திரிக்கையில் அச்சடித்திருக்கலாம். 

பிரச்சனை சாதி அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் இல்லை. தன்னுடைய சாதியை தூக்கிப்பிடித்து பேசுவது தான் பிரச்சனை. சுப.வீயின் திறந்த மடலில் அவரது சாதியை தூக்கிப்பிடித்து எழுதியதுப் போல் இல்லை. உங்களின் திறந்த மடலை பார்த்தப் பிறகு தான் அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது பலருக்கு தெரிய வந்திருக்கும். 

 *

 9. 

// உங்களால் மட்டுமல்ல... யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது. இதுதான் யதார்த்தம்// 

இந்த உண்மையை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பு, திருமணம், இறப்பு இந்த மூன்றுக்கும் சாதி அடையாளம் இல்லாமல் நடப்பதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், பேச்சு, உடை, நட்பு என்று எல்லா விஷயத்திலும் பிராமணர்களை போல் யாரும் சாதியை தூக்கி சுமந்து செல்வதில்லை. அதனால் தான் நீங்கள் மற்றவர்களை விட வேறுப்பட்டு தனித்து நிற்குறீர்கள். 

பேசத் தொடங்கியதும் “இவர் பிராமணர்” என்று எளிமையாக கண்டுப்பிடிக்கும் அளவிற்கு உங்களை போல் யாரும் சாதி அடையாளத்தை காட்டுவதில்லை. 

மதத்தையும் ஒழிக்க முடியாது என்று குறிப்பிடும் நீங்கள் ஏன் கிறிஸ்துவம், முஸ்லீம் எதிராக கருத்துக் கூறும் கட்சியில் இருக்கிறீர்கள் ? 

 ** 

10. 

ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள். பிராமண வெறுப்பு என்பது தி.கவோ, தி.மு.கவோ விதைத்தது அல்ல. பிராமணர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கையால் விதைத்தது. அதை தி.மு.க அருவடை செய்து அரசியல் லாபம் பார்த்திருக்கிறது. இது மறுக்கமுடியாத உண்மை. இன்னும் எத்தனைக்காலம் இந்த உண்மை புரியாமல் தி.கவினரையோ, தி.மு.கவினரையோ குறைக்கூறி உங்கள் தவறை தொடர்ந்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நீங்கள் வணங்கும் கடவுளுக்கு கூட தெரியாது. 

நீங்கள் நல்ல நடிகன். ஆனால் திரையில் நடிப்பது போல் நிஜத்தில் உங்கள் அடையாளத்தை மறைத்து உங்களால் நடிக்க முடியவில்லை. உங்கள் திருந்தச் சொல்வதற்காக இந்த மடல் எழுதவில்லை. 

சோவையும், கலைஞரையும் பார்த்து பழகிய நீங்கள் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அந்த வருத்தத்தை ஒரு ரசிகனாக எழுதியிருக்கிறேன். 

நன்றி.

Saturday, March 4, 2017

இரண்டு நகைச்சுவை அனுபவம்

இன்று ஒரு பா.ஜ.க நண்பரிடம், “என்னங்க உங்க ஆளு இல. கணேசன் காஷ்மீர தியாகம் பண்ணலாம் சொல்லாரு” என்றேன். 

அவர் கோபமாக, “யோவ். அவரு எப்பய்யா அப்படி சொன்னாரு...?” 

”ஆமாங்க... ’ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மாநிலத்தை தியாகம் செய்யலாம்’ சொன்னாரே!” 

“அவரு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக சொன்னாரு... நீங்க இல்லாத கதை ஏன் கட்டுறீங்க...?”

 “மாநிலத்த தியாகம் பண்ணனும் முடிவு பண்ணிட்டீங்க... அது தமிழ்நாடா இருந்தா என்ன, காஷ்மீரா இருந்தா என்ன...? ” 

“உங்கள மாதிரி ஆளுங்க தான், கருத்த திசைத்திருப்பி பிரச்சனைய உருவாக்குறீங்க...” 

“ஏன் கருத்த திசைத்திருப்புற Copyrights முழுக்க உங்ககிட்ட மட்டும் தான் இருக்கா ? “ என்றேன். 

அதற்கு மேல் அவர் பேசவில்லை. அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.

**

எங்கள் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவன், “உங்க ஊரில சாமியார்களுக்கு இவ்வளவு மரியாதையா? பிரதமர் எல்லாம் வந்து பார்க்குறாங்க.” என்று தனது சக நண்பரிடம் கேட்டிருக்கிறார். 

“அப்படியெல்லாம் இல்ல. அந்த சாமியார் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கு. அவரு அவ்வளவு பெரிய ஆளு இல்ல” என்று அந்த நண்பர் பதிலளித்திருக்கிறார்.

“அப்போது எதுக்காக கவர்மெண்ட் பஸ்ல அந்த சாமியார் படம் மாட்டியிருக்கு” என்று வட மாநிலத்தை சேர்ந்தவன் கேட்க, அந்த நண்பர் அதிர்ந்துவிட்டார். 

”எதோ நோட்டீஸ், விளம்பரம் ஒட்டியிருக்கும். நீ தப்பா புரிஞ்சிருப்ப...” என்று சொல்ல, அவன் ஆணித்தரமாக எல்லா பஸ்ஸிலும் அந்த சாமியார் போட்டோ பார்த்திருப்பதாகக் கூறினான். 

ஒரு நிமிடம் யோசித்த நண்பர் Googleல் ஒரு படத்தை தேடிக் காட்ட “இவர் படமா பாரு?” என்று கேட்க, “ஆமாம்.” என்று வட மாநிலத்தவன் பதிலளித்தான்.

 “அடப்பாவி ! இது திருவள்ளுவர் படம்டா..” என்று நண்பர் கூறினார். 

வள்ளுவருக்கு இப்படியெல்லாம் சோதனை வர வேண்டும்.

Monday, January 30, 2017

மெரினா கலவரமும் சில கேள்விகளும் !

மெரினா கலவரத்திற்கு ஒரு சாமான்யனாக சில சந்தேகம் எழுகிறது. 

1. மெரினாவில் கலைந்து செல்லும் மாணவர்களை காவலர்கள் எந்த சாலை வழியாக அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தனர் ? Dr.Besant Road அல்லது Dr.Radha Krishna Salai அல்லது Pycroft Road அல்லது Napier Bridge ? ஒரு வேலை அப்படி திட்டமிடப்படவில்லையா ? 

2. இத்தனை காவலர்கள் பிரச்சனை நடந்தப்பிறகு வந்தார்களா ? அல்லது பிரச்சனை வரும் என்று முன்பே கணித்து கொண்டு அழைத்து வரப்பட்டார்களா ? 

3. Ice House காவல் நிலையம் அருகே தீ வைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் குறிப்பிடும் சமூக விரோதிகள் மெரினாவில் இருந்து Dr.Besant Road வழியாக தான் வந்திருக்க வேண்டும். அதற்கான ஆதாரம் இருக்கிறதா ? 

4. Ice House காவல் நிலையம் அருகே தீ வைக்கும் போது காவல் நிலையத்தில் எத்தனை காவலர்கள் இருந்தார்கள் ? அவர்கள் தீயனைக்க என்ன முயற்சி செய்தார்கள் ? அல்லது அவர்கள் தீயனைப்பு துறைக்கு எத்தன மணிக்கு தகவல் கொடுக்கத்தார்கள் ? 

5. காவலர்கள் எரிக்கும் வீடியோவை ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் போது, போராடும் மாணவர்கள் மத்தியில் சமூக விரோதி கலந்திருப்பதை எந்த ஆய்வு அடிப்படையில் சொல்லப்படுகிறது? 

6. கடற்கரையில் இறங்கி போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுகிறது. அப்படியென்றால் கடற்கரையில் போராடும் மாணவர்கள் அல்லது நீங்கள் சொல்லும் சமூக விரோதிகள் உங்களை தாக்கியிருக்க வேண்டும். அப்படியென்றால், கடற்கரையில் எத்தனை காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ? எத்தனை காவலர்கள் பாதிக்கப்பட்டார்கள் ? ஒரு வேளை காவலர்கள் மீது தாக்குதல் நடத்தாதப்பட்சத்தில், எதற்காக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது ? 

இன்னும் பல கேள்விகள் இருக்கிறது. அதை ஊடக நண்பர்கள் காவலர்களிடம் கேட்க வேண்டும். ஆதி, லாரண்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். போராடிய மாணவர்கள் மத்தியில் அவர்களும் ஒருவர். இப்போது அவர்களின் பேட்டி முக்கியமில்லை.  
நடந்திருப்பது மனித உரிமை பிரச்சனை. அறவழியில் போராடிய மாணவர்கள் மத்தியில் சமூக விரோதி இருப்பதாக குற்றம் சாட்டும் காவலர்களின் விளக்கம் மிக முக்கியமானது. மீண்டும் போராட்டத்திற்கு மாணவர்கள் சேரவேண்டும் என்றால் இதற்கான பதில் மிக அவசியமானது.

Tuesday, December 6, 2016

ஜெ.ஜெ !!!!

