மெரினா கலவரத்திற்கு ஒரு சாமான்யனாக சில சந்தேகம் எழுகிறது.
1. மெரினாவில் கலைந்து செல்லும் மாணவர்களை காவலர்கள் எந்த சாலை வழியாக அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தனர் ? Dr.Besant Road அல்லது Dr.Radha Krishna Salai அல்லது Pycroft Road அல்லது Napier Bridge ? ஒரு வேலை அப்படி திட்டமிடப்படவில்லையா ?
2. இத்தனை காவலர்கள் பிரச்சனை நடந்தப்பிறகு வந்தார்களா ? அல்லது பிரச்சனை வரும் என்று முன்பே கணித்து கொண்டு அழைத்து வரப்பட்டார்களா ?
3. Ice House காவல் நிலையம் அருகே தீ வைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் குறிப்பிடும் சமூக விரோதிகள் மெரினாவில் இருந்து Dr.Besant Road வழியாக தான் வந்திருக்க வேண்டும். அதற்கான ஆதாரம் இருக்கிறதா ?
4. Ice House காவல் நிலையம் அருகே தீ வைக்கும் போது காவல் நிலையத்தில் எத்தனை காவலர்கள் இருந்தார்கள் ? அவர்கள் தீயனைக்க என்ன முயற்சி செய்தார்கள் ? அல்லது அவர்கள் தீயனைப்பு துறைக்கு எத்தன மணிக்கு தகவல் கொடுக்கத்தார்கள் ?
5. காவலர்கள் எரிக்கும் வீடியோவை ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் போது, போராடும் மாணவர்கள் மத்தியில் சமூக விரோதி கலந்திருப்பதை எந்த ஆய்வு அடிப்படையில் சொல்லப்படுகிறது?
6. கடற்கரையில் இறங்கி போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுகிறது. அப்படியென்றால் கடற்கரையில் போராடும் மாணவர்கள் அல்லது நீங்கள் சொல்லும் சமூக விரோதிகள் உங்களை தாக்கியிருக்க வேண்டும். அப்படியென்றால், கடற்கரையில் எத்தனை காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ? எத்தனை காவலர்கள் பாதிக்கப்பட்டார்கள் ? ஒரு வேளை காவலர்கள் மீது தாக்குதல் நடத்தாதப்பட்சத்தில், எதற்காக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது ?
இன்னும் பல கேள்விகள் இருக்கிறது. அதை ஊடக நண்பர்கள் காவலர்களிடம் கேட்க வேண்டும். ஆதி, லாரண்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். போராடிய மாணவர்கள் மத்தியில் அவர்களும் ஒருவர். இப்போது அவர்களின் பேட்டி முக்கியமில்லை.
நடந்திருப்பது மனித உரிமை பிரச்சனை. அறவழியில் போராடிய மாணவர்கள் மத்தியில் சமூக விரோதி இருப்பதாக குற்றம் சாட்டும் காவலர்களின் விளக்கம் மிக முக்கியமானது.
மீண்டும் போராட்டத்திற்கு மாணவர்கள் சேரவேண்டும் என்றால் இதற்கான பதில் மிக அவசியமானது.
No comments:
Post a Comment