வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, August 30, 2011

இரண்டாம் ஆண்டு விழாவின் அழைப்பிதழ் !



நாகரத்னா பதிப்பகத்தின்
இரண்டாம் ஆண்டு விழா
நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா
எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா

இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை
நேரம் : காலை 10 மணிக்கு (செப்டம்பர் 4,2011)

தமிழ் தாய் வாழ்த்து : திரு. வரதராஜன் மற்றும் திருமதி. சாந்தா வரதராஜன்

வரவேற்புரை : தொலைப்பேசி மீரான்

தலைமை தாங்கி நூல் வெளியீடுபவர் : 'மாம்பலம்' சந்திரசேகர், Chairman, Chandra Builders

எழுத்தாளர்களுக்கு விருது வழங்குபவர் : திரு. சுகுமார், Properitor, Anush Furniture

வெளியிட்டு விழா

குகன் தொகுத்த 'கலைஞரின் நினைவலைகள் 100'
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : கருணாகரன், ex-partner Anand Theatre
குகன் தொகுத்த கலாம் கண்ட கனவு’ (கவிதைத் தொகுப்பு)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : கார்முகிலோன்

நூல் அறிமுகம் மற்றும் விருது வழங்கும் விழா

சங்கர் நாராயண் எழுதிய லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ ( சிறுகதை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அமுதா பலகிருஷ்ணன், Chairman, Amutha Matriculation school

பரிசல் கிருஷ்ணா எழுதிய ‘டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்’ ( சிறுகதை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அரிமா ராசரத்தினம்

சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவி’ ( சுயமுன்னேற்ற கட்டுரை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அரிமா இளங்கண்ணன்

கனியன் செல்வராஜ் எழுதிய ‘உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ ( சுயமுன்னேற்ற கட்டுரை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : டாக்டர். மோகன பாலகிருஷ்ணன், Yozen mind

ஏற்புரை : குகன்

நன்றியுரை : சங்கர் நாராயண் (‘cable’ சங்கர்)

நிகழ்ச்சி தொகுப்பாளர் : சுரேகா

Wednesday, August 17, 2011

போஸ்டர் - குறும்பட விமர்சனம்

நாளைய இயக்குனர் - 2 ல் பார்த்து ரசித்து சிரித்த படம். குறும் படம் என்றால் கருத்து சொல்ல வேண்டும், நீதி இருக்க வேண்டும், நெஞ்சை வருட வேண்டும் போன்ற எழுதப்படாத விதிகளை தகர்த்த படம்.

சிறுகதை, நாவலை வாசித்தவர்கள் திரையில் படமாக பார்க்கும் போது படத்தை எடுத்தவர்களை திட்டாமல் இருக்க மாட்டார்கள். வாசிக்கும் போது கொடுத்த அனுபவம் காட்சிப்படுத்தும் போது இயக்குனர் தவறிவிட்டார் என்பது தான் பலரது விமர்சனமாக இருக்கும். ஆனால், "போஸ்டர்" சிறுகதையை வாசித்த பிறகு குறும்படமாய் பார்க்கும் போது வாசித்த அனுபவத்தை விட திரையில் பார்த்த அனுபவம் சிறப்பாக இருந்தது. இன்னும், சொல்லப் போனால் வாசிக்கும் போது கிடைக்காத நகைச்சுவை உணர்வு, நடிகரின் உடல் மொழியில் சிரிப்பு வர வழைத்தது.

"பட்டப்பகலில் ஒன்றாவது மெயின் ரோட்டில் விபச்சாரம் செய்யும் சாந்தியே உன்னை தட்டிக் கேட்க ஆளில்லையா?" என்ற போஸ்டரை காவல்துறையினர் கிழிப்பது போல் படம் தொடங்குகிறது. பொது இடத்தில், அதுவும் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் இப்படி ஒரு போஸ்டர் ஓட்டியிருப்பது பத்திரிகைக்காரர்களுக்கு தெரிந்தால் தன் வேலைக்கு வெட்டு வந்து விடும் என்று பயப்படுகிறான் இன்ஸ்பெக்டர் சாமிநாதன். பயந்த மாதிரி மேலிடத்தில் இருந்து விசாரிக்க சொல்லி அழுத்தம் வருகிறது.

அதே சமயம், ஒரு பெரிய வீட்டில் வயதான பெண்மனி சாந்தி தன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கற்புற ஆராதனை காட்டுகிறாள். வேலை செய்பவனிடம் தெலுங்கில் தன் வாடிக்கையாளரிடம் புது பெண் வந்திருப்பதை சொல்ல சொல்லுகிறாள்.