டிசம்பர் 24, 1987

தமிழகமே இருண்டது போல் உணர்வு. மக்களைப் பற்றி சிந்திக்கிற தலைவர் மீண்டும் தமிழ்நாட்டில் பிறப்பார்களா என்ற கவலை. ”மக்கள், மக்கள்” என்று உழைத்தவரின் உடல் உயரற்று கிடப்பதை கண்ணீரும், கவலையாக பார்க்க மக்கள் அலையென திரண்டனர். இப்படி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததால் தான் இன்று வரை புரட்சி தலைவரை “மக்கள் திலகம்” என்றே அழைக்கப்படுகிறார். 

எம்.ஜி.ஆரை “நண்பர்” என்று கருணாநிதி அழைத்தாலும், அவரது எதிர்கட்சியாக செயல்படுபவர். அவரது உடலைப் பார்க்க சென்றால் கண்டிப்பாக சலசலப்பு ஏற்படும். அதனால், தகவல் பரவுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.

மக்களுக்காக உழைத்து உழைத்து தனது உடலை கவனிக்காமல் விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒரு கூட்டம். பெரியார், அண்ணா இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு நிகரான கூட்டம். மக்களுக்காக உழைத்த மாசற்ற மாணிக்கத்தை பார்க்க இறுதி வாய்ப்பு. 

எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்க நான்கு நான்கு பேராக வரிசையில் நின்று பார்த்தார்கள். ராஜாஜி பவனில் தொடங்கிய வரிசை சாந்தி திரையரங்கம் வரை நீண்டது. எத்தனை மணி நேரம் வரிசையில் நின்றாவது பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தி அழ வேண்டும் என்று மக்கள் துடித்தனர்.



திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர். 

மதியம் 1 மணி அளவில் எம்.ஜி.ஆரின் உடல் இராணுவ டிரக்கில் ஏற்றினர். அவரது இறுதி பயணத்தில் கடைசி வரை செல்ல விரும்பிய அவரை ஒரு சிலர் ஓரம் கட்ட நினைத்தனர். ஒரு இராணுவ அதிகாரி அவரை டிரக்கில் ஏற்ற நினைத்தும், அவர்கள் விடவில்லை.

நாகரிகமற்ற வளர்ந்தவர்களிடம் அந்தச் சமயத்தில் அந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி சொல்லித்தர முடியும். அந்த புனிதமான சூழ்நிலையில் மாசுப்படுத்த விரும்பாமல் அவர் அமைதியாக இருந்தார். 

அவரை அரசியலில் தனியாளாகிவிட்டோம் என்ற மிதப்பில் ஒரு சிலர் இருந்தார்கள். அவர் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது பலர் கொண்டாடினார்கள். புரட்சி தலைவருக்கு பிறகு தங்களை எதிர்க்கும் சக்தி இல்லை என்று நினைத்தார்கள். இனி, நம் ராஜ்ஜியம் என்று துள்ளி குதித்தார்கள். அ.தி.மு.க கட்சி தங்களுடையது தான் என்று நினைத்தனர். உண்மையில் அவரின் அரசியல் வாழ்க்கை அங்கு இருந்து தான் தொடங்கியது.

அதற்கு முன் எம்.ஜி.ஆர் அரசியல் தளபதியாக இருந்தவர், எம்.ஜி.ஆர் இருந்த தலைமை பொருப்பை எடுத்து நிரப்பியவர். நெருக்கமானவர்களுக்கு ‘அம்மு’. திரையுலகத்தினருக்கு ஜெ.ஜெயலலிதா. அனைவராலும் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவர் என்பவர்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க என்ற கட்சி இருக்காது என்று பலர் நினைத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் உதயமாகும் ஒரு வாய்ப்பு இருக்கும் சூழ்நிலை உருவானது. ஒரு சில அ.தி.மு.கவினர் தங்கள் கட்சியை விட்டு எதிர் முகாமுக்கு சென்றார்கள். அவர்களின் கனவை எல்லாம் கனவாய் வைத்து, நிஜத்தில் வெற்றிகள் குவித்தவர் ஜெ.ஜெயலலிதா.

”ஜெயலலிதா” என்ற ஆளுமை மிக எளிதாக தோன்றவில்லை. சுற்றியிருப்பவர்கள் உதாசினத்தில், துரோகத்தில் உருவான ஆளுமை. 

அவர் மிகவும் கண்டிப்பானவர். கோபக்காரர். திமிர்ப் பிடித்தவர். என்று எதிர்க்கட்சினர் விமர்சனம் செய்யலாம். அலுவலகத்தில் ஒரு பெண் அமைதியாக இருந்தாலே ஏறி மீதிக்கும் உலகம். அரசியலில் அமைதியாக இருந்தால், வளரவிட்டுவிடுவார்களா ? 

ஆண்களை கொண்டு, அவர்களிடம் தன்னை காத்துக்கொண்டு வளர வேண்டும் என்றால் கட்டுப்பாடும், கண்டிப்பும் மிகவும் அவசியம். அதை தான் ஜெ.ஜெயலலிதா செய்தார்.

ஜெ.ஜெயலலிதா அடுத்து கட்சி தலைவர் யார் என்ற பேச்சு வந்ததேயில்லை. அதைப்பற்றி பேச யாருக்கு துணிவுமில்லை. அவரை மீஞ்சி கட்சியில் ஒருவராலும் செயல்பட முடியாது. தனது கட்சியை கட்டுப்படாக நடத்தி வந்தார். புரட்சி தலைவர் மறைவுக்கு பிறகு கட்சியை சீராக நடத்தியவர் ஜெ.ஜெயலலிதா மட்டும் தான்.

ஆண்கள் சிங்கமாக நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றை பெண்புலியாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக முதல்வராக ஆட்சி செய்திருக்கிறார்! 

நம்முடைய காலத்தில் ஜெயலலிதாவை விட சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!

Thursday, November 10, 2016

திரும்பப் பெற்ற ரூ.500, ரூ.1000 நோட்டு – யார் பாதிக்கப்படப் போகிறார்கள் ?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவுப்பு மூலம் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக குறையும். கறுப்பு பணம் முழுவதுமாக ஓழியாவிட்டாலும் ஒரளவு குறையும். 

கார்ப்ரேட் முதலாளிகள், அமைச்சர்கள் பாதிக்கப்படுவார்களா ? 

மோடியின் அறிவிப்பில் கார்ப்ரேட் நிறுவனமும், பெரிய அரசியல்வாதிகளும் இல்லை. இவர்கள் Higher Upper-Class வகையினர்கள். அவர்களிடம் பெரிய ஆடிட்டர், வழக்கறிஞர் டீம் இருக்கிறது. இதை எளிதில் கையாள்வார்கள். ஏற்கனவே அவர்களின் கறுப்புப் பணம் தங்கமாகவோ, வெளிநாட்டில் சொத்துகளாகவோ வாங்கியவர்கள். அவர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர இந்த அறிவிப்பு உதவப் போவதில்லை. (அவர்கள் மீது எதிர்ப்பாராத ஐ.டி ரைட் மட்டுமே சிறந்த வழி.) 

அப்போது, யார் பாதிக்கப்படுவர்கள் ? 

அமைச்சர் போன்ற பெரிய அரசியல்வாதிகள் பாதிப்பு இல்லையென்றாலும் கவுன்சிலர், எம்.எல்.ஏ அளவுக்கு இருக்கும் அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு கடையிலும் வாங்கிய கமிஷன் வருமானத்தை எப்படி மாற்றியாக வேண்டும். பலரை ஏமாற்றி சம்பாதித்தது, சில கொலைகள் செய்து, சில பல உறவுகள் வேண்டாம் என்று பணத்தின் பின்னால் சென்றவர்கள் இந்த தருணத்தில் யோசிக்க வேண்டும். 

இருபது வருடம் மேல் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள். வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள். அவர்கள் வருமான வரி கட்டியிருக்கமாட்டார்கள். அவர்கள் தங்கள் வருமானத்தை இப்போது வங்கியில் செலுத்தியாக வேண்டும். பத்து லட்சம் மேல் வங்கியில் செலுத்தினால் வரி ஏய்ப்பு செய்ததாக கருதப்படும். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.



தாசில்தாரர் அளவில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணத்தை வங்கியில் போட்டால் மட்டுமே பயன்படுத்த முடியும். 

அதேப் போல், திரைத்துறை, ரியர் எஸ்டேட், காய்கறிப வணிகம் போன்ற Unorganized துறையினர் சிரமப்படுவார்கள். குறிப்பாக, கறுப்புப் பணத்தில் கட்டவிருந்த ப்ளாட் கட்டும் பிராஜெக்ட் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள். பணத்தேவைக்காக ஏற்கனவே கட்டப்பட்ட ப்ளாட்டுக்கு அதிக விலை சொன்னவர்கள் குறைக்க வேண்டியதாக இருக்கும். 

வரிக்கட்டாமல் பல கோடி வைத்திருப்பவர்கள் வங்கியிலோ அல்லது குறுக்கு வழியிலோ மாற்ற முயற்சிப்பார்கள். இவர்கள் எத்தனை வழி கண்டுப்பிடித்தாலும், என்ன செய்தாலும் கடைசியில் அத்தனைப் பணமும் வங்கியில் செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும். யாருக்கும் பயன்படாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தப் பணம் வங்கிக் கணக்குக்கு வருகிறதென்றால் அரசாங்கக் கணக்குக்கு வருகிறது என்று அர்த்தம்.