சாமிநாதன் அந்த ஏரியாவில் போஸ்டர் ஒட்டுபவர்களை விசாரிக்கிறான். அதில் ஒருவன், "போஸ்டர் ஓட்டியது எங்க ஆளே இருக்க மாட்டான்" என்பதை தீற்கமாக சொல்லுகிறான். தங்கள் ஆட்கள் ஒட்டியிருந்தால் போலீஸால் இவ்வளவு விரைவில் எல்லா போஸ்டர்களையும் அப்புறப்படுத்தியிருக்க முடியாது என்கிறான்.

விபச்சார விடுதியில் இருப்பவன் தன் வாடிக்கையாளருக்கு போன் போடுவதற்கு பதிலாக குடிப்போதையில் காவல்துறைக்கு போன் போட்டு விலாசமும் சொல்லுக்கிறான். காவல்துறையினர் அவர்களை கைது செய்கிறது.

உண்மையில் இந்த போஸ்டர் ஒட்டியது யார் என்பதை குறும்படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இணைய எழுத்தாளர் சங்கர் நாராயண் எழுதிய "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து இயக்குனர் ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த சிறுகதைக்கு கதை எழுத்திய எழுத்தாளரே திரைகதை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.





(நன்றி : ஆகஸ்ட்,2011, பொதிகை மின்னல் - மாத இதழ்)

Tuesday, August 16, 2011

நினைப்பது முடியும் – ஒரு நாள் கருத்தரங்கம்

மனித வளம் மற்றும் சுயமுன்னேற்ற பயிற்சி நிறுவனமான Vision Unlimited தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை கொண்டாடும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கத்தை ஹோட்டல் சவேராவில் வரும் 20ஆம் தேதி,ஆகஸ்ட் அன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

நினைப்பது முடியும் – ஒரு நாள் கருத்தரங்கம்

Self Concept – Focus in Life
புது வரம் நீ உனக்கு

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் ’ Vision Unlimited’ நிறுவனத்தின் தலைவர் டாக்டர். பாலசாண்டில்யன்

Enhancing & Empowering Personality
தொடங்கட்டும் ஒரு மகிழ்ச்சிப் பயணம்

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் திரு. லேனா தமிழ்வாணன்

Work Life Balance
பெரிய பூட்டு சின்ன சாவி

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் கே.சுமதி, வழக்கறிஞர்

It’s now or never !
நாளை எனும் நம்பிக்கை

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் திரு.உதய சான்றோன்


ரூ.3000/- மதிப்புள்ள் இந்த ஒரு நாள் கருத்தரங்கம் ரூ.1200/- க்கு தரவிருக்கிறார்கள். இதில், ரூ.600 மதிப்புள்ள சவேரா ஹோட்டல் உணவு, சிற்றுண்டி, தேநீர் மற்றும் ரூ.600 மதிப்புள்ள பயிற்சி பொருட்கள் வழங்கவிருக்கிறார்கள்.


விருப்பமுள்ள நண்பர்கள் Vision Unlimited த்தின் தலைவர் திரு. பாலசாண்டில்யன் – 9840027810 மற்றும் உதய சான்றோன் – 91711 71473 தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் : balasandilyan@yahoo.com
இணையம் : www.visionunlimited.in

Friday, August 12, 2011

We Can books – புத்தக புது வரவுகள்

பூமணி – கதை 1 களம் 10
ம.காமுத்திரை



நல்லதண்ணிக் கிண்றுக்காக திருப்பூர் தமிழ் சங்க விருது, ’மில்’ நாவலுக்காக 2010ல் சுஜாதா விருதுப் பெற்ற
ம.காமுத்திரையின் அடுத்த படைப்பு. ஒரே கதையை பத்து களத்தில் எழுதி சிறுகதையாக தொகுத்துள்ளார்.

**

சதுரங்கப்பட்டணம்
ம.ந.ராமசாமி
பக்.144, ரூ.70



யுகமாயினி இலக்கிய மாத இதழ் நடத்திய அமரர் நகுலன் நினைவுப் போட்டியில் பரிசு பெற்ற நாவல்.

**
1999-ன் சிறந்த சிறுகதைகள்
தொகுப்பு : எஸ்.ஷங்கர்நாராயணன்
பக்:144, ரூ.40/-



2000ல் பதிப்பித்த புத்தகம். பா.ரா, பாரதிபாலன், கந்தர்வன், தேவகாந்தன், நீல. பத்மநாபன், வெ.சுப்பிரமணிய பாரதி, பாலு சத்யா போன்ற எழுத்தாளர்கள் 99ல் எழுதிய சிறுகதைகளை எஸ்.ஷங்கர்நாராயணன் தொகுத்துள்ளார்.