மொத்தத்தில், வருமான வரி கட்டாத Upper Class, Upper Middle-class வர்கத்தினர்களுக்கு சம்பாதித்தவர்களுக்கு இதுப் பெரிய Check. 


மோடியின் நல்லிரவு அறிவிப்பை பலர் எதிர்க்கிறார்கள். கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு நேரம் கொடுத்தால், தங்கள் பணத்தை தங்கத்திலோ அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்து வெள்ளையாக மாற்றிவிட வாய்ப்பு இருக்கிறது. நல்லிரவு அறிவிப்பு என்பது சரியானது தான். 


அடுத்தது அரசு என்ன செய்ய வேண்டும் ? 

எந்த அளவுக்கு விரைவாக அறிவிப்பு கொடுத்தாரோ, அதை சரிசெய்யும் விதமான சரியாக திட்டமிடல் இருக்க வேண்டும். 

அடுத்த இரண்டு மாதத்திற்கு 80C பெற்ற N.G.O கணக்குகளை வருவாய் துறையினர் கவனிக்க வேண்டும். யார் யார் எவ்வளவு நன்கோடை கொடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் கணக்கில் இருந்து எந்த வங்கிக் கணக்குக்கு பணப்படுவாட நடக்கிறதது என்பதை கண்காணிக்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள், குறிப்பாக மேனேஜர் அளவில் இருப்பவர்களையும் கண்காணிக்க வேண்டும். ரூ.4000 மாற்ற வரும் வாடிக்கையாளரின் PAN Cardயை அடையாள அட்டையை நகல் எடுத்து, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உதவி செய்ய வாய்ப்பு இருக்கிறது. 

அடுத்து , தங்கம் மார்க்கெட்டின் அதிக முதலீடு வரும். தங்க முதலீட்டார்களையும் கண்காணிக்க வேண்டும். 

இதைச் செய்யாதப் பட்சத்தில் 500, 1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற உத்தரவில் எந்த பயனும் இருக்காது. 

** 

சரி… அதற்காக, அன்றாடம் வாழும் மக்கள் பாதிக்கப்படலாமா ? இயல்பு வாழ்க்கை பாதிக்கபடலாமா ? 

ஒழுங்காக வருமான வரிக் கட்டியவர்கள் இரண்டு நாள் தான் அவஸ்தை. இவர்கள் Middle-Class, Lower Middle-Class, Lower-Class வகையினர். சிறு வியாபாரிகள், தினக்கூலிகள் என்று தொடங்கி வெளியூருக்கு செல்பவர்கள் வரை அனைவருக்கும் இரண்டு நாள் அவஸ்த்தை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வருமான வரிக்கட்டாதவர்களுக்கு அடுத்த இரண்டு மாதம் அவஸ்தைப்பட போகிறார்கள். 

கவுன்சிலர்கள், ரியல் எஸ்டேட் வாதிகள், அரசாங்க ஊழியர்கள் போன்றவர்கள் நமது பணத்தை லஞ்சமாகவோ, கமிஷனாகவோ கொடுத்தது பழக்கப்படுத்தி நாம் தவறு செய்கிறோம். குறைந்தப்பட்சம் வேடிக்கைப்பார்த்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறோம். அந்த தவறுக்கு இரண்டு நாள் அனுபவிப்போம். 

நமது பணத்தை ஆட்டையப் போட்டவர்கள் இரண்டு மாதம் அவஸ்தைப்படட்டும். வருமான வரி துறையினரிடம் மாட்டி நஷ்ட ஈடுக்கட்டடும். 

மோடி அரசு எடுத்து வைத்திருப்பது முதல் அடியாக இருந்து, தொடர்ந்து கார்ப்பிரேட் ஆசாமிகள் மீது சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் கறுப்புப்பணம் ஒழிப்பு நடவடிக்கையில் நிச்சயம் பலன் தரும். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த ஒரு நடவடிக்கைப் போதும் என்று நினைத்தால், புது ரூ.500, ரூ.2000 நோட்டு வந்ததும் ஆறு மாதத்தில் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.

Wednesday, November 9, 2016

ரூ.500 - ரூ.1000 நோட்டு இல்லாத முதல் நாள் அனுபவம் !

காலையில் வண்டி டயர் பஞ்சராகி, மெக்கானிக் டயர்–டுயூப் இரண்டையும் மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார். ரூ.1500 ஆகும். கையில் பணம் இருந்தும் அதற்கு மதிப்பில்லை.



“கிரெட் கார்ட் வாங்குவியானு” கேட்டேன். 

“இந்தியாவுலேயே பஞ்சர் கடைக்கு வந்து கிரெட் கார்ட் வாங்குவியானு கேட்ட முதல் ஆள் நீங்க தான்!” என்று கேட்பது போல் ரியாக்‌ஷன் கொடுத்தார். 

1.5. கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் MRF Dealer ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் கிரெட் கார்ட் மூலம் டயர் வாங்கிட்டு வாங்க என்று மெக்கானிக் கூறினார். 

MRF Dealer யிடம் நிலைமையை சொல்ல, என் கையில் இருக்கும் ஒரு ஆயிரம், ஒரு ஐந்நூறு நோட்டை வாங்கி புது டயர் கொடுத்தார். 

** 

பெட்ரோல் பங்க்கில் அவரவர் ரூ.100, ரூ.200 க்கு பெட்ரோலுக்கு ரூ.500 நீட்ட, சில்லரை குறைவாக இருக்கும் வேலை செய்யும் பெண் ”சில்லரை அதிகமா இல்லை. மத்தவங்களுக்கு கொடுக்கனும். இரண்டு மூனுப் பேர் ஷேர் பண்ணிக்கோங்க..” என்றாள். 

500/1000 ரூபாய் வாங்க மறுப்பது, பெட்ரோல் பங்க்யை மூடி வைப்பதை விட இது நல்ல யோசனையாக இருக்கிறது. 

அடுத்த இரண்டு நாளுக்கு பெட்ரோல் பங்க்கு இரண்டு, மூன்று வண்டியில் சென்று பெட்ரோல் போடுவது நல்லது. அவர்கள் சில்லரைத் தர வேண்டியதில்லை. உங்கள் தேவையும் நிறைவேறுகிறது. 

இதுப் போன்ற சூழ்நிலையில் எதிர்ப்பு, ஆதரவு என்ற இரண்டு குரலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. பேஸ்புக், டிவிட்டரில் லைக் மட்டுமே பெற்று தரும். 

ஒருவருக்கு ஒருவர் உதவி, நம்பிக்கை, பரஸ்பர ஒப்புதல் மட்டுமே இதுப் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மீண்டு வர முடியும்.

Thursday, September 15, 2016

காவேரி பிரச்சனை

அரசியல் பிரச்சனையல்ல, கார்ப்ரேட் நிறுவனங்களால் உருவான பிரச்சனை.

காவேரி பிரச்சனையில் தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் வாய் திறக்கமாட்டார்கள். திறக்கவும் முடியாது. காரணம், விவசாயம் நிலம் அழிந்தால் தான் GAIL பிராஜெக்ட் கொண்டு வர முடியும். காவேரி நீர் வராமல் இருந்தால் தான் அவர்கள் சுதந்திரமாக மணல் கொள்ளை நடத்த முடியும். அவர்கள் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள் தனம். 

அடுத்து கன்னட சகோதரர்கள். தமிழ்நாட்டில் கொடுக்கும் நீரை குறைத்துக் கொண்டு தங்களுக்கு கொடுக்க போகிறார்கள் என்று நம்புகிறார்கள். விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். 

காவேரி பிரச்சனை உருவாக்கியது அங்குள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள் நீர் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், அங்கு உருவாக இருக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் நீர் தேவைக்காகவும் தான். அதற்காக செயற்கையான நீர் பற்றாக்குறையை உருவாக்கி இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார்கள். (நான்கு வருடம் முன்பு கூடாங்குளம் அணுமின்நிலையம் திறப்பதற்காக செயற்கையான மின்சார பற்றாக்குறை உருவாக்கியது போல் தான் இதுவும்.) 

கார்நாடகாவில் அரசியல்வாதிகள் அனைவரும் காவேரிக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்பதும், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் அனைவரும் மௌனமாக இருப்பதும் கார்ப்ரேட் நிறுவனத்தின் லாபத்திற்காக மட்டுமே. 

இதில் முட்டாள் தனமாக பாதிக்கப்படுவது இரண்டு மாநில மக்கள் தான் !!

இந்தியாவை அரசியல்வாதிகள் ஆளவில்லை. கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் ஆள்கிறது!! 

Friday, May 20, 2016

ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் !!

மக்கள் நலக் கூட்டணி மூலம் அ.தி.மு.க தனது ‘B team' வைத்து வெற்றிப் பெற்றது எப்படி மறுக்க முடியாதோ,. அதேப் போல் தி.மு.க தரப்பில் இரண்டு முக்கிய தவறு இருப்பதை மறைக்க முடியாது. 

முதல் காரணம், 

காங்கிரஸூடன் உறவு. அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தால் அதிகமாக 20 சீட் கொடுத்திருக்கலாம். ஜி.கே.வாசன் காங்கிரஸ்யை இரண்டாக உடைத்த நிலையில் அவர்களுக்கு 41 சீட் கொடுத்தது மிகப் பெரிய தவறு. 

தி.மு.க - அ.தி.மு.க போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில், அதிமுக 'Close Margin' தான் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள். ஆனால், அதிமுக - காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் அதிமுக ‘Comfortable Win' நிலைமையை பார்க்க முடிகிறது. 

இரண்டாவது காரணம், 

தி.மு.க ஸ்டாலின் தலைமை ஏற்க தயாராக இருக்கிறார்கள். 96ல் அவர் மேயராக கொண்டு வந்த திட்டங்களை மக்கள் மறக்கவில்லை. கனிமொழியும் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று தெரிக்கிறது. ஆனால், கலைஞர் இன்னும் தன்னை முதல்வர்’ வேட்பாளர் என்று அறிவிப்பது கட்சிக்குள்ளே அதிருப்தி ஏற்படுத்தி வருகிறது. மேலும், 

அழகிரி’ தி.மு.கவுக்கு எதிராக கருத்து கூறுவதும், கட்சி தலைமை அமைதியாக இருப்பதும் தொண்டர்களின் உற்சாகத்தை குறைத்தது என்று சொல்லலாம்.

இருந்தாலும், 

2011ல் எதிர்கட்சி இடத்தை இழந்தது, 2014ல் பாராளமன்றத் தேர்தலில் ஒரு சீட் கூட வெல்லாமல் இருந்தது... இப்படி இருந்த தி.மு.கவை தனி மனிதனாக ஸ்டாலின் பெரும்பான்மை கொண்ட எதிர்க்கட்சியாக மீட்டெடுத்திருக்கிறார். தமிழகத்தில் முதல் முறையாக அதிக இடங்கள் கொண்ட ( 99 சீட் ) எதிர்க்கட்சியாக கொண்டு வந்திருக்கிறார். 

அதிமுக வெற்றிப் பெற்றாலும், அவர்களின் கட்சி எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், திமுகவின் கட்சி எதிர்காலத் தலைமை யார் என்று காட்டியிருக்கிறது. 

ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் !!

Wednesday, April 27, 2016

தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கக்கூடாது ?

தமிழக அரசியலில் பலர் மதிக்கதக்க தலைவர்களில் வை.கோ மிக முக்கியமானவர். அரசியல் மட்டுமல்லாமல் இலக்கிய சொற்பொழிவிலும் முதன்மையாக திகழ்பவர். தி.மு.கவை என்ன எதிர்த்து விமர்சனம் செய்தாலும், பல தி.மு.கக்காரர்கள் இவர் மீது சாப்ட் கார்னர் இருப்பது மறுக்க முடியாது. அப்படிப்பட்டவர், உதிரிக்கட்சிகளை எல்லாம் ஒருங்கினைத்து ”மக்கள் நலக் கூட்டணி” என்று மூன்றாவது அணி தொடங்கியதும், தமிழக அரசியலில் மாற்று அணி முக்கியத்துவத்தை உணர்த்த சரியான தருணம் என்று பலர் பாராட்டினார்கள். 

’முக்கியமான நேரத்தில் தவறான முடிவு எடுப்பவர்’ என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நேரத்தில், ’விஜயகாந்த்’ தலைமையை ஏற்று மீண்டும் அதே விமர்சனத்திற்கு தொடர்கதை எழுதியிருக்கிறார். 

விஜயகாந்த் இல்லாத கூட்டணியாக இருந்திருந்தால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அணியாக அமைந்திருக்கலாம். அல்லது வைகோ தலைமையிலான அணியென்றால் கொஞ்சமாவது நம்பிக்கை பிறந்திருக்கும். அரசியலில் பக்குவப்பட்ட வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் சகோதரர்கள் மத்தியில் பக்குவமல்லாத விஜயகாந்த் இருக்கிறார். அதுவும் தலைமை ஏற்றுயிருப்பது எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. 

தே.மு.தி.க மக்களின் ஓட்டு பிரிக்கும் சக்தியாக இருக்கிறாரே தவிர மக்கள் நம்பிக்கை பெற்ற சக்தியாக இல்லை என்பதை மக்கள் நலக் கூட்டணிக்கு தெரியாதது இல்லை. அப்படிப்பட்ட கட்சியை தங்கள் கூட்டணியில் இழுத்தது தவறில்லை. ஆனால், ‘தலைமை’ கொடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை.



இவர்களை ஏன் ஆதரிக்கக்கூடாது என்பதற்கு சில விஷயங்களை பார்ப்போம்.

1. மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்த தே.மு.தி.க… ஒன்று மக்கள் நலக் கூட்டணி என்ற வட்டத்திற்கு நுழைந்திருக்க வேண்டும் அல்லது தே.மு.தி.க கூட்டணி கட்சிகள் என்ற புதிய வட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் ’தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி’ என்று எதற்காக அழைக்க வேண்டும் ? ’மக்கள் நலம்’ வார்த்தையில் தே.மு.தி.கவுக்கு உடன்பாடு இல்லையா ? பிடிக்காதா ?

2. தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி. வெளிப்படையாக சொல்வதென்றால் சந்தர்ப்பவாத கூட்டணி. கொள்கை அடிப்படையிலோ, செயல்பாடுகளிலோ வெவ்வேறாக இருப்பவர்கள். ஒரு வேளை வெற்றி பெற்றால், இந்த கூட்டணி அடுத்த ஐந்தாண்டு வரை தொடருமா என்பது சந்தேகம் தான். 

3. சாதாரன விஷயத்துக்கு உணர்ச்சி வசப்படக்கூடியவர் விஜயகாந்த். நாளை, பிரதமரிடமோ, வெளிநாட்டு தொழிலதிபர்களிடமோ தமிழ்நாட்டு நலன் குறித்து பேச்சு வார்த்தையில் பக்குவமாக நடந்துக் கொள்வாரா என்பது கேள்விக்குறி. சினிமாவில் நடிப்பது போல் உணர்ச்சிவசப்பட்டால் தமிழ்நாட்டு பெயர் என்ன கதியாகும் என்று யோசித்து பாருங்கள். 

4. விஜயகாந்த் கலைஞரை போல் தனது கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாக இருப்பாரா? அல்லது ஜெயலலிதாவை போல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பாரா ? என்று பார்த்தால் இரண்டுமே இல்லை. அவர் தனித்து இயங்கக் கூடியவர். எல்லோரும் ஒரு திசையை நோக்கி பயணித்தால், அவர் வேறு பக்கம் செல்லக்கூடியவர். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகும், அவர் அப்படி செயல்பட்டால் 100% மறு தேர்தல் வரும் என்பதில் சந்தேகமில்லை. 

5. மூத்த பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் “விஜயகாந்த் கலைஞர், ஜெயலலிதாவை போல் மோசமானவர் இல்லை” என்கிறார். அரசியலில் நல்லவர், கெட்டவர் என்பதை விட நிர்வாகத்திறமை மிக்கவரா என்பது மிக முக்கியம். அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்கக்கூடியவரா ? முக்கிய அரசியல் முடிவுகளுக்கு சரியான முடிவு எடுக்கக்கூடியவரா ? பொருளாதார திட்டத்தை வளர்க்கக்கூடியவரா ? 

மொத்தத்தில் விஜயகாந்த் கலைஞர், ஜெயலலிதாவை விட ஆளுமை திறமை கொண்டவரா என்றால் ’இல்லை’ என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு சாட்சியாக, அவரது எம்.எல்.ஏ கட்சியில் இருந்து விலகி அம்மா பக்கம் சாயும் போது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், ஜெயலலிதாவை சந்தித்ததை சொல்லலாம். தற்போது சந்திரகுமார் பிரச்சனையை கூட விஜயகாந்த்தை விட வைகோ தான் அதிகம் பேசியிருக்கிறார். 

6. ’தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி’ என்பது விஜய்காந்த் உழைப்பால் உருவான கூட்டணியல்ல. வை.கோவின் உழைப்பால் உருவானது. ஒவ்வொரு கட்சி தலைமையிடம் பேசி வை.கோ உருவாக்கியது. தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கூட்டணியை வை.கோ அப்படியே விஜயகாந்த் தலைமைக்கு கொடுத்திருக்கிறார். தான் முதல்வராக வேண்டும் என்பதற்கு உழைக்காத விஜய்காந்த் மக்களுக்காக உழைக்க போகிறாரா ? 

7. விஜயகாந்த் ஊடகத்தின் மீது நம்பிக்கையற்றவர். தனது கட்சியாளர்களை எந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனுமதிக்காதவர். கேமிரா முன் “த்தூ” துப்ப தயங்காதவர். அப்படிப்பட்டவர் முதல்வரானால் ஊடகத்தினரை சந்திப்பாரா ? மக்கள் ஊடகத்தின் வழியாக கேட்க நினைக்கும் கேள்வியை பதிலளிப்பாரா ? ஊடகத்தை ஒரே அடியாக புறக்கணிப்பாரா ? என்பது தெரியவில்லை. 

8. தங்கள் பிரச்சாரத்தில் த.மு.க, அ.தி.மு.க விமர்சிக்கிறார்களே தவிர தங்கள் தேர்தல் அறிக்கையை முன்னிருத்தி பிரச்சாரம் செய்வதாக தெரியவில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையை விட மக்கள் அதிருப்தி தான் தங்களுக்கு ஓட்டு வங்கி நினைப்பவர்கள், தங்களின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்களா ? 

9. விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்றால் நல்லது. ஒரு வேளை. விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி 70-80 சீட் வெற்றி பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். திமுக அல்லது அதிமுக தேர்தலில் 90- 100 சீட் வெற்றி பெறுகிறது. இன்னொரு கட்சி 40-50 என்று வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

 அவர்கள் தி.முக. / அதிமுக ஆட்சி அமைக்க அவர்களை ஆதரிப்பார்களா அல்லது தாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவைக் கேட்பார்களா ? அப்படி முக்கியமா பிரச்சனை வரும் பட்சத்தில் ஒன்றுக்கு ஆறு கருத்து உருவாகும். கூட்டணி உடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் தேர்தல் தான். 

10. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு. “Known devil is better than Unknown Angel”. விஜயகாந்தோ, ம.ந.கூட்டணியோ எந்தக் காலத்திலும் தெரியாத தேவதை என்று சொல்லமுடியாது. தி.மு.கவுக்கு, அ.தி.மு.கவுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்தவர்கள். இந்த முறை பேரம் படியவில்லை என்பதால், எல்லோரும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாற்று கட்சி என்கிறார்கள்.

எல்லாவற்றிக்கும் மேலாக, தனது அரசியல் வாழ்க்கையில் கோவில்பட்டியில் நடந்துக் கொண்டது போல் வைகோ இதற்கு முன் நடந்துக் கொண்டதில்லை. இது வரை சம்பாதித்த பெயரையெல்லாம் இந்த தேர்தலில் அடகு வைத்திருக்கிறார். இந்த தேர்தலில் தோல்வியுற்றால், தி.மு.க – அ.தி.மு.க அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ம.தி.மு.க தோல்விற்றால் அடுத்த தேர்தல் வரை கட்சி இருக்குமா என்பது தெரியவில்லை. 

 “தி.மு.க ஜாதி வெறியை தூண்டுகிறது” என்கிறார். ஏன் அ.தி.மு.க இப்படி செய்யமாட்டார்களா ? கடந்த ஐந்து வருடங்களாக ஜாதி அடிப்படை வன்முறைகள் அதிகரித்திருக்கிறது. தர்மபுரி எரிப்பு, காதல் ஆணவக்கொலை, தலித் பெண் டி.ஜி.பி தற்கொலை என்று பல சம்பவங்கள் இருக்கிறது. 

“தி.மு.க – அ.தி.மு.க ஜாதி வெறியை தூண்டுகிறது” என்றோ, அல்லது “இரண்டு பெரிய கட்சியின் கூட்டு சதி” என்றோ சொல்லியிருக்கலாமே ! இரண்டு கட்சியை எதிர்த்து போட்டியிடும் போது ஒரு கட்சியை மட்டும் குறிப்பிட்டு தாக்கி பேசுவது ஏன் ? அ.தி.மு.க அதிருப்தி ஓட்டுகளை பெற்று, மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைக்க உதவி செய்யவா ? 

மொத்தத்தில்  பக்குவமில்லாத, எளிதில் உடைந்துவிடக்கூடிய தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வாக்களிப்பதை விட வழக்கம் போல் தி.மு.க – அ.தி.மு.கவுக்கே வாக்களிக்கலாம். அல்லது சுயேட்சை வேட்பாளர், 49 ஓவுக்கு வாக்களிக்கலாம்.

Thursday, March 17, 2016

வெட்டி கௌரவம் !

இரண்டு நாட்களாக எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் ஒரு சிலர் ”ஆணவக்கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால், ஒரு குடும்பத்தில் இருந்து பெண்ணை இழுத்துச் சென்று அந்த குடும்ப சந்தோஷத்தை கெட்டுப்பது தவறு” போன்ற கருத்து தெரிவித்திருப்பதை பார்க்கிறேன். 

ஏறக்குறைய, அவர்கள் கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக தான் கருத்துச் சொல்கிறார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று சொல்லியிருந்தால் அவர்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நடந்திருப்பது கொலை. பல வருடங்களாக வளர்த்த மகளை விட ஜாதிப்பெருமை பெரிதாக நினைப்பவர்களின் ஆணவச்செயல். அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.



உண்மையில் அவர்கள் மகளை அன்பு காட்டி வளர்த்திருந்திருந்தால், அந்தப் பெண்ணுக்கு பெற்றோர்களை பிரிந்து சென்றிருக்கமாட்டாள். பெற்றோரின் அன்புக்கு முன் ‘காதல்’ பெரிதாகவும் தெரிந்திருக்காது. ஆனால், தங்கள் ஜாதிப் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவியாக மகளை வளர்த்திருக்கிறார்கள். அது நிறைவேறாத கோபத்தில் கொலையில் முடிந்திருக்கிறது. 

அந்தப் பெண்ணும் ஜாதிப்பார்க்கும் பெற்றோருக்கு மகளாக இருப்பதை விட தாழ்ப்பட்டவனாக இருந்தாலும் அவரின் மனைவியாக இருக்க விரும்பியிருக்கிறாள். அது சரியா ? தவறா ? என்பதை அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையில் தெரிந்துவிடும். அவர்கள் வாழ்வே கூடாது என்று நினைப்பவர்களின் செயலுக்கு பின்னால் என்ன காரணம் சொன்னாலும் அது தவறு தான். 

நாம் ஒருவர் மீது உண்மையாக அன்பு காட்டி, அவர் நம்மை விட்டு பிரிந்து செல்கிறார் என்றால் ஒன்று நாம் சரியாக அன்பு காட்டவில்லை என்று சொல்ல வேண்டும். அல்லது நமது அன்பை புரியாதவராக இருக்க வேண்டும். இரண்டுக் காரணத்திற்காக ’கொலை’, ‘தற்கொலை’ தீர்வில்லை. அது சரி என்று சொல்லவும் முடியாது.

Wednesday, February 24, 2016

தி,மு.க தேர்தல் விளம்பரம்

கலாய்க்கும் போது கோபம் வருவது இயற்கை தான். தவறில்லை. அந்த கோபத்திலும் கலாய்த்தவனை கடுப்பாகும் அளவிற்கு திருப்பி கலாய்க்க வேண்டும். இல்லையென்றால் அமைதியாக வலிக்காத மாதிரி இருந்துவிட வேண்டும். 

நம்மை கலாய்த்தவன் என்ன சொன்னானோ அதுவே திருப்பி சொல்வது முட்டாள் தனம். அதையும் பெருசா கலாய்ப்பதாக நினைத்து மொக்கை மாதிரி கலாய்ப்பது பெரிய காமெடியில் முடியும்.

பதில் விளம்பரப் போஸ்டர் அப்படி தான் இருக்கிறது. 



திருவாரூர் எம்.எல்.ஏ. தொகுதி பக்கம் வராமல் இருப்பதும், முதல்வர் தன் மக்களை பார்க்காமல் இருப்பதும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? சட்டசபை எப்போதும் ஆளும் கட்சியால் மட்டுமே நடத்தப்படுகிறது. எந்தக் காலத்தில் எதிர்கட்சியினர் சட்டசபைக்கு வருகிறார்கள்? 

தி.மு.க ஸ்லோகன் பயன்படுத்தி அ.தி.மு.கவின் ஸ்லோகன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கோகனையாவது சொந்தமாக சொல்லியிருக்கலாம். அல்லது எதிரியின் ஸ்லோகத்தை காப்பியடிக்காமல் இருந்திருக்கலாம். 

பால்குடம் தூக்குபவர்களையும், ஸ்டிக்கர் ஒட்டிபவர்களையும், தண்ணீரில் பிராத்தனை செய்பவர்களையும் நம்பினால் வேளைக்காவாது. பேசாமல் மோடியை ப்ரோமொட் செய்த மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் அ.தி.மு.க மேலிடம் டை-அப் வைத்து கொள்வது நல்லது. இல்லையென்றால் இந்த தேர்தல் முழுக்க மொக்கை மாதிரி போஸ்டர் அடித்து மொக்கை வாங்கிக் கொண்டு இருப்பார்கள். 

குறிப்பு : தி.மு.கவும் தேவையில்லாமல் 18 கோடி செலவு செய்திருக்கிறது. அதற்கு பதிலாக சௌந்தர்ய பாண்டியனை கதாநாயகனாக வைத்து ஐந்து படம் தயாரிக்கிறோம் என்று சொல்லி விஜய்காந்துடன் கூட்டனி பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம்.

Sunday, December 13, 2015

பல கேள்விகளை உருவாக்கும் விளம்பர நோட்டீஸ் !

[ Disclaimer (என் நலன் கருதி): இதில் நான் யாரையும் குறைக் கூறவில்லை. நோட்டீஸில் இருக்கும் கணக்கைப் பற்றி கேள்விக்கேட்கிறேன். பதில் தெரிந்தவர்கள் கூறலாம். ] 


1. 600+1200+1400+1920+45000+300000 = மொத்தம் 3,50,120... 80120 அல்ல (யாரு போட்ட கணக்கோ !!). 

2. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461 பாதுகாப்பு மூகாம் = 5554 சென்னை (14), காஞ்சிபுரம் (6), கடலூர் (6) = மொத்தம் 26 தொகுதிகள். 