**
நாகம்மாள்
ஆர். சண்முகசுந்தரம்
பல்:128, விலை : 55/-



1942இல் வெளியான இந்நாவல்தான் வட்டார நாவல் வகையைத் தொடங்கி வைத்தது. கொங்கு தமிழில், தனித்தன்மை வாய்ந்த மொழி நடையில் உணர்ச்சிகளைக் கலந்து படைக்கப்பட்டது நாகம்மாள். எழுபது ஆண்டுக்கு முந்தைய கிராம வாழ்வை அழகுற விவரிக்கும் நாகம்மாள் நாவலின் தொடக்கமும் முடிவும் தனித்தன்மை வாய்ந்தவை. கல்லூரியில் பாடத்திட்டமாக வைக்க ஏற்ற நூல்.

**
தூரன் கட்டுரைகள்
பெ. தூரன்
பல்:80, விலை : 50/-
பெரியசாமி தூரன் அவர்களின் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கல்லூரி மாணவர்களுக்கு பாட நூலாக வைக்க ஏற்ற நூல்.

**
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
இரா.பொன்னாண்டான்
பல்:256, விலை : 100/-



பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட காலத்தின் பின்னாலிலிருந்து இந்நாள் வரை நமது மதிப்பிற்குரிய முனிவர்கள், ஆன்ம ஞானிகள், மகான்கள், பெரியோர்கள், பண்டிதர்கள், ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள் இன்னும் பிற அறிஞர்கள் எல்லோருமே நமக்கு உபதேசிக்கும் அனைத்து வாழ்வியல் சிந்தனைகளும் கண்ணனின் கீதையிலிருந்து எடுக்கப்பட்டவைகளே. வடிவங்கள் வேறாக இருக்கலாம். மூலவஸ்து அதுதான். நமது ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அருமையான நூல் இது. இந்த நூலை குழந்தைப் பருவம் தொடங்கி வயோதிகர் வரை ஐயமற படித்துத் தெளியலாம். அவ்வாறு கற்றால் நமது சமூகம் மேன்மையுறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

**
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
விலை - ரூ.50

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

சுவையான 100 இணையதளங்கள்
விலை - ரூ.60

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
விலை - ரூ.60

மற்றும்




ழ பதிப்பக புத்தகங்களின் விற்பனை உரிமையும் பெற்றுள்ளது.

****

புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் பட்டியலை அனுப்பவும் அல்லது 9940448599 என்ற தொடர்பு கொள்ளவும்.

Wednesday, August 10, 2011

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா !

வணக்கம்,

சுரேகாவின் “ நீங்கதான் சாவி”, கனியன் செல்வராஜ்ஜின் “உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி” நூல்களுக்கு பிறகு நாகரத்னா பதிப்பகம் தனது அடுத்த நூல்களை வெளியீட உள்ளது.


கலைஞரின் நினைவலைகள் 100
பக் :64, ரூ.35/-)

கலைஞர் அவர்கள் மேடை பேச்சு, பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தது, அவ்ரது திரைப்பட குறிப்புகள், அவரது நகைச்சுவை நயம் என்று 100 தகவல்களை தொகுத்து நூலாக கொண்டு வந்துள்ளோம். முடிந்த வரையில் அரசியல் கலக்காமல் அவரது குறிப்புகளை சேகரித்துள்ளோம்.

கலைஞர் அவர்கள் பதவியில் இருக்கும் போது வெளியிட்டு இருந்தால், நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என்று சில நண்பர்கள் கூறினர். ஆனால், அவர் பதவியில் இல்லாத இந்த சமயத்தில் நூல் வருவது சரியான தருணம் என்று எங்களுக்கு தோன்றியது.

( எட்டு மாதங்களாக என் பதிவில் இடது இடம் பக்கம் இருந்த நூலின் அட்டை படம் இப்போது நூலாக கொண்டு வர முடிந்தது.)

கலாம் கண்ட கனவு
(பக் :64, ரூ.35/-)

45 கவிஞர்கள் கலாமைப் பற்றியும், இந்திய தேசத்தைப் பற்றியும், இளைஞர்கள் பற்றியும் எழுதிய கவிதைத் தொகுப்பு. இந்த புத்தகத்தில் பதிவர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது சற்று வருத்தம் தான். ஆனால், எங்கள் முந்தைய தொகுப்பு நூலை விட மிக சிறப்பாக வடிவமைத்து வந்துள்ளது.

இரண்டு நூல் வெளியீட்டு விழாவோடு இல்லாமல் நாகரத்னா பதிப்பகத்தில் எழுதிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. அவர்களது நூலின் அறிமுக நிகழ்ச்சியும் நடைப்பெற இருக்கிறது.

தேதி : 4.9.2011, காலை 10 மணிக்கு
இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை.


வெளியிடுபவர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

LinkWithin

Related Posts with Thumbnails