அப்படியென்றால், ஒரு தொகுதியில் 214 மூகாம் (5554 / 26 = 213.615) அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் (13,80,461 / 5554 = 248.55) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு பள்ளி / சமூகக்கூடம் / தனியார் திருமண மண்டபங்கள் என்று கணக்கு வைத்தால் ஒவ்வொரு தொகுதியிலும் 214 மூகாம் அமைக்க முடியுமா ? ஒவ்வொரு மூகாமிலும் 248 பேர் இருக்க இடம் இருக்கிறதா ? 

3. உணவு பொட்டலம் = 72, 64, 353 மூகாம்மில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படும் எண்ணிக்கை. மூகாமில் இருக்கும் மக்கள் = 13.80,461 ஒருவருக்கு 5.26 பொட்டலம் வழங்கப்பட்டிருக்கிறது. 

அப்படியென்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டு நாள் (ஒரு நாளுக்கு 3 வேளை உணவு) மட்டும் தான் மூகாமில் தங்கியிருக்கிறார்கள். அதற்கு மேல் தங்கவில்லையா ? அப்படி தங்கியிருந்தால் அவர்களுக்கு உணவு வழங்கியது யார் ? 

அப்படியென்றால் மூகாமுக்கு வராமல் வெள்ளத்திலும் வீட்டில் இருந்தவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்க வில்லையா ? உதவியை எண்ணிக்கை வைத்து செய்தால் இப்படி தான் கணக்கு தவறாக வரும். 

இப்படி பல கேள்விகளை இந்த நோட்டீஸ் உருவாக்குகிறது. 

கடைசி கேள்வி, உண்மையிலேயே இந்த நோட்டீஸ்யை அதிமுக ஐ.டி விங் தயாரித்ததா ? அல்லது எதிர்கட்சி ஐ.டி விங் சதியா ?

Thursday, October 8, 2015

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்

சமிபத்தில் ஒரு நண்பரிடம் ஹிட்லரைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, ‘ஹிட்லர் யூதர்களை கொன்றார் என்று சொல்வதற்கு பதிலாக, ஒரு கிறித்துவன் யூதர்களை கொன்றதாக ஏன் யாரும் சொல்லவதில்லை தெரியுமா ?” என்று கேட்டார். யூத இனப்படுகொலைக்கு வாட்டிகன் போப்பின் ஆதரவு இருந்தது என்றார். 

அந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. வாட்டிகன் மௌனம் காத்தது என்று சொல்லலாம். ஹிட்லரை எதிர்த்து கருத்துக் கூறினாலோ கண்டனம் தெரிவித்தாலோ, இத்தாலி இராணுவத்தை எதிர்க் கொள்ள வேண்டிய அச்சம் காரணமாக இருக்கலாம் என்று கூறினேன். பிறகு, Amen ( 2002ல் ஜெர்மன் மொழிப்படம்) படத்தில் வந்த சில காட்சிகள், வசனங்கள் பற்றி பேசினோம். எங்கள் விவாதம் தொடர்ந்துக் கொண்டே போனது. 

இன்றும், ’ஹிட்லரை’ பற்றி பேச தொடங்கினால் மர்மங்கள், விவாதங்கள், கதைகள் தொடர்ந்துக் கொண்டே போகும். வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தாலும், வரலாற்று பிரியர்களுக்கு ஈர்க்கு காந்தசக்தியாகவே ’ஹிட்லர்’ இருக்கிறார். 



அப்படிப்பட்ட ஹிட்லரைக் குறித்து சமிபத்தில் வாசித்த புத்தகம் முகில் எழுதிய ’ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்’ 

பொதுவாக, ஹிட்லரை குறித்த வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் அவருடைய ஆரம்பக்கட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் இருப்பதில்லை. 1934க்கு பின்பு நடந்த பல விஷயங்கள் தான் தமிழில் வாசிக்க கிடைக்கிறது. 

ஆனால், முகில் ஆரம்பக்கட்ட வாழ்க்கையில் இருந்து மிக விரிவாக எழுதியிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் தமிழில் ஹிட்லரை குறித்து இவ்வளவு விரிவாக, ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் வந்ததில்லை என்று சொல்லலாம். 

ஹிட்லர் நல்லவர், கெட்டவர் என்ற விவாதத்தை தள்ளி வைத்துப் பார்த்தால், அவர் ஒரு ‘Interesting Personality’. ஹிட்லரைக் குறித்து பல சுவையான இறுதி அத்தியாயத்தில் குறிப்பிட்டியிருக்கிறார். 

தமிழ் புத்தகச்சந்தையில் ஹிட்லருக்கு இன்னும் மவுசு இருக்கிறது என்பதை இந்த புத்தகம் காட்டியிருக்கிறது. 

வாழ்த்துகள் முகில் !!

**
ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்
- முகில்
- Rs.333


Tuesday, October 6, 2015

நேதாஜி மரணத்தின் அரசியல் - 2

நேரு நேதாஜியின் மரணத்தை நம்புகிறார் என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் இந்தியா நாட்டின் பிரதமர். அவர் நேதாஜி இறந்துவிட்டார் என்று நம்புகிறார் என்றால் ‘நேதாஜி இறந்ததை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது’ என்று எடுத்துக் கொள்ளப்படும். 

ஆனால், ”நேருவின் கருத்தை இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா” என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லப்பாய் படேலிடம் கேள்விகள் கேட்டப்பட்டது.

”போஸ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இந்திய அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது ?” என்று கேட்டனர். 

”போஸ் பற்றி கிடைக்கும் ஆதாரங்கள் பல வித சந்தேகத்தை எழுப்புவதால், அவரைக் குறித்து எந்த விதக் கருத்து கூற முடியாத நிலைமையில் இந்திய அரசு இருக்கிறது. ” என்றார். 

“அவரைப் பற்றி ஏதாவது விசாரணை நடத்தப்படுமா” என்று கேட்டனர்.

“இல்லை” என்றார்.

(இன்றைய பா.ஜ.கவில் ஒருவர் கருத்துக் கூறி சர்ச்சையை கிளப்பினால், அது அவருடைய தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று சொல்வது போல் அன்றைய பட்டேலில் பேட்டி இருந்தது.) 


காந்திஜி, நேரு இருவரும் போஸின் மரணத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவருக்காக வெள்ளையரை எதிர்த்து யுத்தமிட்ட ஐ.என்.ஏ வீரர்கள் இதை நம்பவில்லை. 

'அவர் உயிருடன் இருக்கிறார்’ என்றே நம்பினர். அவர் மீண்டும் வருவார். எங்கள் போராட்டத்திற்கு அடுத்த திட்டங்களை வகுத்துக் கொடுப்பார் என்று கூறினர். 

ஒவ்வொரு நாளிதழும் நேதாஜி மரணத்தைப் பற்றி ஒவ்வொரு விதமாக வெளியிட்டது. “நேதாஜி மரணச் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை. இதோ அந்த விபத்தில் தப்பிய ஜப்பானிய வீரரின் பேட்டி என்று United Press of India செய்தியை வெளியிட்டனர். 

”நேதாஜிவி உடலை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரது உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி தாய்பே என்ற பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது” என்று சென் பீ ஷா என்பவர் சீனாவில் இருந்து வரும் Central New Agency என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். சென் பீ ஷா ஒரு மருத்துவ செவிலியர். 



நேதாஜி மரணத்தை பத்திரிக்கையை உறுதி செய்துக் கொண்டு வெளியிட Hindustan Times story பத்திரிக்கை ’’Netaji is Not dead என்ற தலைப்பில் நேதாஜி சென்ற விமானம் வெடிக்கவில்லை. அதே விமானம் திட்டப்படி ஹாங்காங் வந்திறங்கியது. விமானம் வெடித்ததற்கான எந்த ஆதாரம் இல்லை என்று கூறியது. 
*

போஸ் சென்ற விமானத்தில் அவருடன் சென்றவர் கர்னல் ஹபிபூர் ரஹ்மான். விமான விபத்து நடந்ததாக சொல்லப்படும் பயணத்தில் கர்னல் ஹபிபூர் ரஹ்மானும் காயம் ஏற்ப்பட்டிருக்கிறது. அவருடன் பயணம் செய்ததால் இவருடைய சாட்சியம் மிகவும் முக்கியம். 

“போஸ் இறந்தது உண்மை தான். அந்த விமான விபத்தில் நான் சில காயங்களோடு தப்பித்தேன். பலத்தக் காயங்களோடு போஸ்யை மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். அங்கு தான் அவர் உயிர் பிரிந்தது.” என்று கூறினார். ( இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையில், கர்னல் ஹபிபூர் ரஹ்மான் பாகிஸ்தான் குடியேறினார்.) 

ஆனால், அவரின் சக ஐ.என்.ஏ வீரர்களான தர், சந்திரா குமார் போன்றவர்கள் போஸ் கர்னல் ஹபிபூர் ரஹ்மானை அப்படி பொய்ச் சொல்லச் சொல்லியிருப்பார் என்று கூறினர். அப்போது தான் போஸ்ஸால் சுதந்திரமாக செயல்ப்பட முடியும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது. 

** 
போஸ் நிஜமாகவே தப்பித்திருந்தால் ஜப்பானின் உதவியில்லாமல் நடந்திருக்காது. பல ஆயிரம் கதைகள் சொன்னாலும், போஸின் போர் நடவடிக்கை, திட்டம் அனைத்தும் ஜப்பானுக்கு தெரிந்திருக்கும். போஸின் அனைத்து யுத்த நடவடிக்கைகளுக்கு ஆயுதம் வழங்குகிறோம் என்று ஜப்பான் உறுதி அளித்திருந்தது. 

ஆதலால், போஸ் தன் திட்டத்தை ஜப்பானுக்கு சொல்லாமல் இருந்திருக்க மாட்டார். ஆனால், இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் ஜப்பான் தனது யுத்த ஆவணங்களை அனைத்தும் அழித்திருக்கிறது. செம்படைகளிடம் இருந்து யுத்தக் குற்றவாளி பட்டியலில் தங்கள் இராணுவ தளபதிகளையும், கூட்டணியில் இருப்பவர்களையும் காப்பாற்ற இப்படி செய்ததாக கருதப்படுகிறது. ஒரு வேளை தப்பித்தது உண்மையென்றால், போஸ் சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அழித்திருப்பார்கள் என்ற நினைக்கத் தோன்றுகிறது. 

ஒரு வேளை போஸ் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால் அதை ஆய்வு செய்து வெளியிட ஜப்பானிடம் கொரிக்கை வைப்பது இந்தியாவின் கடமையாகும். இந்தியாவிடம் இருக்கும் ஆவணங்களே முழுமையாக வெளியிடாதப் போது மற்ற நாடுகளுடன் கொரிக்கை வைக்கமாட்டார்கள் என்பது நிதர்சண உண்மை. 

** 
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தைப் போல நேதாஜி இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்தை கூறினர். ஆளுக்கு ஒரு கதை, ஆளுக்கு ஒரு ஆதாரத்தை கூறினர். எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்த்து கூற முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. அதே சமயம் எதையும் நிராகரிக்க முடியவில்லை. 

போஸ் இறந்தாரா ? இல்லையா ? மாறு வேடத்தில் வாழ்ந்தாரா ? பல யூகங்கள், கதைகள், கருத்துக்கள் என்று உலவிக் கொண்டு இருந்தது. ஆட்சியில் இருப்பவர்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. 

எல்லாவற்றிருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஒரே வழி ! போஸ் மரணத்தை குறித்து விசாரிக்க வேண்டும் !! 

கட்டுரைக்கு உதவியது :

Wednesday, September 23, 2015

நேதாஜி மரணத்தின் அரசியல் - 1

“சுபாஷ் போஸ் மீது நான் கொண்டிருந்த உறவு, மிகச் சிறந்ததும் பரிசுத்தமானதுமாகும். அவரது தியாக சக்தியை வெகுநாட்களுக்கு முன்பே உணர்ந்திருக்கிறேன். ஆனால், லட்சியத்தில் பலம் திரட்டும் திறமையும், போர்முறையில் துணிந்து நிற்கும் வீரமும் அவருக்கு எல்லையென்றிருந்தனவென்பதை, இந்தியாவிலிருந்து அவர் வெளியேறிய பின்னர் தான் தெள்ளத் தெளியத் தெரிந்து கொண்டேன்”


– காந்திஜி ( 15.1.47)


**
ஆகஸ்ட் 28, 1945

மேயர் தேபேந்திரநாத் முகர்ஜி வருத்தம் கலந்த முகத்தில் கல்கத்தா முனிசபல் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். சில ஐரோப்பிய உறுப்பினர்களும் இருந்தனர்.

தேபேந்திராத் துக்கம் கலந்த குரலில், “சுபாஷ் சந்திர போஸ் நம் நாட்டுக்காக போராடியவர். அவருடைய மரணம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்காக மௌனமாக அஞ்சலி செலுத்துவோம்”

யாரும் மேயர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் இறந்தவரையா ? தன்னையா ?

“ஒரு நிமிடம் போஸ் மரணத்திற்காக அஞ்சலி செலுத்துவோம்” என்று திரும்ப கூறினார்.

காதில் வாங்கிக் கொள்ளாதவாறு அனைவரும் இருந்தனர். யாரும் அசையவில்லை.

“என்ன ஆனது. நமக்காக போராடியவருக்கு மௌன அஞ்சலி ஏன் செலுத்த தயங்குகிறீர்கள் ?”

 “போஸ் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் யாரும் நம்பவில்லை. அவர் உயிரோடு தான் இருக்கிறார்.”

”என் உத்தரவை மதிக்காதவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் இருக்க வேண்டாம்.”

அரங்கத்தில் மேயரை தவிர்த்து யாருமில்லை.

**



செப்டம்பர் 21, 1945

1942ல் காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதனால், பல தலைவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

அன்றைய தினத்தில் 1942ல் இருந்து 1945 வரை காலமான காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானத்தை காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றியது. இறந்த தலைவர்களின் பட்டியலில் ’நேதாஜி’ பெயர் இடம் பெறவில்லை.

அதற்கு காங்கிரஸ் தலைவரான அபுல் கலாம் ஆசாத், “சுபாஷ்யின் மரண செய்தி எத்தகைய சூழ்நிலையில் நமக்கு ஏட்டியது என்பது அனைவருக்கும் தெரியும். செய்தி வெளியிட்டவர்கள் மீது நமக்கு சந்தேகம் இருப்பதாலும், அவருடைய மரணம் உறுதி செய்ய முடியாத நிலையில் இரங்கல் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை” என்று விளக்கமளித்தார்.

 இன்று வரை, இந்திய தேசிய காங்கிரஸ்யோ அல்லது வேறு அரசியல் கட்சியோ நேதாஜி மறைவிற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

**
ஜப்பான் ரென்கோலி என்ற ஆலயத்தில் போஸ் புகைப்படத்திற்கு புக்களால் அலங்கரித்து மரியாதை செலுத்தினர். ஜப்பானிய இராணுவத்தினர் முன்னிலையில் மொஜிசுகி என்பவர் அவரது இறுதி சடங்கை நடத்தினார் என்று கூறப்பட்டது.

இந்த செய்தி ஜப்பானில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. பலர் கண்டித்தனர். இன்னும் போஸ் மரணச் செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் அவருக்கு இறுதி சடங்கு நடத்துவது யாரும் ஏற்ற்க் கொள்ள முடியாத ஒன்று.

இந்தியாவும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. போஸ் அஸ்தியா ? இறுதி சடங்கா ? யாரைக் கேட்டு இதையெல்லாம் செய்தீர்கள் என்று கண்டித்தது.

**
”செய்தி பொய்யாக இருக்கலாம்; போய் உயிரோடு தலைமறைவாக இருக்கலாம். எந்த தருணத்திலும் அவர் வெளிவருவார் நம்புகிறேன்” என்று ஆரம்பத்தில் கூறி வந்த காந்திஜி, பிறகு நேதாஜி மரணத்தை ஏற்றுக் கொண்டார்.

அதேப் போல் நேதாஜி மரணத்தைப் பற்றி நேரு, “ஆரம்பத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருப்பார் என்று தோன்றியது. நானும் அதை தான் நம்பினேன். விமான விபத்தை நேரில் கண்ட சாட்சியை வைத்து பார்க்கும் போது அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக என்பதை நாம் நம்ப வேண்டியதாக தான் இருக்கிறது. அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்லை” என்றார்.

நேதாஜி இறந்ததாக யார் சொன்னது ? யார் யார் சாட்சியம் அளித்தனர் ? எதை வைத்து நேதாஜியின் மரணத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்கள் ? எதனால். அளித்த சாட்சியங்கள் மீது அவநம்பிக்கை.... விவரங்கள் அடுத்த பதிவில் !!


Tuesday, September 15, 2015

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - 5 : இரண்டாம் கெய்சரின் மரணம்

1941. 

இரண்டாம் உலகப் போர் பரப்பரப்பாக நடந்துக் கொண்டு இருந்த சமயம். நாலாகப் பக்கமும் ஜெர்மனியின் நாஜி கொடி வெற்றிக் கரமாக பரந்துக் கொண்டிருந்த நேரம். ஹிட்லர் சாதாரண மனிதரில்லை. நிஜமாகவே ஜெர்மனியை ரட்சிக்க வந்த தேவதூதன் என்று சொல்லும் அளவிற்கு வெற்றிகள் குவிந்தது அல்லது அதற்கான அறிகுறியாவது தெரிந்துக் கொண்டு இருந்தது. 

ஹிட்லர் தளபதிகளுடன் யுத்தத்தை குறித்து ஆலோசனை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, ஒருவன் ஹிட்லரின் அனுமதிப் பெற்று உள்ளே வந்தார்.

“ஹெயில் ஹிட்லர்” என்று சொன்னப்பிற்கு தனது கையில் இருக்கும் காகிதத்தை ஹிட்லரிடம் கொடுத்தார். அதை திறந்து படிக்கும் போது ஹிட்லர் அதிர்ச்சியடைந்தார். 

அந்த செய்தி யுத்தத்தை குறித்து எதாவது இருக்கிறதா என்று ஹிட்லரின் தளபதிகள் கேட்டனர். ஆனால், அவர் அமைதியாக இருந்தார். 

சிறிது நேரம் கழித்து மௌனமாக தனது தளபதிகள், “ஜெர்மனியின் மன்னர் இரண்டாம் கெய்சர் காலமானார்” என்றார். 

ஹிட்லரோடு இருந்த தளபதிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதை விட வியப்பாக இருந்தது. அதற்கு காரணம்…. கெய்சரின் மரணச் செய்தி அல்ல… ஹிட்லரின் நடவடிக்கை. 



இறந்துப் போன கெய்சருக்கு 81 வயது இருக்கும். முதல் உலகப் போர் முடிந்ததும், ஜெர்மனி முழுவதுமாக சரணந்து, பொருளாதாரத்தில் அதாளப்பாதத்தில் தள்ளி விட்டுவிட்டு நெதர்லாந்தில் குடிபெயர்ந்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் ஜெர்மன் மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் மாண்டுக் கொண்டு இருந்தனர். அந்த நிலையிலும், பிரான்ஸூக்கு முதல் உலகப்போரில் நஷ்ட ஈடுக் கொடுப்பதை பற்றி ஜெர்மனிக்கு ஆணை வந்துக் கொண்டு இருந்தது. 

தன்னால் ஜெர்மனி பெரிய நஷ்டத்தை சந்தித்தது நினைத்து கெய்சர் கவலைப்படவில்லை. நெதர்லாந்தில் சந்தோஷமாக இருந்தார். எதோ ஹில்டர் தலைத்தூக்கிய பிறகு ஜெர்மனி வேகுண்டு எழுந்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது. 

முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் என்று சர்வக் காலமும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஹிட்லர் கெய்சர் மீது மரியாதை வைத்திருந்தார். 

“அவர் மன்னராக இருக்கும் போது அவர் படையில் இராணுவ வீரனாக இருந்திருக்கிறேன். சரணாகதியை எந்த மன்னரும் விரும்ப மாட்டார். ஜெர்மனி சரணடைய வேண்டும் என்று முடிவு எடுக்கும் போது அவர் மனம் எவ்வளவு பாடுப்பட்டிருக்கும். பல தலைமுறைகளாக ஆண்டவர்களுக்கு மனம் துவண்டுப் போய்யிருக்கும்” என்று ஹிட்லர் அவருக்காக வருந்தினார்.

ஹிட்லருக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் மீது இருக்கும் கோபத்தில் பாதிக் கூட மன்னர் மீது இல்லை. இரக்கமும், அனுதாபம் மட்டுமே இருக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் தானே அவர் போரில் சரணடைய வேண்டியதாக இருந்தது. இல்லையென்றால், மன்னர் இறுதி வரைப் போராடிப்பார் என்று ஹிட்லரின் கருத்தாக இருந்தது. 

அது மட்டுமில்லாமல், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள் யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள். மன்னர் யுத்தத்தின் ஒவ்வொரு போக்கையும் தீர்மாணித்தவர்.

 என்ன தான் இருந்தாலும், அவர் ஜெர்மனியில் மன்னர். ஜெர்மனியின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நாகரிகத்திற்கும் மன்னரின் குடும்பம் அரும்பாடுப்பட்டிருக்கிறது. அதற்கு ஜெர்மனியியும், நாஜி வீரர்கள் என்றும் கடமைப்ப்பட்டிருக்கிறது. 

ஜெர்மனியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றாலும், ஜெர்மனைப் பார்த்து பல நாடுகள் அஞ்சினாலும், பெரிய சர்வதிகாரியாக ஹிட்லர் திகழ்ந்தாலும்… அவரை தன் நாட்டின் மன்னராக தான் நினைத்தார். 

”இறந்த மன்னரின் கெய்சரின் உடலை ஜெர்மனுக்கு எடுத்து, தகுந்த அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்” என்று ஹிட்லர் கூறினார். 

 ”யுத்த வேலைகள் ஆயிரம் இருக்கிறது. எவ்வளவு இராணுவப் படை அனுப்ப வேண்டும், எங்கு என்ன ஆயுதம் அனுப்ப வேண்டும், திட்டங்கள் வகுக்க வேண்டும், தாக்குதல் பற்றி பேசியாக வேண்டும். இதைப் பற்றியெல்லாம் பேசுவதை விட்டு, சராசரி அரசியல்வாதிப் போல் ஓடிப்போன மன்னரை ஜெர்மனிக்கு எடுத்து வந்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறாரே. இது இப்போதைக்கு தேவையா. அவருக்காக ஹிட்லர் மரியாதை செலுத்தினாலும், அவர் மீது இருக்கும் விமர்சனம் மாறிவிடப் போகிறதா” என்பது ஹிட்லரின் தளபதிகள், வேலையாட்கள் நினைத்துக் கொண்டனர். ஒருவருக்கும் ஹிட்லர் முன் நின்று பேச தைரியமில்லை.

ஜெர்மனியில் முதல் உலகப் போரின் தோல்வியின் வஞ்சம் தான் இரண்டாம் உலகப் போர் என்று சொல்லி வந்த நிலையில், இரண்டாம் கெய்சர் மீது ஹிட்லருக்கு இருந்த மரியாதையை இதை காட்டுகிறது. 

ஆனால், இரண்டாம் கெய்சர் ஜெர்மனிக்கு செல்வதை விரும்பவில்லை. ஜெர்மன் துருப்புகள் மீது வெறுப்பு கொண்டிருந்தார். எக்காரணத்திற்காகவும் தனது உடல் ஜெர்மனுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று கூறியிருந்தார். அவரின் விருப்பப்படி அவர் இறந்தப் பிற்கு அவரது உடலை ஜெர்மனுக்கு அனுப்பப்பாமல் நெதர்லாந்திலேயே அடக்கம் செய்தனர். இருந்தாலும், நாஜிகள் அவருக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதையை செலுத்தினர். 

ஹிட்லர் ஜெர்மனியை பெரிய வல்லரசாக மாற்றப் போவதை பார்க்காமல் இரண்டாம் கெய்சர் இறந்துவிட்டார் என்ற வருத்ததை போக்க தான், அவரது உடலாவது ஜெர்மனியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதை அவர் விரும்பவில்லை என்ற வருத்தத்தை காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை இரண்டாம் உலக யுத்தம் அவரின் நேரத்தை எடுத்துக் கொண்டு இருந்தது. 

முன்னாள் ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற ஒரு அரசியல் தலைவர் கண்ணீர் சிந்தி அழும் போது, நடிக்கத் தெரியாத மனிதர் என்று இணையதளம் புகழாரம் சூட்டினார்கள். அவர் நல்லவர் என்றால், பல வச்சரசு நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் போது தனது பழைய மன்னருக்கு இறுதி மரியாதைக் கொடுக்க நினைப்பது அதை விட பெரிய உயர்ந்த குணம்.

உதவியது :

Inside the Third Reich - Albert Speer
ஹிட்லர் : சொல்லப்படாத சரித்திரம் - முகில்

 https://en.wikipedia.org/wiki/Wilhelm_II,_German_Emperor

Friday, September 4, 2015

It IS About Islam: Exposing the Truth About ISIS, Al Qaeda, Iran, and the Caliphate ( Pre-Review)

மிகவும் சர்ச்சைக்குரிய புத்தகம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளிவரப் போகிறது.

இது வரை அமெரிக்கர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்கிற பிரச்சாரத்தை உடைத்தெரிவதற்காக வெளிவரவிருக்கும் புத்தகம். 




“அமெரிக்க இஸ்லாமியர்களை அமெரிக்கா தனியாக பார்க்கவில்லை. எங்களில் ஒருவராக பார்க்கிறோம். அதனால், ஷரிய சட்டத்தை அமெரிக்காவில் அமல்ப்படுத்தவில்லை. ஷரிய சட்டம் கொண்டு வந்து இஸ்லாமியர்களை தனியாக பிரித்துக்காட்டவில்லை” என்பது போன்ற வாதத்தை முன் வைக்கிறார் எழுதாளர் Glenn Beck. 

அதே சமயம் பொய் #15, “America is safe from Sharia Law" என்ற அத்தியாயத்தையும் வைத்திருக்கிறார். 


ஆம், இந்த புத்தகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொயிதா இஸ்லாமைக் குறித்து முன் மொழியும் பதிமூன்று பொய்களை கூறுகிறார் எழுதாளர் Glenn Beck.


ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் இஸ்லாம் மதத்தை முன் நிறுத்தி நடத்தும் தீவிரவாத தாக்குதலின் முகத்திரையை கிழிக்கும் புத்தகமாகவும், அமெரிக்காவுக்கு ஆதரவான புத்தகமாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கான தீர்வை ஒரு அத்தியாயத்தில் கூறியிருக்கிறார். 

PROMO வுக்காக ஒரு நண்பரின் மேஜையில் இருந்த புத்தகம் என்பதால் முழுவதுமாக படிக்க முடிக்கவில்லை. கிடைத்த நேரத்தில் நான் வாசித்து புரிந்துக் கொண்டது. நூல் வெளியானதும், முழுவதுமாக வாசித்து எழுத வேண்டும். 

 **
It IS About Islam: Exposing the Truth About ISIS, Al Qaeda, Iran, and the Caliphate (Pre-order) 

இணையத்தில் முன் பதிவு செய்துக் கொள்ள... ( 12.5% discount + Free Shipping)

 Author Glenn beck Website - http://www.glennbeck.com/

LinkWithin

Related Posts with Thumbnails